Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


உன்னை யாருமா திரும்பி பார்க்கச் சொன்னது?….

Posted: 24 Dec 2013 11:31 PM PST

girl_tiger_001.w245

girl_tiger_001.w245      

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈரானில் புதிய தலைநகரம்

Posted: 24 Dec 2013 10:57 PM PST

tehran-capital-of-iran

tehran-capital-of-iranஈரான் தலைநகராக தெஹ்ரான் உள்ளது. இங்கு 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும், குற்றங்களும் பெருகிவிட்டன.

மேலும் வேலை வாய்ப்புகள் தேடி நாளுக்கு நாள் மக்கள் இங்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். எனவே தெஹ்ரானில் கடந்த 10 ஆண்டுகளில் தற்போது மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்து விட்டது.

இதனால் மாசு தொல்லையும் பெருகி விட்டது. எனவே தலைநகரை தெஹ்ரானில் இருந்த வேறு நகருக்கு மாற்ற ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஈரான் பாராளுமன்றம் பரிசீலித்து வருகிறது. எம்.பி.க்களிடம் கருத்தை கேட்டுள்ளது. 2 ஆண்டுகள் ஆய்வுக்கு பிறகு ஈரான் தலைநகரம் வசதி வாய்ப்புகள் நிறைந்த வேறு நகருக்கு மாற்றப்பட உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நியூசிலாந்து தொடரில் சாமுவேல்ஸ் நீக்கம்

Posted: 24 Dec 2013 10:48 PM PST

marlon20070605w

marlon20070605wநியூசிலாந்துக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்து விட்டது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி வெஸ்ட் இண்டீஸ்–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு திடீர் பின்னடைவாக ஆல்–ரவுண்டர் மர்லன் சாமுவேல்ஸ் காயம் காரணமாக தாயகம் திரும்புகிறார்.

வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். அவருக்கு பதிலாக 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாட்விக் வால்டன் சேர்க்கப்பட்டு உள்ளார்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குத் தாமதமாகக் குவிந்துள்ள விண்ணப்பங்கள்

Posted: 24 Dec 2013 10:42 PM PST

obama

obamaஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிமுகப்படுத்திய மருத்துவக் காப்பீட்டு திட்டம் ஆரம்பித்தபோது மக்களிடையே வரவேற்பு அதிகமாகக் காணப்படவில்லை.கடந்த 2010 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டம் பல சட்ட சவால்களை சந்தித்தது மட்டுமில்லாமல் அவரது புகழ் வெகுவாகக் குறைவதற்கும் காரணமாக இருந்தது. வரும் 2014 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் இந்தத் திட்டம் வழி செய்துள்ளது என்று கருதப்படுகின்றது.  சமீப காலங்களில் இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களில் விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டு புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இத்தொழிலில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த திங்களன்று முடிவடைவதாகத் தெரிவிக்கப்பட்ட இந்தக் காப்பீட்டு திட்டத்திற்கு 2 மில்லியன் மக்கள் இணையதளத்தில் பார்வையிட்டதையும், 2,50,000 விசாரணைகள் பெறப்பட்டதையும் கருத்தில் கொண்டு அரசு நேற்று ஒரு நாள் நீட்டிப்பும் அளித்தது. இதுமட்டுமின்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யமுடியாதவர்களும் அரசின் தகவல் மையங்களை அணுகலாம் என்றும் குறிப்பிட்டிருந்த அரசு இதற்கான எந்த காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை.  ஒபாமாவின் உள்நாட்டு முயற்சியான மலிவு பராமரிப்பு திட்டத்தின் கீழ் அதிக பட்ச மக்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் வண்ணமே விதிமுறைகள் தளர்த்தப்பட்டு காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளன.. கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி புதுப்பிக்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் இலக்கு தொழில்நுட்ப கோளாறுகளையும், அரசியலில் வழிகோலும் தவறான நடவடிக்கைகளையும் மாற்றும்விதமாகவே நீட்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. மாநில மற்றும் மத்திய அரசின் மதிப்பீடுகளின்படி திங்கட்கிழமை தவிர்த்து இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். செவ்வாய்கிழமை பெறப்பட்ட இறுதி கணக்கீடுகள் வெளியிடப்படவில்லை என்றபோதிலும் ஜனவரி முதல் தேதிக்கான மக்களின் ஆர்வம் பெருமளவில் உள்ளதாக நிர்வாகத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர். புதுவருட தினத்தை ஒட்டி ஆயிரக்கணக்கானவர்கள் இந்த திட்டத்திற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். நடுஇரவு வரை திறந்திருந்த அழைப்பு மையங்களில் ஆயிரக்கணக்கான அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேபோல் இணையதளம் வழியாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர் என்றுமருத்துவ உதவி மற்றும் மருத்துவ சேவைகள் மையங்களின் செய்தித் தொடர்பாளரான ஜூலி பட்டாய்லி தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவது குறித்து பாகிஸ்தான் கவனம்

Posted: 24 Dec 2013 10:27 PM PST

paki

pakiஇலங்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவது குறித்து பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடுவது குறித்து பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

தற்போது மன்னார் கடற் பகுதியில் இந்தியாவின் கெய்ரன் நிறுவனம் எண்ணெய் அகழ்வு தொடர்பிலான ஆய்வில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அய்யாஸ் சாதீக் எண்ணெய் அகழ்வு குறித்து அறிவித்துள்ளார்.

இலங்கையுடன் மிக நெருங்கிய உறவு பேணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சீனிக் கைத்தொழில் துறையில் இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க‌ ஐ.நா நடவடிக்கை – பாலித கொஹணே

Posted: 24 Dec 2013 09:20 PM PST

palitha_CI

palitha_CIசர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முனைப்புக்களை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை எடுக்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆறாம் கமி;ட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சட்ட விவகாரக் கமிட்டியின் தலைவராக பாலித கொஹணே கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத இல்லாதொழிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் சர்வதேச பிரகடனமொன்று வரையப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2001 செப்டம்பர் 11 தாக்குதல்களின் போது பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் நிலவி வந்த ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு வழிகளில் பயங்கரவாதம் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத  இல்லாதொழிப்பு தொடர்பில் உலக நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சில நாடுகள் கோரி வருவதாகவும் இது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு உத்தேச பிரகடனம் தயாரிக்கப்படும் எனவும் டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதன் முறையாக மூளைப் புற்றுநோய்க்கு தடுப்பூசி

Posted: 24 Dec 2013 08:50 PM PST

ஐரோப்பாவில் முதன் முறையாக மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராபர்ட் டிமேஜன் என்பவருக்கு சோதனை முறையில் தடுப்பூசி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகரான ராபர்ட் டிமேஜன்(வயது 62) என்பவர் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருக்கவே, சிகிச்சை பெறுவதற்காக கிங்க்ஸ் காலேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முதன்முறையாக, நோயை உருவாக்கும் செல்களை எதிர்த்து போராடும் வகையில் தடுப்பூசி மருந்து சோதனை முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மருத்துவர்கள், ராபட்டுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, […]

This posting includes an audio/video/photo media file: Download Now

டெல்லி அமெரிக்க தூதரகத்துக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்: அமெரிக்க வழக்குரைஞர்

Posted: 24 Dec 2013 08:40 PM PST

டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய வம்சாவளி அமெரிக்க வழக்குரைஞர் ரவி பாத்ரா வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புது டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. இது குறித்து வாஷிங்டனில் வழக்குரைஞர் ரவி பாத்ரா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க தூதர்களின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]

60 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ் கணிதவியலாளருக்கு மன்னிப்பு

Posted: 24 Dec 2013 06:42 PM PST

ரிட்டிஷ் கணிதவியலாளர், ஆலன் ட்யூரிங்க், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர்கள் பயன்படுத்திய “எனிக்மா” என்ற ரகசிய குறியீட்டு மொழியை கண்டறிந்தவர். 1952ம் ஆண்டில் அவர், ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அப்போது இங்கிலாந்தில் ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றமாக கருதப்பட்டது. சிறையில் அவருக்கு ஆண்மை நீக்கும் சிகிச்சை அளிக்கபட்டது. நவீன கணினியியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற டாக்டர் ட்யூரிங்க் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னர் சயனைட் விஷம் தின்று தற்கொலை […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தெற்கு சூடானில் சவக்குழிகள் கண்டுபிடிப்பு: ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை

Posted: 24 Dec 2013 06:40 PM PST

2011-ம் ஆண்டு உதயமான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மாயர்தித்தின் ஆட்சி நடக்கிறது. டிங்கா பழங்குடி வகுப்பை சேர்ந்த சல்வா கீர் கடந்த ஜூலை மாதம் நூயெர் பழங்குடி இணத்தை சேர்ந்த துணை அதிபர் ரீக் மசூரை பதவியிலிருந்து அகற்றினார். இதையடுத்து அதிபரின் படைக்கும் ரீக் மசூரின் புரட்சிப்படைக்கும் இடையே அங்கு தற்போது கடுமையான உள்நாட்டு போர் நடக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் கொடூரமான இனப்படுகொலைகளும், கற்பழிப்புகளும் அரங்கேற்றப்பட்டு […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™