மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 3 பிரசவங்களில் இரட்டையர்களாக பிறந்த 6 பெண் குழந்தைகள்: 2 பெண் குழந்தைகளை விற்ற தந்தை கைது
- டெல்லி அருகே ரெயில் மீது துப்பாக்கியால் சுட்டு 2 கைதிகளை மீட்ட கும்பல்: 6 போலீசார் படுகாயம்
- முள்ளிவாய்க்கால் முற்றம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தள்ளுபடி
- மோடியை குறைத்து மதிப்பிடவில்லை: பிரதமர் மன்மோகன் சிங்
- சபரிமலை காட்டுக்குள் யானைகள் நடமாட்டம்: மலைபாதையில் செல்ல பக்தர்களுக்கு தடை
- தெலுங்கானாவுக்கு மந்திரிகள் குழு ஒப்புதல்: சீமாந்திரா பகுதியில் இன்று முழு அடைப்பு
- காங்கிரஸ் தோற்கும் என்று கூறும் தேர்தல் கருத்துக்கணிப்புகளை குப்பையில் வீச வேண்டும்: திக்விஜய்சிங்
- பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
- இணையதள உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா விரைவில் அமெரிக்காவை முந்தக்கூடும்
- தேர்தலுக்கு பின் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளை காங்கிரஸ் நிராகரித்தது
- மத வன்முறை தடுப்பு மசோதாவில் திருத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
- மனித உரிமைகள் ஆணையர் பதவியை நீதிபதி ஏ.கே.கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும்: சுஷ்மா சுவராஜ்
- பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- 10 மாவட்டங்களுடன் கூடிய தெலுங்கானா மாநிலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- வங்கதேச இந்துக்கள் மீதான வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: பாரதிய ஜனதா கோரிக்கை
- லோக்பால் மசோதாவுக்காக செவ்வாய்க்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே
- பேஸ்புக்கில் கைதிகள் புகைப்படம்: கோழிக்கோடு ஜெயில் சூப்பிரண்டு சஸ்பெண்டு
- சுஷ்மா சுவராஜ்-அருண் ஜெட்லியுடன் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சந்திப்பு
- பாரதிய ஜனதாவில் மீண்டும் எடியூரப்பாவை சேர்க்க விரைவில் அழைப்பு
- பீகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் படுகொலை
| 3 பிரசவங்களில் இரட்டையர்களாக பிறந்த 6 பெண் குழந்தைகள்: 2 பெண் குழந்தைகளை விற்ற தந்தை கைது Posted: 05 Dec 2013 11:23 PM PST கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் பாவகடா தாலுகா நாகேயனஹள்ளியை சேர்ந்தவர் கங்காதர். இவருடைய மனைவி நாகமணி. விவசாயியான கங்காதர், கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தினார். நாகமணிக்கு முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அதன்பிறகு, 2வது முறையாக அவர் கர்ப்பமாக இருந்த போதும் 2 பெண் குழந்தைகளை பெற்று எடுத்தார். |
| டெல்லி அருகே ரெயில் மீது துப்பாக்கியால் சுட்டு 2 கைதிகளை மீட்ட கும்பல்: 6 போலீசார் படுகாயம் Posted: 05 Dec 2013 11:16 PM PST டெல்லியில் இருந்து ஆந்திரா வந்த ரெயில் மீது 8 பேர் கும்பல் துப்பாக்கியால் சுட்டு 2 கைதிகளை மீட்டுச் சென்றது. இதில் 6 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு ஆந்திர பிரதேஷ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருந்து ஒரு பெட்டியில் 2 கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக |
| முள்ளிவாய்க்கால் முற்றம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தள்ளுபடி Posted: 05 Dec 2013 11:11 PM PST தஞ்சை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அந்த மனுவில் முள்ளி வாய்க்கால் முற்றத்தை திறக்க அனுமதிக்க கூடாது. அதை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் சவுந்திரமவுலி |
| மோடியை குறைத்து மதிப்பிடவில்லை: பிரதமர் மன்மோகன் சிங் Posted: 05 Dec 2013 10:50 PM PST பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருவதாகவும் அவரை தாம் குறைத்து மதிப்பிடவில்லை எனவும் மன்மோகன் கூறியுள்ளார். மேலும், அரசியல் கட்சி என்ற முறையில் எதிர்கட்சிகளின் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது என கூறியுள்ளார். தனது அமைச்சரவை சகாக்களிடையே மோடி குறித்த கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுவது பற்றி கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். |
| சபரிமலை காட்டுக்குள் யானைகள் நடமாட்டம்: மலைபாதையில் செல்ல பக்தர்களுக்கு தடை Posted: 05 Dec 2013 10:21 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் காட்டு பெருவழிப்பாதையில் தற்போது வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக காட்டு இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வரும் அபாயம் இருக்கும் என்றும் எச்சரித் திருந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சபரிமலை உரல்குழி |
| தெலுங்கானாவுக்கு மந்திரிகள் குழு ஒப்புதல்: சீமாந்திரா பகுதியில் இன்று முழு அடைப்பு Posted: 05 Dec 2013 09:41 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன்படி நாட்டின் 29–வது மாநிலமாக தெலுங்கானா அமைய உள்ளது. கடும் எதிர்ப்பு காரணமாக தெலுங்கானாவுடன் ராயல சீமா பகுதியைச் சேர்ந்த அனந்தபூர், கர்னூல் மாவட்டங்களை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டது. தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்பட 10 மாவட்டங்கள் |
| காங்கிரஸ் தோற்கும் என்று கூறும் தேர்தல் கருத்துக்கணிப்புகளை குப்பையில் வீச வேண்டும்: திக்விஜய்சிங் Posted: 05 Dec 2013 09:30 PM PST டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஓட்டுப்பதிவுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகளை சில தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டன. அப்போது மிசோரம் தவிர 4 மாநிலங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்று தெரிவித்தன. இந்தகருத்துக்கணிப்புகள் குறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறும்போது, ''குறிப்பிட்ட |
| பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் Posted: 05 Dec 2013 08:43 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காக இங்கு ஏராளமான போலீசாரும், அதிரடி படையினரும், மத்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களோடு கமாண்டோ படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். |
| இணையதள உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா விரைவில் அமெரிக்காவை முந்தக்கூடும் Posted: 05 Dec 2013 07:25 PM PST இந்தியாவில் சமீப காலங்களில் இணையதளப் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஜூன் மாதக் காலாண்டு அறிக்கையின்படி 198.30 மில்லியன் மக்கள் இணையதளம் உபயோகிப்பாளர்களாக இருக்கின்றனர்.இது முந்தைய காலாண்டைவிட 20 சதவிகித அதிகரிப்பாகும். இதே விகிதத்தில் வளர்ச்சி நிலைமை இருந்தால் 260 மில்லியன் பயன்படுத்துபவர்கள் கொண்ட அமெரிக்காவை இந்தியா விரைவில் |
| தேர்தலுக்கு பின் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளை காங்கிரஸ் நிராகரித்தது Posted: 05 Dec 2013 04:15 PM PST நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்றும், டெல்லியில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு இருந்தன |
| மத வன்முறை தடுப்பு மசோதாவில் திருத்தம்: மத்திய அரசு அறிவிப்பு Posted: 05 Dec 2013 12:20 PM PST பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை வருகிற 20-ந்தேதி வரை 12 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதில் மத வன்முறை தடுப்பு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது |
| மனித உரிமைகள் ஆணையர் பதவியை நீதிபதி ஏ.கே.கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும்: சுஷ்மா சுவராஜ் Posted: 05 Dec 2013 10:49 AM PST விசாரணை குழு குற்றம் சாட்டிய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற எதிர்க்கட்சி (பா.ஜனதா) தலைவர் சுஷ்மா சுவராஜ் வற்புறுத்தி உள்ளார் |
| பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 05 Dec 2013 10:00 AM PST உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் கலப்பட பால் குறித்து உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2011-ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் கலப்பட பால் |
| 10 மாவட்டங்களுடன் கூடிய தெலுங்கானா மாநிலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 05 Dec 2013 08:08 AM PST ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதுதொடர்பான வரைவு மசோதா தயாரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், தெலுங்கானாவுடன் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அனந்தபூர், கர்னூல் ஆகிய 2 மாவட்டங்களை சேர்த்து 'ராயல தெலுங்கானா' என பெயர் சூட்ட மத்திய அரசு திட்டமிட்டது. |
| வங்கதேச இந்துக்கள் மீதான வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: பாரதிய ஜனதா கோரிக்கை Posted: 05 Dec 2013 07:32 AM PST வங்க தேசத்தில் கிட்டத்தட்ட 90 சதவிகித இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர். மைனாரிட்டிகளாக இந்துக்கள் 8 சதவிகிதமும், கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர் 2 சதவிகிதமும் உள்ளனர். இந்நிலையில், இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து மேற்கு வங்க பாரதிய ஜனதா தலைவர் ராகுல் சின்ஹா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இன்று கொல்கத்தாவில் உள்ள இந்தியாவிற்கான வங்கதேச துணை தூதரை சந்தித்து அறிக்கை ஒன்று கொடுத்துள்ளனர். |
| லோக்பால் மசோதாவுக்காக செவ்வாய்க்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே Posted: 05 Dec 2013 06:50 AM PST ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே, பாராளுமன்றத்தில் உடனடியாக லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் செவ்வாய்க்கிழமை காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார். |
| பேஸ்புக்கில் கைதிகள் புகைப்படம்: கோழிக்கோடு ஜெயில் சூப்பிரண்டு சஸ்பெண்டு Posted: 05 Dec 2013 06:17 AM PST கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த புரட்சிக்கர கம்யூனிஸ்டு தலைவர் சந்திரசேகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகள் சிறையில் உல்லாச வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் இணைய தள பேஸ்புக்கில் வெளியானது. சிறையில் செல்போனில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது தெரிய வந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் |
| சுஷ்மா சுவராஜ்-அருண் ஜெட்லியுடன் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சந்திப்பு Posted: 05 Dec 2013 05:50 AM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், முக்கிய சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றும் பொருட்டு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், எதிர்க்கட்சியான பா.ஜனதாவிடம் காப்பீடு மசோதா மற்றும் நேரடி வரி மசோதா குறித்து ஆலோசனை நடத்தினார். |
| பாரதிய ஜனதாவில் மீண்டும் எடியூரப்பாவை சேர்க்க விரைவில் அழைப்பு Posted: 05 Dec 2013 05:41 AM PST பாராளுமன்ற தேர்தல் நடக்க இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும் கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவை மீண்டும் பாரதிய ஜனதாவில் முறைப்படி சேர்க்க அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் இன்று கர்நாடக பாரதிய ஜனதா தலைவர் பிரஹலாத் ஜோஷி சந்தித்து பேசினார். |
| பீகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் படுகொலை Posted: 05 Dec 2013 05:22 AM PST பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல், அந்த சிறுமிகளை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது. ஆனால் சிறுமிகளின் சகோதரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |