Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


2–வது முறையாக ஆம் ஆத்மி பெண் மந்திரி பாதுகாப்பை நிராகரித்தார்

Posted: 11 Jan 2014 11:59 PM PST

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் பெண் மந்திரியாக இருப்பவர் ராக்கிபிர்லா. 26 வயதான அவர் குழந்தைகள் மேம்பாட்டு துறை இலாகாவை கவனித்து வருகிறார்

16 வயது சிறுமியை கற்பழித்த 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

Posted: 11 Jan 2014 11:52 PM PST

கடந்த 2003–ம் ஆண்டு டெல்லியில் 16 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக ரான்சிங், ஸ்ரீபகவான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வேலை வாங்கி தருவதாக கூறி இருவரும் அந்த சிறுமியை கற்பழித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை

சரத்பவார் பிரதமரானால் மகிழ்ச்சி என்று சொல்லவில்லை: மத்திய மந்திரி ஷிண்டே பல்டி

Posted: 11 Jan 2014 11:49 PM PST

பாராளுமன்றத்தேர்தலில் ராகுல்காந்தி முன்னிலைப் படுத்தவும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறுகையில், ''தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எனது அரசியல் குரு– அவர் பிரதமரானால் மகிழ்ச்சி'' என கருத்து தெரிவித்து இருந்தார். இது கட்சியில் ஷிண்டேக்கு எதிராக சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி: 26 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ரத்தாகிறது

Posted: 11 Jan 2014 11:36 PM PST

மத்திய அரசு நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.

சோனியா, ராகுலுடன் சந்திப்பு: லல்லு கட்சியுடன் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி சேருமா?

Posted: 11 Jan 2014 11:29 PM PST

சோனியா, ராகுலுடன் லல்லுபிரசாத் ஆலோசனை நடத்தியதன் மூலம் ராஷ்ட்டீரிய ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி சேரும் என்று கூறப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் அந்தந்த மாநிலங்களுக்கு தகுந்தவாறு கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்டீரிய ஜனதா தளம் கட்சி

நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரி போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 11 Jan 2014 11:13 PM PST

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி. பாராளுமன்ற தேர்தலில் அவர் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுவார். நிதின் கட்காரிக்கு நாக்பூர் தொகுதிக்கான சீட் கொடுக்கப்பட்டு இருப்பது அதிகாரப்பூர்வமானதாகும். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அருகே பாரதீய ஜனதா பெண்கள் பேரணி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சீனியர் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், கட்காரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

விருப்ப ஓய்வு பெற்று அரியானா போலீஸ் ஐ.ஜி. ஆம் ஆத்மியில் சேர்ந்தார்

Posted: 11 Jan 2014 09:54 PM PST

முன்னாள் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பலர் ஆம் ஆத்மியில் சேர்ந்து வருகிறார்கள். தற்போது அரியானா மாநில போலீஸ் ஐ.ஜி. ரன்பீர் சர்மா ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். 56 வயதாகும் இவர் சமீபத்தில் அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அவருக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட இருந்தது. அதற்கு முன்பே அவர் பணியில் இருந்து விலகினார். பின்னர் அவர்

ஆந்திர அரசு ஊழியர் சார்பில் சீமாந்திரா பகுதியில் 2 நாள் ‘பந்த்’

Posted: 11 Jan 2014 09:34 PM PST

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசு முடிவுக்கு சீமாந்திரா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மாநில பிரிவினையை எதிர்த்து அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தெலுங்கானா மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் தொடங்கி உள்ளது. உறுப்பினர்கள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்

Posted: 11 Jan 2014 07:44 PM PST

சிக்மகளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து சிக்மகளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மராட்டியத்தில் லஞ்ச வழக்கில் சிக்கியவர்களில் போலீசாருக்கு முதலிடம்

Posted: 11 Jan 2014 07:27 PM PST

மராட்டிய மாநிலத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களை பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மராட்டியத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும் 1,280 லஞ்ச வழக்குகள் பதிவாகி உள்ளன. மாநிலத்தில் தலைநகரமான மும்பையில் அதிகபட்சமாக

கர்நாடகக் கடற்கரையில் நிர்வாணமாகத் திரிந்த ரஷ்ய கப்பற்படை வீரர்கள்

Posted: 11 Jan 2014 06:44 PM PST

இந்தியக் கப்பற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலாகக் கருதப்படும் 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கர்நாடகாவின் கார்வார் கடற்படை தளத்தை அடைந்தது. ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட இந்தக் கப்பலின் செயல்முறைகள் குறித்து இந்திய கப்பற்படை வீரர்களுக்கு

சமாஜ்வாடி கட்சி ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: முலாயம்சிங் யாதவ் பேச்சு

Posted: 11 Jan 2014 06:00 PM PST

சமாஜ்வாடி கட்சி ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று, முலாயம்சிங் யாதவ் கூறினார். உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் நடைபெற்ற பேரணியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி

Posted: 11 Jan 2014 01:32 PM PST

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இந்தநிலையில் காஷ்மீரின் வடஎல்லையான மாக்கில் அருகே உள்ள சோனாபெண்டி காலியில் உள்ள ராணுவ முகாமில் 8 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

மேகாலயாவில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 11 Jan 2014 12:16 PM PST

மேகாலயா மாநிலத்தில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் அமைப்பினர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அம்மாநில அரசுடனும், மத்திய அரசுடனும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி போர் நிறுத்தம் செய்து வருகின்றனர்

கங்கையில் மாசுபாடு அதிகரித்து வருவது குறித்து ஆய்வு நடத்த சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு

Posted: 11 Jan 2014 10:24 AM PST

இந்தியாவின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை வெகு விரைவாக மாசடைந்து வருவது குறித்து இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பி.டி.திரிபாதி என்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி சென்ற மாதம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அது மட்டுமின்றி தேசிய கங்கை ஆற்று வடிநில ஆணையத்தின் தலைவருக்கும்

பெண் வழக்கறிஞரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நீதிபதி: விசாரணை வேண்டும்-வீரப்ப மொய்லி

Posted: 11 Jan 2014 10:09 AM PST

2011ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சுவதேந்திர குமாரரிடம் பயிற்சி பெற்ற தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுக்கப்பட்டதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்திடம் கடந்த மாதம் அளித்துள்ள புகாரில்

ஹெல்ப்லைன் புகாருக்கு நடவடிக்கை: டெல்லியில் மாமூல் கேட்ட 2 போலீஸ்காரர்கள் கைது

Posted: 11 Jan 2014 08:04 AM PST

டெல்லியில் முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான புகார்களை தெரிவிப்பதற்கு 011-27357160 என்ற தொலைபேசி எண்ணை புதன்கிழமை அறிமுகம் செய்தார். இதையடுத்து அந்த எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள்

நான் என்ன அவ்வளவு கெட்டவனா? - முலாயம் சிங் கேள்வி

Posted: 11 Jan 2014 07:57 AM PST

சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு சி.பி.ஐ. விடுவித்தது. இந்நிலையில் ஜான்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது சி.பி.ஐ. குறித்து முலாயம் கூறியதாவது:-

மக்கள் சபை கூட்டம் முந்தைய காங்கிரஸ் அரசின் இயலாமையை காட்டுகிறது: ஆம் ஆத்மி மந்திரி சோனி

Posted: 11 Jan 2014 05:57 AM PST

புதுடெல்லி சட்டசபை வளாகம் முன்பு பொதுமக்களின் குறைகளை கேட்பற்காக மக்கள் சபையை டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூட்டியிருந்தார். அதன்படி இன்று காலை அவர் சட்டசபை முன்பு அமர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கட்டுக்கடங்காதபடி பொதுமக்கள் கூடினர். அவர்கள் தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து

கெஜ்ரிவாலின் மக்கள் சபை கூட்டம் அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது: கிரண் பேடி தாக்கு

Posted: 11 Jan 2014 05:46 AM PST

அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் அமைப்பிலிருந்து பிரிந்து அரசியல் கட்சி தொடங்கி டெல்லி ஆட்சியின் அரியணையில் அமர்ந்திருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று அவரும் அவரது மந்திரிகளும் மக்கள் சபை கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டனர். தங்கள் குறைகளை கூற ஆயிரக்கணக்கானோர் கூடிய இந்த சந்திப்பில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™