Tamil Star |
- பிரசன்னா, விமல் பயங்கர மோதலில் வெளியான புலிவால் டிரைலர்……
- இவர்களின் கொடூரத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?…..
- போட்டியில இதெல்லாம் ரொம்ப சகஜம் பாஸ்…..
- பேஸ்புக் காதலால் ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய அமெரிக்க பெண்
- கிரிக்கெட் வீரர் அசாருதீன் வாழ்க்கை சினிமா படமாகிறது
- ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு
- உடலுக்கு வலிமை தரும் வாழைத்தண்டு!
- விரைவில் அறிமுகமாகும் Boost Max 5.7
- அறை சாவியாக iPhone
- விண்வெளியில் சூப்பர் நிலவு தோற்றம் 31-ம் தேதி!
- பெண்களின் உண்மை காதலை அறியும் அதி நவீன ’பிரா’: ஜப்பானில் தயாரிப்பு
- மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சர்வதேச விசாரணை இன்றியமையாதது – தமிழ் தேசியக் கூட்டமைப்பு
- வேலைவாய்ப்பிலும், வேலைக்கான ஊதியத்திலும் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் – பராக் ஒபாமா
- தோண்டத் தோண்ட கிடைக்கும் எலும்புக் கூடுகள்
- ‘கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லேட்’ டுக்குள் குளவி
- முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி : மக்களுக்காக அல்ல பிரபாகரனுக்காகவே – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம்
- தந்தையின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக 13-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் பலி
- ஜெனீவா விஜயம் குறித்து தீர்மானமில்லை – உயிர் அச்சுறுத்தல் தொடர்கிறது – ஆனந்தி சசிதரன்
- நீதிமன்ற விசாரணையின்போது கண்ணாடிக் கூண்டிற்குள் நின்று பதில் அளித்த மோர்சி
- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை -அரசாங்கம்
| பிரசன்னா, விமல் பயங்கர மோதலில் வெளியான புலிவால் டிரைலர்…… Posted: 29 Jan 2014 05:59 AM PST |
| இவர்களின் கொடூரத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?….. Posted: 29 Jan 2014 05:53 AM PST |
| போட்டியில இதெல்லாம் ரொம்ப சகஜம் பாஸ்….. Posted: 29 Jan 2014 05:49 AM PST |
| பேஸ்புக் காதலால் ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய அமெரிக்க பெண் Posted: 29 Jan 2014 05:45 AM PST
அமெரிக்காவை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது மகள் வயதில் இருக்கும் 25 வயது இளைஞரை கரம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்தவர் அட்ரியானா பெரால்(வயது 41).அமெரிக்காவில் மிகவும் ஸ்டைலிஷாக வாழ்ந்து வந்தவர் பேஸ்புக்கின் மூலம், முகேஷ் குமார்(வயது 25) என்ற இளைஞர் நண்பராகி உள்ளார்.பின் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ளவே, நட்பு காதலாக மாறியது, உடனே அட்ரியானாவை தொடர்பு கொண்ட முகேஷ் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.இது தொடர்பாக அட்ரியானா கூறுகையில், முகேஷ் தனது காதலை போனில் வெளிப்படுத்தியபோது என்னால் ஒன்றும் கூறமுடிவில்லை, எனக்கு சிரிப்புதான் வந்தது.நாங்கள் சிலவற்றை பேசினோம், நான் முகேஷை தீவிரமாக உணர்ந்தேன்.நீ என்னுடைய இதயத்தை வென்றால் திருமணம் குறித்து பரிசீலனை செய்கிறேன் என்று கூறினேன். அதன்பின் நாங்கள் இரண்டு மூன்று வாரங்களாக பேசினோம்.எனது 25 வயது மகள் என்னுடைய நடவடிக்கையை தொடர்ந்து கவனித்து வந்தார், என்னுடைய நிறைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்தியாவில் என்னுடைய பாதுகாப்பு குறித்து மிகவும் பயப்பட்டனர்.ஆனால் நான் மிகவும் தெளிவாக முடிவு எடுத்தேன், முகேசை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.தொடர்ந்து இந்தியா வந்தவர், தனது உடையில் இருந்து அனைத்தையும் மாற்றிக் கொண்டார்.இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் முறைப்படி திருமணம் நடைபெற்றது.வீட்டு வேலைகள், சமையல், துணி துவைத்தல் மற்றும் விவசாய வேலை என அனைத்தையும் அட்ரியானா செய்து வருகிறார், இருவரும் மிக மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிரிக்கெட் வீரர் அசாருதீன் வாழ்க்கை சினிமா படமாகிறது Posted: 29 Jan 2014 05:36 AM PST
ஐதராபாத்தைச் சேர்ந்த நவ்ரீனை மணந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு விவகாரத்து செய்தார். அதன் பிறகு நடிகை சங்கீதா பிஸ்லானியுடன் காதல் ஏற்பட்டது. அவரை 1996–ல் திருமணம் செய்து கொண்டார். 14 வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2010–ல் இருவரும் தனித்தனியாக பிரிந்தார்கள். பிறகு பேட்மின்டன் வீராங்கனையுடன் அசாருதீனுக்கு காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை அவர் மறுத்தார். முதல் மனைவி நவ்ரீன் மூலம் அசாருதீனுக்கு ஆசாத், சுயஷ் என இரு மகன்கள். இதில் 19 வயதான அயஷ் விபத்தில் இறந்து போனார். அசாருதீனின் இத்தகைய குடும்ப வாழ்க்கையையும் கிரிக்கெட்டில் அவர் சாதனைகளையும் படத்தில் கொண்டு வருகிறார்கள். இந்திய தயாரிப்பாளர் ஏக்தாகபூர் சமீபத்தில் அசாருதீனை சந்தித்து அவர் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கான உரிமையை வாங்கியுள்ளாராம். குணால் தேஷ்முக் இப்படத்தை இயக்குவார் என தெரிகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு Posted: 29 Jan 2014 05:32 AM PST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு ஐ.சி.சி நிர்வாக முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் கூடுதல் அதிகாரம் வழங்குவது, வருவாயையும் அதிகமாக பகிர்ந்து அளிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சீர்திருத்த வரைவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் கிரிக்கெட் வாரியங்கள் தங்களது ஆட்சேபனையை முன்வைத்தன. 6 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நீடித்தது, இதனையடுத்து வரைவு திட்ட பரிந்துரை குறித்து அடுத்த மாதம் மீண்டும் ஒரு முறை விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் சில திட்டங்களுக்கு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிர்வாக கமிட்டி, நிதி மற்றும் வர்த்தக விவகாரங்களை கவனிக்கும் கமிட்டி ஆகியவை உருவாக்கப்பட்டு, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 5 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்திய கிரிக்கெட் தலைவர் என்.சீனிவாசன் 2014ம்ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐ.சி.சி. சேர்மனாக நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது. இதே போல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய பிரதிநிதி நிர்வாக கமிட்டி சேர்மனாகவும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர் நிதி மற்றும் வர்த்தக விவகார கமிட்டி தலைவராகவும் நியமிக்கப்படுவார்கள். This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடலுக்கு வலிமை தரும் வாழைத்தண்டு! Posted: 29 Jan 2014 05:25 AM PST
1.கொழுப்பைக் குறைத்து வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும், ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். 2.பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். 3.அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம். 4.வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். 5. கொசுக்கடித்து தடிப்பு ஏற்பட்டால் வாழைத்தண்டை இரண்டாக வெட்டி, வெட்டிய பகுதியைக் கொசுக்கடித்த இடங்களில் சில நிமிடங்கள் தேய்த்தால் குணமாகும். 6. முகப்பருவிற்கு வாழைத்தண்டை பாதியாகப் பிளந்து முகப்பருவுள்ள இடங்களில் தினமும் 2 நிமிடங்கள் தேய்த்தால் பருக்கள் நீங்கி முகம் அழகாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விரைவில் அறிமுகமாகும் Boost Max 5.7 Posted: 29 Jan 2014 05:22 AM PST
5.6 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இச்சாதனமானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதி 299.99 டொலர்கள் ஆகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 29 Jan 2014 05:19 AM PST
ஸ்மார்ட் கைப்பேசி வகைகளுள் ஒன்றான iPhone மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே. இவற்றின் அடிப்படையில் தற்போது அமெரிக்காவிலுள்ள ஸ்டார் வூட் ஹோட்டல் ஒன்றில் iPhone இனை அறை சாவியாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் கையாளப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட அறையில் தங்கும் நபர் ஒருவர் தனது iPhone இற்கான விசேட அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதியானது விரைவில் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கும் வரவுள்ளதுடன், 2015ம் ஆண்டளவில் 123 ஹோட்டல்களில் இவ்வசதி நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விண்வெளியில் சூப்பர் நிலவு தோற்றம் 31-ம் தேதி! Posted: 29 Jan 2014 05:15 AM PST
பூமி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிகழ்வால் வழக்கத்தை காட்டிலும் நிலவின் அளவு பெரிதாக காணப்படும். இத்தைய நிகழ்ச்சிக்கு சூப்பர் நிலவு என பெயிரிட்டு அழைக்கப்படுகிறது.அத்தகைய நிகழ்வு இந்தாண்டு ஐந்து முறை நி்கழ்கிறது. இம் மாதம் முதல் தேதி நடந்து முடிந்துள்ளது. அடுத்த நிகழ்வு வரும் வெள்ளி்க்கிழமை(31-ம் தேதி) நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 12, ஆகஸ்ட் 10,செப்டம்பர் மாதம் 9-ம்தேதி ஆகிய நாட்களில் நிகழ உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி முதல் இதனை காணலாம் என விண்வெளி பவுண்டேஷனின் தலைவர் தேவ்கன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சூப்பர் நிலவு வரும் 2018-ம் ஆண்டு ஜனவரியில் தான் தோன்றும் எனவும் அவை தெரிவித்துள்ளது This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெண்களின் உண்மை காதலை அறியும் அதி நவீன ’பிரா’: ஜப்பானில் தயாரிப்பு Posted: 29 Jan 2014 05:07 AM PST
இந்த 'பிரா'வை அணியும் பெண்களின் மனநிலையை அறிய அதில் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை பெண்ணின் இதய துடிப்பு மற்றும் உடலின் வெப்பநிலையை கணக்கிட்டு அந்த வயர்லஸ் சிக்னலை செல்போனுக்கு அனுப்பும். அதன் மூலம் அப்பெண்ணின் மனதில் உண்மையான காதல் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த 'பிரா' தற்போது விற்பனைக்கு வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் இந்த 'பிரா' மூலம் தனது நிறுவனத்தின் உள்ளாடைகள் விற்பனையை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த 'பிரா' குறித்த செயல்முறை விளக்க வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 29 Jan 2014 05:02 AM PST
திருகோணமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கடுமையான சவால்களும் அழுத்தங்களும் ஏற்படும் என்பதனாலேயே ஜனாதிபதியும் அமைச்சர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று தமக்கு ஆதரவாகப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஜெனீவா மாநாடு நடைபெறுவதற்கு முன் நாமும் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து எமது பிரச்சினைகளை விளங்கப்படுத்தவேண்டியது அவசியமாகும். இதன் மூலமே இலங்கைக்கு தீர்க்கமான அழுத்தத்தினை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் வடமாகாண சபையிலும் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாணசபையின் ஐந்தாவது அமர்வு நேற்று முன்தினம் சபையின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு பக்கச்சார்பற்ற பன்நாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் உருவாக்குவதற்கு அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும் என்ற பிரேரணையை இவர் முன்மொழிந்தார். இப்பிரேரணை மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைவிட மன்னார் – திருக்கேதீஸ்வரம், புதைகுழி தொடர்பிலும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிரேரணையை முன்வைத்திருந்தார். இந்தப் பிரேரணையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றது இன அழிப்பு என்பதை அரசாங்க அதிபர்களின் புள்ளிவிபர அடிப்படையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை மாநாட்டில் தெளிவுபடுத்த வட மாகாணசபை முன்வரவேண்டும் என்றும் இவர் பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளார். இந்தப் பிரேரணையும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்ட போது குறுக்கிட்ட வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் பிரேரணையில் 'இன அழிப்பு' என்று இல்லாமல் 'இன அழிப்புக்கு ஒப்பானதாகும்' என்று வசனம் மாற்றப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இன அழிப்பு' என்ற சொல் சட்டச் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, இதனை 'இன அழிப்புக்கு ஒப்பானது' என மாற்றுமாறு முதலமைச்சர் பொறுப்புணர்வுடன் கூறி அந்தப் பிரேரணையை திருத்தங்களுடன் நிறைவேற்றியிருக்கிறார். இவ்வாறு வட மாகாணசபையில் சர்வதேச விசாரணை கோரும் வகையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் தேசியக்கூட்டமைப்பு சர்வதேச விசாரணையினை கோரிவரும் நிலையில் அரசாங்கமோ அத்தகைய விசாரணையானது நாட்டில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றது. போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணை இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும். 26 ஆண்டு கால மோதல்களுக்குப் பின்னர் நிலையான அமைதியை நாம் உருவாக்கவேண்டியுள்ளது. இது ஒரு மென்மையான, நுட்பமான செயல் முறையாகும். நல்லிணக்கம் என்பது ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அடையக்கூடியதல்ல. போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை நடத்துவதால் பழைய காயங்கள் தான் மீண்டும் கிளறப்படும். முன்னாள் போராளிகள், இந்திய அமைதிப்படையினர், இலங்கைப் படையினர் என்று மோதல்களில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பையும் விசாரிக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள மூன்றாவது தீர்மானத்தை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள லலித் வீரதுங்க, தற்போது வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார். தீவிரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்த படையினரை நீதிப் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது அது நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். அது இராணுவத்தினரின் ஒழுக்கத்தை குறைக்கப்போகின்றது. இந்த விடயங்களை மிகவும் கவனமாக ஆலோசிக்கவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கின்றார். இதேபோல், அரசாங்க அமைச்சர்களும் சர்வதேச விசாரணைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டு செயற்பட்டு வருகின்றனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சர்வதேச விசாரணையைக் கோரிவரும் நிலையில், அரசாங்கம் அதற்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. இந்த ஏட்டிக்குப்போட்டியான நிலையானது ஜெனீவா மாநாடு வரையில் தொடரும் சூழலே காணப்படுகின்றது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதே சர்வதேசத்தின் கோரிக்கையாகவும் உள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் சுயாதீனமான விசாரணையினை நடத்தாவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை முன்வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதேபோல், இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் இத்தகைய கருத்தினை வலியுறுத்தியிருந்தார். கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளும் இவ்வாறான கருத்தினையே கொண்டுள்ளன. இந்தியாவின் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தியிருந்தார். சர்வதேச சமூகம் உரிய விசாரணையைக் கோரிவருவதுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில், அரசாங்கமோ அதற்குக் கால அவகாசம் வேண்டுமெனக் கோருவதிலேயே குறியாக இருக்கின்றது. இதனால் தான் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது. எனவே, இந்த நிலைப்பாட்டை மாற்றவேண்டுமானால் பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் செயற்படவேண்டிய சூழலே எழுந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு செயற்பாடுகள் அமைவதே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வேலைவாய்ப்பிலும், வேலைக்கான ஊதியத்திலும் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் – பராக் ஒபாமா Posted: 29 Jan 2014 04:57 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| தோண்டத் தோண்ட கிடைக்கும் எலும்புக் கூடுகள் Posted: 29 Jan 2014 04:52 AM PST
இன்று காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை குறித்த புதை குழி தோண்டப்பட்ட போது மேலும் இரண்டு (2) மனித எச்சங்கள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது வரை மீட்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதன் கிழமை குறித்த மனித புதை குழி தோண்டபபட்ட போது அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு சமூகமளிக்கவில்லை. இதனால் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவில்லை. இதே வேளை திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி உள்ள இடத்திற்கு சென்ற குற்ற புலனாய்வுப்பிரிவினர் (சி.ஐ.டி) 5 ஆவது நாளாகவும் இன்று புதன் கிழமை தமது விசாரனைகளை முன்னனொடுத்துள்ளனர்.;. மீண்டும் நாளை (30-01-2014) வியாழக்கிழமை கிழமை நீதவான் முன்னிலையில் குறித்த பணிகள் 18 ஆவது தடவையாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ‘கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லேட்’ டுக்குள் குளவி Posted: 29 Jan 2014 04:43 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 29 Jan 2014 04:38 AM PST
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக அல்ல பிரபாகரனை நினைவுகூருவதற்காகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் நினைவுத் தூபி நிறுவப் போகின்றார் எனக் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் தனித் தமிழீழத்துக்கான அரசியல் நகர்வுகளை வட மாகாண சபை மெது மெதுவாக நகர்த்தி வருகிறது. இது பயங்கரமானது என்றும் அவ்வியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முள்ளிவாய்க்காலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட வேண்டுமென்றும் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர இதனைத் தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தந்தையின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக 13-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் பலி Posted: 29 Jan 2014 04:34 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனீவா விஜயம் குறித்து தீர்மானமில்லை – உயிர் அச்சுறுத்தல் தொடர்கிறது – ஆனந்தி சசிதரன் Posted: 29 Jan 2014 04:26 AM PST
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளில் காணாமல் போதல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய ஆனந்தி சசிதரன் ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெனீவாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாகாணசபையில் ஆனந்தி சசிதரன் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்திருந்தார். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா விஜயம் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவிற்கு விஜயம் செய்வது குறித்து கவனமாக சிந்தித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீதிமன்ற விசாரணையின்போது கண்ணாடிக் கூண்டிற்குள் நின்று பதில் அளித்த மோர்சி Posted: 29 Jan 2014 02:28 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை -அரசாங்கம் Posted: 29 Jan 2014 02:23 AM PST
2009ம் ஆண்டு இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் சட்டவிரோத ஆயுதங்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது, 25 ஆண்டு கால பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தியதில்லை என குறிப்பிட்டுள்ளது, இலங்கை அரசாங்கப்படையினர் இரசாயன மற்றும் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், படையினர் எந்த சந்தர்ப்பத்திலும் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























