Tamil Star |
- வடமாகாண சபை உறுப்பினர்கள் – இந்தியத் துணைத்தூதுவர் சந்திப்பு
- ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது ஏமாற்றமளிக்கிறது -சோனியாகாந்தி
- புதிய சாதனை நிகழ்த்திய ரொனால்டோ
- வன்னியில் படையினர் பால் கறக்கின்றனர்: ஐங்கரநேசன்
- டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் -டோனி
- சிறுமிக்கு முத்தம் கொடுத்த சிறுவன் : இரண்டு நாள் சஸ்பெண்ட்!
- பூனைகளின் ஹோட்டல்! பிரான்சில் ஓர் புதுமை
- கிரேனினால் ஜேர்மனியில் நேர்ந்த அவலம்
- இனப்படுகொலை! இஸ்லாமிய தலைவருக்கு தூக்கு
- காதலனின் உயிரை குடித்த காதலி
| வடமாகாண சபை உறுப்பினர்கள் – இந்தியத் துணைத்தூதுவர் சந்திப்பு Posted: 12 Dec 2013 08:24 AM PST
இச்சந்திப்பில் இந்திய அரசின் அழுத்தத்தால் 13ம் திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபையின், தற்போதைய நிலை கொண்டு செல்வதில் எதிர்நோக்கப்படும் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடியதோடு, 13ம் திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும்மெனவும் கோரிக்கை விடுத்தனர். இந்திய துணைத் தூதுவர் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் மாவட்டத்தின் நிலைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், மேரிகமலா குணீலன், துரைராசா ரவிகரன் மற்றும் மன்னார் மாவட்டப்பிரதிநிதி சிராய்வா வவுனியா மாவட்டப் பிரதிநிதி எஸ்.லிங்கநாதன் உள்ளிட்ட 07 பேர் கலந்து கொண்டதாகத் தெரிய வருகிறது. மேற்படி சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற போதும் உள்ளே பேசிய விடயங்கள் உறுதியாகத் தெரியவரவில்லை. இருந்த போதும் நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் நில அபகரிப்புக்கள் மாகாணசபையை கொண்டு செல்வததில் உள்ள நெருக்கடிகள் போன்ற பல விடயங்களும் பேசப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது ஏமாற்றமளிக்கிறது -சோனியாகாந்தி Posted: 12 Dec 2013 08:14 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய சாதனை நிகழ்த்திய ரொனால்டோ Posted: 12 Dec 2013 07:42 AM PST
கோபன்ஹேகனில் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் ஸ்டிரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது அணியை 2-0 என்ற விகிதத்தில் வெற்றி பெறச்செய்தார். இவரது கோல் தான் ரியல் மாட்ரிட் அணியை வெற்றி பெறச் செய்தது. இதன் மூலம் போட்டியில் அதிக கோல் அடித்த நபர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். இநத் சீசனில் அவர் 9 கோல்கள் அடித்து உள்ளார், இதற்கு முன் சீசனில் 8 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எனது கோல்கள் கணக்கின் மூலம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அணியின் வெற்றிக்கு உதவ முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நான் அதிக கோல்கள் அடிக்க விரும்பினேன், அது சாதனையாக அமைந்தது. ஆனால் நான் சாதனைகளை முறியடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வன்னியில் படையினர் பால் கறக்கின்றனர்: ஐங்கரநேசன் Posted: 12 Dec 2013 07:20 AM PST
வட மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று (12) நடைபெற்று வருகின்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'யுத்தம் முடிவடைந்த பின்னர் வட பகுதியிலுள்ள இராணுவத்தினருக்கு என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் அரசாங்கம் அவர்களை விவசாயம் செய்வதற்கும் கடை நடத்துவதற்கும் பால் கறப்பதற்கும் ஈடுபடுத்தி வருகின்றது. வட மாகாணத்தில் கிணற்றிலிருந்து அதிகளவான குடிநீர் எடுக்கின்றமையால் நிலத்தடிநீர் மாசடைகின்றது. அத்துடன் இலங்கையிலுள்ள புற்றுநோயாளர்களில் அதிகமானவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கான காரணம் அவர்களின் உணவுகளில் இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்டிருப்பதாகும். விவசாயிகள் தங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை தாங்களாகவே சென்று சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்களின் விவசாய நடவடிக்கையில் புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை தரமுயர்த்த வேண்டுமென்றும்' கூறினார். '2014ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை சந்தையில் விற்பனை செய்கின்ற போது 10 வீதத்திற்குள் கொடுக்கும் கழிவு அமைய வேண்டும். அத்துடன் வெளி மாவட்டங்களிலிருந்து இங்கு பரீட்சார்த்தமாக நடப்படும் மரங்களான சந்தன மரம், இறப்பர் மரம் போன்ற மரங்கன்று மூலம் புதிய தொற்றுக்கிருமிகள் இங்கு வருகின்றன. வட பகுதிக்குரிய மரங்களாக கறுத்தக்கொழும்பான் மா மரம், அம்பலவி மா மரம் போன்றன காணப்படுகின்றன. ஆனால் தற்போது இம்மா மரங்கள் குறைவாகவே காய்க்கின்றன. ஏனெனில் ஆரம்பத்தில் நாங்கள் இலிங்க முறையில் மா மரத்தை நட்டோம். ஆனால் தற்போது மரங்களை செயற்கை முறை மூலம் ஒட்டி இனப்பெருக்கம் செய்கின்றோம். இதனால் ஒரே மரபுரிமை காணப்படாமல் மா மரங்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன' எனவும் அவர் மேலும் தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் -டோனி Posted: 12 Dec 2013 06:58 AM PST
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் 2 ஆட்டத்தில் மோசமான தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் இந்திய அணி விளையாட ஆரம்பித்த போது மழையால் பாதிக்கப்பட்டது, மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 போட்டி கொண்ட தொடரை தென் ஆப்ரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இதுகுறித்து அணித்தலைவர் டோனி கூறுகையில், ஒருநாள் தொடரை இழந்ததன் மூலம் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். வேகப்பந்து, பவுன்சை எப்படி எதிர்கொள்வது என்பதை ஒருநாள் தொடரில் அறிந்தோம். இதனால் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் திணறிய இஷாந்த்சர்மா கடைசி போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள் என்றும், தென் ஆப்ரிக்க அணியில் சிறந்த ஆல்ரவுண்டர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுமிக்கு முத்தம் கொடுத்த சிறுவன் : இரண்டு நாள் சஸ்பெண்ட்! Posted: 12 Dec 2013 06:47 AM PST
அமெரிக்காவின் தன்னுடன் படிக்கும் 6 வயது சிறுமிக்கு முத்தமிட்ட சிறுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான். அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ள கேனன் நகரில் லிங்கன் ஸ்கூல் ஆஃப் சயன்ஸ் அன்ட் டெக்னாலஜி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன், தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு கையில் முத்தம் கொடுத்து விட்டான். இதற்காக சிறுவனை இரண்டு நாள் சஸ்பெண்ட் செய்துள்ளதுடன், பாலியல் அத்துமீறல் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து எல்டனின் தாய் ஜெனிபர் சான்டர்ஸ், எனது மகன் குறித்த சிறுமிக்கு முத்தம் கொடுத்ததற்காக முன்பு ஒரு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டான். தற்போது மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது, இதை பாலியல் அத்துமீறல் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலியல் என்றால் என்ன என என் மகன் என்னிடம் கேட்கிறான் என்று தெரிவித்துள்ளார். ஆனால் சிறுவனோ, தனக்கு அந்த சிறுமியை பிடித்திருப்பதாகவும், வகுப்பு நடந்து கொண்டிருந்த போது அச்சிறுமியின் கையில் முத்தமிட்டதாகவும் கூலாக தெரிவிக்கிறார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பூனைகளின் ஹோட்டல்! பிரான்சில் ஓர் புதுமை Posted: 12 Dec 2013 06:23 AM PST பிரான்சில் முதன்முறையாக பூனைகளுக்காகவே ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பாரிஸ் நகரில் Aristide என்ற பெயரில் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. வேலை விஷயமாக அல்லது விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பொழுது, தங்கள் பூனையை இங்கே விட்டு செல்லலாம் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பூனைகளுக்கென பிரத்யேக உணவுகள், படுத்து உறங்குவதற்கு பஞ்சு மெத்தைகள், விளையாடுவதற்காக மெத்தை மேடைகள் மற்றும் Cat Games என்ற பூனை விளையாட்டுகள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. இது பூனைகளுக்கான ஐந்து நட்சத்திர […] |
| கிரேனினால் ஜேர்மனியில் நேர்ந்த அவலம் Posted: 12 Dec 2013 06:04 AM PST
அப்போது கடைக்குள் 74 வயது பெண், அவரின் மகள், 40 வாடிக்கையாளர்கள் உட்பட 7 பணியாளர்கள் இருந்தனர். விபரம் அறிந்தவுடன் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 42 வயது மதிக்கத்தக்க பெண் பரிதாபமாக பலியானார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இன்னும் பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என வீரர்கள் சந்தேகிக்கின்றனர் This posting includes an audio/video/photo media file: Download Now |
| இனப்படுகொலை! இஸ்லாமிய தலைவருக்கு தூக்கு Posted: 12 Dec 2013 05:52 AM PST வங்காளதேசத்தின் இஸ்லாமிய எதிர்க்கட்சி தலைவருக்கு மரண தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 1971ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் விடுதலைப் போர் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானுடன் சேர்நது இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜமாயித் இ இஸ்லாமி கட்சியின் நான்காம் நிலைத் தலைவரான அப்துல் காதர் மொல்லா வங்கதேச அரசினால் சிறை வைக்கப்பட்டார். மேலும் டாக்காவின் புறநகர்ப் பகுதியான மிர்பூரில் நடந்த நூற்றுக்கணக்கான கொலைகளுக்கு இவர் காரணமாக இருந்தார் என்று இவர் மீது குற்றம் […] |
| Posted: 12 Dec 2013 05:40 AM PST காதலியின் அதீத ஆசையினால் காதலன் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கடை ஒன்றுக்கு, தாவோ ஹசியோ(வயது 38) என்பவர் தனது காதலியுடன் சென்றுள்ளார். அங்கு சுமார் 5 மணிநேரம் இருவரும் சுற்றித் திரிந்து, சுமக்க முடியாத அளவிற்கு ஏராளமான பொருட்களை வாங்கினர். இதனால் சோர்வடைந்த காதலன் வீட்டிற்கு போகலாம் என கூறியுள்ளார். ஆனால் காதலியோ, இன்னும் ஒரு கடைக்கு செல்ல வேண்டும். அங்கு ஷூவுக்கு சிறப்பு தள்ளுபடி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |









