Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காங்கிரஸ் கூட்டத்தில் மோடி ‘டீ’ விற்க ஏற்பாடு செய்கிறேன்: மணிசங்கர் அய்யர் கிண்டல்

Posted: 16 Jan 2014 11:47 PM PST

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தனது இளமை காலத்தில் டீ விற்றவர் என்பதால் அவரை காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி மணி சங்கர் அய்யர் கூறுகையில், ''மோடி டீ விற்க வேண்டுமானால்

அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தினால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம்: மன்மோகன்சிங் நம்பிக்கை

Posted: 16 Jan 2014 11:43 PM PST

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பிரசார குழு தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசியதாவது: 4 மாநில சட்டமன்ற தேர்தல் காங்கிரசுக்கு பின்னடைவாக அமைந்தது. இந்த தேர்தல் முடிவால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. சில தவறுகள் செய்திருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

மாயாவதி மீது சொத்து குவிப்பு புகார்: மத்திய அரசு – சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

Posted: 16 Jan 2014 11:42 PM PST

உத்தரபிரதேச முன்னாள் முதல் – மந்திரி மாயாவதி மீது சொத்து குவிப்பு புகார் கூறப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. இது பற்றி விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ. திடீர் என்று கைவிட்டது. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது மாயாவதி மீதான சொத்து குவிப்பு புகாரில் சி.பி.ஐ. முதல்

மோடி என்ற புலியின் முன்னால் ராகுல் காந்தி பறவைக்கு சமம்: மேனகா காந்தி கடும் தாக்கு

Posted: 16 Jan 2014 11:27 PM PST

2014-பாராளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் பதவி வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியின் பெயரை பா.ஜ.க. அறிவித்தது. அவருக்கு போட்டியாக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்து அக்கட்சியின் மேலிட தலைவர்களிடமும், தொண்டர்களிடையேயும் மேலோங்கி வந்தது.

தமிழ்நாட்டில் எரிவாயு குழாய் பதிக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 16 Jan 2014 11:02 PM PST

கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு தமிழகம் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எரிவாயு குழாய்கள் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் உள்பட 7 மாவட்டங்களின் வழியாக கொண்டு போகப்படுகிறது. மத்திய அரசு நிறுவனமான கெயில் இந்த குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விவசாய நிலங்களிலும் எரிவாயு குழாய் புதைக்கப்பட்டது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங். காரிய கமிட்டி கூட்டம்: சீமாந்திரா எம்.பி.க்கள் 6 பேருக்கு அனுமதி மறுப்பு

Posted: 16 Jan 2014 10:56 PM PST

காங். காரிய கமிட்டி கூட்டம்: சீமாந்திரா எம்.பி.க்கள் 6 பேருக்கு அனுமதி மறுப்பு

காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் தான் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்கவில்லை: பா.ஜ.க. கேலி

Posted: 16 Jan 2014 10:46 PM PST

பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்த பா.ஜனதா கட்சி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும், முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுபற்றி கடந்த சில மாதங்களாக பல்வேறு ஆலோசனைக்குப் பிறகு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பெரும்பான்மையான

ராகுல் பிரதமர் வேட்பாளர் இல்லை: சோனியாகாந்தி அறிவிப்பு

Posted: 16 Jan 2014 10:10 PM PST

நரேந்திர மோடியை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருப்பதால் காங்கிரசும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரசில் ஒரு பிரிவினர் வற்புறுத்தி வந்தனர். எனவே இன்றைய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டெல்லியில் காங். காரிய கமிட்டி கூடியது

Posted: 16 Jan 2014 09:58 PM PST

காங்கிரஸ் காரிய கமிட்டி டெல்லியில் இன்று கூடியது. இதில் பிரசார குழு தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுகிறார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்து இருப்பதால் காங்கிரசும் பிரதமர் வேட்பாளரை அறவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தி வந்தனர். வெளிப்படையாகவும் தங்கள்

மோடி பிரதமராக பாரதீய ஜனதா நிதி திரட்டுகிறது

Posted: 16 Jan 2014 09:51 PM PST

பாராளுமன்றத்துக்கு மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறது. பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்து முழு வீச்சில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தேர்தல் வியூகம் பற்றி ஆலோசிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்

திருப்பதி கோவிலில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி 2 நாள் ரகசிய தரிசனம்

Posted: 16 Jan 2014 09:34 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. பக்தர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் திருமலை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த நிலையில் மும்பை தொடர்குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத்

தெலுங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு: ஆந்திர சட்டசபையில் இன்றும் அமளி

Posted: 16 Jan 2014 09:24 PM PST

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு சீமாந்திரா பகுதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் தெலுங்கானா மசோதா சட்டசபையின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதன் மீது விவாதம் நடத்தி 23–ந் தேதிக்குள் பதில் அனுப்புமாறு ஜனாதிபதி கெடு வைத்துள்ளார்.

சத்தீஸ்கர் வனவிலங்கு காப்பகத்தில் இருந்து வேகமாக பரவும் 'அந்த்ராக்ஸ் கிருமி': பொதுமக்கள் பீதி

Posted: 16 Jan 2014 08:52 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கணன் பெந்தாரி வனவிலங்கு காப்பத்தில் இருந்து உயிரை உடனடியாக பறிக்கக் கூடிய 'அந்த்ராக்ஸ் கிருமி' வேகமாக பரவி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கணன் பெந்தாரி வனவிலங்கு காப்பகத்தில் சிங்கம், புலி, கரடி, மான் போன்ற

விளையாடிய போது தொண்டையில் சிறிய பந்து சிக்கி சிறுமி பலி

Posted: 16 Jan 2014 08:47 PM PST

சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையம் மண்டலம் கோபால்ராவ் காலனியை சேர்ந்தவர் வெங்கய்யா. அவரது மனைவி வெங்கம்மா. இவர்களது மகள் பூஜா (வயது 3), மகன் வெங்கய்யா (4). நேற்று முன்தினம் 2 குழந்தைகளும் வீட்டின் எதிரில் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

மண்டல-மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் வருமானம் ரூ.182 கோடி

Posted: 16 Jan 2014 07:38 PM PST

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிச்சென்று சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் கடந்த 14-ந்தேதி வரை அப்பம்-அரவணை, உண்டியல் மூலம் மொத்த வருமானம் ரூ.181 கோடியே 78 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இதுகுறித்து தேவசம் தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் கூறியதாவது:-

தமிழக மீனவர்களால் எங்கள் மீன் வளம் பாதிப்பு: டெல்லியில் இலங்கை மீனவர்கள் குற்றச்சாட்டு

Posted: 16 Jan 2014 07:37 PM PST

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்த இலங்கை மீனவளத்துறை மந்திரி ரஜித சேனரத்ன தலைமையில் இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் இலங்கை தமிழ்ப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் குழுவினர் டெல்லி வந்து உள்ளனர்.

பிரதமராகும் அனைத்து தகுதிகளும் ராகுலிடம் உள்ளன: லல்லு பிரசாத் சொல்கிறார்

Posted: 16 Jan 2014 04:34 PM PST

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணிக்கு, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், 'பிரதமர் பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும், ராகுல் காந்தியிடம் உள்ளதாக அக்கட்சித்தலைவர் லல்லு பிரசாத் யாதவ்

ராஜீவ்காந்தி கொலையில் 3 பேரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு

Posted: 16 Jan 2014 04:24 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேர் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன

டெல்லி போலீசார் பற்றி கவர்னரிடம் இன்று முறையிடுவேன்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

Posted: 16 Jan 2014 04:02 PM PST

டென்மார்க் நாட்டை சேர்ந்த ஒரு பெண் நேற்றுமுன்தினம் டெல்லி இந்தியாகேட் பகுதியில் வழிதெரியாது திகைத்து நின்றார். அவரை 8 பேர் கும்பல் கடத்தி கற்பழித்தது. இதுகுறித்து அந்தப் பெண் டென்மார்க் தூதரக அதிகாரி உதவியுடன் போலீசில் புகார் செய்துவிட்டு அவரது நாட்டுக்கு திரும்பிவிட்டார்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 16 Jan 2014 01:23 PM PST

நிலக்கரி சுரங்கங்களை விதிகளை மீறி பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™