Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எனக்கு பதவி ஆசை இல்லை: ராகுல்

Posted:

புதுடில்லி; எனக்கு பதவி ஆசை இல்லை என்றும், அதிகாரத்திற்காக செயல்படுவதில்லை என்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: பிரதிநிதித்துவத்தில் மக்களை கொண்டு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதனை தான் இளைஞர் காங்கிரசில் செய்துள்ளோம். ஆம் ஆத்மிக்கும் காங்கிரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு கட்டமைப்பு தான். பல செயல்முறைகளை நாங்கள் வளர்த்துள்ளோம். பா.ஜ.,வின் ஓட்டுவங்கியை குறைக்க நாங்கள் ஆம்ஆத்மி கட்சியை பயன்படுத்திக் கொள்ளவில்லை. என கூறினார்மேலும் அவர், காமன்வெல்த் ஊழல் தொடர்பாக ஆம் ...

அந்தமான் விபத்து: இறந்தோர் உடல்கள் ஒப்படைப்பு

Posted:

அந்தமானில், நடுக்கடலில், நேற்று முன்தினம் மாலை, படகு கவிழ்ந்ததில், 22 பேர் இறந்தனர். இவர்களில், 17 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில், 16 பேரின் உடல்கள், தனி விமானம் மூலம், கொண்டு வரப்பட்டு, அவர்களின் உறவினர்களிடம், நேற்று ஒப்படைக்கப்பட்டன.காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 64. காஞ்சிபுரம், காமாட்சியம்மன் சன்னிதி தெருவில் வசித்து வருகிறார். இவர், தன் பேத்தி பூஜா பெயரில், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.ஆண்டுதோறும்: சபரிமலைக்கு செல்வார். அவருடன் ஏராளமானோரை அழைத்து செல்வார். அவர்களுடன் ...

மேற்கு வங்கத்தை எட்டியது மோடி அலை: பா.ஜ., உறுப்பினர் எண்ணிக்கை உயர்வு

Posted:

கோல்கட்டா: நரேந்திர மோடி அலை, மம்தா ஆதிக்கம் மிக்க, மேற்கு வங்கத்தையும் எட்டிவிட்டது. இங்கு, பா.ஜ., உறுப்பினர்களின் எண்ணிக்கை, இரண்டு மடங்காகி விட்டது. பா.ஜ., பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின், இரண்டு லட்சம் பேர் உறுப்பினராகி உள்ளனர்.இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் கடும் முயற்சியால், மூன்றாண்டுகளுக்கு முன், திரிணமுல் காங்., ஆட்சி பொறுப்பு ஏற்றது. அங்கு, பா.ஜ.,வின் வளர்ச்சி குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால், பா.ஜ., வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதற்கு பின், மோடி அலை, மேற்கு வங்கத்திலும் தாக்கத்தை ...

அப்போ இனித்தது, இப்போ கசக்குது: ஊடகங்கள் மீது 'ஆம் ஆத்மி' பாய்ச்சல் விவகாரம்

Posted:

டில்லியில், ஆட்சியை பிடித்து, புது வரலாறு படைத்த, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு ஊடகங்கள் ஆதரவு இருந்ததாக கூறப்பட்டது; ஆனால், பதவியில் ஏறிய கொஞ்ச நாட்களிலேயே, ஊடகங்கள் மீது, ஆம் ஆத்மி குறை சொல்ல துவங்கிவிட்டது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, டில்லி போலீஸ் அதிகாரிகள் சிலரை, பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, டில்லி முதல்வர், அரிவிந்த் கெஜ்ரிவால், பார்லிமென்ட் வளாகம் அருகே, தர்ணா போராட்டம் நடத்தினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கெஜ்ரிவாலின் கோரிக்கை நிறைவேறவில்லை. அதே நேரத்தில், அவருக்கு எதிராக விமர்சனம் கிளம்பியது. ...

ஓட்டுகள் போய்விடும் என்றே எச்சரித்தேன்: மதுரையில் அழகிரி பேட்டி

Posted:

மதுரை: ''லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், தி.மு.க., நிர்வாகிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால், அவர்களின் ஆதரவு ஓட்டுகள் போய்விடும் என்று தான் எச்சரித்தேன்,'' என, மதுரையில் மு.க.அழகிரி கூறினார்.அதிகமான தொண்டர்கள்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, நேற்று முன் தினம் மதுரை வந்தார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, முத்துப்பாண்டியன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், ஏராளமான வாகனங்களில், அழகிரியை அவரது வீட்டில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.அழகிரியின் பேட்டி: * கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின், உங்களை சந்திக்க நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ...

தே.மு.தி.க., ஆதரவுடன் வாசன் போட்டி? காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றார் விஜயகாந்த்

Posted:

தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஆறு பேரை தேர்வு செய்ய, அடுத்த மாதம், 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், அ.தி.மு.க., சார்பில், சசிகலா புஷ்பா, விஜிலா, முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ் ஆகிய நான்கு பேரும், மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், ரங்கராஜனும் போட்டியிடுகின்றனர். எஞ்சிய ஒரு இடத்துக்கு, தி.மு.க., சார்பில், திருச்சி சிவா நிறுத்தப்பட்டுள்ளார். பலம் இல்லை: ஆனால், 21 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ள, தே.மு.தி.க., போட்டியிடுமா அல்லது தி.மு.க.,வை ஆதரிக்குமா அல்லது போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போட்டியிட்டாலும், வெற்றி ...

பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,: அன்புமணி - முரளீதர் ராவ் சந்திப்பில் உடன்பாடு

Posted:

பா.ம.க.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், அன்புமணியுடன், பா.ஜ., மேலிட தலைவர், முரளீதர் ராவ் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணியில், பா.ம.க.,வும் வருவது உறுதியாகி உள்ளது என, தமிழக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், பா.ஜ., தலைமை யில், வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்காக, சென்னை வந்த பா.ஜ., மேலிட தலைவர், முரளீதர் ராவ், ம.தி.மு.க., அலுவலகம் சென்று, அக்கட்சி தலைவர் வைகோவை சந்தித் தார். இந்த சந்திப்புக்கு பின், நேற்று முன்தினம், பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு வைகோ வந்தார். பா.ஜ., தலைவர்களை ...

மத்திய அரசின் நடவடிக்கைகளால் வாசன் கவலைப்படுகிறார்: கருணாநிதி

Posted:

சென்னை: ''கச்சத்தீவு பிரச்னையில், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, மத்திய அமைச்சர் வாசன் கவலைப்படுகிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: 'கச்சத்தீவு அருகில், மீன் பிடிக்க, தமிழக மீனவருக்கு உரிமை இல்லை' என, சென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தின் சார்பில், மத்திய அரசில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்படுகின்றனர். உதாரணமாகக் கூற வேண்டுமானால், வாசன், 'கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, கூறியிருக்கிறார். 'கச்சத்தீவு ...

நாட்டிலேயே நவீன ஆயுதங்கள், கட்டமைப்பு உடையது தமிழக போலீஸ்: முதல்வர் பெருமிதம்

Posted:

சென்னை: நாட்டிலேயே நவீன ஆயுதங்கள், கட்டமைப்பு மற்றும் பயிற்சி பெற்றதாக திகழ்வது தமிழக போலீஸ் தான்'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.தேசிய அளவில், நான்காவது, போலீஸ் அதிரடிப்படையினர் திறனறி போட்டிகள், சென்னை அடுத்த, ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில், 22ம் தேதி துவங்கியது. 23 போலீஸ் அதிரடிப்படை அணிகள் பங்கேற்ற இப்போட்டிக்காக, 94.75 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கினார். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவில், மின்னணு கட்டுப்பாட்டில் இயங்கும், அனிச்சை முறையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக் களம் ஏற்படுத்தப்பட்டது. போட்டிகள் நேற்று ...

தமிழக இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை சுமுகம் : பல மணி நேர இழுபறிக்கு பின்னர் முடிவு

Posted:

சென்னை:தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, சென்னையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், பல மணி நேர இழுபறிக்குப் பின், சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. இதை, இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் கூட்டாக அறிவித்தனர். ஆனால், தீர்மானங்கள் குறித்து, இரு அரசுகளின் ஒப்புதல் பெற்ற பின், வெளியிடப்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.தமிழக - இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம், சென்னை, தேனாம்பேட்டை, மீன்வளத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.யார், யார்?*இலங்கை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™