Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கட்சியினரின் மனுக்களை பரிசீலிக்க 4 பேர் குழு: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 06 Dec 2013 01:27 PM PST

அதிமுகவினர் அளிக்கும் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து அதன் விவரங்களை கட்சித் தலைமைக்குத் தெரிவிக்க மனுக்கள் பரிசீலனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மதசார்பின்மைக்கு ஆபத்து: மணிசங்கர் அய்யர்

Posted: 06 Dec 2013 01:26 PM PST

நாட்டின் அடையாளத்துக்கும், மதசார்பின்மைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறினார்.

புதுவையில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் விடுவிப்பு

Posted: 06 Dec 2013 01:25 PM PST

புதுவையில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவர், வெள்ளிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டு, வீடு வந்து சேர்ந்தார். கடத்திய கும்பலே மாணவரை கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

பாம்பன் பகுதியில் சூறாவளிக் காற்று

Posted: 06 Dec 2013 01:24 PM PST

பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கடல் அலைகள் வேகமாக மோதுவதால், கரையோரப் பகுதிகளில் உள்ள மீன் நிறுவனங்கள் சேதமடைந்தன. இதனால் மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இந்தியப் பகுதியில் மீன்பிடித்த 15 இலங்கை மீனவர்கள் கைது

Posted: 06 Dec 2013 01:22 PM PST

இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றங்களில் பாலியல் துன்புறுத்தல்கள்: விசாரணைக் குழு அமைக்கக் கோரி மனு தாக்கல்

Posted: 06 Dec 2013 01:21 PM PST

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பாலியல் துன்புறுத்தல்களை விசாரணை செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை மேலாண்மைத் திட்ட கருத்து கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரிக்கை

Posted: 06 Dec 2013 01:19 PM PST

தூத்துக்குடியில் டிச. 10-ஆம் தேதி நடைபெற உள்ள கடற்கரை மேலாண்மைத் திட்டம் குறித்த கருத்து கேட்புக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவர்கள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் அம்மா திட்ட முகாம், டூவிபுரம் 7-ஆவது தெருவில் உள்ள மக்கள் நல மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

Posted: 06 Dec 2013 01:19 PM PST

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் அம்மா திட்ட முகாம், டூவிபுரம் 7-ஆவது தெருவில் உள்ள மக்கள் நல மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

டிச. 16 சுந்தரனார் பல்கலை. தொலைநெறி கல்வித் தேர்வு தொடக்கம்

Posted: 06 Dec 2013 01:19 PM PST

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறிக் கல்விக்கான தேர்வு டிச. 16-இல் தொடங்குகிறது என கோவில்பட்டி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில்

இந்தியாவுக்குப் பணிந்தது உலக வர்த்தக அமைப்பு

Posted: 06 Dec 2013 01:19 PM PST

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை ஏற்று, உறுப்பு நாடுகள் வழங்கும் விவசாய மானியங்களின் மீது கட்டுப்பாடு விதிக்கும் முயற்சியை உலக வர்த்தக அமைப்பு கைவிட்டது.

கோவில்பட்டியில் அம்பேத்கர் நினைவு தினம்

Posted: 06 Dec 2013 01:18 PM PST

கோவில்பட்டியில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து டிச. 11-இல் திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 06 Dec 2013 01:18 PM PST

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, டிச. 11-ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 06 Dec 2013 01:18 PM PST

கோவில்பட்டி நகராட்சி, திருநெல்வேலி வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், நகர்நல மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சர்தார் வல்லபபாய் படேல் சிலை அமைப்பதில் அரசியல் பின்னணி இல்லை

Posted: 06 Dec 2013 01:18 PM PST

சர்தார் வல்லபபாய் படேல் சிலை அமைப்பதில் அரசியல் பின்னணி எதுவும் கிடையாது என்று குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ரஜனிபாய் படேல் கூறினார்.

செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

Posted: 06 Dec 2013 01:18 PM PST

கோவில்பட்டி நகர விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், செண்பகவல்லி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கோவில் முன்பு

ஆறுமுகனேரியில் பஸ்-வேன்-பைக் மோதல்: பக்தர்கள், மாணவர்கள் தப்பினர்

Posted: 06 Dec 2013 01:17 PM PST

ஆறுமுகனேரியில் வெள்ளிக்கிழமை மாலை தனியார் கல்லூரி பேருந்து,  வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவர்களும், பக்தர்களும் தப்பினர்.

டிச. 31-க்குள் வரியினங்களை செலுத்த வேண்டும்: நகராட்சி ஆணையர்

Posted: 06 Dec 2013 01:17 PM PST

கோவில்பட்டி நகராட்சிக்கு இம்மாதம் இறுதிக்குள் வரியினங்கள் அனைத்தையும் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் சுல்தானா தெரிவித்துள்ளார்.

முள் போட்டு அடைக்கப்பட்ட பொதுப்பாதை வட்டாட்சியர் முன்னிலையில் அகற்றம்

Posted: 06 Dec 2013 01:17 PM PST

சாத்தான்குளம் அருகே ஊராட்சிக்குச் சொந்தமான பொதுப்பாதையில்   முள்ளை போட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இது சாத்தான்குளம் வட்டாட்சியர் பொ. மிகாவேல் ஞானதீபம் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.

போலி நகை வைத்து ரூ.3லட்சம் மோசடி:நிறுவன மேலாளர் மீது வழக்கு

Posted: 06 Dec 2013 01:17 PM PST

:கோவில்பட்டியில் போலி நகை வைத்து ரூ. 3 லட்சம் மோசடி செய்த நிறுவன மேலாளர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகை பாதுகாப்பு: சிறப்புக் குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 06 Dec 2013 01:16 PM PST

வைகை ஆறு மாசுபடும் பிரச்னையில் ஆலோசனை வழங்க சிறப்பு நிபுணர் குழுவை அமைக்குமாறு, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சஞ்சய் தத்துக்கு ஒரு மாத பரோல்

Posted: 06 Dec 2013 01:16 PM PST

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு மாத கால பரோல் வழங்கப்பட்டிருப்பதாக புணே மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை கடற் படைக்கு இந்தியா போர்ப் பயிற்சி அளிக்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 06 Dec 2013 01:16 PM PST

இலங்கை கடற் படைக்கு இந்திய அரசு போர்ப் பயிற்சி அளிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோயில் சுவற்றில் பைக் மோதியதில் இளைஞர் சாவு

Posted: 06 Dec 2013 01:15 PM PST

மேலூர்-திருப்பத்தூர் சாலையில் உள்ள கோயில் சுவற்றில் இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மேலூர் சொக்கம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் ராம்குமார்

குழந்தைத் தொழிலாளர்கள் இருவர் மீட்பு

Posted: 06 Dec 2013 01:15 PM PST

மதுரையில் வாகன பணிமனையில் வேலை செய்த 2 குழந்தைத் தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.

அனுமதியின்றி எண்ணெய் பாக்கெட் தயாரித்த ஆலையில் அதிகாரிகள் சோதனை

Posted: 06 Dec 2013 01:15 PM PST

மதுரை மாவட்டம், வெள்ளலூர் அருகே தனியாமங்கலம் பெருமாள்பட்டியில் உள்ள ஒரு தனியார் எண்ணெய் ஆலையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனர்

டாக்டர் கொலை: 4 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted: 06 Dec 2013 01:15 PM PST

  திண்டுக்கல் டாக்டர் கொலை வழக்கில் கைதான 4 பேரின் ஜாமீன் மனுக்களை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணச் செலவு 900% உயர்வு

Posted: 06 Dec 2013 01:15 PM PST

இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணச் செலவு கடந்த 6 ஆண்டுகளில் 900 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிசம்பர் 7 மின் தடை

Posted: 06 Dec 2013 01:14 PM PST

வலையங்குளம் துணை மின்நிலையத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

பெண் அதிகாரிக்கு தொலைபேசி மிரட்டல்: பிகார் அமைச்சர் மீது வழக்கு

Posted: 06 Dec 2013 01:14 PM PST

பிகாரில் தூர்தர்ஷன் துணை இயக்குநரை மிரட்டிய, அமைச்சர் ஷியாம் ரஜக்குக்கு எதிராக காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரையூர் தாலுகாவில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 06 Dec 2013 01:14 PM PST

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சிலைமலைபட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

Posted: 06 Dec 2013 01:14 PM PST

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, தல்லாகுளம் பகுதியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

குப்பைக் கிடங்கில் வெடி விபத்து: 3 பேர் சாவு

Posted: 06 Dec 2013 01:13 PM PST

மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் குப்பைக் கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ரூ.5 லட்சம் நிவாரண நிதி: ஆர்.டி.ஓ. வழங்கினார்

Posted: 06 Dec 2013 01:13 PM PST

  மதுரை அனுப்பானடி பகுதியில் வியாழக்கிழமை பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கும் முதல்வரின் நிவாரண நிதி உதவியை ஆர்.டி.ஓ. வழங்கினார்.

ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன? சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் நடவடிக்கை

Posted: 06 Dec 2013 01:13 PM PST

மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு முன்விரோதமே காரணம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்,

மோடி பிரதமராக பாபர் மசூதி வழக்கு மனுதாரர் ஆதரவு

Posted: 06 Dec 2013 01:13 PM PST

நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க பாபர் மசூதி வழக்கைத் தொடர்ந்த பழைய மனுதாரர் முகமது ஹசீம் அன்சாரி ஆதரவு தெரிவித்தார்.

பெட்ரோல் குண்டுவீச்சில் காயமடைந்தவர்களுக்கு  வைகோ ஆறுதல்

Posted: 06 Dec 2013 01:13 PM PST

மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்தவர்களை, வைகோ நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.   மதுரை அனுப்பானடி பகுதியில் வியாழக்கிழமை நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில், மேல

வைகை அணையில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

Posted: 06 Dec 2013 01:12 PM PST

வைகை அணையில் இருந்து திண்டுக்கல் ,மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மதக் கலவர மசோதாவை எதிர்க்க முதல்வர்களுக்கு கோரிக்கை

Posted: 06 Dec 2013 01:12 PM PST

மதக் கலவரத் தடுப்பு மசோதாவை எதிர்க்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரையில் நிலஅபகரிப்பு, மகளிர் நீதிமன்றங்கள் திறப்பு

Posted: 06 Dec 2013 01:12 PM PST

  மதுரையில் புதிதாக நிலஅபகரிப்பு புகார்களை விசாரிக்கவும், மகளிர் தொடர்பான வழக்குகளை விசாரிக்கவும், 2 தனி நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துக்கு ரூ.1,667 கோடி ஒதுக்கீடு

Posted: 06 Dec 2013 01:12 PM PST

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துக்கு ரூ. 1,667 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, திட்டக் கூடுதல் இயக்குநர் மனோகர்சிங் தெரிவித்துள்ளார்.

செந்தமிழ்க் கல்லூரியில் புதிய வகுப்பறைகள்:மு.க.அழகிரி திறப்பு

Posted: 06 Dec 2013 01:12 PM PST

மதுரை செந்தமிழ்க் கல்லூயில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகளில் பாலங்களை கட்டக் கோரி வழக்கு

Posted: 06 Dec 2013 01:11 PM PST

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முக்கிய சந்திப்புகளில் பாலம் அமைக்கக் கோரும் மனுவுக்கு பதிலளிக்க மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தண்டவாளம், பாலங்கள் பராமரிப்பு: 17 பயணிகள் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து

Posted: 06 Dec 2013 01:11 PM PST

தண்டவாளம் மற்றும் பாலங்கள் பராமரிப்பு காரணமாக 17 பயணிகள் ரயில்களை ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊடுருவலை முறியடிக்க தயார் நிலையில் ராணுவம்

Posted: 06 Dec 2013 01:11 PM PST

காஷ்மீரில் எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவும் முயற்சிகள் நீடிப்பதாகக் கூறியுள்ள ராணுவம், இதனை முறியடிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

Posted: 06 Dec 2013 01:11 PM PST

"சி.பி.ஐ. சட்டப்பூர்வ காவல் அமைப்பே அல்ல' என்ற குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

துவாக்குடி அருகேகார் மோதி முதியவர் சாவு

Posted: 06 Dec 2013 01:10 PM PST

திருச்சி துவாக்குடி அருகே கார் மோதியதில் முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

திருச்சியில் தமுமுக ஆர்ப்பாட்டம்

Posted: 06 Dec 2013 01:10 PM PST

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திருச்சி புத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மினி லாரி மோதி பெண் சாவு

Posted: 06 Dec 2013 01:09 PM PST

திருச்சி துவாக்குடி அருகே மினி லாரி மோதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் அம்பேத்கர் நினைவு தினம்

Posted: 06 Dec 2013 01:09 PM PST

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வட்ட பகுதிகளில் அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சியினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை

பள்ளி சுகாதார மன்ற விழா

Posted: 06 Dec 2013 01:08 PM PST

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார மன்ற விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

ஜயங்கொண்டத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்

Posted: 06 Dec 2013 01:08 PM PST

அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் காந்தி பூங்கா முன்பு  வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

டிச. 10-ல் சிறுபான்மையினர் ஆணையக் குழு அரியலூர் வருகை

Posted: 06 Dec 2013 01:08 PM PST

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழு அரியலூர் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 10) வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெளிநாட்டு வேலை:லட்சக்கணக்கில் பண மோசடி

Posted: 06 Dec 2013 01:07 PM PST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்தவரிடம் ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

Posted: 06 Dec 2013 01:07 PM PST

பெரம்பலூரில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

பெரம்பலூர் சிறுவர் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 06 Dec 2013 01:06 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்துள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமத்துவபுர விளையாட்டுதிடல் சுற்றுச்சுவர் இடிந்தது

Posted: 06 Dec 2013 01:06 PM PST

கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, குடந்தை அருகேயுள்ள முழையூர் சமத்துவபுரத்தில் உள்ள விளையாட்டுத் திடல் சுற்றுச்சுவர் சுமார் 50 அடி நீளத்திற்கு இடிந்து நெற்பயிர் நடவு

காலகம் அரசுப் பள்ளியில் ஆய்வு

Posted: 06 Dec 2013 01:06 PM PST

பேராவூரணியை அடுத்த காலகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலர் சி. நரேந்திரன் அண்மையில் ஆண்டாய்வு செய்தார்.

குடந்தையில் வேதபாடசாலை புதிய கட்டடம் திறப்பு

Posted: 06 Dec 2013 01:06 PM PST

கும்பகோணத்தில் கோவிந்தக்குடி அப்பாகுட்டி அய்யர் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள வேத பாடசாலை புதிய கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

அம்பேத்கர் நினைவு தினம்: கட்சிகள், அமைப்புகள் அஞ்சலி

Posted: 06 Dec 2013 01:05 PM PST

தஞ்சாவூரில் அம்பேத்கரின் நினைவுத் தினம் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஆசிரியர் வெட்டிக் கொலை

Posted: 06 Dec 2013 01:05 PM PST

செங்கோட்டை அருகே தெற்குமேட்டில் குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

Posted: 06 Dec 2013 01:05 PM PST

மன்னார்குடி குறுக்கு பத்மசாலவத் தெருவைச் சேர்ந்த சுப்பையன் மனைவி காந்திமதி (75). இவர் வியாழக்கிழமை மாலை வீட்டில் தனியே இருந்த போது. அங்கு வந்த ஒருவர், தான் வருவாய்த் துறை

காரைக்காலில் தமுமுக ஆர்ப்பாட்டம்

Posted: 06 Dec 2013 01:04 PM PST

பாபர் மசூதி யாருக்கு சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமுமுக சார்பில் காரைக்காலில்  வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சிறைகளில் இயற்கைக்கு மாறாக கைதிகள் இறப்பு: பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ்

Posted: 06 Dec 2013 01:04 PM PST

தமிழக சிறைகளில் இயற்கைக்கு மாறாக கடந்த ஆண்டு இறந்த கைதிகள் குறித்து உரிய விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 06 Dec 2013 01:04 PM PST

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டுமென வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர்  நினைவு நாள்

Posted: 06 Dec 2013 01:04 PM PST

திருவாரூர் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை சாலையில் உளள அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாவட்ட துணைச் செயலர் முல்லை வளவன், மாவட்ட செயதி தொடர்பாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் மாலை

இலங்கை படைக்கு இந்தியா போர்ப் பயிற்சி அளிக்க தடை கோரி மனு

Posted: 06 Dec 2013 01:04 PM PST

இலங்கை கப்பல் படைக்கு இந்திய அரசு போர்ப் பயிற்சி அளிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலில் போலீஸார் தீவிர வாகனச் சோதனை

Posted: 06 Dec 2013 01:04 PM PST

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் போலீஸார் தீவிர வாகனச் சோதனைப் பணியை தொடங்கியுள்ளனர்.

நாகையில் டிச. 18-ல்சமையல் எரிவாயுநுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 06 Dec 2013 01:03 PM PST

நாகை மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

கொலை வழக்கில் வழக்குரைஞர் தம்பதி சிறையில் அடைப்பு

Posted: 06 Dec 2013 01:03 PM PST

பெண் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ராஜவேல், அவரது மனைவி ஆகியோர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை, வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு நாள்

Posted: 06 Dec 2013 01:03 PM PST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

கரூர் அருகே நோய் தாக்கி 2 மாடுகள் சாவு

Posted: 06 Dec 2013 01:02 PM PST

கரூர் அருகே மர்ம நோய் தாக்கி 2 மாடுகள் வெள்ளிக்கிழமை இறந்தன. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

டிச. 15-ல் ஒற்றுமை ஓட்டப் போட்டி

Posted: 06 Dec 2013 01:02 PM PST

சர்தார் வல்லபபாய் படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய அறக்கட்டளை சார்பில், கரூரில் வரும் 15-ம் தேதி ஒற்றுமை ஓட்டப் பந்தயம் நடைபெற உள்ளது.

கூட்டுறவு சங்கத்தில் கட்டுநர் பணி: பதிவு மூப்பை சரிபார்க்க அழைப்பு

Posted: 06 Dec 2013 01:02 PM PST

கூட்டுறவு சங்கத்தில் கட்டுநர் பணியிடத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமான பதிவு மூப்பு பரிந்துரையை சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரூரில் மின்தடை நேரத்தில் மாற்றம்

Posted: 06 Dec 2013 01:02 PM PST

கரூர் மாவட்டத்தில் நகர்ப் பகுதிகளில் மின் விநியோகத்தில் மின்தடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கரூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ப. சிவசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 06 Dec 2013 01:01 PM PST

குளித்தலையில் அரசுப் பெண்கள் பள்ளியில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் அதிமுக அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சிகள்!

Posted: 06 Dec 2013 01:01 PM PST

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, கரூர் தாந்தோணிமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தல்

Posted: 06 Dec 2013 01:01 PM PST

கரூரில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம்

Posted: 06 Dec 2013 01:00 PM PST

கரூர் மாவட்டம், இ.சுக்காம்பட்டி கிராமத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர்வது குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூரில்இந்து முன்னணியினர்ஆர்ப்பாட்டம்: 108 பேர் கைது

Posted: 06 Dec 2013 01:00 PM PST

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 12 பெண்கள் உள்பட 108 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பேரூராட்சி தேமுதிக கவுன்சிலர் பதவி பறிப்பு

Posted: 06 Dec 2013 01:00 PM PST

தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்யாததால் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தேமுதிக கவுன்சிலரை மாநிலத் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது.

ரயில் மோதி பெண் சாவு

Posted: 06 Dec 2013 01:00 PM PST

கரூரில் ரயில் மோதி பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

பாபர் மசூதி இடிப்பு தினம்:கரூரில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Dec 2013 01:00 PM PST

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக தொண்டரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Posted: 06 Dec 2013 12:59 PM PST

சேலம் மாவட்டம், கருமந்துறையில் கடந்த 2-ஆம் தேதி உயிரிழந்த திமுக தொண்டரின் சடலம், அவரது குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

அரியலூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 06 Dec 2013 12:59 PM PST

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு,  அரியலூரில் அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குடும்ப அட்டைகளை இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம்

Posted: 06 Dec 2013 12:59 PM PST

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை மேலும் ஓராண்டுக்கு இணையதளம் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர்  எ.

ஏற்காடு: நாளை வாக்கு எண்ணிக்கை

Posted: 06 Dec 2013 12:59 PM PST

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) எண்ணப்படுகின்றன.

மாட்டு வண்டியிலிருந்து தவறி விழுந்தவர் சாவு

Posted: 06 Dec 2013 12:59 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது, அதிலிருந்து தவறி கீழே விழுந்தவர் மீது சக்கரம் ஏறியதில் உயிரிழந்தார்.

தமிழக அரசின் சாதனை விளக்க துண்டறிக்கை விநியோகம்

Posted: 06 Dec 2013 12:58 PM PST

அரியலூரில் தமிழக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கத் துண்டறிக்கை  பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

பவழ மாலைகள் விவகாரம்: சிதம்பரம் கோயில் தீட்சிதர் கமிட்டிக்கு நோட்டீஸ்

Posted: 06 Dec 2013 12:58 PM PST

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு காணிக்கையாக சென்னை பக்தர் வழங்கிய மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பவழ மாலைகள் தொடர்பாக விவரம் கேட்டு, பொது தீட்சிதர்கள் கமிட்டியின் செயலாளருக்கு, இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 21.6 லட்சம் வங்கிக் கடன் வழங்கல்

Posted: 06 Dec 2013 12:58 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூர் கனரா வங்கியில் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டத்தில் பெண் சிசு சடலம் மீட்பு

Posted: 06 Dec 2013 12:58 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தின் பின்புறம் அழுகிய நிலையில், பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

எய்ட்ஸ், டெங்கு, மனிதநேய விழிப்புணர்வு பேரணி

Posted: 06 Dec 2013 12:57 PM PST

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப் பள்ளியில், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் எய்ட்ஸ், டெங்கு மற்றும் மனித நேய விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அங்கக வேளாண்மை இலவச பயிற்சி பெறலாம்

Posted: 06 Dec 2013 12:57 PM PST

அங்கக வேளாண்மை குறித்த இலவச பயிற்சி பெறலாம் என்று ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. வெங்கடேசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை  மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தார்.

Posted: 06 Dec 2013 12:57 PM PST

பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை  மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தார்.

ஆந்திரத்தில் பந்த்: தமிழக பஸ்கள் நிறுத்தம்

Posted: 06 Dec 2013 12:57 PM PST

தெலங்கானா தனி மாநிலம் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரத்தில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களும் வெள்ளிக்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிப்பு

Posted: 06 Dec 2013 12:56 PM PST

பெரம்பலூரில், அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி பல்வேறு அரசியல்  கட்சியினர் அவரது சிலைக்கு மாலை  அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

Posted: 06 Dec 2013 12:56 PM PST

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரத்தின் 12-வது நினைவு நாளையொட்டி, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் அவரது பெயரிலுள்ள அறப்பணி அறக்கட்டளை சார்பில், 2 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

விஷம் குடித்தஅறநிலையத் துறை ஊழியர் சாவு

Posted: 06 Dec 2013 12:56 PM PST

பாபநாசம் அருகே விஷம் குடித்த இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

ரெப்கோ வங்கியில் பெண்களுக்கான சிறப்பு திட்டம் அறிமுகம்

Posted: 06 Dec 2013 12:55 PM PST

ரெப்கோ வங்கியின் தஞ்சாவூர் கிளையில் சிறப்பு டெபாசிட் திட்டமான மகிளா டெபாசிட் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் வாடிக்கையாளரான கோகிலாவுக்கு வங்கியின் உதவி பொது

தஞ்சை ஆட்சியரகத்தில் திரண்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்

Posted: 06 Dec 2013 12:55 PM PST

மணல் அள்ள அரசு நிர்ணயம் செய்த தொகையை மட்டும் வசூலிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™