Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


"டம்மி' ஆக்கப்பட்ட அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

Posted:

வறட்சி நிவாரண முறைகேடு, "அம்மா' திட்ட முகாமில் தகுதியற்றவர்களுக்கு, ஓ.ஏ.பி., வழங்கியது, அதிகாரிகளை மரியாதை குறைவாக நடத்தியது போன்ற குற்றச்சாட்டுகளால், வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக, பதவி இறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றிய செயலராக இருந்த, தோப்பு வெங்கடாசலம், ஈரோடு புறநகர் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டு, 2011 சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ., ஆனார். கடந்தாண்டு, செங்கோட்டையனிடம் இருந்து, வருவாய்த் துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, தோப்பு வெங்கடாசலத்துக்கு வழங்கப்பட்டது. கடந்த ...

ஒரு லிட்டர் டீசலுக்கு 40 காசு தள்ளுபடி: விற்பனையை அதிகரிக்க "பங்க்'குகள் அறிவிப்பு

Posted:

சேலம்: எண்ணெய் நிறுவனங்கள், மாதந்தோறும் டீசல் விலையை உயர்த்தி வரும் நிலையில், தனியார் பங்குகள் விற்பனையை அதிகரிக்க, ஒரு லிட்டர் டீசலுக்கு, 40 காசு தள்ளுபடி செய்வதாக, அறிவிப்பு வெளியிட்டுள்ளன.தமிழகத்தில், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் சார்பில், தனியார் "பங்க்'குகளுக்கு, பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி காரணமாக, மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டு, ஜன., 18 முதல், டிச., 1ம் தேதி வரை, 14 ...

"உலக தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளோம்' : தே.மு.தி.க., "காமெடி' விளக்கம்

Posted:

டில்லி தேர்தலில் போட்டியிட்டதால், அங்குள்ள தமிழர்கள் மட்டுமின்றி, உலக தமிழர்களிடமும் நம்பிக்கை, உறுதி, அசைக்க முடியாத தைரியத்தை, தே.மு.தி.க., ஏற்படுத்தி கொடுத்துள்ளது' என, தே.மு.தி.க., தலைமை விளக்கம், "கிச்சு கிச்சு காமெடி' விளக்கம் அளித்துள்ளது. டில்லி சட்டசபை தேர்தலில், 11 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. அக்கட்சி வேட்பாளர் ஒருவர் கூட, 500 ஓட்டுக்களை தொடவில்லை. ஒரு வாரம் டில்லியில் முகாமிட்டு, பிரசாரம் செய்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட, அக்கட்சி நிர்வாகிகள் யாரும், இதை எதிர்பார்க்கவில்லை. நான்கு மாநில சட்டசபை மற்றும் ...

வழி காட்டுது ஆம் ஆத்மி

Posted:

"ஆம் ஆத்மி கட்சி' என்றால் ஏழை எளியவர் கட்சி என அர்த்தம். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத முன்னாள் அரசு அதிகாரி அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கிய இக்கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாமே, ஊழலுக்கும், தற்போதை அரசியல்வாதிகளின் போக்கும் பிடிக்காதவர்கள். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே படித்தவர்கள். நாகரீகமானவர்கள். சமுதாயத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என விருபும்புபவர்கள். இதனாலேயே இக்கட்சிக்கு, இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகளில் என்ன நடக்கிறது? ஒரு கட்சியின் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., இறந்து விட்டால் அவரது மனைவிக்கோ கணவருக்கோ "சீட்' ...

டில்லியில் ஆட்சி அமைக்க போகும் கட்சி எது? பா.ஜ.,வும், 'ஆம் ஆத்மி'யும் முன்வராததால் சிக்கல்

Posted:

புதுடில்லி: டில்லி மாநில சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ.,வும், இரண்டாவது இடத்தை பிடித்த, 'ஆம் ஆத்மி கட்சி'யும் (ஏ.ஏ.பி.,), 'ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவது இல்லை; எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம்' என, அறிவித்துள்ளதால், டில்லி அரசியலில், உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெரும்பான்மை இல்லை: டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், பா.ஜ., மற்றும் ...

பெரியார் பல்கலை மீண்டும் தலைதூக்கும் ஜாதி அரசியல் : துணைவேந்தர் தேர்வில் முதல்வர் தலையிடுவாரா?

Posted:

சேலம் பெரியார் பல்கலையில், பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஜாதி அரசியல், துணைவேந்தர் தேர்விலும் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலை நிர்வாகம் நல்ல முறையில் செயல்பட, அனுபவம் வாய்ந்த, நேர்மையான துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும் என்பது, கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதில் ஜாதிய அரசியலை புகுத்தாமல், துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்த முத்துச்செழியன் பதவிக் காலம், கடந்த, செப்.,7ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ...

'பா.ஜ., தலைவர்களிடமிருந்து அழைப்பு வரவில்லை': கர்நாடக 'மாஜி' முதல்வர் எடியூரப்பா கடும் விரக்தி

Posted:

பெங்களூரு: ''பா.ஜ.,வில் சேரத் தயார் என, அறிவித்தும், மேலிட தலைவர்களிடமிருந்து, இதுவரை எந்த அழைப்பும் இல்லை; அவர்களின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்,'' என, கே.ஜே.பி., கட்சித் தலைவர், எடியூரப்பா, விரக்தியுடன் கூறியுள்ளார்.மேலிடம் நெருக்கடி: கர்நாடக முன்னாள் முதல்வர், எடியூரப்பா, பா.ஜ.,வில், செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கியவர். ஊழல் வழக்கில் சிக்கியதால், அவரை, முதல்வர் பதவியிலிருந்து விலகும்படி, பா.ஜ., மேலிடம் வலியுறுத்தியது. அதிருப்தி அடைந்த அவர், பா.ஜ.,விலிருந்து வெளியேறி, கர்நாடகா ஜனதா பக் ஷா என்ற கட்சியைத் துவக்கினார். இந்நிலையில், ...

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்., - எம்.பி.,க்களின் நோட்டீஸ்; மேலிடம் கலக்கம்

Posted:

புதுடில்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் முடிவை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக, ஆந்திராவை சேர்ந்த, காங்., - எம்.பி.,க்கள் ஆறு பேர், லோக்சபாவில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, சபாநாயகரிடம், நேற்று, 'நோட்டீஸ்' கொடுத்துள்ளனர். இதனால், காங்., மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.ஆந்திராவில், தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா என, கலாசார ரீதியாக வேறுபட்ட, மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றில், கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகள், ஒருங்கிணைந்து, சீமாந்தரா என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கானா பகுதியில் வசிக்கும் மக்களின், நீண்டகால கோரிக்கையின்படி, ...

ஆர்.பி.உதயகுமாருக்கு மீண்டும் அமைச்சர் பதவி : திருச்சியால் பறிபோனது ஏற்காட்டால் கிடைத்தது

Posted:

விருதுநகர்: சாத்தூர் எம்.எல்.ஏ., உதயகுமாருக்கு, திருச்சி இடைத்தேர்தலைத் தொடர்ந்து பறிபோன அமைச்சர் பதவி, ஏற்காடு இடைத்தேர்தலுக்குப் பின் மீண்டும் கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, பொந்தம்புளியை சொந்த ஊராக கொண்டவர், ஆர்.பி.உதயகுமார். மதுரையில் குடும்பத்துடன் தங்கி, அரசியலில் ஈடுபட்டார். அ.தி.மு.க.,வின் மாநில மாணவரணி செயலர் பதவி வகித்த இவர், மதுரையில், மு.க.அழகிரியை எதிர்த்து, அரசியல் நடத்தினார். இவரின் தீவிரமான கட்சிப் பணியை பார்த்து, 2011ல், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட, முதல்வர் வாய்ப்பு ...

தமிழகத்தில் அமைச்சரவை மாற்ற படலம் தொடர்கிறது : மணலில் சிக்கிய ஈரோடு ராமலிங்கம் பதவி இழந்தார்

Posted:

தமிழகத்தில், அமைச்சர்களை மாற்றும் படலம் தொடர்கிறது. மணலில் சிக்கிய ஈரோடு ராமலிங்கம், எதிர்பார்த்தபடியே, அமைச்சரவையில் இருந்து, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரிடம் மிச்சமிருந்த விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியும் நேற்று பறிக்கப்பட்டு, "முன்னாள் அமைச்சர்' வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, "முன்னாள் அமைச்சர்' ஆர்.பி.உதயகுமார், மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான அவருக்கு, விளையாட்டுத் துறையை, முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.மேலும், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ரமணா, தோப்பு வெங்கடாசலம் ஆகியோரது ...

சபரிமலை பக்தர்களுக்கான விபத்து காப்பீடு அதிகரிப்பு

Posted:

சபரிமலை: ""சபரிமலை பக்தர்களுக்கான, காப்பீடு (இன்சூரன்ஸ்) தொகை, ஒரு லட்சத்திலிருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது,'' என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையர், வேணுகோபால் கூறினார்.அவர் கூறியதாவது: சபரிமலையில், நடப்பு மண்டல காலத்தில், தொடக்கம் முதலே, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அப்பம் இருப்பு குறைந்து விட்டது. தற்போது, 25 ஆயிரம், "பாக்கெட்' அப்பம் மட்டுமே உள்ளது. அதனால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்தருக்கு, அதிக பட்சமாக, 30 பாக்கெட் அப்பம் மட்டுமே வழங்கப்படும். அப்பம் உற்பத்தியை அதிகரிக்க, கூடுதல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™