Daily Thanthi |
- கள்ளக்காதல் தகராறில் தலையில் கல்லை போட்டு மனைவி படுகொலை கணவன் வெறிச்செயல்
- ஆன்மீக சிந்தனை (24-01-2014)
- ஆண்டியார் (24-01-2014)
- சாணக்கியன் சொல் (24-01-2014)
- கன்னித்தீவு (24-01-2014)
- டெல்லி சட்டமந்திரி மீது மேலும் ஒரு பெண் புகார் போலீசிடம் அறிக்கை கேட்கிறது கோர்ட்டு
- சென்னையில் மேலும் 16 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்
- தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்
| கள்ளக்காதல் தகராறில் தலையில் கல்லை போட்டு மனைவி படுகொலை கணவன் வெறிச்செயல் Posted: 23 Jan 2014 10:50 AM PST தர்மபுரி கடத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறு காரணமாக மனைவி தலையில் கல்லை போட்டு கணவர் படுகொலை செய்தார். இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– பழைய இரும்பு வியாபாரி தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே புதுரெட்டியூர் காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது45). இவர், கடத்தூரில் பழைய இரும்புக்கடை மற்றும் ஐஸ் பேக்டரி நடத்தி வருகிறார். இவரது மனைவி சுசீலா(35). இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் 2–வது மகளுக்கு அதேபகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதை தெரிந்ததும், கிருஷ்ணன் கடந்த 2 மாதங்களுக்கு மகளை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் உயிர் தப்பிய அவர் 2 நாட்கள் கழித்து எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம், கிருஷ்ணனுக்கு தர்மபுரியை சேர்ந்த ஒரு பெண்ணுடனும், சுசீலாவுக்கு புதுரெட்டியூரை சேர்ந்த ஒரு வாலிபருடனும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சுசீலாவும், அந்த வாலிபரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். கல்லை போட்டு படுகொலை இதையறிந்த கிருஷ்ணன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுசீலா கோபித்து கொண்டு திண்டலானூர் மற்றும் சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விடுவாராம். இதனால் சுசீலாவின் அண்ணன் அவரை சமாதானம் செய்து மீண்டும் கணவரிடம் சேர்த்து வைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு காந்தி நகரில் உள்ள வீட்டில் சுசீலாவும், முதல் மகள் மற்றும் மகனுடன் டி.வி. பார்த்து கொண்டு இருந்தனர். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்த சுசீலா அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணனுக்கும், சுசீலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அவர், மனைவி சுசீலாவின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட சுசீலாவின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து கிருஷ்ணனின் மூத்த மகள் பானுபிரியா கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கைது இந்தநிலையில், மனைவியை கொலை செய்த கிருஷ்ணன் நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார். பிறகு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. image: category:News Group Category: |
| Posted: 23 Jan 2014 10:48 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Anmikasinthanai: ![]() |
| Posted: 23 Jan 2014 10:47 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Andiyar: ![]() |
| Posted: 23 Jan 2014 10:47 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special chanakkiyan: ![]() |
| Posted: 23 Jan 2014 10:46 AM PST Daily Thanthi Image Special: ![]() Daily Thanthi Special Term: |
| டெல்லி சட்டமந்திரி மீது மேலும் ஒரு பெண் புகார் போலீசிடம் அறிக்கை கேட்கிறது கோர்ட்டு Posted: 23 Jan 2014 10:10 AM PST புதுடெல்லி, டெல்லியில் தனது மாளவியாநகர் தொகுதியில் ஆப்பிரிக்க நாட்டினர் போதைப்பொருட்கள் விற்பனை, விபசாரத்தில் ஈடுபடுவதாக புகார் செய்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் மாநில சட்ட மந்திரி சோம்நாத் பார்தி அதிருப்தி அடைந்தார். அவர் நேரடியாக தனது ஆதரவாளர்களுடன் அங்கு கடந்த 15–ந் தேதி நள்ளிரவில் சென்று சோதனை நடத்தினார். அப்போது அவர் எல்லை மீறி நடந்துகொண்டதாக ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அதன் பேரில் வழக்கு பதிவாகி உள்ளது இந்த நிலையில் மற்றொரு ஆப்பிரிக்க பெண் தனது வக்கீல் ராகேஷ் ஷெராவத் மூலமாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சோம்நாத் பார்தி மீது புகார் மனு தாக்கல் செய்தார். இது குறித்து 25–ந் தேதிக்குள் (நாளைக்குள்) அறிக்கை அளிக்குமாறு டெல்லி துணை போலீஸ் கமிஷனருக்கு மாஜிஸ்திரேட்டு சேத்னா சிங் உத்தரவிட்டார்.
image: category:News Group Category: |
| சென்னையில் மேலும் 16 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் Posted: 23 Jan 2014 09:49 AM PST சென்னை, சென்னையில் கடந்த வாரம் 23 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். மேலும் 16 இன்ஸ்பெக்டர்களை மாற்றி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கானாத்தூருக்கு சார்லசும், எம்.கே.பி. நகருக்கு குணசேகரும், சட்டக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு ராதாகிருஷ்ணனும், சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனனர்.
image: category:News Group Category: |
| திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம் Posted: 23 Jan 2014 09:46 AM PST திருமலை, நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். அவர்கள் 2 பேரும் இரவு சுமார் 7.45 மணியளவில் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்றனர். இரவு சுமார் 8.35 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமிபடம் ஆகியவை வழங்கப்பட்டது.
image: category:News Group Category: |
| தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் Posted: 23 Jan 2014 09:36 AM PST |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




