Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்தார்

Posted:

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காக போராடி, 27 ஆண்டுகள், சிறை வாசம் அனுபவித்த, அந்நாட்டின், முதல் கருப்பின அதிபர், நெல்சன் மண்டேலா, 95, நேற்று, காலமானார்.தென் ஆப்ரிக்க விடுதலைக்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வெற்றி கண்டவர் நெல்சன் மண்டேலா. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததற்காக, 27 ஆண்டுகள், சிறை தண்டனை அனுபவித்தார். அதன் பின், 90ல் விடுதலையாகி, 94ல், அதிபரானார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், முதுமையின் காரணமாக, அரசியலில் இருந்து விலகினார். நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த சில மாதங்களாக அவர், சிகிச்சை பெற்றார். அவர் கோமா நிலைக்கு சென்று ...

வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா: பிரதமர் விளக்கம்

Posted:

புதுடில்லி: ''வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா, ஓட்டுகளுக்காக செய்யப்படும் தந்திரமல்ல,'' என பிரதமர், மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.'வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா, பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கு, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 'ஓட்டு வங்கி அரசியலை மையப்படுத்தியே, இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது' என, சாடியிருந்தார்.இந்நிலையில், நேற்று டில்லியில், கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற, பிரதமர், ...

தெலுங்கானா: அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற 11 காங்., எம்.பி.,க்கள் திட்டம்

Posted:

புதுடில்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து, காங்.,சைச் சேர்ந்த, 11 எம்.பி.,க்கள், ஜனாதிபதியை சந்தித்து, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். சொந்த கட்சி எம்.பி.,க்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவால், காங்., வட்டாரத்தில், பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டு உள்ளது.வரைவு மசோதா: ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் வரைவு மசோதாவுக்கு, நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'சீமாந்தரா' என, அழைக்கப்படும், ...

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு: அரசுக்கு கருணாநிதி அறிவுரை

Posted:

சென்னை: 'சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு முனைப்புடன் வாதாட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்னை நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு, கடைசியாக, தி.மு.க., ஆட்சியி"ல் தான், கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட, சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட, 34 பேரை, காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களின் கோரிக்கையும், "தமிழக அரசு, சிறப்பு ...

தைரியம் இருந்தால் ராஜினாமா செய்யட்டும்: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீது விஜயகாந்த் பாய்ச்சல்

Posted:

கும்மிடிப்பூண்டி: "தே.மு.தி.க.,வில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களாக இருப்பவர்களுக்கு, தைரியம் இருந்தால், அவர்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து பார்க்கட்டும்' என, விஜயகாந்த் ஆவேசமாக தெரிவித்தார்.திருவள்ளூர், கிழக்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள திருமண மண்டபத்தில், கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில், 14 ஏழை ஜோடிகளுக்கு, சீர்வரிசையுடன் இலவச திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த விஜயகாந்த், திருமண விழா முடிந்ததும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விஜயகாந்த் பதில் அளித்தார்.கேள்வி: கட்சியின் அதிருப்தி, ...

சேலத்தில் குடிமகன்களை குறிவைத்து நடத்தப்படும் புதுவித சீட்டு

Posted:

சேலம்: சேலத்தில், "டாஸ்மாக்' பார்களுக்கு வரும், குடிமகன்களை கவரும் வகையில், மாதாந்திர மற்றும் வாராந்திர சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. போதை மயக்கத்தில், இந்த சீட்டுக்களில் சேரும் பலர், தொடர்ச்சியாக பணம் கட்டாததால், கட்டிய பணம் தந்திரமாக பறிக்கப்படும், புதுவித மோசடி அரங்கேறி வருகிறது.சேலம் மாநகரில், 264 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இங்குள்ள பார்களுக்கு வரும் குடிமகன்களிடம், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை பெயரில், மாதம் மற்றும் வார கணக்கில், பணம் செலுத்தும் சீட்டு பற்றி பிரசாரம் செய்யப்படுகிறது; துண்டு பிரசுரங்களும் ...

ஜெ., விளக்கத்தை தள்ளுபடி செய்து தேர்தல் கமிஷன் அறிவுரை

Posted:

சென்னை: ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பான நோட்டீசுக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த விளக்கத்தை நிராகரித்த தேர்தல் கமிஷன், "எதிர்காலத்தில் இது போல் நடக்காமல், கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்' என, அறிவுரை வழங்கியுள்ளது.ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல், இம்மாதம், 4ம் தேதி, நடந்தது. முன்னதாக, தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏற்காடு தொகுதி அடங்கிய, சேலம் மாவட்டம் முழுவதும், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. முதல்வர் ஜெயலலிதா, ஏற்காடு வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, நவ., 28ம் தேதி, பிரசாரத்தில் ஈடுபடும் போது, பல புதிய மக்கள் நலத் திட்டங்களை ...

தலைமை தேர்தல் ஆணையர்களில் 'பாரின் டூர்' அதிகம் போனவர் குரேஷி

Posted:

புதுடில்லி: தலைமை தேர்தல் ஆணையர்கள், அதிகாரிகள், வெளிநாடு பயணத்திற்கான செலவு, இரண்டாண்டில், 900 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, 23 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.'தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும், தலைமை தேர்தல் ஆணையர்கள், அதிகாரிகள், மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்கு, எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டது' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஆர்வலர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார்.இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் அளித்த தகவலில் கூறியதாவது: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், எஸ்.ஒய்.குரேஷி, 2008 - 12 வரை பதவியில் இருந்த ...

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய மந்திரி ராமலிங்கம்...: கட்சி பதவியையும் பறித்தார் முதல்வர் ஜெயலலிதா

Posted:

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய, அமைச்சர், கே.வி.ராமலிங்கம், "டம்மி' ஆக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த, ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் பதவியையும், முதல்வர் ஜெயலலிதா பறித்துள்ளார். "அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு முன், கட்சியிலும், அமைச்சரவையிலும் அதிரடி மாற்றங்கள் நடைபெறக்கூடும்' என, ஆளும் கட்சி வட்டாரத்தில் ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்காடு இடைத்தேர்தல் முடிவு, நாளை வெளியாகிறது. அதற்கு பிறகு, இந்த மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்பட்டது; ஆனால், நேற்றே அதிரடி துவங்கி விட்டது. அடுத்தடுத்து புகாருக்கு ஆளான, அமைச்சர் ராமலிங்கம் உட்பட, நான்கு ...

இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி: உலக வர்த்தக மாநாட்டில் ஆனந்த் சர்மா தகவல்

Posted:

பாலி: ""உலக வர்த்தக மாநாட்டில், உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை; இது பெரிய வெற்றி,'' என, மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.உலக வர்த்தக அமைப்பு மாநாடு, இந்தோனேசியாவின், பாலித்தீவில் உள்ள சுரபயா நகரில், நான்கு நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில், 159 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், விவசாயத் துறைக்கு அளிக்கப்படும் மானியங்கள் தொடர்பான முக்கிய விஷயங்கள், விவாதிக்கப்பட்டன. இந்தியாவி"ன் சார்பில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர், ஆனந்த் சர்மா தலைமையிலான, 30 பேர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™