Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஒடிசாவில் பஞ்சாயத்து அலுவலகம் குண்டு வீசி தகர்ப்பு: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

Posted: 24 Dec 2013 11:09 PM PST

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள படியாவில் வட்டார பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். முன்னதாக வட்டார பஞ்சாயத்து அலுவலகம் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் கட்டிடம் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினார்கள்

கடவுள்களே ஆயுதங்களுடன் உள்ளனர்-அரசு வழங்கும் பாதுகாப்பை கெஜ்ரிவால் ஏற்க வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்

Posted: 24 Dec 2013 10:46 PM PST

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இதையொட்டி, தன்னுடன் பதவி ஏற்க உள்ள மந்திரிகளை கெஜ்ரிவால் நேற்று தேர்வு செய்தார்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா–காங்கிரஸ் அதிரடி வியூகம்: பிரதமர் வேட்பாளர்களாக மோடி–ராகுல் பலப்பரீட்சை

Posted: 24 Dec 2013 10:25 PM PST

பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. – காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாகி விட்டன. வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசார பணிகளை செய்வதற்கு திட்டமிட இரு தேசியக் கட்சிகளும் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. நேற்று பா.ஜ.க. முதல்– மந்திரிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. சுமார் 2 மணி நேரம் நடந்த அந்த கூட்டத்தில் ''மோடியை

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. எதிர்ப்பை கைவிட்டார்

Posted: 24 Dec 2013 10:03 PM PST

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் – மந்திரியாக நாளை பதவி ஏற்கிறார். அவருடன் மந்திரிகளாக 'முன்னாள் பத்திரிக்கையாளர் மணிஷ்' சிசோடியா, ராக்கி பிர்லா (பொதுப்பணித்துறை மந்திரி ராஜ்குமார் சவுகானை தோற்கடித்தவர்), சேர்ம நாத் பாரதி (மந்திரி கிரண் வாலியாவை தோற்கடித்தவர்), சவுரப் பரத்வாஜ், கிரிஸ்

நிலத்துக்கு ரூ.1 கோடி முதல் ரூ. 6 கோடி வரை இழப்பீடு: குஜராத்தில் கோடீஸ்வரர்கள் ஆன கிராம பெண்கள்

Posted: 24 Dec 2013 09:49 PM PST

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது கோராஜ் கிராமம். இங்கு மக்கள் தொகை 400 பேர் தான். சமீபத்தில் இந்த ஊர் மக்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்து கோடீஸ்வரர் ஆனார்கள். இவர்கள் விவசாய பயன்பாட்டுக்கு வைத்திருந்த நிலத்தை குஜராத் மாநில அரசின் தொழில் முதலீட்டு கழகம் சார்பில் தொழிற்சாலைகள் கட்டுதவற்கு கையகப்படுத்தியது. இதற்காக கிராமத்தில் உள்ள மொத்த நிலத்துக்கும் மாநில அரசு ரூ. 850 கோடி இழப்பீடு வழங்கியது. அதன்படி ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ரூ. 1 கோடியில் இருந்து அதிக பட்சம் ரூ. 6 கோடி வரை இழப்பீடு தொகை பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் அவர்கள் திடீர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.

ஜனாதிபதி அனுமதி கொடுக்காததால் கெஜ்ரிவால் பதவி ஏற்பு திடீர் ஒத்திவைப்பு

Posted: 24 Dec 2013 09:43 PM PST

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். நாளை (வியாழக்கிழமை) அவர் ராம்லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கெஜ்ரிவால் தன்னுடன் பதவி ஏற்க உள்ள 6 மந்திரிகளை நேற்று தேர்வு செய்தார்.

பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் ரெயில் ஊழியர்கள் ஸ்டிரைக்

Posted: 24 Dec 2013 09:26 PM PST

ரெயில்வே ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதால் அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க ரெயில்வே தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன.

மேற்குவங்க எல்லையோர கிராமங்களுக்குள் 150 காட்டு யானைகள்: ஊரை காலி செய்து மக்கள் ஓட்டம்

Posted: 24 Dec 2013 03:56 PM PST

மேற்கு வங்க மிட்னாப்பூர் மாவட்ட நயக்ராம் பகுதி கிராமங்களுக்குள் நேற்று 150 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று நுழைந்தது. பின்னர், கெசரெக்கா கிராமத்தில் இருந்த குடிசைகளை இடித்து தள்ளின. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஊரை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிவிட்டனர்

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்: வீரப்ப மொய்லி திட்டவட்டம்

Posted: 24 Dec 2013 03:35 PM PST

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திதான் என்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். புதிய சுற்றுச்சூழல் துறை மந்திரியாக வீரப்ப மொய்லி

புதிய சுற்றுச்சூழல் துறை மந்திரியாக வீரப்ப மொய்லி பொறுப்பு ஏற்றார்

Posted: 24 Dec 2013 02:25 PM PST

புதிய சுற்றுச்சூழல் துறை மந்திரியாக வீரப்ப மொய்லி பொறுப்பு ஏற்றார். அவர் முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோப்புகளை தேங்கவிட மாட்டேன் என்று வீரப்ப மொய்லி கூறினார். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாக ஜெயந்தி நடராஜன்

எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்: ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்ததில் காங்கிரசில் கருத்து வேறுபாடு

Posted: 24 Dec 2013 01:34 PM PST

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது தொடர்பாக காங்கிரசில் கருத்து வேறுபாடு நிலவுவதாக அக்கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. டெல்லியில், ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரசார் சிலர்,

ரூ.35 கோடி ஹெராயினை கடத்திய தமிழகத்தை சேர்ந்தவர் டெல்லியில் கைது

Posted: 24 Dec 2013 12:41 PM PST

ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. பின்னர் அது வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குற்றவியல் பிரிவு போலீசார் நேற்று டெல்லி ரெயில்வே நிலையத்தில் முகமது தாரிக் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

டெல்லியில் கடும் மூடுபனி: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

Posted: 24 Dec 2013 12:13 PM PST

டெல்லியில் காலை கடுமையான மூடுபனி நிலவியது. 50 மீட்டருக்கு அப்பால் உள்ள எதனையும் பார்க்க முடியாதபடி பனி மூடியிருந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3-வது ஓடுபாதையில் மூடுபனி

ஆம் ஆத்மி கட்சியில் பிளவு?: எம்.எல்.ஏ. வினோத் பின்னி கூட்டத்தை புறக்கணித்தார்

Posted: 24 Dec 2013 10:07 AM PST

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் வரும் 26-ம் தேதி ஆட்சி அமைக்கிறது. ஆனால், இன்னும் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து அவரது காசியாபாத் இல்லத்தில் இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்பு விழா: டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 24 Dec 2013 08:20 AM PST

டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்க ஒப்புக்கொண்டுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், ஆளுநரை சந்தித்து 26-ம் தேதி பதவியேற்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார். தனது பதவியேற்பு விழாவை ராம் லீலா மைதானத்தில் நடத்த விரும்புவதாகவும் அப்போது தெரிவித்துள்ளார்.

‘ஒரு ஓட்டு ஒரு நோட்டு’: பா.ஜனதா கட்சியின் தேர்தல் நன்கொடை வசூல் திட்டம்

Posted: 24 Dec 2013 08:10 AM PST

பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வியூகத்தை வகுப்பதற்காக பா.ஜனதா கட்சியின் உயர்நிலைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பொதுச்செயலாளர் ஆனந்த் குமார் மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கட்சியின் பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் கைது: 19 பேர் சரண்

Posted: 24 Dec 2013 07:54 AM PST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை சார்ந்த 6 தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இயக்கத்தை சேர்ந்த மற்றொரு தீவிரவாத குழுவைச் சேர்ந்த மேலும் 19 பேர் சரணடைந்தனர்.

கற்பழிக்க முயன்றவரை விடுவித்த பஞ்சாயத்து: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி

Posted: 24 Dec 2013 07:38 AM PST

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டம் சோஹி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு வயலுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வயல் உரிமையாளர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதுடன், கற்பழிக்கவும் முயன்றுள்ளார். இதற்கு அந்தப் பெண் உடன்படாததால் அவரை அடித்து உதைத்துள்ளார்.

அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார்

Posted: 24 Dec 2013 07:19 AM PST

தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டிற்கான புதிய இந்திய தூதராக அறிவிக்கப்பட்ட ஜெய்சங்கர் இன்று வாஷிங்டன் சென்றடைந்தார்.

பூரி கடற்கரை மணலில் உலகின் மிகப்பெரிய இயேசு சிலை: சிற்பக் கலைஞர் சுதர்சன் சாதனை

Posted: 24 Dec 2013 06:28 AM PST

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், உலகின் மிகப்பெரிய இயேசு சிலையை உருவாக்கியுள்ளார். ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட சிலை 35 அடி உயரம், 75 அடி அகலம் கொண்டது. இதில் இயேசு சிலையுடன்,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™