Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முதல் பயணம் மேற்கொள்வர் யார்? :மன்மோகன் சிங்கா? விக்னேஸ்வரனா? : இந்தியாவில் அரசியல் ஆராய்வு

Posted: 05 Dec 2013 09:47 PM PST

vikn

viknஇந்திய பிரதமர் மன்மோகன்சிங் யாழ்பபாணம் செல்வரா? அல்லது வடமாகாண முதல் அமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு செல்வரா? என்ற விடயமே இலங்கையில் தற்போது முக்கியமாக பேசப்படும் விடயங்களில ஒன்றாக உள்ளது

யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித், இந்தியாவுக்கு வருமாறு மன்மோகனின் அழைப்பை விக்னேஸ்வரனிடம் கையளித்தார். அதற்கு விக்னேஸ்வரனும் பதிலை அனுப்பினார். இதனையடுத்து பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டின் போது மன்மோகன்சிங் யாழ்ப்பாணம் வரவேண்டும் என்று விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் மன்மோகன்சிங் யாழ்ப்பாணம் செல்வார் என்று கடந்த வாரத்தில் இந்திய நிதியமைச்சர் பா சிதம்பரமும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இந்திய பொதுத்தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. எனவே விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு அழைத்தால் அதன்மூலம் காங்கிரஸுக்கான ஆதரவை தமிழகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமா? அல்லது மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்துக்கு சென்றால் அதிக தமிழக வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற ஆராய்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை எதிர்வரும் மாதத்தில் விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு செல்வார் என்று இலங்கையின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவர் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்திப்பாரா? என்பதை குறித்த செய்திதாள் வெளியிடவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்த முயற்சி – இராணுவப் பேச்சாளர்

Posted: 05 Dec 2013 09:39 PM PST

mutur-murder

mutur-murderஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் ஏ.சீ.எப் நிறுவனத்தின் 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தக் கொலைகளை படைத் தரப்பினரே மேற்கொண்டதாக பிரெஞ்சு நிறுவனமான ஏ.சீ.எப் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் அவற்றை சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் வரையில் சாட்சியங்களை மறைத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என இராணுவப் பேச்சாளர் கேள்வி எழுப்பியுள்ளார். உரிய முறையில் விசாரணை நடாத்த தேவையான சாட்சியங்களை வழங்காது, குற்றச்சாட்டுக்களை அடுக்குவதில் பயனில்லை என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய மேற்குலக நாடுகளின் முகமூடியை கழற்ற போவதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி தெரிவிப்பு

Posted: 05 Dec 2013 09:33 PM PST

superdvora

 superdvoraஇலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடன் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், இலத்திரனியல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு இலக்கம் மற்றும் நாடுகளின் அடையாளம் இருந்துள்ளன. அமெரிக்க அரசு வைத்துள்ள எம்.16 தாக்குதல் துப்பாக்கி, கடற்புலிகளின் படகுகளில் பயன்படுத்தப்பட்ட ரேதியோன் ரேடார் கட்டமைப்பு, பிரித்தானிய தயாரிப்பான கடல் ஸ்கூட்டர் உட்பட பல பொருட்களை புலிகளிடம் இருந்த நிலையில் படையினர் கைப்பற்றியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட எம்.16 ரக தாக்குதல் துப்பாக்கி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது என பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன. இதனை தவிர புலிகளின் இரணைமடு விமான ஓடுத்தளத்திற்கு தேவையான மின் கலன்கள், மின் விளக்குகள் என்பன பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்தவை. அத்துடன் 3 ஸ்லின் ரக விமானங்கள் பங்களாதேஷ் நாட்டின் விவசாய இரசாயன நிறுவனத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டதாக செக் குடியரசு இலங்கைக்கு அறிவித்துள்ளது. இந்த உண்மைகளை வெளியிட்டு மேற்குலக நாடுகளின் முகமூடியை கழற்ற போவதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களின் பெறுமதி சுமார் 1400 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வட மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு

Posted: 05 Dec 2013 09:17 PM PST

Vikneswaran_TNA_Chief_Candidate

Vikneswaran_TNA_Chief_Candidateவட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரனும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நேற்று (05) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பு கொழும்பிலுள்ள விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றதாக ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் முன்னதாக வட மாகாண முதல்வரை சந்தித்துப் பேச்சுவார்த்தை சடத்தியதன் பின்னர் ஜனநாயக மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள், மரியாதை நிமித்தம் முதல்வர் விக்கினேஸ்வரனை சந்தித்தனர்.

இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், எஸ். ராஜேந்திரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் வேலணை வேணியன், சண். குகவரதன், பிரியாணி குணரத்ன, கே.ரி. குருசாமி, எஸ். பாஸ்கரா, லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றனர்.

இச்சந்திப்பு குறித்து ஜமமு தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது;

பரஸ்பர வேலைப்பளு காரணமாக தள்ளி போடப்பட்டிருந்த இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போது, வடக்கில் மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி பொறுப்பில் இருக்கும் கூட்டமைப்பு நிர்வாகத்தை, முடக்கும் அரசின் செயல்பாடுகள் பற்றிய நிலைமைகளை முதல்வர் விளக்கி கூறினார்.

அரசாங்கம் உலகத்திற்கு ஒன்றை சொல்லுவதும், உள்நாட்டில் இன்னொன்றை செய்வதும் என்ற இரட்டை நிலைபாட்டில் செயல்படுவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். அதேவேளை சிங்கள இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மத்தியில் ஒரு சிறு புரிந்துணர்வு தென்படுவதாகவும், குறிப்பாக அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, வாசுதேவ, டிவ் குணசேகர ஆகியோர் தம்முடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.

வடக்கின் உண்மை நிலைமைகள் பற்றி ஜனநாயக மக்கள் முன்னணி சிங்கள மக்களுக்கு எடுத்து கூறுவதை வரவேற்ற அவர், இந்த பணியை இன்னமும் வலுவாக முன்னெடுத்து, உண்மை தகவல்களை சாதாரண சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும்படி வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலில், மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பாஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நமது கட்சி போட்டியிடுவது பற்றியும், இது தொடர்பில் அடுத்த வாரம் கொழும்பில் கூடவுள்ள எங்கள் அரசியல்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுப்படவுள்ளது பற்றியும் நான், முதல்வருக்கு எடுத்து கூறினேன்.

தமிழினத்தின் நலன் கருதி, தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும் ஒன்றை ஒன்று ஆதரித்து புரிந்துணர்வுடன் செயல்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் மிக தெளிவாக இருப்பதாக விக்கினேஸ்வரன் கூறினார். அத்துடன் தத்தமது பிராந்தியங்களில் இரண்டு கட்சிகளும் பலமாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் நான் கடந்த மாதம் முதல்வருக்கும், ஜனாதிபதிக்கும் எழுதி அனுப்பியிருந்த கோரிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. கைதிகள், தடுத்து வைக்கப்படிருப்போர் தொடர்பான விபரங்களை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் எதிர்பார்த்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

இந்த அதிமுக்கிய மனிதநேய விவகாரம் தொடர்பில் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பில் விரைவில் ஒரு செயற்பாட்டு குழு அமைக்கப்பட்டு காரியங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விக்கினேஸ்வரன் கூறினார்.

வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு நமது கட்சி அளித்து வரும் ஆதரவை நாம் தொடர்ந்து வழங்கி வரும் அதேவேளையில், தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பிலும், வடக்கு மாகாணசபை முடக்கப்படுவது தொடர்பிலும் உண்மை நிலவரங்களை நாம் தொடர்ந்து சிங்கள மக்களுக்கு எடுத்து கூறுவோம் என நான், முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு உறுதியளித்தேன்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா காலமானார்

Posted: 05 Dec 2013 08:21 PM PST

தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவரும் அந்த நாட்டின் வரலாற்றில் புதிய தொரு மாற்றத்தை ஏற்படுத்தியவருமான நெல்சன் மன்டேலா காலமானார். அண்மை காலங்களாக உடல்நிலை சரியில்லாமையால் அவதியுற்று வந்த மண்டேலா தனது 95வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். ஜூலை 18ம் திகதி 1918ம் ஆண்டு பிறந்த மண்டேலா, தென்னாபிரிக்க வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவராக திகழ்கின்றார். இவர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராகவும் […]

தூங்கிக் கொண்டிருந்த மனைவிக்கு கணவன் கொடுத்த பயங்கர ஷாக்…..

Posted: 05 Dec 2013 05:31 AM PST

girl_sleep_001.w245

girl_sleep_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

நகைச்சுவை கலைஞர் சேதுவின் கலக்கல் கோலி சோடா!…. மிஸ் பண்ணிடாதீங்க….

Posted: 05 Dec 2013 05:22 AM PST

sethu_001.w245 (1)

sethu_001.w245 (1)

This posting includes an audio/video/photo media file: Download Now

48 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டிடம்……

Posted: 05 Dec 2013 05:16 AM PST

floor_001.w245

floor_001.w245   பஞ்சாபின் புறநகர் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளார்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

இசைப் பிரியர்களுக்கு சவால் விடும் இளைஞன்…..

Posted: 05 Dec 2013 05:03 AM PST

body_music_001.w245

body_music_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பொதுபல சேனாவின் இனவாத கருத்திற்கு யாழ். தமிழ் – பௌத்த சங்கம் கண்டனம்

Posted: 05 Dec 2013 04:48 AM PST

இலங்கையில் உள்ள இனங்களுக்கு இடையில் மீண்டும் ஒரு பேரினவாதத்தை உருவாக்கும் வகையில் பொதுபலசேனாவின் கருத்துக்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக காணப்படுவதாக யாழ்.மாவட்ட தமிழ் – பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், எமது நாட்டில் நடைபெற்று முடிந்த யுத்தத்திற்கு பின் ஜனாதிபதி எமது நாட்டில் இன, மத வேறுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்து செயலாற்றிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஜனாதிபதிக்கும் எமது நாட்டிற்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாத கருத்தை […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™