மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதி
- திருவனந்தபுரம் அருகே காதலியின் அண்ணனை வெட்டிக் கொன்ற வாலிபர்
- ஓய்வு பெற்ற நீதிபதி மீதான பாலியல் புகார்: சுப்ரீம் கோர்ட்டில் மனு விசாரணைக்கு ஏற்பு
- மாதந்தோறும் ரு.20 ஆயிரம் ஜீவனாம்சம்: ஆபாசப்படம் பார்க்கும்படி மனைவியை கொடுமைப்படுத்தியவனுக்கு கோர்ட் உத்தரவு
- ஆம்ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் சவால்: அமேதியில் யார் ஜெயிப்பார்கள் பார்க்கலாம்
- ஆந்திராவில் போகிப் பண்டிகையில் தெலுங்கானா மசோதா எரிப்பு
- ஆம்ஆத்மி கட்சியை முறியடிக்க ஊழல் புகார் கூறப்பட்டவர்களுக்கு பா.ஜனதாவில் டிக்கெட் இல்லை: மோடி
- விசா மோசடி சர்ச்சையில் சிக்கிய தேவயானியின் தந்தை தேர்தலில் போட்டி?
- சமையல் கியாஸ் விலை 100 ரூபாய் உயர்கிறது: டீசல் விலையை ரூ.2 அதிகரிக்க மத்திய அரசு முடிவு
- ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி அடுத்த மாதம் ராஜினாமா செய்வார்: மந்திரி பேச்சு
- தரிசனத்துக்கு 12 மணி நேரம் ஆனதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கேட்டை உடைத்து ரகளை
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் இசட் பிரிவு பாதுகாப்பு
- இந்திய–அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சியில் சேர ஜப்பான் விருப்பம்
- ராஜஸ்தானில் வெளிநாட்டுப் பயணிகளைவிட அதிகரித்துள்ள உள்ளூர் சுற்றுலாப் பயணிகள்
- வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசீனாவுக்கு மன்மோகன்சிங் டெலிபோனில் வாழ்த்து
- ஏ.டி.எம். மைய சேவைக்கு கட்டணம் வசூலிக்க திட்டம்: ரிசர்வ் வங்கி பரிசீலனை
- இமாச்சல பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்ட அணை உடைந்தது
- ஆட்சி திறன் இல்லாமல் விளம்பரம் தேடுவது ஏமாற்றுவேலை: கெஜ்ரிவால் அரசு மீது பா.ஜனதா தாக்கு
- மதவெறியை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்: சோனியா பேச்சு
- ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் வாழ்த்து
| கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 13 Jan 2014 12:21 AM PST கேரள மாநில முதல் மந்திரி உம்மன் சாண்டிக்கு இன்று காலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோட்டயம் பகுதி புதுப்பள்ளியில் உள்ள தனது பூர்வீக வீட்டில் நேற்றிரவு தங்கியிருந்த உம்மன் சாண்டி, இன்று காலை கண் விழித்ததும் தனக்கு படபடப்பாகவும், சோர்வாகவும் இருப்பதாக குடும்பத்தாரிடம் தெரிவித்தார். |
| திருவனந்தபுரம் அருகே காதலியின் அண்ணனை வெட்டிக் கொன்ற வாலிபர் Posted: 12 Jan 2014 11:55 PM PST கேரள மாநிலம் காட்டாக் கடையைச் சேர்ந்தவர் சிவராஜன். இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இந்த தம்பதியின் மகன் அபிலாஷ். மகள் சிஞ்சு (வயது 22). பிளஸ்–2 வரை படித்துள்ள சிஞ்சு பெற்றோருக்கு உதவியாக வீட்டில் இருந்து வந்தார். |
| ஓய்வு பெற்ற நீதிபதி மீதான பாலியல் புகார்: சுப்ரீம் கோர்ட்டில் மனு விசாரணைக்கு ஏற்பு Posted: 12 Jan 2014 11:52 PM PST சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேற்கு வங்காள மாநிலத்தின் மனித உரிமை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் ஓய்வு பெற்ற மற்றொரு நீதிபதி மீதும் செக்ஸ் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அவரது பெயர் சுவதேந்தர் குமார். டிசம்பர் மாதம் 12–ந்தேதி அவர் ஓய்வு பெற்றார். அவர் தற்போது தேசிய பசுமை தீர்ப்பயாத்தின் தலைவராக உள்ளார். இந்த பாலியல் புகாரை அவர் மறுத்து இருந்தார். இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி |
| Posted: 12 Jan 2014 11:37 PM PST ஆபாசப்படங்களை பார்க்க மறுத்த பெண்ணை அடித்து, உதைத்து சித்திரவதை செய்து அவரை வீட்டை விட்டு விரட்டியடித்த கணவன், பாதிக்கப்பட்ட நபருக்கு மாதந்தோறூம் 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என மும்பை குடும்ப கோர்ட் உத்தரவிட்டுள்ளது. |
| ஆம்ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் சவால்: அமேதியில் யார் ஜெயிப்பார்கள் பார்க்கலாம் Posted: 12 Jan 2014 11:36 PM PST உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான தொகுதியாக உள்ளது. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியாவை தொடர்ந்து அந்த தொகுதியில் ராகுல்காந்தியும் வெற்றி பெற்றார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த தொகுதியின் பிரசார பொறுப்பை |
| ஆந்திராவில் போகிப் பண்டிகையில் தெலுங்கானா மசோதா எரிப்பு Posted: 12 Jan 2014 11:00 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க சீமாந்திரா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையிலும் தெலுங்கானா தொடர்பான ''ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர்கள் அமளியால் விவாதம் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மசோதா போகி தீயில் எரிக்கும் போராட்டத்தை ஆந்திரா பகுதி அரசு ஊழியர் சங்கம் அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த ஆந்திராவை |
| ஆம்ஆத்மி கட்சியை முறியடிக்க ஊழல் புகார் கூறப்பட்டவர்களுக்கு பா.ஜனதாவில் டிக்கெட் இல்லை: மோடி Posted: 12 Jan 2014 10:43 PM PST பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் எதிர்ப்பு கோஷம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஊழலை ஒழிப்போம் என்று கூறி டெல்லியில் ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, அதே கோஷத்தை முன் வைத்து பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க திட்டமிட்டுள்ளது. அந்த கட்சி ஊழல் |
| விசா மோசடி சர்ச்சையில் சிக்கிய தேவயானியின் தந்தை தேர்தலில் போட்டி? Posted: 12 Jan 2014 10:28 PM PST அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணி புரிந்தவர் தேவயானி கோபர்கடே. விசா மோசடி மற்றும் பணிப்பெண் சம்பள மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக தேவயானி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார். அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. துணை தூதர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால் அவரை |
| சமையல் கியாஸ் விலை 100 ரூபாய் உயர்கிறது: டீசல் விலையை ரூ.2 அதிகரிக்க மத்திய அரசு முடிவு Posted: 12 Jan 2014 09:25 PM PST மத்திய அரசு தன் மானிய சுமையை குறைக்கும் வகையில் கடந்த 2012–ம் ஆண்டு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வந்தது. அதன்படி ஆண்டு ஒன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு மானிய விலையில் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களே தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு |
| ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி அடுத்த மாதம் ராஜினாமா செய்வார்: மந்திரி பேச்சு Posted: 12 Jan 2014 09:18 PM PST ஆந்திர மாநிலத்தை பிரிக்க முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மாநில பிரிவினையை தடுக்க அவர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார். இதற்காக தனது பதவியை ராஜினாமா செய்து எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து கூண்டோடு விலகி புதுக்கட்சி தொடங்கவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. |
| தரிசனத்துக்கு 12 மணி நேரம் ஆனதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கேட்டை உடைத்து ரகளை Posted: 12 Jan 2014 09:06 PM PST திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாளில் தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடந்த 2 நாளில் மட்டும் 2½ லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு காலதாமதமானது. அவர்கள் 12 மணி |
| அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் இசட் பிரிவு பாதுகாப்பு Posted: 12 Jan 2014 07:36 PM PST அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் அமைப்பிலிருந்து பிரிந்து அரசியல் கட்சி தொடங்கி டெல்லி ஆட்சியின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவரும் அவரது மந்திரிகளும் டெல்லி தலைமை செயலகத்தின் வாசலில் மக்கள் சபை கூட்டத்தின் மூலம் |
| இந்திய–அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சியில் சேர ஜப்பான் விருப்பம் Posted: 12 Jan 2014 06:54 PM PST இந்திய, அமெரிக்க கடற்படைகளின் கூட்டு பயிற்சி ஆண்டுதோறும் அரபிக்கடலில் நடைபெற்று வருகிறது. கடந்த 2007–ம் ஆண்டு ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டன. ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த பயிற்சி |
| ராஜஸ்தானில் வெளிநாட்டுப் பயணிகளைவிட அதிகரித்துள்ள உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் Posted: 12 Jan 2014 06:04 PM PST இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் மூன்றில் ஒருவர் ராஜஸ்தானுக்கு வருபவராக இருக்கும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் அங்கு நிரம்பியுள்ள சுற்றுலாப் பயணிகளில் வெளிநாட்டவர்களைக் காண்பதென்பது அரிதாகவே உள்ளது. |
| வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசீனாவுக்கு மன்மோகன்சிங் டெலிபோனில் வாழ்த்து Posted: 12 Jan 2014 04:33 PM PST வங்காளதேசத்தில் நடந்த பொதுதேர்தலில் வெற்றி பெற்று ஷேக்ஹசீனா பிரதமராக பதவி ஏற்று உள்ளார். இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் அவருக்கு ஏற்கனவே வாழ்த்துச்செய்தி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் |
| ஏ.டி.எம். மைய சேவைக்கு கட்டணம் வசூலிக்க திட்டம்: ரிசர்வ் வங்கி பரிசீலனை Posted: 12 Jan 2014 03:14 PM PST பொதுமக்கள் தற்போது தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் கட்டணமின்றி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்க முடியும். கணக்கில் பணம் இருப்பு (பேலன்ஸ்), சேமிப்பு-பணம் எடுப்பு கணக்கு விவரம் (மினி ஸ்டேட்மெண்ட்) உள்ளிட்ட இதர சேவைகளைப் பெறவும் முடியும் |
| இமாச்சல பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்ட அணை உடைந்தது Posted: 12 Jan 2014 02:17 PM PST இமாச்சல பிரதேசம் மணாலி அருகே உள்ள பிர்னியில், பியாஸ் நதியின் குறுக்கே புதிதாக அணை கட்டப்பட்டது. 12 ஆயிரம் கனமீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் மூலம், 4.8 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது |
| ஆட்சி திறன் இல்லாமல் விளம்பரம் தேடுவது ஏமாற்றுவேலை: கெஜ்ரிவால் அரசு மீது பா.ஜனதா தாக்கு Posted: 12 Jan 2014 01:40 PM PST அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான 'ஆம் ஆத்மி' ஆட்சி பற்றி பா.ஜனதா மூத்த தலைவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 'ஆட்சிமுறை-ஒரு முக்கியமான வேலை' என்ற அந்த கட்டுரையில் அருண் ஜெட்லி எழுதி இருப்பதாவது |
| மதவெறியை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்: சோனியா பேச்சு Posted: 12 Jan 2014 12:37 PM PST ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற எழுச்சிமிக்க இந்தியர் சுவாமி விவேகானந்தர். மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான இன்றைய கொல்கத்தாவில், 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி விசுவநாத தத்தா, புவனேஸ்வரி தம்பதியரின் மகனாக பிறந்த சுவாமி விவேகானந்தரின் |
| ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் வாழ்த்து Posted: 12 Jan 2014 12:00 PM PST ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் நாட்டு மக்களுக்கு லோகிரி, மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'லோகிரி, மகர சங்கராந்தி, பொங்கல் ஆகியவை கொண்டாடும் மகிழ்ச்சியான தருணத்தில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |