ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழீழத்தின் மிகப்பெரிய வில்லிசை கலைஞர் கலாவினோதன் சின்னமணி அவர்கள்.
- கீதாசாரம்
- மஹா பெரியவா என்கிற வார்த்தையே பிராண வாயு
- வணக்கம் நண்பர்களே..
- பரமாசார்யாவின் கருணை
- சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு
- விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார்
- புரியாதவள்
- கேரளா நர்ஸ்கள் குறித்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் மன்னிப்பு கோரினார்
- சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார்
- ராஜபாளையம் நாய்
- சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு
- சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..!
- தகவல் தாருங்கள்
- மனதை மனதாக்கப் புறப்படு மனிதா !
- நகைச்சுவை
- அனைவரும் வாழ்க வளமுடன்
- மௌனமாய்
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- சிவாஜி சிலை: கோர்ட் உத்தரவு
- மனிதத்தை சாகடிக்கும் மனிதன்
- குன்றென்று விலகாதே…
- முகமூடி களைவோம்
- தலை கவசம்
- சிங்கப்பூரில் நடைபெற்ற 33ம் திருமுறை மாநாடு!
- மறைமலையடிகள் வரலாறு - புத்தக மதிப்புரை
- அமெரிக்காவில் மீண்டும் கடும் பனிப்பொழிவு: குளிரில் உறைந்த நியூயார்க்
- ஊஞ்சலாடும் பறவை
- iphone 3G உதவி தேவை .
- எதிர்பார்த்தபடி கிடைத்தன கவிதைகள்..
- அடகு வைத்த கண்கள்..!
- கோமாளிகள்
- சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம்
- சொல்ல மறந்த நன்றி...!
- நூலை போல சேலை
| தமிழீழத்தின் மிகப்பெரிய வில்லிசை கலைஞர் கலாவினோதன் சின்னமணி அவர்கள். Posted: 23 Jan 2014 11:23 AM PST தமிழீழத்தில் ஒருகாலத்தில் வில்லிசை கலையில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் கலாவினோதன் சின்னமணி அவர்கள் ஆவார். இனிமையான பாடல்கள் மூலமும், நகைச்சுவையான பேச்சின் மூலமும், நல்ல முகபாவனை மூலமும்,மக்கள் எல்லோருடைய மனத்திலும் இடம்பிடித்த கலாவினோதன் சின்னமணி அவர்களின் வில்லிசையின் ஒரு சிறு பகுதியை நீங்களும் பார்த்து ரசியுங்கள். |
| Posted: 23 Jan 2014 10:19 AM PST எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவருடையதாகிறது மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும். |
| மஹா பெரியவா என்கிற வார்த்தையே பிராண வாயு Posted: 23 Jan 2014 09:18 AM PST மஹா பெரியவா என்கிற வார்த்தையே பிராண வாயு. மூச்சுக்காற்று. சகல துக்க நிவாரணி. சர்வ ரோக நிவாரணி. சர்வ பாபநாசினி. இன்னும் என்ன சொல்ல? கோடானு கோடி சம்பவங்களில் ஒன்று அடி மனதை தொட்டு விட்டது. அதை உங்களுக்கும் பரிமாறி அந்த வார்த்தைக்கப்பால் பட்ட சுகானுபவம் நீங்களும் பெற எனக்கு ஆசை. எங்கிருந்தோ எனக்கு வந்ததை சற்று செப்பனிட்டு அளிக்கிறேன். டாக்டர் சிவசங்கர் அமெரிக்காவே தஞ்சம் பிறந்த தமிழகமோ தாய் நாடு இந்தியாவோ ஒரு உபயோகமற்ற, உருப்ப டாத சாக்கடை, இந்தியர்கள் திருத்த ... |
| Posted: 23 Jan 2014 09:18 AM PST அனைவருக்கும் வணக்கம் , சில நாட்களுக்கு முன்னால் நான் "மெலுஹாவின் அமரர்கள் " என்கிற தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நாவலை வாங்கி வாசித்தேன் ...அது இறைவன் சிவபெருமானை பற்றிய கற்பனை கலந்த கதை ..படிப்பதற்கு சுவாரசியமாக தான் இருந்தது ..அந்நூலை இங்கு பதிவிட விரும்பினேன் ...ஆனால் என்னால் முடியவில்லை .....வரலாற்று கதைகள் படிக்க விரும்புவர்கள் ,இந்நூலையும் விரும்புவர் ......நான் மதுரையில் வசிக்கிறேன் ,யாரவது மதுரையிலோ அல்லது அதற்க்கு அருகாமையில் உள்ள நமது நண்பர்கள் இங்கு அந்நூலை பதிவிட தயாராக ... |
| Posted: 23 Jan 2014 09:12 AM PST தினமும் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்படும் ஒரு பரம ஏழை. பெரியவாளுடைய மஹா மஹா மஹத்துவமோ, அந்த எளிய உருவத்தின் கருணையோ எதுவுமே அவருக்குத் தெரியாது. ஆனால் பெரியவா இருந்த முகாமுக்கு தினமும் இரண்டு வேளையும் வந்துவிடுவார். காரணம்? அன்னபூரணி இருக்கும் இடத்தில், அன்னத்துக்குக் குறைவேது? வயிறார சாப்பிட்டுவிட்டுப் போவார். பெரியவா அந்த கிராமத்தை விட்டுக் கிளம்பியதும், பழையபடி பசி, பசி, பசி! குடும்பத்தில் நான்கைந்து உருப்படிகள்! என்ன செய்வது? பேசாமல் தற்கொலை பண்ணிக் கொண்டுவிடலாம் என்று முடிவு பண்ணினார். ... |
| சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு Posted: 23 Jan 2014 09:06 AM PST ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூர் வந்து திருச்செந்திலாண்டவனை மனமுருக வேண்டி பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் அதுவரை அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது கண்டு மகிழ்ச்சியால் செந்திலாண்டவனை அவர் துதித்த 33 ஸ்லோகமே ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் இதை மனமுருக பாராயணம் ... |
| விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Posted: 23 Jan 2014 08:28 AM PST ஒகேனக்கல் : தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ரங்காபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று காலை டூவீலரில் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஓடி வந்த கழுதை, திடீரென டூவீலர் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த தகவல் அறிந்த பென்னாகரம் ... |
| Posted: 23 Jan 2014 06:26 AM PST பெண்ணே நீ இரகசியமாய் ஒளிந்து கொள்கிறாய் அடுத்தவர் மனங்களில் ஒருவர் மனது கூட உன்னால் ஒளிர்ந்து கொள்வதாக இல்லையே !. வீணாக மனங்கள் தான் தாமாகவே தம்மை பிழிந்து கொள்கிறது . நாம் அழிந்து போகும் சேதி அவளுக்கு தெரியாது கழிந்து சென்ற எத்தனையோ நாட்கள் கூட கிழிந்து போன சங்கதி அவளுக்கு எங்கே புரிகிறது . |
| கேரளா நர்ஸ்கள் குறித்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் மன்னிப்பு கோரினார் Posted: 23 Jan 2014 05:58 AM PST புதுடெல்லி: கேரளா நர்ஸ்கள் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் மன்னிப்பு கோரியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர் குமார் விஸ்வாஸ், ராகுல் காந்தியை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டில், கேரள மாநில நர்சுகளை விமர்சித்து விஸ்வாஸ் தெரிவித்த கருத்து யூ டியூப்பில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரள நர்சுகள் கறுப்பு நிறத்தில் இருப்பதால்தான் நர்சுகளுக்கு சகோதரிகள் ... |
| சாவிலும் பிரியவில்லை மனைவி 2.30க்கு மரணம் ஆசிரியர் 4 மணிக்கு இறந்தார் Posted: 23 Jan 2014 05:53 AM PST அருமனை : குமரி மாவட்டம் அருமனை அருகே கோணத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன்(84). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி முத்தம்மாள்(80). இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் உள்ளனர். முதுமை காரணமாக உடல்நலிவுற்றிருந்த முத்தம்மாள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இறந்தார். மனைவி இறந்த அதிர்ச்சியில் தங்கப்பன் சோகத்துடன் இருந்தார். இந்நிலையில் மாலை 4 மணியளவில் தங்கப்பனும் இறந்தார். மனைவி இறந்த ஒன்றரை மணி நேரத்தில் கணவனும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ... |
| Posted: 23 Jan 2014 05:41 AM PST ராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ? ம்ம்ம்....கரக்ட், நாய் !! சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால் அது ஆள் உயரம் இருக்கும், எழுந்து நின்றால் கன்றுக்குட்டி உயரம் இருக்கும், மோப்ப சக்தி அதிகம் என்றெல்லாம் சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி ஆரம்பிக்கும்போது இப்படி எல்லாம் சென்று பார்ப்பேன் என்று எண்ணவில்லை. ஆனால் இப்படி சுற்றி அந்த ஊரின் பெருமையை பற்றி கேட்கும்போது மனதில் மகிழ்ச்சி, இங்கு ஒரு நாய் பண்ணைக்கே சென்று மிகவும் விரிவாக செய்தி சேகரித்தேன். ... |
| சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Posted: 23 Jan 2014 05:33 AM PST நியூசிலாந்து: இந்தியா, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்தில் உள்ள பீர் கம்பெனி, வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை பார்வையாளர்கள் மாடத்தில் இருக்கும் ரசிகர்கள் கேட்ச் பிடித்தால் அவர்களுக்கு உடனடியாக அங்கேயே 1 லட்சம் நியூசிலாந்து டாலர் (சுமார் ரூ.52 லட்சம்) பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளது. ரசிகர்கள் அந்த நிறுவனத்தின் முத்திரை பெற்ற ஆரஞ்சு கலர் டி-ஷர்ட் அணிந்திருக்க வேண்டும். சிக்சர் அடிக்கும் பந்தை ஒரு கையாலேயே பிடிக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. நேற்று ... |
| சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Posted: 23 Jan 2014 05:25 AM PST டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் 3வது மனைவி சுனந்தாவின் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. அவர் இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடியுள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையில், அவரது கை, கழுத்து, கன்னத்தில் கடித்ததற்கான அழுத்தமான காயம் ஏற்பட்டுள்ளது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அமைச்சர் சசிதரூர், காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த ... |
| Posted: 23 Jan 2014 05:19 AM PST இரத்தின ஓடைகளும் முத்தின பாறைகளும் பவ்வியமாய் அமைந்திருக்க ரம்மியமாய் பறவைகளும் மேகங்களும் பறந்து செல்ல பாவாடை தூக்கி நூலாடை போட்டு -அவளை நுகர்ந்து செல்லும் காற்றை கூட மிஞ்சியவளாய் ! எங்கேயும் ஒரு பெண்ணைக் கண்டால் சொல்லி விடுங்கள் அவள் தான் என் காதலி . |
| மனதை மனதாக்கப் புறப்படு மனிதா ! Posted: 23 Jan 2014 05:18 AM PST புறப்பபடு மனிதா புறப்படு ! சிறைப் படா மனதுடன் புறப்படு ! கரைப் படும் மனிதர் நாம் புறப் படு ! கறை படா புனிதனாய் கரைப்படு! கறை பட்ட தரணியை முறைப்படு !. குறை பட்ட தரணியை முறைப்படு! மாசற்ற பூமியாய் மாற்றிட சொகுசற்ற வாழ்க்கை ஓங்கிட முறைப்படு! . தரை எங்கும் இரத்தம் கழுவிட கண்ணீரை சொரியும் மனதை தழுவிட முன்னோர் தம் வாழ்க்கை முறையினை நெறியோடு நயக்கும் தன்மை தாவென முறைப்படு மனிதா முறைப்படு . முறையான மாந்தர் குலம் முறைமையற்று திரிவதுவும் மடைமை எனும் மகுடத்தை மனிதனாய் ... |
| Posted: 23 Jan 2014 05:18 AM PST 1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு. சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்! வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு. சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன். 2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க? ராமு: தோலை உரிச்சுட்டாங்க... 3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற? மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு. 4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?'' மற்றவர்: என்னங்க ... |
| Posted: 23 Jan 2014 05:11 AM PST பெயர்: ஹைதர் உசேன் சொந்த ஊர்: சென்னை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் முலமாக பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது தொழில்: நிர்வாவியல் மேலும் என்னைப் பற்றி: |
| Posted: 23 Jan 2014 05:08 AM PST பூவும் இனிப்பும் புன் சிரிப்பை உதிர்க்கும் உறவை இணைக்கும் வாதம், விவாதம் உறவை முறிக்கும்! தானாகவே ஒரு செடி வளர்ந்து மௌனமாய்ப் பூத்துச் செழிக்கிறது சமாதியின் மேலோ அதன் அருகிலோ! ! ! |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 23 Jan 2014 04:37 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| Posted: 23 Jan 2014 04:21 AM PST - --- சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள மறைந்த நடிகர் சிவாஜி சிலை, போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சிலையை வேறு இடத்தி்ற்கு மாற்றலாம் என கோர்ட் உத்தரவிட்டது - ----------------------------- |
| Posted: 23 Jan 2014 04:13 AM PST மரங்களுக்கு மனம் உண்டு மரங்களுக்கு பொறுமையுமுண்டு நாம் கொலை செய்து நமது சுகத்துக்காய் வாயில் கொதிப்பிக் கொள்ளும் வரை . மனிதனுக்குத்தான் எதுவுமில்லை மனிதம் என்பதை உயிரோடு குழி தோண்டிப் புதைக்கும் வரை . |
| Posted: 23 Jan 2014 04:02 AM PST —- நெருக்கமாய் வீடுகள் தூரமாய் மனிதர்கள் அடுக்காக வாழ்க்கை - >பொன்குமார் - —————— - குன்றென்று விலகாதே குகைக்குள் வண்ண ஓவியங்கள் - >அன்பாதவன் - —————— - தாகம் தீர்க்காத கடல் பொங்கி எழும் கோபம் மோதி உயரும் அலைகள் - >அன்பாதவன் - —————– - தூக்கம் கலைக்கிறது விடுமுறை அறியா சேவலின் கூவல் - >சி.சுண்முகம் - —————– - கிழிந்து விட்டன் நாட்கள் உபயோகமில்லாம்ல் நாட்காட்டி - >கவிமுகில் - —————— |
| Posted: 23 Jan 2014 03:26 AM PST புன்னகைத்து வரும் எத்தனையோ முகங்கள் புலிகளின் பற்களாய் இன்று கடித்து குதற நினைக்கிறது ! விலாசமற்று வரும் எத்தனையோ பெயர்கள் அனாமேதய ஐடி எனும் பற்களால் கவிதைகளை கடித்துக் குதறுவதேன் ? விருப்பமாய் வரும் எத்தனையோ தோழர்கள் சுகமான கருத்துக்களை சுபீட்சமாய் சொல்கையிலே வண்ண வண்ண கனவுகளூருது கற்பனை சுமந்து வரும் எத்தனையோ கவிதைகளை கழிந்து போன விலங்கு மலமாய் முகத்திலடித்து முகமூடி கலையா வேந்தனாவது தகுமா ? களமமைக்கும் இந்த தளத்தில் எத்தனையோ அன்பர்கள் ... |
| Posted: 23 Jan 2014 02:02 AM PST அவசர உலகம் அனைத்திலும் அவசரம் எட்டு மணிக்கு நேர்காணல் இருபது நிமிட பயணம், இடையில் நண்பர்களுடன் கொஞ்ச நேரம் கதைத்து விட்டு விருட்டென்று புறப்பட்டேன்!! பத்து நிமிடம் அசுர வேகம், எந்த பிரச்சினையும் இல்லை இதோ எதிரில் வரும் கார் என்மீது மோதும் வரை எந்த பிரச்சினையும் இல்லை!! அடிபட்டு கிடக்கிறேன் சுற்றிலும் நிறைய பேர் வேடிக்கை பார்க்க மட்டும், இந்த நாய்ங்க இப்படிதாங்க வேகமா வந்து சாகரானுங்க, பைக் கையில வந்துட்டா ஏரோப்பிளேன் ஓட்டுற நினைப்பு, ஆளுக்கொரு அடி வார்த்தையில், மயக்கம் ... |
| சிங்கப்பூரில் நடைபெற்ற 33ம் திருமுறை மாநாடு! Posted: 23 Jan 2014 01:04 AM PST பன்னிரு திருமுறைகள் வழியே சைவ சமயத்தின் சிறப்பு, பெருமை, நெறிமுறைகள், இவைபற்றி அனைவரும் நன்கு தெளிவாக அறிந்து கொள்ளுதல், திருமுறைகளை ஓதிப் பயன் பெறுதல் ஆகிய நோக்கங்களுடன் முப்பத்து மூன்றாம் திருமுறை மாநாடு 2013 ஜூலை 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களிலும் சிங்கப்பூர் டேங் சாலை அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திலுள்ள திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டின் ஓர் அங்கமான அறுபத்து மூவர் குருபூசை விழா மட்டும் செரங்கூன் நார்த் அவின்யூ ஒன்று சாலையிலுள்ள அருள்மிகு தரும முனீஸ்வரன் ஆலயப் ... |
| மறைமலையடிகள் வரலாறு - புத்தக மதிப்புரை Posted: 23 Jan 2014 12:59 AM PST மறைமலையடிகள் வரலாறு - மறை.திருநாவுக்கரசு; பக்.784; ரூ.600; மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை-62; 044- 2637 1643. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளின் பிறப்பில் தொடங்கி (1876) அவரது பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள், பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரை தேவர், ரா. ராகவையங்கார், வ.உ. சிதம்பரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ந.சி. கந்தையா, மயிலை சீனி. வேங்கடசாமி முதலிய அறிஞர்களோடு அவருக்கிருந்த தொடர்பு, அவர் எழுதிய ஆய்வு நூல்கள் ... |
| அமெரிக்காவில் மீண்டும் கடும் பனிப்பொழிவு: குளிரில் உறைந்த நியூயார்க் Posted: 23 Jan 2014 12:00 AM PST - - நியூயார்க்: - அமெரிக்காவை நடுங்க வைத்த போலார் வோர்டெக்ஸ் என்னும் துருவ பனிப்புயல் தற்போது மீண்டும் வந்து தாக்கியுள்ளது. இம்முறை போலார் வோர்டெக்ஸால் நியூயார்க் நகரம் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள் மற்றும் கனடாவை போலார் வோர்டெக்ஸ் என்னும் துருவ பனிப்புயல் அண்மையில் தாக்கியது. இதனால் புயல் தாக்கிய இடங்களில் உள்ள மக்கள் கடுங்குளிரால் அவதிப்பட்டனர். இந்த பனிப்புயலால் சாலை மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் போலார் ... |
| Posted: 22 Jan 2014 11:50 PM PST - - சிறைச்சாலையை சீர்படுத்தினார் அமைச்சர் பின்னால் உதவுமென்று - >இலக்கியன் - ———————- - புழுக்கள் சாவு துக்கம் விசாரிக்க வந்தன எறும்புகள் - >சீ.மு.பாபு - —————————— - நீர் வற்றிய குளத்தில் கோலங்கள் பறவைகளின் காலடித்தடம் - சே.ம.சக்திவேல் - —————————- - கிளையில் அமர்ந்த பறவை பறந்து சென்றது ஊஞ்சலாடி விட்டு - >ஆர்.கே.சக்தி கணேஷ் - ——————————– |
| Posted: 22 Jan 2014 11:47 PM PST நான் ஒருவரிடத்தில் இருந்து பாவித்த ஒரு iphone 3G வாங்கினேன். அதில் அவருடைய முக்கியமான சில புகைப்படங்கள் இருந்தன, அந்த புகைப்படங்களை அவருக்கு ஒரு cd யில் இட்டு தரும்படி சொன்னார். பின்னர் நான் itune சாப்ட்வேர் மூலம் அதை copy பண்ண முயன்றேன். எனக்கு அதைப் பற்றிய அறிவு போதாமையின் காரணமாக அந்த புகைப்படங்கள் யாவும் அழிந்துவிட்டன. இப்போது அந்த புகைப்படங்களை எப்படியாவது மீண்டும் எடுக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் நண்பர்களே??? இன்னும் இந்த போனில் உள்ள Contacts ஐயும் copy பண்ணி எடுக்க ... |
| எதிர்பார்த்தபடி கிடைத்தன கவிதைகள்.. Posted: 22 Jan 2014 11:40 PM PST - - வரைந்த சித்திரத்தில் நான் மாட்டிக்கொண்டேன் ஒரு கோடாக - >நேயன் - ———————— - வெட்டப்பட்ட ஆட்டின் காம்புகளில் மீதமிருக்கிறது குட்டிகளுக்கானப் பால் - >பிராங்ளின் குமார் - —————————— - மரண பயமின்றி வளரும் சைவ வீட்டில் கோழி - >கணேஷ் - —————————– - படி… படித்து விட்டு சும்மா இரு - >சு.அருள்வேல் - ————————– - நெடுந்தொலைவுப் பயணம் எதிர்பார்த்தபடி கிடைத்தன கவிதைகள் - >இரா.அ.தென்றல் - =========================== |
| Posted: 22 Jan 2014 11:11 PM PST - - – சேமித்ததால் சேதமானது மண் உண்டியல் - >மணிமேகலை நாகலிங்கம் - ———————– - கிழிந்தாலும் காயமின்றி அசைகிறது வானம் இலை - >என்மாதவன் - ———————- - எப்போது மீட்கப்படுமோ? சின்னத்திரையில் அடகு வைத்த கண்கள் - >செ.தமிழ்ராஜ் - —————— - இரவெல்லாம் சேர்ந்திருந்தாலும் விட்டுப்பிரிய மனமில்லையே போர்வை - >வடிவேல் - —————————– |
| Posted: 22 Jan 2014 11:04 PM PST கோமாளிகள் வாசல்கேட்டில் எப்பொழுதும் காத்திருக்கிறது தபால் பெட்டி. கடிதம் இருக்குமாவென தினமும் திறந்துப் பார்ப்பது வழக்கம். காலை நேரங்களில் தவிட்டுக் குருவிகள் தபால் பெட்டி மீது அமர்ந்தும் பறந்தும் கொஞ்ச நேரம் விளையாடிப் போகும். அவ்வப் போது தெருவில் பந்து விளையாடும் குசும்புக்காரப் பையன்கள் அப்பெட்டியில் எப்பொருளையேனும் போட்டுக் கலாய்த்துக் குறும்புத்தனம் செய்வர். ஓர் தினம் பெட்டியைக் கவனமாய்த் திறந்துதேன் உள்ளே வண்ண அட்டைகளில் முதியவர்களை,பெண்களை, சிறுவர்களை,வீடுகளை, குருவிகளை,விலங்குகளை, ஸ்கெச்சில் ... |
| சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Posted: 22 Jan 2014 11:01 PM PST -, பி.எஸ்.என்.எல்., தரைவழி போனுக்கான கட்டணம், சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதக் கட்டண ரசீது மூலமே, கட்டண உயர்வு விவரம், வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது. இலவச அழைப்புகள்: பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் போன்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச அழைப்புகள் அளிக்கப்பட்டு உள்ளது. இது, பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நிறுவன போன்களுக்கு செய்யும் அழைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும். இந்த நடைமுறையில், கடந்த ஆண்டு திடீரென, மாற்றம் செய்யப் பட்டது. 'பி.எஸ்.என்.எல்., ... |
| Posted: 22 Jan 2014 10:59 PM PST - சுடு மணலில் ஆழப்பதியும் கால்சுவடு தலையில் சுமை! - >அண்ணாத்துரை குமார் - ——————————— - மடலிட்டு நாளாச்சு எழுத வளையாது என் சுழற்றும் விரல்கள் - >நவநீதகிருஷ்ணன் - ———————————— - பட்ட மரமென வெட்ட வேரில் மீதமிருக்கிறது பசுமை - >சத்யா முருகவேல் - ———————————- - திரும்பத் திரும்ப ஞாபகம் வருகிறது சொல்ல மறந்த நன்றி! - >செந்தூரன் - ———————————– - தலையசைத்து ரசிக்கும் இலைகள் மரக்கிளையில் குயிலின் பாட்டு! - >ஆதி நாராயணன் - ———————————- நன்றி: தற்காலக் கவிதைகள் ... |
| Posted: 22 Jan 2014 10:57 PM PST "ஏய் கல்யாணி ! ஏதாவது காசு இருந்தா தாடி ......... சுந்தரத்துக்கு 2000 ரூபா தரனும் .........." "என்கிட்டே ஏதுங்க?" "மாச கடைசி வேற ....வீடு தேடி வந்துட்டா அசிங்கமா போய்டும் ......ம்ம்ம் ......." "அப்பா ! சுந்தரம் அங்கிள் வந்திருக்கார் !" "அப்பு செல்லம் ! அப்பா வீட்ல இல்லன்னு சொல்லிடு டா குட்டி !" "ஏம்பா ..... .பொய் சொல்லணும் ?" "அது ஒன்னும் இல்லடா குட்டி ....அப்பாவுக்கு சுந்தரம் அங்கிள் கூட டூ டூ ........" ம்ம்ம்ம்....சரிப்பா ......... மறுநாள் ... பக்கத்துக்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |