Daily Thanthi |
- பாகிஸ்தானில் பள்ளி வேன்-லாரி மோதல்: 19 மாணவர்கள் உள்பட 21 பேர் சாவு
- விடுதலையாகும் தமிழக–இலங்கை மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இன்று ஒப்படைக்கப்படுகிறார்கள்
- சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரண்தேஜா மீது ஆபாசப்பட வழக்கு
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், லீ நா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- உலகின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு 2-வது முறையாக தங்கப்பந்தை பெற்றார்
- தேசிய ஜூனியர் கைப்பந்து: தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’
- ஜெயலலிதா ஆட்சியில் தமிழ் அறிஞர்களின் மதிப்பு உயருகிறது: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் நியூசிலாந்து அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது
- விளையாட்டு போட்டி முறைகேடுகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு பிரிவு
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனாக மீண்டும் அஷ்ரப் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
| பாகிஸ்தானில் பள்ளி வேன்-லாரி மோதல்: 19 மாணவர்கள் உள்பட 21 பேர் சாவு Posted: 15 Jan 2014 03:26 PM PST கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தின் புறநகர் பகுதியான நவாப்ஷாகாவில் குவாசி அகமத் இணைப்பு சாலையில் நேற்று பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கண்இமைக்கும் நேரத்தில் பள்ளி வேனும், லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி 19 மாணவர்கள் உள்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் பலியான மாணவர்கள் அனைவரும் 12 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். வேனை ஓட்டிய டிரைவரும் பலியானார். மேலும் இந்த விபத்தில் பள்ளி ஆசிரியர்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். image: category:Tagging:News Group Category: |
| விடுதலையாகும் தமிழக–இலங்கை மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இன்று ஒப்படைக்கப்படுகிறார்கள் Posted: 15 Jan 2014 02:49 PM PST சென்னை, இலங்கை–தமிழக மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) பரஸ்பர விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்படுகிறார்கள். கடலோர பாதுகாப்பு படை அறிக்கை இதுதொடர்பாக இந்திய கடலோர பாதுகாப்பு படை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 52 பேர் இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் 'விஷ்வஸ்ட்' மூலம் அழைத்து செல்லப்பட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு இந்திய–இலங்கை சர்வதேச கடல் எல்லையில் 'சக்தி' எனும் இலங்கை கடற்படை கப்பலில் ஒப்படைக்கப்படுகிறார்கள். இதற்காக 52 மீனவர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில், இந்திய கடலோர பாதுகாப்பு படையிடம், உள்ளூர் போலீசார் ஒப்படைக்கப்பட்டனர்.அதே போன்று விடுதலை செய்யப்பட்ட 52 தமிழக மீனவர்கள் 'சக்தி' எனும் இலங்கை கடற்படை கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு, காரைக்காலில் உள்ள மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். சென்னையில் பேச்சுவார்த்தை தமிழக மீனவ பிரதிநிதிகள், இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை சென்னையில் 20–ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இருநாட்டு மீனவர்கள் பரஸ்பர விடுதலை நடைபெற்று இருக்கிறது.கடந்த ஆண்டு இதே போன்று இலங்கையை சேர்ந்த 23 மீன்பிடி படகுகளும், 124 மீனவர்களும், இந்தியாவை சேர்ந்த 38 மீன்பிடி படகுகளும், 391 இந்திய மீனவர்களும் பரஸ்பரமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரண்தேஜா மீது ஆபாசப்பட வழக்கு Posted: 15 Jan 2014 12:52 PM PST ஐதராபாத், நடிகர் சிரஞ்சீவியின் மகனும், தெலுங்குப்பட முன்னணி கதாநாயகனுமான ராம்சரண்தேஜா நடித்த 'எவடு' என்ற படம், கடந்த 12–ந் தேதி வெளியானது. நடிகைகள் ஸ்ருதி ஹாசன், எமி ஜாக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். வம்சி பய்டிபள்ளி இயக்கி உள்ள இப்படத்தின் சுவரொட்டிகள், ஆபாசமாக இருப்பதாக கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திர பிரசாத் என்பவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ராம்சரண்தேஜா உள்பட 10 பேர் மீது இ.பி.கோ. மற்றும் பெண்களை அநாகரீகமாக வெளிப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. image: category:Tagging:News Group Category: |
| ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், லீ நா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் Posted: 15 Jan 2014 12:27 PM PST மெல்போர்ன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச், சீன வீராங்கனை லீ நா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். ஜோகோவிச் வெற்றி இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீரருமான நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-0, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் லீனார்டோ மேயரை (அர்ஜென்டினா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். டேவிட் பெரர் இன்னொரு ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீரர் டேவிட் பெரர் (ஸ்பெயின்) 7-6 (7-2), 5-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் அட்ரியன் மனாரினோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு) 6-4, 6-1, 6-3 கென் டி ஷிபெரை (பிரான்ஸ்) சாய்த்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். வாவ்ரின்கா வெற்றி மற்ற ஆட்டங்களில் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிட்சர்லாந்து), ரிச்சர்ட் காஸ்குயட் (பிரான்ஸ்), டாமி ரோப்ரேடா (ஸ்பெயின்), ஜெர்சி ஜானோவிச் (போலந்து), பாபி போக்னி (இத்தாலி), ஜெரெம் சார்டி (பிரான்ஸ்), கெவின் பீட்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), புளோரியன் மேயர் (ஜெர்மனி), டெனிஸ் ஸ்டோமின் (உஸ்பெகிஸ்தான்), வாசெக் பொப்சில் (கனடா), சாம் குயர்ரி (அமெரிக்கா), ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 104-ம் நிலை வீராங்கனையான வெஸ்னா டோலோனை (செர்பியா) எளிதில் விரட்டி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லீ நா வெற்றி மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் லீ நா (சீனா) 6-0, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் 16 வயதான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) சாய்த்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா), டானிலா ஹன்ட்சோவா (சுலோவக்கியா), மோனிகா நிகுலெஸ் (ருமேனியா), பிளாவியா பென்னட்டா (இத்தாலி), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), போசர்ட் (கனடா), அனா இவானோவிச் (செர்பியா), மகரோவா (ரஷியா), அலிசன் ரிஸ்க் (அமெரிக்கா), மோனா பார்தெல் (ஜெர்மனி), லாரென் டேவிஸ் (அமெரிக்கா), ஜி ஷெங் (சீனா), லூசி சபரோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி கண்டனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் மகேஷ்பூபதி (இந்தியா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடி 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சான்டியாகோ ஜிரால்டோ (கொலம்பியா)-ஜா சோசா (போர்ச்சுக்கல்) ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி (இந்தியா)-மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடி 6-2, 7-5 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் ராப்ரேடா-டேனியல் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. திவிஜ் ஷரன் (இந்தியா)-யென் ஹஸ் லூ (சீன தைபே) ஜோடி 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜோகன் (சுவீடன்)-பிரெட்ரிக் (டென்மார்க்) ஜோடியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. image: category: |
| உலகின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு 2-வது முறையாக தங்கப்பந்தை பெற்றார் Posted: 15 Jan 2014 12:24 PM PST சூரிச் உலகின் சிறந்த கால்பந்து வீரராக 2-வது முறையாக போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்க கால்பந்து வழங்கப்பட்டது. ரொனால்டோ சிறந்த வீரர் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு தங்க கால்பந்து வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச கால்பந்து சங்கத்தின் 209 உறுப்பு நாடுகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கால்பந்து பத்திரிகையாளர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த வீரர் தேர்வு செய்யப்படுகிறார். 2013-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவை சேர்ந்த லயனல் மெஸ்சி (பார்சிலோனா), போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்), பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிராங்க் ரிபெரி (பாயென் முனிச்) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். தங்க கால்பந்து இதில் ரொனால்டோ 1365 வாக்குகள் பெற்று உலகின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 2013-ம் ஆண்டில் ரொனால்டோ 59 ஆட்டங்களில் 69 கோல்கள் அடித்துள்ளார். சிறந்த வீரருக்கான தங்க கால்பந்தை ரொனால்டோ பெறுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2008-ம் ஆண்டில் இந்த விருதை பெற்று இருந்தார். தொடர்ந்து 4 ஆண்டுகள் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை (2009, 2010, 2011, 2012) பெற்ற லயனல் மெஸ்சி 1,205 வாக்குகளும், ரிபெரி 1,127 வாக்குகளும் பெற்று விருது வாய்ப்பை இழந்தனர். 2-வது முறை 2-வது முறையாக சிறந்த வீரர் விருதை வெல்லும் 10-வது வீரரான ரொனால்டோ சூரிச்சில் நடந்த விருது அறிவிப்பு விழாவில் ஆனந்த கண்ணீர் மல்க விருதை பெற்றுக்கொண்டார். அவர் பேசுகையில், 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இதனை விவரிக்க வார்த்தை இல்லை. எனது அணியின் சக வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்றார். ஜெர்மனி பெண்கள் கால்பந்து அணியின் கோல்கீப்பர் நாடின் ஏஞ்செரர் கடந்த ஆண்டுக்கான (2013) சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதை பெறும் முதல் கோல் கீப்பர் நாடின் ஆவார். image: category: |
| தேசிய ஜூனியர் கைப்பந்து: தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’ Posted: 15 Jan 2014 12:22 PM PST டேராடூன் 40-வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது.இதில் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழக அணி 25-22, 25-14, 25-27, 25-16 என்ற செட் கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் கேரளா அணி 25-23, 25-18, 25-19 என்ற நேர்செட்டில் அரியானாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக பெண்கள் அணி 20-25, 25-20, 21-25, 19-25 என்ற செட் கணக்கில் மராட்டியத்திடம் தோல்வி கண்டு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. image: category: |
| ஜெயலலிதா ஆட்சியில் தமிழ் அறிஞர்களின் மதிப்பு உயருகிறது: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு Posted: 15 Jan 2014 12:19 PM PST சென்னை, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சிவந்தாலே தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்களின் மதிப்பு கூடுகிறது என்று சென்னையில் நடந்த திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். திருவள்ளுவர் விருது சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடுஅரசின் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நத்தம் இரா.விசுவநாதன், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழ்நாடு அரசுக்குத் திருக்குறள் மற்றும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளையும் சீனமொழியில் மொழிபெயர்த்துத் தந்த தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசிக்கு 2014-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, ஒரு சவரன் தங்கத்திலான பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ் ஆர்வலர்கள் மதிப்பு கூடுகிறது திருவள்ளுவர் தினவிழாவில் திருவள்ளுவர் விருது வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசிக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. ஏனைய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 26-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சரின் கையால் வழங்கப்படும்.ஜெயலலிதா ஆட்சிவந்தாலே தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்களின் மதிப்பு கூடுகிறது. அந்தவகையில் தற்போது இந்த விழாவில் 30 முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான அரசாணை சம்பந்தப்பட்ட அறிஞர்களிடமே வழங்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளிலும் வெற்றி பொங்கல் திருநாளை தமிழ்புத்தாண்டாக கருணாநிதி அறிவித்தார், ஆனால் மக்கள் அதை ஏற்கவில்லை, சித்திரை திங்கள் தான் தமிழர்களின் புத்தாண்டு என்பதை மக்கள் ஏற்றுள்ளனர். தமிழ் சமுதாயத்திற்கு பல்வேறு முன்னேற்றங்களை செய்துவரும் முதல்-அமைச்சரை நாடே எதிர்பார்க்கிறது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள், அதுபோல் நாட்டை ஆழும் தகுதி படைத்த ஒரே தலைவர் ஜெயலலிதா தான், மக்கள் ஆதரவுடன் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்று பிரதமராக அமர்த்தப்படுவார் என்பது உறுதி. முதல்-அமைச்சருக்கு நன்றி விருது பெற்ற கவிஞர் யூசி ஏற்புரை வழங்கி பேசியதாவது: அந்த திட்டங்களை அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். உலகளவில் எனக்குப் பல விருதுகள் கிடைக்கப்பெற்றாலும், தமிழ்நாடு அரசு அளித்த திருவள்ளுவர் விருதினைப் பெருமையாக கருதுகிறேன். திருக்குறளில் ஒரு குறிப்பிட்ட நாட்டையோ, ஆட்சியையோ, இனத்தையோ மதத்தையோ பற்றி குறிப்பிடவில்லை என்பதே இது உலகப்பொதுமறை என்பதற்கு அத்தாட்சியாகும். திருக்குறளைப் படித்த பின்பு தான் திருவள்ளுவரும் கன்பியூசியஸ் என்ற சீன அறிஞரும் ஒத்த கருத்துகளைக் கொண்டுள்ளனர் என்பதை நான் அறிந்தேன். விருது அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழறிஞர்களுக்கு அரசாணை விழாவில் 30 முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. முன்னதாக தமிழ்வளர்ச்சித்துறை செயலாளர் மூ.ராஜாராம் வரவேற்றார். சென்னை மேயர் சைதை துரைசாமி, பாலகங்கா எம்.பி, உட்பட பலர் கலந்து கொண்டனர். image: category:Tagging:News Group Category: |
| வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் நியூசிலாந்து அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது Posted: 15 Jan 2014 12:15 PM PST வெலிங்டன், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கடைசி 20 ஓவர் கிரிக்கெட் நியூசிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராம்டின் 55 ரன்னும் (நாட்–அவுட்), பிளட்சர் 40 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மிலின் 2 விக்கெட்டும், மெக்லகன், நாதன் மெக்கல்லம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். நியூசிலாந்து வெற்றி பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லுக் ரோஞ்ச் 51 ரன்னும் (நாட்–அவுட்), ராஸ் டெய்லர் 39 ரன்னும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர், சுனில்நரின், ரஸ்செல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து வீரர் லுக் ரோஞ்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியது. ஆக்லாந்தில் நடந்த முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. image: category: |
| விளையாட்டு போட்டி முறைகேடுகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு பிரிவு Posted: 15 Jan 2014 12:12 PM PST புதுடெல்லி, விளையாட்டு போட்டிகள் தொடர்பாக முறைகேடுகள், சூதாட்டம், மேட்ச் பிக்சிங் ஆகியவை குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.யில் சிறப்பு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா டெல்லியில் நடந்த சர்வதேச கால்பந்து சம்மேளன கருத்தரங்கில் பேசுகையில் தெரிவித்தார். image: category:Tagging: |
| பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனாக மீண்டும் அஷ்ரப் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு Posted: 15 Jan 2014 12:06 PM PST கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனாக இருந்த ஜாகா அஷ்ரப் மீதான நிர்வாக முறைகேடு குறித்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷாகத் சித்திக், ஜாகா அஷ்ரப்பை சேர்மன் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக நஜம் சேதியை பாகிஸ்தான் அரசு நியமித்தது. தனது நீக்கத்தை எதிர்த்து ஜாகா அஷ்ரப் இஸ்லாமாபாத் ஐகோர்டில் டிவிசன் பெஞ்சில் அப்பீல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச், இடைக்கால தலைவராக நஜம் சேதி செயல்பட தடை விதித்ததுடன், ஜாகா அஷ்ரப் மீண்டும் சேர்மனாக செயல்படலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபித்து இருக்கிறேன்' என்று தீர்ப்பு குறித்து ஜாகா அஷ்ரப் கருத்து தெரிவித்து இருக்கிறார். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |