Tamil Star |
- புதுசா கட்டி முடிச்ச கப்பலை எப்படி தண்ணீரில் மிதக்க விடுவாங்க?….
- பிணவறையில் இறந்த மனிதர் உயிர் பிழைத்த அதிசயம்….
- இந்த விமானிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில போல…..
- அவதானமற்ற ஒவ்வொருவருக்கும் இதுவும் ஒரு பாடமாக இருக்கட்டும்……
- Samsung Galaxy S5 தொடர்பான புதிய தகவல் வெளியாகியது
- புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கைக்கடிகாரம் (வீடியோ இணைப்பு)
- சிறுவனுடன் மாயமான 16 வயது சிறுமி: 4 மாத கர்ப்பிணியாக மீட்பு
- சமூக வலைத்தளங்களில் அடிப்படையில் கடன் வழங்கும் வங்கிகள்
- சீனா- ஜப்பான் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம்
- யாழ்., மன்னார் ஆயர்களை கைது செய்யுமாறு கோரி போர்க்கொடி தூக்குவது நாகரிகமற்ற செயல்!
- பேச்சுவார்த்தைக்கு முன்பே தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்: கருணாநிதி
- சிறிலங்காவில் மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி
- அமெரிக்க மனோதத்துவ நிபுணர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி
- உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடம்
- இலங்கையின் போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா
- 10 வருடங்களுக்கு முன் இறந்த தாயாரின் சடலத்தின் அருகில் ஒரு வருடத்திற்கு முன் இறந்த மகனின் சடலம் கண்டெடுப்பு
- தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்க முடியாது: இலங்கை
- ஜேர்மன் அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்
- வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளம்பெண் ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் விடுவிப்பு
- தமிழ் கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன்
| புதுசா கட்டி முடிச்ச கப்பலை எப்படி தண்ணீரில் மிதக்க விடுவாங்க?…. Posted: 12 Jan 2014 11:16 PM PST |
| பிணவறையில் இறந்த மனிதர் உயிர் பிழைத்த அதிசயம்…. Posted: 12 Jan 2014 11:10 PM PST
கென்யாவின் நைரோபி அருகேயுள்ள நவியாஷா மாவட்டத்தின் லிமுரா நகரை சேர்ந்தவர் பால் முட்டோரா(வயது 24). திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையான முட்டோராவுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்து போனார். வாழ்வதற்கு சாவதே மேல் என முடிவு செய்த முட்டோரா, பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கி குடித்து விட்டார். இதனால் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த முட்டோராவை பார்த்த அவரது தந்தை, பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். எவ்வளவோ போராடி பார்த்த மருத்துவர்கள், கடந்த 8ம் திகதி நள்ளிரவு இறந்துவிட்டதாக அறிவித்து விட்டனர். இதனால் துடிதுடித்து போன உறவினர்கள், சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வேண்டி மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களோ, பிரேத பரிசோதனை முடியாமல் சடலத்தை தரமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்நிலையில் பிணவறையில் இருந்து சத்தம் வருவதை கேட்ட காவலாளி, பதறியபடி ஓடிச்சென்று மருத்துவர்களுக்கு தகவல் அளித்தார். இதற்குள் தானாகவே எழுந்து முட்டோரா நடந்து வருவதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, தகுந்த சிகிச்சைகள் மேற்கொண்டு உயிர் பிழைக்க வைத்தனர். இச்சம்பவத்தின் போது பணியில் இருந்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜோசப் முபுரு தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த விமானிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில போல….. Posted: 12 Jan 2014 10:59 PM PST
இந்த விபத்தின்போது விமானி டென்னிஸ் கோர்ன் என்பவருக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அவதானமற்ற ஒவ்வொருவருக்கும் இதுவும் ஒரு பாடமாக இருக்கட்டும்…… Posted: 12 Jan 2014 10:38 PM PST |
| Samsung Galaxy S5 தொடர்பான புதிய தகவல் வெளியாகியது Posted: 12 Jan 2014 10:30 PM PST ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் தற்போது கொடிகட்டிப் பறக்கும் சம்சுங் நிறுவனத்தின் Galaxy S4 ஸமார்ட் கைப்பேசி பலத்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, Samsung Galaxy S5 தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்நிலையில் இக் கைத்தொலைபேசி தொடர்பில் புதிய தவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது சைகை முறையில் இயக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இக்கைப்பேசி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை 5 அங்குல தொடுதிரை, 4GB RAM, 64-bit Exynos 6 or Snapdragon 805 Processor, 16MP […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கைக்கடிகாரம் (வீடியோ இணைப்பு) Posted: 12 Jan 2014 10:04 PM PST
இது இவ்வாறிருக்கையில் தற்போது அதிர்வினை(Vibration) மட்டும் அடிப்படையாகக் கொண்டு புத்தம் புதிய கைக்கடிகாரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கடிகாரம் ஒவ்வொரு 5, 30, 60 நிமிடங்களுக்கு ஒவ்வொரு தடவையும் அதிர்வை வெளிப்படுத்தும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுவனுடன் மாயமான 16 வயது சிறுமி: 4 மாத கர்ப்பிணியாக மீட்பு Posted: 12 Jan 2014 09:48 PM PST
வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி(16). இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 7 ம் திகதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் பொலிசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார். பொலிஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே எம்.கே.பி. நகர் பொலிசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பொலிசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று முதல் நீதிமன்றத்துக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சமூக வலைத்தளங்களில் அடிப்படையில் கடன் வழங்கும் வங்கிகள் Posted: 12 Jan 2014 09:10 PM PST
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டில் உள்ள சிறிய நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் பேஸ்புக், ருவிற்றர் வலைத்தளங்களிலுள்ள கணக்குகளில், சுய விவரத்தில் கூறப்பட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு, அவர்களுக்கு கடன் வழங்கலாமா என்பது குறித்து முடிவு செய்கின்றன. தற்போது, பெரிய நிதி நிறுவனங்களும், வங்கிகளும், இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் இந்த அணுகுமுறைக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள், சமூக வலைத்தளங்களில், தங்களுடைய சுய விவரங்களை புதுப்பிப்பதில்லை; எனவே, அவர்கள், பணிமாற்றம் செய்து இருந்தாலோ அல்லது பணியில்லாமல் இருந்தாலோ வங்கிகளுக்கு தெரியாது. வாடிக்கையாளரின் பெயரில், போலி கணக்கு தொடங்கப்பட்டு இருந்தாலோ அல்லது பொய்யான தகவல்களை அளித்திருந்தாலோ கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள், வங்கிகளின் புதிய அணுகுமுறைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனா- ஜப்பான் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் Posted: 12 Jan 2014 09:04 PM PST கிழக்கு தென் சீனக்கடலில் உள்ள சென்காகு தீவுகள் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சென்காகு தீவை சீனா டையாயூ தீவுகள் என்றும் உரிமை கொண்டாடுகிறது. இதையடுத்து ஜப்பான், சீனா நாடுகளிடையே போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில், நேற்று காலை இப்பிரச்சினைக்குரிய சென்காகு கடல் பகுதியில் சீனா கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் ஊடுருவியதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. பின்னர் மூன்று மணி நேரத்திற்கு பிறகு அந்த கப்பல்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் கூறியுள்ளது. டிசம்பர் 29-ம் திகதிக்கு பிறகு, சீனா […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| யாழ்., மன்னார் ஆயர்களை கைது செய்யுமாறு கோரி போர்க்கொடி தூக்குவது நாகரிகமற்ற செயல்! Posted: 12 Jan 2014 08:41 PM PST
மன்னார் மற்றும் யாழ். ஆயர்கள் இருவரும் தேசத்துரோக செயல்களில் ஈடுபடுகின்றார்கள். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனா அமைப்பினரும் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஒரு சில இனவாத அமைப்பினரும் கூறிய கருத்துக்கு மறுதலிப்பாக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸிலி சுவாம்பிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட ஆயர் யோசப்பொன்னையா மற்றும் ஆயர்மன்ற செயலாளரும் சிலாபம் மறை மாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆகியோர் கூட்டாக தெரிவித்த கருத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்கள். அம்மூவரும் கருத்துத் தெரிவிக்கையில், அறிந்தவற்றை தெரிவிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு அந்த வகையில் தாம் அறிந்த, அனுபவித்த, கேட்டறிந்த விடயங்களையே மன்னார் ஆயரும் யாழ் ஆயரும் கூறியுள்ளனர். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அந்த உரிமை இருக்கின்றது என்பது யாரும் மறுப்பதற்கில்லை. மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப்பிடம், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இரசாயன ஆயுதங்கள் மற்றும் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தினார்கள் என்று பொய்யான குற்றச்சாட்டுகளையும் தகவல்களையும் வழங்கியதன் காரணமாக அவர்களை கைது செய்ய வேண்டும். இவர்கள் தேசத்துரோக செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டுவது நாகரிகத்தன்மையான செயலாக இருக்க முடியாது. மேற்படி ஆயர்கள் இருவரும் தாம் மக்களிடமிருந்து கேட்டறிந்த உண்மைகளையும் கண்டறிந்த செய்திகளையுமே எடுத்துக் கூறியுள்ளனர். இவற்றில் உண்மைத் தன்மை உண்டா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமேயுண்டு. இறுதி யுத்தத்தில் என்ன அனர்த்தங்கள் நடந்தன? எவ்வகைப் பாதிப்புக்களை மக்கள் அடைந்தார்கள் என்ற விவரத்தை மக்களின் வாயிலாகவும் பட்டறிந்தவர்களினூடாகவுமே அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளையே அவர்கள் கூறியிருக்கலாம். அவ்வாறு இருக்கின்றபோது மதத்தலைவர்களை தேசத்துரோகிகள் என்றும் கைது செய்ய வேண்டுமென்றும் இனத்துவேஷத்துடன் கூறுவது நாட்டின் நல்லிணக்கத்துக்கும் சமாதானத்துக்கும் மருந்தாகிவிட முடியாது. பொதுவாக இறுதி யுத்தம் நடந்த பிரதேசங்கள் என்று சொல்லப்படும் முள்ளிவாய்க்கால், கிளிநொச்சி, மன்னார் போன்ற பிரதேசங்கள் பாதிக்கப்பட்டதை நாமும் அறிந்திருக்கவில்லை. இருந்த போதிலும் அன்றைய காலப்பகுதியில் வெளிவந்த செய்திகளினூடாகவும் பத்திரிகைகளின் வாயிலாகவும் அறிந்திருக்கின்றோம். இந்த நாட்டின் மீது பற்றும் நம்பிக்கையுமுள்ளவர்கள் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கின்ற ஆயர்களை இவ்வாறு பண்பற்ற தன்மையில் உண்மைக்குப் புறம்பாக குற்றம் சாட்டி அவமதிப்பது நாட்டையே அவமதிக்கும் செயலாகும். கத்தோலிக்கர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் இந்த நாட்டில் வாழும் ஒரு சிறுபான்மை சமூகம். அவர்களுக்கு கருத்துக்கூற முடியாது என்று யாரும் சொல்லிவிட முடியாது. இத்தகைய மதவாத. இனவாத விஷங்களை கக்குவது நாட்டுக்கும் ஏனைய சமூகத்துக்கும் நல்லது அல்ல. அதிலும் சர்வதேச ரீதியாக நெருக்கடி நிலையொன்றிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மதவாதங்களை கிளப்பி விடுவது உகந்ததாக இருக்க முடியாது. கொத்துக் குண்டுகளைப் பாவித்துள்ளார்கள். இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுத்துக் கூறப்பட்ட விடயமாகும். இதுபற்றி பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பினர் பகிரங்கமாகவே கூறியுள்ளனர். சர்வதேச விசாரணையொன்று வேண்டுமா. இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபையை சார்ந்த விடயமாகும் அதை நாம் யாரும் தீர்மானிக்க முடியாது. இருந்த போதிலும் சர்வதேச விசாரணையொன்று கொண்டு வரப்பட வேண்டுமென முடிவு மேற்கொள்ளப்படுமானால் அதை யாரும் தடுத்து விட முடியாது. உண்மையை அறிய வேண்டிய கடமை ஒருபுறம் அரசாங்கத்துக்கும் மறுபுறம் சர்வதேசத்துக்கும் உண்டு என்பதே யதார்த்தம். விசாரணைக்குரிய நேரமும் காலமும் வருமாக இருந்தால் அது தவிர்க்க முடியாத விடயமேயாகும். இது பற்றி விசேட கருத்தைத் தெரிவித்த சிலாபம் மறை மாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் உண்மையை கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது. அதேவேளை. கண்டறிந்த உண்மைகளை தெரிவிப்பதற்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அந்த வகையிலேயே மன்னார் யாழ். ஆயர்மாரின் கருத்து அமைந்திருக்கலாமெனத் தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேச்சுவார்த்தைக்கு முன்பே தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்: கருணாநிதி Posted: 12 Jan 2014 08:29 PM PST இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பெயரால் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் வரும் 20ம் திகதி இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்கிறார். இந்தச் செய்தியை நாடாளுமன்றக் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, […] |
| சிறிலங்காவில் மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி Posted: 12 Jan 2014 08:22 PM PST அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு முக்கிய அதிகாரி சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இராஜாங்கத் திணைக்கத்தில், பூகோள குற்றவியல் பணியகத்தில் போரக்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தமது ஆறு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் வொசிங்டன் திரும்பியுள்ளார். அதேவேளை,இராஜாங்கத் திணைக்களத்தில், ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணியகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரே சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சிறிலங்கா […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க மனோதத்துவ நிபுணர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி Posted: 12 Jan 2014 07:31 PM PST
இதற்கிடையில் அவர் தங்கியிருந்த குடியிருப்பின் 11-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். அதில் 4-வது மாடியில் இருக்கும் பால்கனியில் மோதி பரிதாபமாக இறந்து அங்கேயே பிணமாக கிடந்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடம் Posted: 12 Jan 2014 07:11 PM PST
இந்த பட்டியலில், உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா 2-வது இடமும், ரஷ்ய அதிபர் புதின் 3-வது இடமும், போப் ஆண்டவர் பிரான்சிஸ் 4-வது இடமும் பெற்றுள்ளனர். கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 5-வது இடத்தை பிடித்துள்ளார். நரேந்திர மோடி (7-ம் இடம்), அமிதாப் பச்சன் (9-ம் இடம்), அப்துல் கலாம் (10-ம் இடம்), அன்னா ஹசாரே (14-ம் இடம்), அரவிந்த் கெஜ்ரிவால் (18-ம் இடம்) ரத்தன் டாடா (30-ம் இடம்) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள பிற இந்திய பிரபலங்கள் ஆவர். இந்த பட்டியலில் ராணி எலிசபெத் (17-ம் இடம்), ஏஞ்சலினா ஜூலி (19-ம் இடம்), ஓப்ரா வின்பிரே (20-ம் இடம்), ஏஞ்சலா மெக்கல் (26-ம் இடம்), ஹிலாரி கிளிண்டன் (27-ம் இடம்) பெங்லியுவன் (28-ம் இடம்) ஆகிய 6 பெண்கள் மட்டுமே இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல் 15 இடங்களுக்குள் இங்கிலாந்தை சேர்ந்த யாரும் வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையின் போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா Posted: 12 Jan 2014 06:58 PM PST
ஐ.நா.சபை மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இரண்டு முறை இந்த பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவும் இந்த தீர்மானத்தை ஆதரித்து இருந்தது. இந்த நிலையில், மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் 3-வது முறையாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. அதற்கு முன்பாக, அமெரிக்க தூதர் ஸ்டீபன் ஜே.ராப் என்பவர், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் குறித்து ஆதாரங்களை திரட்டுவதற்காக இலங்கையின் வடக்கு பகுதியில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் முடிவில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இறுதி கட்ட போரின்போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து, இலங்கை அரசு சுதந்திரமான நம்பகத்தன்மைவாய்ந்த விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க தூதர் தனது சுற்றுப்பயணத்தின்போது, இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்களிடம் இருந்து அவர் சாட்சியங்களை பதிவு செய்து, புகைப்பட ஆதாரங்களையும் திரட்டி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக அமெரிக்காவின் தூதர் ராப், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலங்கையின் வெளியுறவு துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ்சை சந்தித்துப் பேசினார். முன்னதாக ராப்பின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு சிங்களர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 12 Jan 2014 06:47 PM PST
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. கிளாடியோ அல்பெரி (58 வயது) என்ற மேற்படி நபர், புயனொஸ் அயர்ஸில் சரபசேயி எனும் இடத்திலுள்ள தனது வீட்டின் சமையலறையில் கால்களில் பாதணிகள் அணிந்த நிலையில் பிளாஸ்ரிக் பையால் சுற்றப்பட்டு நிமிர்ந்த நிலையில் அமர வைக்கப்பட்டிருந்த தனது தாயாரின் உலர்ந்த சடலத்தின் அருகில் சடலமாக காணப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் மத்தியிலிருந்து குறிப்பிட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து கடந்த புதன்கிழமை பொலிஸார் அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்ட போதே அங்கிருந்த கிளாடியோவினதும் அவரது தாயார் மர்காரியா அயிமெர் டி அல்பெரியினதும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வீட்டில் கிளாடியோவும் அவரது தாயாரும் மட்டுமே வாழ்ந்து வந்துள்ளனர். மர்காரியாவை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக தாம் பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அயலவர்கள், கிளாடியோவை காண்பது அரிதாக இருந்ததுடன் அவர் அயலவர்களுடன் ஊரையாடுவது அபூர்வமானதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். தனது தாயாரின் மரணத்தையடுத்து கிளாடியோ மனம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்க முடியாது: இலங்கை Posted: 12 Jan 2014 06:29 PM PST
தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக கொழும்புவிலிருந்து இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே நேற்று டெல்லி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை - தமிழக மீனர்வர்களுக்கிடையே பேச்சுவார்த்தை வரும் 20-ம் திகதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதற்கு முன்னர் தமிழக மீனவர்களை விடுவிக்க இயலாது. இரு நாட்டு மீனவர்களும் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அவர்களை ஒரே சமயத்தில் விடுவிக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததால்தான் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள்" என்றார் ரஜிதா சேனரத்னே. முன்னதாக, தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜேர்மன் அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள் Posted: 12 Jan 2014 06:20 PM PST
இந்நிலையில் தியோடர் ஹியூஸ் பிளாட்ஸ் என்பதற்கு பதிலாக, அடால்ப் ஹிட்லர் பிளாட்ச் என்று குறிப்பிட்டு விட்டது. இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனம் ஜேர்மன் அரசிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூகுளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளம்பெண் ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் விடுவிப்பு Posted: 12 Jan 2014 06:13 PM PST
பினான்ஸ் நிறுவனமொன்றில் கடமையாற்றிய இளம் பெண்ணொருவர் வெள்ளை வானொன்றில் கடத்தப்பட்டு சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்குப் பின் சன நடமாட்டமில்லாத இடமொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவமொன்று பண்டாரவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. கடத்தப்பட்ட பெண் வெலிமடைப் பகுதியில் பினான்ஸ் நிறுவனமொன்றில் உத்தியோகத்தராக கடமையாற்றி வருபவராவார். இப்பெண் வெள்ளை வானொன்றில் கடத்தப்பட்டு மயக்கமுறச் செய்யப்பட்டார். அதன் பின் அப் பெண் மயக்க நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளார். அவ்வழியாக வந்த சிலர் பாதை ஓரத்தில் கிடந்த பெண்ணை பண்டாரவளை அரசினர் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் பின்னர் அப் பெண் சுகம் பெற்று தமது கணவருக்கு அறிவித்துள்ளார். கணவர் வந்ததும் இருவருமாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துவிட்டு வீடு திரும்பினர். தம்மைக் கடத்தியவர்கள் யார் என்பது பற்றி தமக்கு தெரியாதென்றும் ஆனால், தாம் மூன்று பேரினால் வெள்ளை வானொன்றில் கடத்தப்பட்டேன் என்பது தனக்கு நினைவிருப்பதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளார். பண்டாரவளை பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ் கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 12 Jan 2014 06:01 PM PST
வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று (12) நேரில் சென்று பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வரடங்கிய குழு, கைதிகளுக்கான பொங்கல் பரிசுகளையும் கையளித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டது. அதன் பின்னர் அச்சந்திப்பு தொடர்பில் சிறைச்சாலைக்கு வெளியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பு தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட சி.வி, 'மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 70 பேரை மாத்திரமே சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சகலரையும் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. ஏழு அல்லது எட்டுபேர் அடங்கிய குழுக்களாகவே இவர்களை நாம் சந்தித்தோம்' என்றார். பெண் அரசியல் கைதிகள் நால்வரை சந்தித்தோம். அவர்களுக்கான வசதிகள் சிறைச்சாலைக்குள் செய்துகொடுக்கப்படுவதில்லை என்று எம்மிடம் முறையிட்டனர்' என்றும் அவர் குறிப்பிட்டார். 'அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. அவர்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோர், விளக்கமறியல் கைதிகள், வழக்கு தொடரப்பட்டோர் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டோர் என்று பல வகையான தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். அரசியல் கைதிகள் பலருக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஜனாதிபதியை கடந்த 2ஆம் திகதி நான் சந்தித்தபோது இந்த கைதிகளின் விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்தேன். அவர், அரசியல் கைதிகளின் முழு விபரங்களையும் என்னிடம் கேட்டார். முழு விபரங்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை சந்திக்குமாறும் ஜனாதிபதி அன்று தெரிவித்தார். வழக்குகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற அரசியல் கைதிகள் தங்களுக்கு சட்டத்தரணிகளின் ஆதரவு போதுமானதாக இல்லையென்றும் சட்டத்தரணிகளின் அனுசரணையை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டனர்' என்றார். அத்துடன், 'பெண் அரசியல் கைதிகளில் நால்வரை மட்டுமே சந்திக்கக் கிடைத்தது. அதிலொரு பெண் கைதியின் கணவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எவ்விதமான வருமானமும் இல்லாமையினால் சவர்காரம் கூட வாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவித்தார். அரசியல் கைதிகளை சுதந்திரமாகவே நாம் சந்தித்தோம். எந்தவிதமான இடையூறுகளும் இல்லை. அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டுமாயின் அமைச்சரின் அனுமதி தேவை. அமைச்சர் தற்போது நாட்டில் இல்லை' என்று சி.வி கூறினார். 'அரசியல் கைதிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுகொடுக்க முயற்சிப்போம். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்தித்து விபரங்களை கொடுப்போம்' வட மாகாண முதலமைச்சர் மேலும் கூறினார். இதேவேளை, காலியிலுள்ள பூஸா சிறைச்சாலைக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவுள்ளமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























