Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: பக்தர்களுக்கு வழங்கும் அப்பம், அரவணை தட்டுப்பாடு

Posted: 12 Dec 2013 11:19 PM PST

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்துள்ளது. இருந்தும் சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏற பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் அப்பம், அரவணைக்கும்

டெல்லியில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டம்: காவல்துறை சிறப்பு படையினர் முறியடித்தனர்

Posted: 12 Dec 2013 09:39 PM PST

தலைநகர் டெல்லி உள்பட முன்று மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் சதித் திட்டத்தை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு முறியடித்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு

டெல்லியில் ஆட்சியமைக்க பா.ஜ.க. மறுப்பு: கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அழைப்பு

Posted: 12 Dec 2013 09:31 PM PST

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது. அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: நடுரோட்டில் சமையல் செய்து நடிகை ரோஜா போராட்டம்

Posted: 12 Dec 2013 09:18 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அவர் அதனை ஆந்திர சட்ட சபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளர். இந்த மசோதாவுக்கு ஆந்திர சட்டசபை ஒப்புதல் வழங்க 6 வாரம் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

டெல்லியில் ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜனதா - ம.தி.மு.க. கூட்டணி உறுதியானது

Posted: 12 Dec 2013 08:44 PM PST

பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 வட மாநில தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜனதா மீது திரும்பியுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் இந்த முறை கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் நாட்டிலும் பா.ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது

தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: அ.தி.மு.க. கோரிக்கை

Posted: 12 Dec 2013 07:26 PM PST

இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாகும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சபாநாயகர் மீராகுமாருக்கு அ.தி.மு.க. பாராளுமன்றக்குழுத் தலைவர் தம்பிதுரை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சினை பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பியும் தீர்வு காணும் வகையில்c

டெல்லியில் ‘ஆம் ஆத்மி’ ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு: பரிசீலனை செய்வதாக ராகுல் காந்தி அறிவிப்பு

Posted: 12 Dec 2013 07:20 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பா.ஜனதா கூட்டணிக்கு 32 இடங்களும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான 'ஆம் ஆத்மி' கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும் கிடைத்தன. பா.ஜனதாவோ, ஆம் ஆத்மியோ ஆட்சி அமைக்க முன்வரவில்லை. ஆம் ஆத்மி கட்சி, 'யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம், யாரிடமும் ஆதரவு கேட்கவும் மாட்டோம், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்' என்று

ஓரினச்சேர்க்கை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் பேட்டி

Posted: 12 Dec 2013 07:10 PM PST

'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல' என்று டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தீர்ப்பினை ரத்து செய்தது. 'இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன்கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல என்று கோர்ட்டு கூற முடியாது' என சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்

சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல்

Posted: 12 Dec 2013 07:02 PM PST

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், எத்தனை லோக்பால் மசோதா கொண்டு வந்தாலும் நமது நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது என்பதற்கு 'கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதளம், சமீபத்தில் நடத்திய 'ஸ்டிங் ஆபரேஷன்' என்னும் ரகசிய ஊழல் நாடகம் சான்றாக அமைந்துள்ளது. 'கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதள நிருபரிடம், இல்லாத ஒரு கம்பெனிக்கு சிபாரிசு கடிதம் தருவதற்கு ரூ.50 ஆயிரம் தொடங்கி ரூ.5

பாகிஸ்தானுக்கு வருமாறு மன்மோகன்சிங்குக்கு நவாஸ் ஷெரீப் அழைப்பு

Posted: 12 Dec 2013 02:26 PM PST

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்–மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பாகிஸ்தான் குழுவினர், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர். அப்போது, பாகிஸ்தானுக்கு வருமாறு

ஓரினச் சேர்க்கை என்பது தனி நபர் சுதந்திரம்: ராகுல் காந்தி கருத்து

Posted: 12 Dec 2013 12:02 PM PST

ஓரினச் சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது குற்றச்செயல் அல்ல என்று டெல்லி ஐகோர்ட்டு கூறிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் ரத்து செய்தது. இந்திய தண்டனை

உடற்பயிற்சியில் மயங்கி விழுந்த நடிகர் ராகவேந்திரா ராஜ்குமாருக்கு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Posted: 12 Dec 2013 04:40 AM PST

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா ராஜ்குமார். இவரது வீடு சதாசிவநகரில் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 15ந்தேதி தனது வீட்டுக்கு அருகே உள்ள உடற்பயிற்சி மையத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், மூளையில்

கொல்கத்தாவில் நேருக்கு நேர் சந்தித்த ரெயில்கள்: மயிரிழையில் விபத்து தவிர்ப்பு

Posted: 12 Dec 2013 04:17 AM PST

கொல்கத்தாவில் இன்று இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள சீல்டா ரெயில் நிலையத்தின் 7-வது பிளாட்பாரத்தில் இருந்து இன்று காலை 8.10 மணிக்கு சீல்டா-லால்கோலா

லோக்பால் மசோதாவை திங்கட்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய அரசு திட்டம்

Posted: 12 Dec 2013 03:41 AM PST

லோக்பால் மசோதாவை அரசு கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தி சமூக சேவகர் அன்னா ஹசாரே, மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ரலேகான் சித்தி கிராமத்தில் கடந்த செவ்வாய் முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலே அந்த மசோதாவை

ராம்தேவின் பதஞ்சலி யோகபீடம் மீது 11 புதிய வழக்குகள்: மொத்த வழக்குகள் 96 ஆக அதிகரிப்பு

Posted: 12 Dec 2013 03:36 AM PST

யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி யோகபீட டிரஸ்ட் மீது முத்திரைத் தீர்வை மோசடி தொடர்பாக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 81 வழக்குகளும் இந்த மாத துவக்கத்தில் 4 வழக்குகளும் அவர் மீது தொடரப்பட்டுள்ளன

மிசோரம் மாநிலத்தில் ஆட்சியமைக்க லால் தன்ஹாவ்லாவுக்கு கவர்னர் அழைப்பு

Posted: 12 Dec 2013 02:52 AM PST

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலங்களில் படுதோல்வியடைந்த காங்கிரஸ், மிசோரம் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 34ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இதையடுத்து மிசோரமின் 6-வது சட்டசபை நேற்று கலைக்கப்பட்டது

பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் 4–வது நாளாக அமளி

Posted: 12 Dec 2013 02:43 AM PST

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை சபை அலுவல் நடைபெறவில்லை. விலைவாசி உயர்வு, தெலுங்கானா பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக பாராளு மன்றம் கடந்த 3 நாட்களாக முடங்கியது. இன்றும் 4–வது நாளாக பாராளுமன்றத்தில் எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்கலாம்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 12 Dec 2013 02:43 AM PST

வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது

ஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: சோனியா

Posted: 12 Dec 2013 02:00 AM PST

ஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: சோனியா

சபரிமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: பிளாஸ்டிக் டப்பாவில் அபிஷேக நெய் கொண்டு வர தடை

Posted: 12 Dec 2013 01:49 AM PST

சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26–ந்தேதி நடைபெறுகிறது. மண்டல பூஜை நெருங்குவதால் சபரி மலையில் கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பம்பையில் இருந்தே பக்தர்களை போலீசார் குழு, குழுவாக பிரித்து அனுப்புகிறார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருந்துதான் சுவாமி அய்யப்பனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™