Tamil News | Online Tamil News |
- காங்கிரசுக்கு பின்னடைவு: கருணாநிதி கருத்து
- லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கான அற்புதமான துவக்கம்: நரேந்திர மோடி பெருமிதம்
- தேர்தல் முடிவு: ஜெயலலிதா தயக்கம்
- டில்லியில் தேவையில்லாமல் தலையை கொடுத்து விஜயகாந்த் வாங்கிய 'செம அடி'
- ஏற்காட்டில் 'நோட்டா'வுக்கு வரவேற்பு: அரசியல் கட்சியினர் 'பீதி'
- காங்கிரசின் 15 ஆண்டு ஆட்சிக்கு கெஜ்ரிவால் முற்றுப்புள்ளி
- ம.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி: மூன்றாவது முறையாக முதல்வராகிறார் சவுகான்
- 40 எம்.பி., பெறும் அ.தி.மு.க.,வின் கனவு சந்தேகம் : ஏற்காட்டில் தி.மு.க.,வுக்கு கிடைத்தது 'டிபாசிட்'
- செமி பைனல்' போட்டியில் காங்கிரசுக்கு 'அடி': மோடி பிரசாரத்திற்கு கிடைத்தது வெற்றி
- அரசு அமைக்க உரிமை கோர மாட்டேன் : பா.ஜ., முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு
| காங்கிரசுக்கு பின்னடைவு: கருணாநிதி கருத்து Posted: சென்னை : "நான்கு மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள், காங்கிரசுக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது,'' என, தி.மு.க.,தலைவர் கருணாநிதி, கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பேட்டி:நான்கு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, என் வாழ்த்துக்கள். தேர்தல் முடிவுகள் குறித்தான யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. லோக்சபா தேர்தல் பற்றி இப்போது கருத்து கூற முடியாது, காங்கிரசை பொறுத்தவரையில், இது ஒரு பின்னடைவு தான்.ஏற்காடு தேர்தல் முறைகேடு தொடர்பாக, தேர்தல் ஆணையம், முதல்வரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல், கண்டனம் தெரிவித்திருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையையும் ... |
| லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கான அற்புதமான துவக்கம்: நரேந்திர மோடி பெருமிதம் Posted: புதுடில்லி : நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., பெரு வெற்றி பெற்றுள்ளது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறுவதற்கான, அற்புதமான துவக்கம்,'' என, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதளத்தில், அவர் தெரிவித்துள்ளதாவது: நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், மொத்தமுள்ள, 589 தொகுதிகளில், பா.ஜ., கட்சி, 409 தொகுதிகளில், அதாவது, 70 சதவீத இடங்களில், வெற்றி பெற்றுள்ளது. இது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலில், 272க்கும் மேற்பட்ட இடங்களில், பா.ஜ., வெற்றி பெறுவதற்கான, அற்புதமான ... |
| தேர்தல் முடிவு: ஜெயலலிதா தயக்கம் Posted: சென்னை:''அ.தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்த, ஏற்காடு வாக்காளர்களுக்கு நன்றி; நான்கு மாநில தேர்தல் முடிவுகள், முழுமையாக வெளியான பின் கருத்து சொல்கிறேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றது குறித்து, சென்னை, போயஸ் தோட்டத்தில், நிருபர்களிடம், ஜெயலலிதாகூறியதாவது:அ.தி.மு.க.,வை ஆதரித்த, ஏற்காடு வாக்காளர்களுக்கு நன்றி. அ.தி.மு.க.,வின்,இரண்டரை ஆண்டு கால ஆட்சி யில், பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்; இவை, மக்களை சென்றடைந்து உள்ளன.அதை, அங்கீகரித்து, வரவேற்கும் வகையில், ஏற்காடு மக்கள் தங்கள் ஆதரவை, ... |
| டில்லியில் தேவையில்லாமல் தலையை கொடுத்து விஜயகாந்த் வாங்கிய 'செம அடி' Posted: டில்லி சட்டசபை தேர்தலில், சில நூறு ஓட்டுகள் மட்டுமே கிடைத்த தால், தன் தேசிய அரசியல் கனவு தேய்ந்து போய் விட்டதே என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நொந்து போயுள்ளார்.தமிழர்கள் வாழும் தொகுதி:இது தொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள, தே.மு.தி.க., ஏற்காடு சட்டசபை தொகுதி, இடைத்தேர்தலை புறக்கணித்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், டில்லி சட்டசபை தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும், 11 தொகுதிகளில் போட்டியிட்டது.மைத்துனர் சுதீசை, டில்லி அரசியலில் களம் இறக்க, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இந்த ... |
| ஏற்காட்டில் 'நோட்டா'வுக்கு வரவேற்பு: அரசியல் கட்சியினர் 'பீதி' Posted: ஏற்காடு இடைத்தேர்தலில், யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்ற, 'நோட்டா'வுக்கு, மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. மலைவாழ் மக்கள் தொகுதியில், ஒவ்வொரு சுற்றிலும், சராசரியாக, 200 ஓட்டுக்கள் வீதம், 'நோட்டா'வுக்கு கிடைத்துள்ளதால், அரசியல் கட்சியினர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தல்களிலும், நோட்டாவின் தாக்கம் அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.11 பேர் போட்டி:ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், 4ம் தேதி நடந்தது. அ.தி.மு.க., -- தி.மு.க., மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என, 11 பேர் களத்தில் நின்றனர். இதற்கு முன் நடந்த சட்டசபை, லோக்சபா ... |
| காங்கிரசின் 15 ஆண்டு ஆட்சிக்கு கெஜ்ரிவால் முற்றுப்புள்ளி Posted: புதுடில்லி : டில்லி மாநிலத்தில், 15 ஆண்டுகளாக, ஆட்சி கட்டிலில் கோலோச்சி வந்த காங்., கட்சியினர், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஏழை மக்கள் கட்சியின் அதிரடியான எழுச்சியால், படுதோல்வியை சந்தித்து உள்ளனர். டில்லியில், 15 ஆண்டுகளாக, காங்., ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டில்லி மக்களால், பெரிதும் விரும்பப்பட்டவருமான, ஷீலா தீட்ஷித்தே, 15 ஆண்டுகளாக, முதல்வராக நீடித்தார்.சட்டம் - ஒழுங்கு பிரச்னை:இந்நிலையில், டில்லியில் சமீப காலமாக நடந்து வரும், பெண்களுக்கு எதிரான, பாலியல் கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, காமன்வெல்த் ... |
| ம.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி: மூன்றாவது முறையாக முதல்வராகிறார் சவுகான் Posted: போபால் : மத்திய பிரதேசத்தில், தொடர்ந்து, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசுவதாக கூறி, வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த, காங்., கட்சியினர், படுதோல்வி, பரிசாக கிடைத்து உள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எளிமையானவர்:மத்திய பிரதேத்தில், 2004லிருந்து, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. எளிமைக்கும், பணிவுக்கும், பெயர் பெற்ற சிவ்ராஜ் சிங் சவுகான், 2005லிருந்து, அம்மாநில முதல்வராக பதவி வகிக்கிறார். சிறப்பான நிர்வாக திறன், வேகமான செயல்பாடுகள் மூலம், ம.பி., மாநில ... |
| 40 எம்.பி., பெறும் அ.தி.மு.க.,வின் கனவு சந்தேகம் : ஏற்காட்டில் தி.மு.க.,வுக்கு கிடைத்தது 'டிபாசிட்' Posted: ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜா, 78,116 ஓட்டுகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெற்றார். ஆனாலும், தி.மு.க., டிபாசிட்டை தக்க வைத்தது. இதனால், வரும், லோக்சபா தேர்தலில், '40க்கு 40 தொகுதிகளை பிடித்து விடலாம்' என்ற, அ.தி.மு.க.,வின் கனவு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அதே நேரத்தில், மூன்றாமிடத்தை, யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்ற, 'நோட்டா' தட்டிச் சென்றது.சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதி, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., பெருமாள் மறைவை அடுத்து, அங்கு, 4ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில், பெருமாளின் மனைவி, சரோஜா போட்டியிட்டார். ... |
| செமி பைனல்' போட்டியில் காங்கிரசுக்கு 'அடி': மோடி பிரசாரத்திற்கு கிடைத்தது வெற்றி Posted: புதுடில்லி : அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படும், நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், காங்கிரசுக்கு, பலத்த அடி கிடைத்துள்ளது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் சூறாவளி பிரசாரத்துக்கு, அமோக வெற்றி கிடைத்துள்ளது. ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. டில்லியில், 15 ஆண்டாக முதல்வராக இருந்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ஷீலா தீட்ஷித்தை, புதிதாக கட்சி துவக்கிய, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'துடைப்பம்' சின்னம் தூக்கி எறிந்துள்ளது.அடுத்தாண்டு, மே மாதம், ... |
| அரசு அமைக்க உரிமை கோர மாட்டேன் : பா.ஜ., முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு Posted: புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மை பெறவில்லை. அதனால், ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டேன்,'' என, அம்மாநில பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, ஹர்ஷ் வர்த்தன் கூறியுள்ளார். டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களைப் பிடித்திருந்தாலும், பெரும்பான்மை பெறவில்லை. மொத்தமுள்ள, 70 இடங்களில், 31 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. இந்நிலையில், டில்லியில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, ஹர்ஷ் வர்த்தன் கூறியதாவது: டில்லி தேர்தலில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு, பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், ஆட்சி அமைக்க ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 09,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |