Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் மழையால் தோல்வியில் இருந்து தப்பியது வெஸ்ட் இண்டீஸ் அணி

Posted: 07 Dec 2013 10:31 AM PST

டுனெடின்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாலோ–ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி மழையால் தோல்வியில் இருந்து தப்பியது.

முதலாவது டெஸ்ட்

நியூசிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நடந்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 609 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 213 ரன்னில் ஆல்–அவுட் ஆகி 'பாலோ–ஆன்' ஆனது. தொடர்ந்து 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4–வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்து இருந்தது. டேரன் பிராவோ 210 ரன்னுடனும், டேரன் சேமி 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழையால் ஆட்டம் டிரா

நேற்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய டேரன் பிராவோ 218 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷில்லிங்போர்டு 15 ரன்னிலும், டினோ பெஸ்ட் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடித்து ஆடிய கேப்டன் டேரன் சேமி 145 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது இன்னிங்சில் 162.1 ஓவர்களில் 507 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. கேப்ரியல் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.பாலோ–ஆன் ஆன ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2011–ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக 463 ரன் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்சமாகும்.

பின்னர் 65 ஓவர்களில் 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை கொட்டியதால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. வருணபகவான் கருணையால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியில் இருந்து தப்பியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷில்லிங்போர்டு 4 விக்கெட்டுகளையும் சாய்த்தார். நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் (நாட்–அவுட் 217) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2–வது டெஸ்ட்

நியூசிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் வருகிற 11–ந் தேதி தொடங்குகிறது.

--–

மழையால் வந்த சாதனை

கிரிக்கெட்டில் சாதனைக்கு எல்லை இல்லை எனலாம். இந்த டெஸ்ட் போட்டியில் மழையால் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வித்தியாசமான சாதனைக்கு சொந்தமாகி இருக்கின்றன. நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 600 ரன்னுக்கு மேல் குவிப்பது இந்த டெஸ்டுடன் 4–வது முறையாகும். அந்த 4 முறையும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது கிடையாது. பாலோ–ஆன் ஆன அணியின் வீரர் ஒருவர் இரட்டை சதம் அடித்து அந்த அணி டெஸ்டில் தோற்றதாக சரித்திரம் கிடையாது. அந்த வகையில் பாலோ–ஆன் ஆன அணியின் (வெஸ்ட் இண்டீஸ்) வீரர் டேரன் பிராவோ இரட்டை சதம் அடித்து அந்த அணி தோல்வியில் இருந்து தப்பிப்பது இது சர்வதேச டெஸ்ட் போட்டி வரலாற்றில் 7–வது முறையாகும்.

category:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி எழுச்சி பெறுமா? 2–வது ஆட்டம் இன்று நடக்கிறது

Posted: 07 Dec 2013 10:30 AM PST

டர்பன்

இந்தியா–தென்ஆப்பிரிக்கா மோதும் 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று நடக்கிறது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்தியா எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

2–வது ஆட்டம்

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நம்மூரில் வெற்றிகளை குவித்ததுடன், ரன்மழை பொழிந்து பிரமிக்க வைத்த இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்தது போலவே வெளிநாட்டு தொடரில் தடுமாறத் ஆரம்பித்து விட்டனர். முதல் ஆட்டத்திலேயே அவர்களின் சாயம் வெளுத்து போய் விட்டது.

இந்த நிலையில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே இந்திய அணி வாழ்வா–சாவா? கட்டத்தில் களம் இறங்குகிறது.

மாற்றம் இருக்கும்

முதலாவது ஆட்டம் நடந்த ஜோகனஸ்பர்க் ஆடுகளம், பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த போதிலும் இந்திய பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி அகமது தவிர மற்ற அனைவரும் சொதப்பி விட்டனர். இதனால் தான் தென்ஆப்பிரிக்கா 358 ரன்கள் குவித்ததுடன், இந்தியாவையும் எளிதில் சாய்த்தது. இதில் 10 ஓவர்களில் 82 ரன்களை வாரி வழங்கிய மொகித் ஷர்மாவுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா அல்லது உமேஷ்யாதவ் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம்.

பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் அன்னிய மண்ணிலும் தங்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதே போல் அவுட் ஆப் பார்மில் உள்ள சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோரின் இடம் கேள்விக்குறியாகி வருகிறது. இவர்களில் யாராவது ஒருவர் மாற்றப்பட்டு ரஹானே அல்லது அம்பத்தி ராயுடு சேர்க்கப்படலாம். என்றாலும் இந்திய அணியில் கேப்டன் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யமாட்டார் என்று கூறப்படுகிறது.

டிவில்லியர்ஸ் சவால்

ஜோகனஸ்பர்க்கை விட டர்பன், இந்தியர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கக்கூடியது. இதை தங்களது சொந்த ஊர் மைதானம் போன்று இந்தியர்கள் நினைப்பார்கள் என்று தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியிருப்பதன் மூலம், இங்கு நமது வீரர்கள் எழுச்சி பெற வாய்ப்பிருக்கிறது.

அதே சமயம் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், எந்த வகையிலும் உலக சாம்பியனான இந்திய அணியை தலைதூக்க விடமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் தென்ஆப்பிரிக்கா பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் பொதுவாக எழும்பி வரும் பந்துகளை (பவுன்ஸ்) எதிர்கொள்வதில் திணறக்கூடியவர்கள். இதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட தென்ஆப்பிரிக்கா, 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கி, பவுன்ஸ் தாக்குதல்களை தொடுத்து இந்திய பேட்ஸ்மேன்களை முடக்கினர். இதே யுக்தியைத் தான் இன்றைய ஆட்டத்திலும் கடைபிடிக்க தென்ஆப்பிரிக்கா திட்டமிட்டுள்ளது. ஏனெனில் இந்த ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது தான். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் எதிரணியின் பந்துவீச்சை அதிக ஜாக்கிரதையுடன் எதிர்கொள்வது அவசியம். குறிப்பாக துல்லியமாகவும், ஸ்விங் செய்வதிலும் கெட்டிக்காரரான உலகின் அபாயகரமான பவுலர் ஸ்டெயினை சமாளிப்பதை பொறுத்தே இந்தியாவின் ஸ்கோர் அமையும். இன்னும் ஆக்ரோஷமான பந்து வீச்சு தாக்குதலை எங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று ஸ்டெயின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மண்டேலாவுக்கு அர்ப்பணம்

தென்ஆப்பி£க்க முன்னணி வீரர் அம்லா புதிய சாதனை நோக்கி பயணிக்கிறார். அவர் மேற்கொண்டு 59 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்துவார்.

முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவினால் தென்ஆப்பிரிக்காவில் துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது தென்ஆப்பிரிக்க வீரர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனாலும் கவனத்தை சிதற விடாமல் போட்டியில் மட்டும் முழு கவனத்தை செலுத்தும்படி தென்ஆப்பிரிக்க வீரர்களை அணி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த தொடரை மண்டேலாவுக்கு சமர்ப்பிப்பதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

டர்பனில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய சிறிய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடக்கம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, யுவராஜ்சிங் அல்லது அம்பத்தி ராயுடு அல்லது ரஹானே, டோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி அகமது, புவனேஷ்வர்குமார், மொகித் ஷர்மா அல்லது இஷாந்த் ஷர்மா அல்லது உமேஷ் யாதவ்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, டிவில்லியர்ஸ் (கேப்டன்), காலிஸ், டுமினி, டேவிட் மில்லர், ரையான் மெக்லரன், ஸ்டெயின், மோர்னே மோர்கல், சோட்சோப், வெய்ன் பார்னல் அல்லது பிலாண்டர்.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்ஷன் மற்றும் டென் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மைதான கண்ணோட்டம்

டர்பனில் இதுவரை 38 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 30–ல் பங்கேற்றுள்ள தென்ஆப்பிரிக்கா அதில் 15–ல் வெற்றியும், 10–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 ஆட்டத்தில் முடிவில்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.

இந்திய அணி இங்கு 8 ஒரு நாள் போட்டியில் விளையாடியிருக்கிறது. இதில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதிய 6 ஆட்டத்திலும் (5 தோல்வி, ஒரு முடிவில்லை) ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதே சமயம் இங்கிலாந்து, கென்ய அணிகளை (2003–ம் ஆண்டு உலக கோப்பையின் போது) மட்டும் இங்கு தோற்கடித்து இருக்கிறது.

2006–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 91 ரன்களில் சுருண்டது இந்த மைதானத்தின் மோசமான ஸ்கோராகும். 2007–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த 4 விக்கெட்டுக்கு 351 ரன்கள் ஓர் அணியின் அதிகபட்சமாகும்.

'இந்தியாவை எளிதாக நினைக்க முடியாது'

''ஒரு ஆட்டத்தில் தோற்றதற்காக இந்திய அணியின் கதை முடிந்து விட்டதாக எழுதுவது முட்டாள்தனமானது. உலக தரவரிசையில் இந்தியா 'நம்பர் ஒன்' அரியணையில் உள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடும் போது தான் 'நம்பர் ஒன்' இடத்தை அடைய முடியும். அதை அவர்கள் செய்து காட்டியுள்ளனர். எனவே நாளைய(இன்று) ஆட்டத்தில் நிச்சயம் அவர்கள் சரிவில் இருந்து மீண்டு வரப் போகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இன்னொரு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றுவதை உறுதி செய்தாக வேண்டும்''

category:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து 172 ரன்னில் சுருண்டு ‘பாலோ–ஆன்’ ஆனது 7 விக்கெட்டுகளை சாய்த்தார், ஜான்சன்

Posted: 07 Dec 2013 10:27 AM PST

அடிலெய்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2–வது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜான்சனின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், இங்கிலாந்து அணி 172 ரன்களில் சுருண்டு 'பாலோ–ஆன்' ஆனது.

ஆஷஸ் டெஸ்ட்

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 570 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2–வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஜோ ரூட் (15 ரன்), கெவின் பீட்டர்சனின் (4 ரன்) விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்த போதிலும் மைக்கேல் கார்பெர்ரியும், இயான் பெல்லும் ஜோடி சேர்ந்து கொஞ்சம் தாக்குப்பிடித்தனர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்களுடன் ஓரளவு மீண்டு வருவது போல் தெரிந்தது. 'பாலோ–ஆன்' தவிர்ப்பு ஸ்கோரான 371 ரன்களையும் எட்டுவதற்கான வாய்ப்புகள் தென்பட்டன. ஆனால் கார்பெர்ரி 60 ரன்களில், வாட்சனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்ததும் நிலைமை தலைகீழானது.

மிரட்டிய ஜான்சன்

உணவு இடைவேளைக்கு பிறகு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனின் கோரப்பிடியில் சிக்கி இங்கிலாந்து உருக்குலைந்து போனது. ஒரே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் (1 ரன்), மேத் பிரையர் (0), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகியோரை வரிசையாக வெளியேற்றினார். அவரது ஆக்ரோஷமான புயல்வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி இந்த அளவுக்கு சரணாகதியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் அவரே காலி செய்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 68.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு அடங்கி 'பாலோ–ஆன்' ஆனது. கடைசி வரை போராடிப்பர்த்த இயான் பெல் மட்டும் 72 ரன்களுடன் (106 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஜான்சன் 17.2 ஓவர்களில் 8 மெய்டன்களுடன் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். இங்கிலாந்துக்கு எதிராக அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

ஆஸ்திரேலியா 530 ரன் முன்னிலை

இதையடுத்து 398 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு 'பாலோ–ஆன்' வாய்ப்பு வழங்காமல் தொடர்ந்து தனது 2–வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 83 ரன்களுடனும், ஸ்டீவன் சுமித் 23 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்கள். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கேப்டன் மைக்கேல் கிளார்க் 22 ரன்களில், மான்டி பனேசரின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.

ஆஸ்திரேலிய அணி இதுவரை 530 ரன்கள் முன்னிலை கண்டு வலுவான நிலையில் இருக்கிறது. இன்னும் 2 நாட்கள் எஞ்சி இருப்பதால் இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியின் பிடியில் இருந்து தப்புவது கடினம் தான். 4–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

category:

ஆன்மீக சிந்தனை (08-12-2013)

Posted: 07 Dec 2013 10:26 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Anmikasinthanai: 

ஆண்டியார் (08-12-2013)

Posted: 07 Dec 2013 10:25 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Andiyar: 

சாணக்கியன் சொல் (08-12-2013)

Posted: 07 Dec 2013 10:23 AM PST

Daily Thanthi Image Special chanakkiyan: 

கன்னித்தீவு (08-12-2013)

Posted: 07 Dec 2013 10:23 AM PST

Daily Thanthi Image Special: 

Daily Thanthi Special Term:

இன்று நாள் எப்படி...? (08-12-2013)

Posted: 07 Dec 2013 10:01 AM PST

Endru Image: 

நடப்பு 2013–ஆம் ஆண்டில் இதுவரை அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு ரூ.1 லட்சம் கோடி

Posted: 07 Dec 2013 09:51 AM PST

மும்பை

நடப்பு 2013–ஆம் ஆண்டில் இதுவரை பங்குகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று மட்டும் இந்த நிறுவனங்கள் ரூ.1,151 கோடிக்கு பங்குகளை வாங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ்

வியாழனன்று 'சென்செக்ஸ்' 249 புள்ளிகள் அதிகரித்தது. பங்கு வியாபாரம் தொடர்ந்து இரண்டாவது தினமாக வெள்ளிக்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. அன்றைய தினம் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 39 புள்ளிகள் அதிகரித்தது.

சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று வாக்கு கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக பாரதீய ஜனதா செயல்படும் என பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர். இது பங்குச் சந்தைகளில் சாதகமான அலைகளை பரவச் செய்துள்ளது.

தேர்தல் முடிவுகள்

இதனால் குறிப்பாக அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. வாக்கு கணிப்புகள் மெய்யாகும் பட்சத்தில் பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம் காணப்படும் என பங்குச் சந்தை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

வெள்ளிக்கிழமையன்று சென்செக்ஸ்' 38.72 புள்ளிகள் அதிகரித்து 20,996.53 புள்ளிகளில் நிலை கொண்டது. நவம்பர் 1–ந் தேதிக்குப் பிறகு சென்செக்ஸ் அதிகபட்ச உயர்வை இப்போதுதான் எட்டியுள்ளது. விரைவில் சென்செக்ஸ் 21,321 புள்ளிகளை தாண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அன்றைய தினம் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 18.80 புள்ளிகள் உயர்ந்து 6,259.90 புள்ளிகளில் நிலைபெற்றது. 2010 ஜனவரி 8–ந் தேதியன்று இது 6,357.10 புள்ளிகளை தொட்டது. இதே அளவை நிப்டி நெருங்கும் நாள் தூரத்தில் இல்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

சர்க்கரை ஆலைகள்

மூலச்சர்க்கரை உற்பத்திக்கு ஆதரவு, சர்க்கரை ஆலைகளுக்கு சலுகைகள் அறிவிப்பு போன்றவற்றால் பஜாஜ் ஹிந்துஸ்தான், ஸ்ரீரேணுகா சுகர்ஸ், பல்ராம்பூர் சினி மில்ஸ் உள்ளிட்ட பல சர்க்கரை நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக ஏற்றுமதி துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலையும் உயர்ந்து வருகிறது. எனினும் ரூபாய் மதிப்பு சரிவு என்பது பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஓர் எதிர்மறையான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி அங்கு பணப்பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் மாதந்தோறும் பல ஆயிரம் கோடி டாலருக்கு கடன்பத்திரங்களை வாங்கி வருகிறது. இந்த தாராள பண அளிப்பு நடவடிக்கை நீடிக்குமா என்பது குறித்து பலத்த ஐயப்பாடுகள் இருந்ததால் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதுமாக பங்குச் சந்தைகளில் மந்தநிலை காணப்படுகிறது. எனினும் இந்தியாவைப் பொறுத்தவரை பொதுத் தேர்தல் நடந்து முடியும் வரை அமெரிக்க நிலவரங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

வேலையின்மை நிலவரம்

அதே சமயம் அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் குறித்த புள்ளிவிவரங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள்தான் கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தன என்று சிலர் கூறுகின்றனர். நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் 1.80 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அங்கு வேலையின்மை விகிதம் 7.2 சதவீதம் என்ற அளவில் நிலையாக இருக்கும் என்றும் ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டிருந்தன.

சாதகமான விளைவுகள்

இந்த நிலையில் அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக 7 சதவீதமாக குறைந்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது உலக பங்குச் சந்தைகளில் நாளை சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™