Tamil News | Online Tamil News |
- பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி துவங்குகிறது: மார்ச் 26 முதல் பத்தாம் வகுப்பு தேர்வு
- நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்
- வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா தேவையில்லை: பிரதமருக்கு மோடி கடிதம்
- இரவு நேர சாயப்பட்டறைகள்: உறக்கத்தில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்
- தே.மு.தி.க.,வில் பண்ருட்டி ராமச்சந்திரன் புயல் ஓயுமா? சமரச முயற்சிக்கு இன்று "கிளைமாக்ஸ்'
- "தேர்தல் அவசரம்' வாகன டீசல் செலவு ரூ.15 லட்சம்? வாடகைக்கு எடுக்கப்பட்ட காரால் எழுந்துள்ள சர்ச்சை
- தேர்தல் புறக்கணிப்பு மிரட்டல் 'புஸ்': அரசியல் கட்சியினர் தெம்பு
- நீடிக்கிறது காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
- கருத்துக்கணிப்பு முடிவால் காங்கிரஸ் பீதி
- வரலாற்றில் முதன் முறையாக : இந்திய கால்பந்துக்கு கவுரவம்
- கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலா மரணம்
| பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி துவங்குகிறது: மார்ச் 26 முதல் பத்தாம் வகுப்பு தேர்வு Posted: சென்னை: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் தேதியை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் இருந்தும், பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. பொதுத்தேர்வை, எத்தனை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர் என்ற விவரம், இன்னும் சேகரிக்காத நிலையில், மிகவும் முன்கூட்டியே, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பொது தேர்வுக்கான அனைத்து பணிகளும், மும்முரமாக நடந்து வருவதால், தேர்வு அறிவிப்பை, மாணவ, மாணவியர், ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, தேர்வு அட்டவணையை, தமிழக அரசு, அதிகாரப்பூர்வமாக ... |
| நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில் Posted: புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்டுள்ள, நம் நாட்டினரின் அனைத்து விவரங்களும், அமெரிக்க உளவு அமைப்புடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள, அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஆதார் அடையாள அட்டை திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ வலியுறுத்தி உள்ளது.தனி ஆணையம்: நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், தனி அடையாள எண்ணுடன், அட்டை வழங்கும் திட்டத்தை, 'ஆதார்' என்ற பெயரில், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, தனி ஆணையம் உருவாக்கப்பட்டு, 'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ... |
| வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா தேவையில்லை: பிரதமருக்கு மோடி கடிதம் Posted: ஆமதாபாத்: 'அழிவை நோக்கிச் செல்லும், மோசமாக தயாரிப்பு' என, வகுப்புவாத வன்முறை மசோதாவை விமர்சித்துள்ள, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, 'அந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும்' என, கடிதம் எழுதியுள்ளார்.ஓட்டு வங்கி அரசியல்: பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஓட்டு வங்கி அரசியலை மையப்படுத்தியே, இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது; மதவாரி, மொழிவாரியாக மக்களை பிரிக்கும் நோக்கில், இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ... |
| இரவு நேர சாயப்பட்டறைகள்: உறக்கத்தில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் Posted: பள்ளிபாளையம் பகுதியில், விதிகளை மீறி செயல்படும் சாயப்பட்டறைகளை, 'சீல்' வைப்பதில், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதால், இரவு நேரங்களில், நடமாடும் சாயப்பட்டறைகள் இயக்கப்பட்டு, சாயக் கழிவுகள், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகின்றன.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், விதிகளை மீறி இயக்கப்பட்ட, 122 சாயப்பட்டறைகளுக்கு, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், சமீபத்தில், சீல் வைத்தனர். இதையடுத்து, பள்ளிபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், விதிகளை மீறி இயக்கப்படும் சாயப்பட்டறைகளை, சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.சீல் ... |
| தே.மு.தி.க.,வில் பண்ருட்டி ராமச்சந்திரன் புயல் ஓயுமா? சமரச முயற்சிக்கு இன்று "கிளைமாக்ஸ்' Posted: தே.மு.தி.க.,வில், கடும் அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் அவைத் தலைவர், பண்ருட்டி ராமச்சந்திரனை சமரசம் செய்யும் முயற்சிக்கான, கடைசிக்கட்ட காட்சிகள் இன்று அரங்கேற உள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது.முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலகத்தில் சந்தித்த பின், ஏழு, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., ஆதரவாளர்களாக வலம் வருகின்றனர். தே.மு.தி.க., தலைமை அவர்களை, "சஸ்பெண்ட்' செய்துள்ளதால், கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பது இல்லை. அதேநேரம், கட்சி தலைமைக்கு எதிராக அவர்கள் பேசி வருகின்றனர். இத்துடன், கட்சி அவைத் தலைவர், பண்ருட்டி ராமச்சந்திரனின் சில நடவடிக்கைகள், கட்சி ... |
| "தேர்தல் அவசரம்' வாகன டீசல் செலவு ரூ.15 லட்சம்? வாடகைக்கு எடுக்கப்பட்ட காரால் எழுந்துள்ள சர்ச்சை Posted: ஏற்காடு இடைத்தேர்தல் பணிக்காக, நூற்றுக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. "தேர்தல் அவசரம்' என்ற பெயரில் தொகுதிக்குள் சுழன்று வந்த வாகனங்களுக்கு, டீசல் செலவு மட்டும், 15 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. தேர்தல் பார்வையாளர்களுக்கு, "வாடகை கார்' என்ற பெயரில், சொந்த காரை பயன்பாட்டுக்கு கொடுத்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஏற்காடு, அ.தி.மு.க.,-- எம்.எல்.ஏ., பெருமாள் மறைவையடுத்து, டிச.,4ம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான, அக்., 4ம் தேதி முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அனைத்து ... |
| தேர்தல் புறக்கணிப்பு மிரட்டல் 'புஸ்': அரசியல் கட்சியினர் தெம்பு Posted: ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட சில கிராமத்தினர், அடிப்படை வசதி செய்து கொடுக்காததால், இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறிவந்தனர். ஆனால், தேர்தலில் ஓட்டுப்போட்டு, தங்களுடைய ஜனநாயக கடமையை, மக்கள் நிறைவேற்றி விட்டனர். புறக்கணிப்பு மிரட்டல், புஸ்வாணமாகிப் போனதால், அ.தி.மு.க., தி.மு.க.,வினர் தெம்பாக உள்ளனர்.ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல், டிச., 4ம் தேதி நடந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில், 89.24 சதவீதம் ஓட்டு பதிவானதும், அசம்பாவிதம் ஏதுமின்றி, அமைதியான முறையில் தேர்தல் முடிந்ததும், அதிகாரிகளுக்கு நிம்மதியை தந்தது. வரும், 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கையை, எவ்வித ... |
| நீடிக்கிறது காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு Posted: சென்னை: "வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் நீடிப்பதால், கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கன மழையும், பல இடங்களில் மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, சில தினங்களுக்கு முன், வலுப்பெற்று, தென்மேற்கு பகுதியில் நிலைத்துள்ளது. இலங்கைக்கு மேற்கில் இருக்கும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று, அங்கிருந்து நகர்ந்து, இலங்கையை தாண்டினால், தமிழகத்திற்கு தொடர்மழை கிடைத்திருக்கும். ஆனால், அது நகராமல், ஒரே இடத்தில் ... |
| கருத்துக்கணிப்பு முடிவால் காங்கிரஸ் பீதி Posted: 'ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கு மாநிலங்களை கைப்பற்றும்' என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், நேற்று முன்தினம் வெளியாகியுள்ளதால், பீதியடைந்துள்ள மத்திய அரசு, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரின் கூட்ட நாட்களை, அதிகரிக்க விரும்பவில்லை.'ஒன்பது நாட்கள் மட்டுமே நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டுள்ள, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே, 'கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும்' என, அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. 'பரிசீலித்து, தேவைப்பட்டால் கூட்டத்தொடர் நீட்டிப்பது குறித்து ... |
| வரலாற்றில் முதன் முறையாக : இந்திய கால்பந்துக்கு கவுரவம் Posted: புதுடில்லி: இந்திய விளையாட்டுதுறையில் புதிய சாதனையாக 17வயதுக்குட்பட்டோரு்கான உலக கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியை நடத்த இந்தியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சாதனை:இந்திய விளையாட்டு துறையில் பல்வேறு விளையாட்டுகள் பிரபலமாக இருந்த போதிலும் கால்பந்து போட்டியில் மிகவும் பின் தங்கிய நிலையே காணப்பட்டு வருகிறது. மேற்குவங்க மாநிலம் , கேரளா,உட்பட ஒரு சில மாநிலங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அணிகளே இந்திய அளவில் பிரபலமாகஉள்ளது. இந் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மற்ற விளையாட்டுகளுக்கு இணையாக காலபந்து விளையாட்டிலும் ... |
| கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலா மரணம் Posted: ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.பிறப்பும் இளமையும்: தென்னாப்பரிக்காவில் உள்ள குலு கிராமத்தில்1918-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த நெல்சன் மண்டேலா சிறுவயது முதல் குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார். இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. லண்டன் மற்றும் தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம் ஆண்டு சட்ட ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 06,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |