Tamil News | Online Tamil News |
- தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் தந்திரம்: எதிரிகளை வீழ்த்தி எம்.பி.,க்கள் பலத்தை பெருக்க திட்டம்
- ராஜ்யசபா எம்.பி.,க்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்: 17 சதவீதம் பேர் குற்ற பின்னணி உடையவர்கள்
- 'அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தால் நாற்பதும் நமக்கே!': தமிழக பா.ஜ., வலியுறுத்தல் ?
- ஏற்காடு இடை தேர்தல், இன்று ஓட்டு எண்ணிக்கை: அ.தி.மு.க., உற்சாகம்; தி.மு.க., பீதி
- வாக்காளர்களுக்கு முழுமையாக சென்றடையாத அன்பளிப்புகள்
- ரூ.100க்கு மேல் பொங்கல் பணம் வழங்க வாய்ப்பு? தமிழக அரசு திட்டம்
- பரோல் கேட்டு சிறை கைதி சஞ்சய் தத் கூறிய பொய் அம்பலம்
- அட்டப்பாடியில் இருந்து அபயக்குரல் : தமிழர்களுக்கு ஆதரவு தருமா தமிழக அரசு?
- 5 மாநில ரிசல்ட் இன்று வருவதால் காங்கிரஸ் முகாமில் திக்... திக்... : லோக்சபா தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை
- தெலுங்கானா மசோதாவை தோற்கடிப்போம்: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி சவால்
| தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் தந்திரம்: எதிரிகளை வீழ்த்தி எம்.பி.,க்கள் பலத்தை பெருக்க திட்டம் Posted: ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் முடிவை எடுத்துள்ள தன் மூலம், தன் அரசியல் எதிரி களை ஒழித்துக் கட்டி, ஒரே கல்லில், இரண்டு மாங்காய் அடிக்கும் தந்திரத்தை, காங்கிரஸ் கையாண்டுள்ளது.ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, காங்கிரஸ் தலைமையிலான, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்யவும், மத்திய அமைச்சரவை, ஒப்புதல் அளித்து உள்ளது. காங்கிரசின் இந்த முடிவை, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான, சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி ... |
| ராஜ்யசபா எம்.பி.,க்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்: 17 சதவீதம் பேர் குற்ற பின்னணி உடையவர்கள் Posted: புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,க்களில், 67 சதவீதம் பேர், கோடீஸ்வரர்கள் என்றும், 17 சதவீதம் பேர், குற்றப் பின்னணி உடையவர்கள் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.245 உறுப்பினர்கள்: 'ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம்' என்ற, தன்னார்வ அமைப்பு, ராஜ்யசபா எம்.பி.,க் களை பற்றிய, தகவல்களை சேகரித்து, அதன் விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: ராஜ்யசபாவில், 245 உறுப்பினர்கள் உள்ளனர்; இவர்களில், 12 பேர், நியமன உறுப்பினர்கள். ராஜ்யசபா உறுப்பினர்கள், தேர்தலின்போது, தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள, சொத்து மற்றும் அவர்களின் ... |
| 'அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தால் நாற்பதும் நமக்கே!': தமிழக பா.ஜ., வலியுறுத்தல் ? Posted: 'தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தால், நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறலாம்' என, கட்சி தலைமையிடம், தமிழக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 'தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க, தமிழகத்தை பொறுத்தவரையில், எந்த பிரச்னையும் இல்லை' எனவும், பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.ஆலோசனை கூட்டம்: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி உத்திகள் குறித்து, விவாதிப்பதற்காக, டில்லியில், பா.ஜ., தரப்பில், மாநில வாரியாக, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தமிழக பா.ஜ., சார்பில், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை அழைத்து, அகில இந்திய தலைவர் ராஜ்நாத் ... |
| ஏற்காடு இடை தேர்தல், இன்று ஓட்டு எண்ணிக்கை: அ.தி.மு.க., உற்சாகம்; தி.மு.க., பீதி Posted: ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களில், யார் முன்னிலை வகிக்கின்றனர் என்பது, காலை, 11:00 மணிக்குள் தெரிந்து விடும். ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் ஏஜன்டுகள், மொபைல், உணவுப் பொருட்கள், தண்ணீர் கொண்டு வரக்கூடாது என, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல், கடந்த, 4ம் தேதி நடந்தது. ஓட்டுப்பதிவு, எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் நடந்தது. ஓட்டுப் பதிவுக்கு பின், அனைத்து மின்னணு ஓட்டு இயந்திரமும் "சீல்' வைக்கப்பட்டு, சேலம் அஸ்தம்பட்டியில் ... |
| வாக்காளர்களுக்கு முழுமையாக சென்றடையாத அன்பளிப்புகள் Posted: ஏற்காடு தேர்தலில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வழங்கப்பட்ட பணத்தை, முழுமையாக வாக்காளர்களுக்கு வழங்காமல், நிர்வாகிகள் சுருட்டியது குறித்து, உளவுத்துறை மற்றும் ஆளும் கட்சியால் பணப் பட்டுவாடா செய்ய நியமிக்கப்பட்ட ஏஜென்சிகள், அறிக்கை தாக்கல் செய்துள்ளன.இதனால், அதிர்ச்சி அடைந்த மேலிடம், தேர்தல் முடிவுக்கு பின், சேலம், அ.தி.மு.க.,வில் களை எடுப்பு நடத்த முடிவு செய்து இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளதால், நிர்வாகிகள் மத்தியில், பீதி ஏற்பட்டிருக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வை மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும் என்பதில், முதல்வர் ஜெயலலிதா ... |
| ரூ.100க்கு மேல் பொங்கல் பணம் வழங்க வாய்ப்பு? தமிழக அரசு திட்டம் Posted: தமிழகத்தில் சென்ற முறை வழங்கப்பட்ட பொங்கல் பணம், 100 ரூபாய், வரும் பொங்கலுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், விரைவில் லோக்சபா தேர்தல் வருவதால், தேர்தலை குறிவைத்து பொங்கல் பணத்தை கூடுதலாக வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த, தி.மு.க., ஆட்சியில், ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு, பொங்கல் பரிசுப்பை வழங்கப்பட்டது. அதில், "அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், 100 கிராம் பாசிப் பருப்பு முந்திரி, ஏலக்காய், திராட்சை தலா, 5 கிராம்' என, பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள் இருந்தன; ரேஷன் கடைகள் ... |
| பரோல் கேட்டு சிறை கைதி சஞ்சய் தத் கூறிய பொய் அம்பலம் Posted: புதுடில்லி: 'மனைவிக்கு உடல் நிலை சரியில்லை' என, காரணம் கூறி, 'பரோல்'க்கு விண்ணப்பித்த, நடிகர், சஞ்சய் தத்துக்கு எதிராக, போராட்டம் வலுத்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன், அவர் மனைவி, மான்யதா, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, வீடியோக்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.சிறைத்தண்டனை: பிரபல பாலிவுட் நடிகர், சஞ்சய் தத், 53. மும்பையில், 1993ல், நடந்த, தொடர் குண்டு வெடிப்பின்போது, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில், சமீபத்தில் இவருக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே சிறையில் இருந்த ... |
| அட்டப்பாடியில் இருந்து அபயக்குரல் : தமிழர்களுக்கு ஆதரவு தருமா தமிழக அரசு? Posted: மேட்டுப்பாளையம்:தமிழக-கேரள எல்லையில், அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்களின் விவசாய நிலங்களை பறிக்கும் நடவடிக்கையை துவங்கியிருக்கும் கேரள அரசு, இதைஎதிர்த்து, வருவாய்த்துறையினரிடம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் மறுத்துவிட்டது. இதனால், வரும் 18ம் தேதி அட்டப்பாடி தமிழர்கள் கண்டன பேரணி நடத்துகின்றனர்.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு தாலுகாவில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அட்டப்பாடி உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள அகளி, புதூர் மற்றும் சோலையூர் ஊராட்சிகளில், 150 கிராமங்கள் உள்ளன. ஆதிவாசிகள் அதிகம் வசிக்கும் ... |
| Posted: புதுடில்லி:ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்த, கருத்து கணிப்புகளில், பா.ஜ.,வுக்கு சாதகமான முடிவுகள் வெளியாகியுள்ளதால், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், இன்று வெளியாக இருக்கும் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை எதிர்பார்த்து, "திக்... திக்...' மனநிலையுடன், காத்திருக்கின்றனர்.ஆனாலும், தங்கள் ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், "சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும், அடுத்து நடக்கவுள்ள லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெறுவோம்' என, காங்., கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில், சமீபத்தில் சட்டசபை ... |
| தெலுங்கானா மசோதாவை தோற்கடிப்போம்: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி சவால் Posted: ஐதராபாத்: ""தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோ தாவை, ஆந்திர சட்டப்பேரவையில் உறுதியாக தோற்கடிப்போம்,'' என்று, மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அறிவித்துள்ளார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, அக்கட்சியின் சார்பில் மாநிலத்தில் முதல்வராக பதவி வகிப்பவரே பேசியுள்ளது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, பத்து மாவட்டங்களை கொண்ட தெலுங்கானா மாநிலம் அமைப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் பொது தலைநகராக இருக்கும் என்றும், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 08,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |