Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிரிவு மற்றும் குறிக்கோள்

Posted: 27 Jan 2014 01:24 PM PST

பிரிவு
மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது
ஒரு நாள் பிரிந்தே ஆக வேண்டும்!

இலட்சியம்

பூனைக்கும் எலிக்கும் ஆன ஓட்டப் பந்தயத்தில் பெரும்பாலும் எலியே வெற்றி பெறுகிறது.
ஏனனில் பூனை உணவுக்காக ஓடுகிறது! எலி உயிருக்காக ஓடுகிறது!

தேவையை விட குறிக்கோளே திறமையை அதிகம் வெளிப்படுத்தும்!

அசுத்தம் சோறு போடும் (சென்ரியூ)

Posted: 27 Jan 2014 11:01 AM PST

அசுத்தம்
சோறு போடும்
மலம் அள்ளும் தொழில்

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Posted: 27 Jan 2014 10:33 AM PST

பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூர் குளக்கரையில் சேவல் சண்டை போட்டி நடந்தது. - அப்போது போட்டியில் கலந்து கொண்ட சேவல் ஒன்று துள்ளிக்குதித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த.வ.உ.சி.நகரைச் சேர்ந்த சசிக்குமார் மீது விழுந்தது. இதில் சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி சசிக்குமாரின் தொடைப்பகுதியில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. - இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சசிக்குமார் பரிதாபமாக ...

தலை கவசம்

Posted: 27 Jan 2014 08:46 AM PST

அவசர உலகம் அனைத்திலும் அவசரம் எட்டு மணிக்கு நேர்காணல் இருபது நிமிட பயணம், இடையில் நண்பர்களுடன் கொஞ்ச நேரம் கதைத்து விட்டு விருட்டென்று புறப்பட்டேன்!! பத்து நிமிடம் அசுர வேகம், எந்த பிரச்சினையும் இல்லை இதோ எதிரில் வரும் கார் என்மீது மோதும் வரை எந்த பிரச்சினையும் இல்லை!! அடிபட்டு கிடக்கிறேன் சுற்றிலும் நிறைய பேர் வேடிக்கை பார்க்க மட்டும், இந்த நாய்ங்க இப்படிதாங்க வேகமா வந்து சாகரானுங்க, பைக் கையில வந்துட்டா ஏரோப்பிளேன் ஓட்டுற நினைப்பு, ஆளுக்கொரு அடி வார்த்தையில், மயக்கம் ...

வார்த்தை (விதை)கள்..!

Posted: 27 Jan 2014 07:56 AM PST

இனிப்பு, புளிப்பு, கசப்பு காரமெனப் பல்சுவை வார்த்தைப் பரிமாற்றத்தில்...! பிடித்த சுவை இனிப்பென பரிமாறிட.. இனிப்பில் ஒவ்வாமை இருக்கென காரத்தையே தேர்ந்தெடுத்திட்டால் பரிமாற மறுத்திடத்தான் முடியுமா..? விரும்பியவர் விருப்பத்திற்காய் காரம் பரிமாறப்படுகிறது விரும்பியோ, விரும்பாமலோ..!! காலமது செய்யும் கோலத்தில் இனிப்பாய் வழங்கிடும் வார்த்தையுமிங்கே கசப்பாய்த் தோன்றி வெறுப்பாய் மாறிடுது....!! இனிப்பாய் இருந்திடக் கொடுத்திடும் கசப்பு வார்த்தையும் புளிப்பாய்த் திகழ்ந்திடுதே புவிதனில்...!! இனிப்பு,கசப்பு,புளிப்பு காரமென ...

சாவின் பாயில் கிடக்கிறேன்

Posted: 27 Jan 2014 07:53 AM PST

ஒடிந்துவிட்ட சிறகுகளோடு நான் பறக்க நினைக்கிறேன் முறிந்துவிட்ட கால்களோடு நான் ஓட நினைக்கிறேன். சென்றுவிட்ட பார்வையோடு நான் பார்க்க நினைக்கிறேன். கண்கள் இல்லாமல் கண்ணீர் கொண்டு அழ நினைக்கிறேன் . கைகள் இருந்தும் விரல்களின்றி உன்னைப் பற்றி எழுத நினைக்கிறேன். உன்னை அனைக்க நினைக்கிறேன் தழுவ நினைக்கிறேன் முடியாமல் தவிக்கிறேன். என்னிடம் காதல் வந்தும் வராத நீயின்றி சாவின் பாயில் கிடக்கிறேன்.

அரியும் சிவனும் ஒண்ணு!

Posted: 27 Jan 2014 07:36 AM PST

- நம்ம நாட்டுல ஆதிகாலத்துலேந்தே சிவன் பெரியவரா, நாராயணன் பெரியவரான்னு வாதம் உண்டு (இப்போ கொறஞ்சிருக்கோ?). பொன்னியின் செல்வன் படிக்கும் போது அதைப் பத்தின நெறைய்ய உதாரணம் கிடைச்சுது. ப்ரம்மாவும், நாராயணனும் சிவனோட முடியையும் அடியையும் கண்டுபிடிக்க முடியாததுனால சிவனே பெரியவர்னு ஒருத்தர் வாதாட, இன்னொருத்தரோ, வாமன அவதாரம் எடுத்து மூணு உலகத்தையும் அளந்த நாராயணனே பெரியவர்ங்கறார். இதெல்லாம் படிக்கும்போது எனக்கு ஒரு தேவாரப் பாடலும், திவ்யப் ப்ரபந்த பாசுரமும் ஞாபகத்துக்கு ...

வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Posted: 27 Jan 2014 07:32 AM PST

குழந்தைகள் விளையாட்டாகவும் இருக்கனும் அதே சமயம்அவர்கள் அறிவிற்கு  புத்திசாலிதனத்திற்கு வேலைகொடுப்பதாகவும் இருக்கனும்.அவ்வாறு சுமார் 100க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை உள்ளடக்கிய விளையாட்டுக்களை இங்கு காணலாம்.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Colouring.Crossword.Dot Drawing.Jigsaws.Mazes. Rumble Jumble.Word Sorch.Fun Games என ஒன்பது விதமான தலைப்புக்கள் கொடுத்துள்ளார்கள்;. ஒவ்வொரு தலைப்பிலும் சுமார் பதினைந்துக்கும் ...

முதுமையின் வலிகள்

Posted: 27 Jan 2014 07:31 AM PST

படித்தது தினகரன். முதுமை பருவம் குழந்தை பருவத்துக்கு சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தைகளுக்கு எப்படி சொல்ல தெரியாதோ அதே மாதிரி  தான் முதியவர்களுக்கும். ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப்பிரச்சனைனு, வேற நோய்களோட விளைவால் வரக்கூடியது. தனிமை, வாழ்க்கையைப்பத்தின பயம்,  வருமானம், இல்லாததுனு வேற காரணங்களால உணரப்படற வலி புற்றுநோயால வரக்கூடிய வலி... இதெல்லாம் வயசானவங்களோட வலிக்கான  காரணங்கள். 65 வயசுக்குப் பிறகு புற்றுநோய் தாக்கற ஆபத்து அவங்களுக்கு அதிகம். இவங்களுக்கு சிகிச்சை ...

உன்னை விட

Posted: 27 Jan 2014 07:29 AM PST

பரந்து கிடக்கும் இந்தப் பாரினில் எந்தப் பொருளும் முனைப்பாய் கண்ணுக்கு தெரிவதாயில்லை உன் வட்ட முகத்தில் தெரியும் ஒற்றைப் பருவைத் தவிர . காதல் என்று வந்துவிட்டால் அழகழகாய் பறந்து திரியும் எத்தனையோ வண்ணத்துப் பூச்சிகள் கண்ணுக்குத் தெரிவதாயில்லை உன் பக்கவாட்டில் தெரியும் மச்சத்தைத் தவிர . நீல நிற வானை உடைத்துக் கொண்டு பொன்னிற சேலை கட்டிய அந்த நிலா மகள் கண்ணுக்குத் தெரிவதாயில்லை குன்றின் மேல் விளக்காய்த் தோன்றும் உன் வெண் முகம் தவிர . பத்தும் பறந்து பதறி ...

நகைச்சுவை

Posted: 27 Jan 2014 07:26 AM PST

1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு. சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்! வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு. சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன். 2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க? ராமு: தோலை உரிச்சுட்டாங்க... 3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற? மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு. 4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?'' மற்றவர்: என்னங்க ...

அந்தமானில் மரணத்தைத் தழுவிய காஞ்சி பயணிகள்!

Posted: 27 Jan 2014 07:24 AM PST

சுற்றுலாவாக அந்தமான் போன இடத்தில் மரணத்தைத் தழுவிய காஞ்சிபுரம் சுற்றுலாப் பயணிகளின்
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
அவர்தம் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்!

ஜனவரி 2014-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .

Posted: 27 Jan 2014 07:21 AM PST

26-1-2014-தினமலர்வாரமலர்இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/qn6tejkwidh2v7j/Vaara+Malar+26-01-2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 24-1-2014-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/16j8gaqgar5c36m/Bala-Jothidam-24-01-2014%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 26-1-2014-தினத்தந்தி குடும்பமலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ub2g98ymdptr5mb/kudumbamalar+26.1.14%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 24-1-2014-தினகரன் ...

என் காதல் கணவா

Posted: 27 Jan 2014 05:11 AM PST

அத்தை மகனே என் மாமனே என் பிள்ளையின் தகப்பனே நீ வேடிக்கை பார்க்கையில் நான் விதையாக இருந்தேன் நீ விளையாடும் பருவத்திலே நான் வேடிக்கைப் பார்த்தேன் நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே நான் விளையாடித் திரிந்தேன் நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன் நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன் நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன் நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட நான் விதைக்கு பதியமிட்டு ...

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 27 Jan 2014 05:04 AM PST

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

விலங்கு - ஒரு பக்க கதை

Posted: 27 Jan 2014 04:14 AM PST

"சார்.. உங்க நண்பர் விஜயன் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலை நடந்த அன்று நீங்க அவர் வீட்டுக்குப் போயிருக்கீங்க உண்மைதானே?' என்றார் இன்ஸ்பெக்டர் குமரன். - "சார், நான் அவரைப் பார்க்கப் போனது செவ்வாய் கிழமை. அன்று அவரும் வீட்டில் இல்லை. வராண்டாவில் கிடந்த நாற்காலியில் கொஞ்சநேரம் குமுதம் படிச்சிட்டு வந்துட்டேன்… சார். மறுநாள்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அன்று நான் ஊரில் இல்லை…' என்றா சதீஷ். - "குமுதம் அங்கேயே கிடந்ததா?' - "இல்ல சார்.. வர்ற வழியில் ஹன்சிகா சிம்பு காதலா?ன்னு குமுதம் ...

உஷார் உஷார் உஷார் !!!!

Posted: 27 Jan 2014 04:06 AM PST

இட்லி, தோசை மாவு பாக்கெட் மாவு ஒரு உயிர்கொல்லி!!!!!!!! கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை ...

எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது???

Posted: 27 Jan 2014 03:47 AM PST

எந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன. இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின், எளிய, ஆனால், பயன்மிக்க பதிப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்குகின்றன. இப்படிக் கிடைக்கும் ஆண்ட்டி ...

விடுமுறையின் ஏக்கம்

Posted: 27 Jan 2014 03:42 AM PST

  ஓர் ஆண்டுத்தேர்வின் விடுமுறை அது நாளை  மீண்டும் திறக்கும் பள்ளிக்கு எப்பnடி செல்வது என்றும், பாட்டியிடம் செய்யும் சேட்டைகளையும், விளையாட்டு நண்பர்களையும் விட்டு எப்படி பிரிவது என்று புரியாமல் இன்றைய இரவிலிருந்தே வேதனையை சுமந்துகொண்டிருக்கிறான் மனதில். அந்த சிறு வேதனை கண்ணீராய் அவன் தலையணையை நனைக்க, காரணம் புரியாத அந்த சிறுவனின் வேதனை கண்டு மேகங்களும் கண்ணீர் சிந்தின. இரவு முழுவதும் தொடர்ந்தது மழை அதிகாலையில் ஏதோ சிறு மனமாற்றத்துடன் தொலைக்காட்சி பெட்டியை காண்கிறான். அதுவரை ...

என் காதலி

Posted: 27 Jan 2014 03:19 AM PST

நெப்பந்தஸ் பெண்ணே...!! உன் இதழால் என்னை கொல்லாதே! தினமும் என்னை தின்னாதே! அழகே..! உன் கண்ணால், என்னை திருடும் பார்வை பார்க்காதே.. அது தினமும் என்னால் தூங்காதே..! வேற்றுக்கிரகவாசி நான்., பறக்கும் தட்டில் உன்னை தூக்கிக்கொண்டு போவேன், வெற்றுஆர்பிட்டால் போல அணுவே உன்னை சுற்றி நானும் வருவேன். கட்டபொம்மன் நானே.. கப்பம் கட்ட மாட்டேன், கடவுள் எதிரே வந்தாலும் கண்டுகொள்ள மாட்டேன்.. உன் நாட்டிய அழகை கண்டேன்.. நீ ஆர்கஸ்பீசஸ் தானடி உன் நாவில் இருக்கும் உமிழ்நீரிலும் நச்சு உள்ளதடி என்னை ...

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Posted: 26 Jan 2014 11:45 PM PST

நாம் தமிழர்களாய் இருந்தாலும், தமிழ்த் திரைப்படப் பாடல்களை கேட்டு ரசித்தாலும் இசைக்கு மொழி ஒரு தடை இல்லை அல்லவா! தமிழ்த் திரைப் படங்களைப் போல இந்தித் திரைப்படங்களிலும் அருமையான இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக நௌஷாத், ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால்,கல்யாண்ஜி ஆனந்த்ஜி, சலீல் சௌத்ரி என்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் தங்கள் அபாரத் திறமையால் நம் காதுகளுக்கு தேன் பாய்ச்சி இருக்கிறார்கள். பாடகர்களை எடுத்துக் கொண்டால் முகமத் ரபி, கிஷோர் குமார், மன்னாடே, ...

நாட்டு நடப்பு - தம்பிக்குத்தான் எல்லாம் தர்றாங்க...!

Posted: 26 Jan 2014 11:19 PM PST

என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ்

Posted: 26 Jan 2014 11:15 PM PST

*நிறைய தண்ணீர் குடியுங்கள். *சமைத்த உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக உண்ணுங்கள். இப்படி செய்தால் பழங்கள் மற்றும் காய்களின் சத்துக்கள் முழமையாக கிடைக்கும். *சமையலுக்கு கொழுப்பு சத்து இல்லாத ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். *புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். *வெயிலிருந்து உங்கள் சருமம், கூந்தலை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்க்ரீன் மற்றும் ஹேர் கண்டிஷனரை உபயோகியுங்கள். *நன்றாக தூங்குங்கள். *சரியான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள். *உங்கள் சருமதிற்கேற்ற லோஷன்களை ...

என்னவள்

Posted: 26 Jan 2014 10:30 PM PST

கட்டிலில் நீயோ பேதை- என்
கைவிரல் பிடித்திட பெதும்பை
அழகாய் எனைக்கட்டி
அணைப்பதில் நீயோ மங்கை
அணைந்துவிடமலே என்னுடன்
எரிவதில் நீயோ அரிவை
அன்பாய் மடியில் நானிருக்க -என்
தலைமுடி கோதும் நீ தெரிவை
தெரியாமலேயே எனை தீண்டிப்பார்க்க
நீதானடி என் பேரிளம்பெண்...

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Posted: 26 Jan 2014 09:13 PM PST

உங்களை தமிழகத்தின் முதல்வராக ஆக்கினால் என்ன செய்வீர்கள்..?

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்..


என்னுடைய கருத்துகள் நாளை பதிவு செய்கிறேன் :

இது ஒரு பொது விவாதம் ,

பா .ராகவன் -புதையல் தீவு நூலினை டவுன்லோட் செய்ய

Posted: 26 Jan 2014 08:37 PM PST

பா .ராகவன் -புதையல் தீவு நூலினை டவுன்லோட் செய்ய புதையல் தீவு என்னும் இந்தக் கதை கோகுலம் சிறுவர் மாத இதழில் ஏப்ரல் 2004 முதல் மார்ச் 2005 வரை தொடராக வெளியானது. சற்றும் திட்டமின்றி அந்தந்தக் கணத்துக் கற்பனைக்கு எழுத்து வடிவம் கொடுத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, இந்தக் கதையை அவ்வண்ணமே எழுதினேன். ஒரு கதாபாத்திரத்தைக் கூட யோசித்து வைத்துக்கொள்ளவில்லை. கதை என்ற ஒன்றைத் திட்டமிடவும் இல்லை. வாய்க்கு வந்தபடி கதை சொல்லுவதில் உள்ள சுகத்தை எழுத்தில் அனுபவித்துப் பார்க்க விரும்பி ...

தத்துவகதைகள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய

Posted: 26 Jan 2014 08:36 PM PST

தத்துவகதைகள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய .. தத்துவகதைகள் -திருமூர்த்தி வாசுதேவன் மின்னூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . பொருளடக்கம் 1. இந்திரன்தான் காரணம்! 2. ஹாப்பி ராம நவமி! 3. பைத்தியம்! 4. எப்படி இருக்கணும்? 5. ரெவலே ஷன் 6. புத்தா! 7. அன்பு… 8. புனிதர் 9. காலை ப்ரார்த்தனை 10. புனிதம் 11. கூச்சம்! 12. நம்பிக்கை 13. மகாத்மா காந்தி 14. தவளைகள் சத்தம் 15. கோரிக்கை 16. இப்படித்தான் இருக்க வேண்டும் 17. எனக்கு எதுக்கு? 18. திட்டம் 19. ...

படித்து ரசித்த புகைப்பட கவிதைகள்

Posted: 26 Jan 2014 08:15 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™