Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தோசை வகைகள் - காரமான பருப்பு தோசை

Posted: 05 Dec 2013 03:18 PM PST

தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம். வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் ...

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

Posted: 05 Dec 2013 03:14 PM PST

திருநெல்வேலி: "ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், 'டாஸ்மாக்' கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது' என, கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில், டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக அரசு, பண்பாட்டை குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. ...

என் காதல் கணவா

Posted: 05 Dec 2013 03:09 PM PST

அத்தை மகனே என் மாமனே என் பிள்ளையின் தகப்பனே நீ வேடிக்கை பார்க்கையில் நான் விதையாக இருந்தேன் நீ விளையாடும் பருவத்திலே நான் வேடிக்கைப் பார்த்தேன் நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே நான் விளையாடித் திரிந்தேன் நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன் நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன் நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன் நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட நான் விதைக்கு பதியமிட்டு ...

சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?

Posted: 05 Dec 2013 02:59 PM PST

  சிலநாட்களுக்கு முன்னால் டென்னிஸ் ஹட்ஸன் எழுதிய 'கடவுளின் உடல்' என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். காஞ்சிபுரத்தில் பரமேச்வர விஷ்ணுக் கிருஹம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள்கோயிலைப் பற்றிய புத்தகம் அது. கோயிலில் இருக்கும் சிற்பங்களில் முக்கியமான ஒன்று நந்திவர்ம பல்லவனின் மேற்பார்வையில் இருவர் (ஒருவர் தலைகீழாகக் கழுவேற்றப்படுகிறார்) கழுவேற்றப்படுவதைக் காட்டுகிறது. கழுவேற்றத்தைப் பற்றிய முதல் தமிழ்ப்படைப்பு இதுவாகத்தான் இருக்கும். இந்தச் சிற்பத்தின் புகைப்படத்தைப் பார்த்ததும் ...

நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்

Posted: 05 Dec 2013 02:59 PM PST

புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்டுள்ள, நம் நாட்டினரின் அனைத்து விவரங்களும், அமெரிக்க உளவு அமைப்புடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள, அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஆதார் அடையாள அட்டை திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ வலியுறுத்தி உள்ளது. தனி ஆணையம்: நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், தனி அடையாள எண்ணுடன், அட்டை வழங்கும் திட்டத்தை, 'ஆதார்' என்ற பெயரில், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, தனி ஆணையம் உருவாக்கப்பட்டு, ...

கடவுளின் உரை..!

Posted: 05 Dec 2013 02:48 PM PST

மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன. ரோஜாக்களின் மணம் கமழும் மெல்லிய குளிர்காற்று இடையிடையே வீசிக் கொண்டிருந்தது. கேள்விகள் ஏதுமற்ற மயக்கம் நிறைந்த பார்வைகள் தெருவெங்கும் நிறைந்திருந்தன. வார்த்தைகளும் வசனங்களும் அங்கு வலிமையற்றுப் போயிருந்தன! பிடுங்கி வீசப்பட்ட பெருமரத்து வேரின் தளைகளைப் போல் புத்துணர்ச்சி அரும்பும் வசீகர முகத்தோடு அவர்கள் நின்றிருந்தார்கள். அடிக்கடி எல்லோர் புருவங்களும் ...

மனைவி!

Posted: 05 Dec 2013 02:14 PM PST

புஷ்பா சொன்னதைக் கேட்டதும், கணவன் தேவராஜுக்கு ஆச்சர்யம். "ஆமாங்க! ஒரு மாதம் ஆல் இண்டியா டூர் போறோம். முன்னமே டூர் ஏஜெண்ட்கிட்டே நம்ம ரெண்டு பேருக்காக பணம் கட்டியிருக்கேன்.' "புஷ்பா! என் தம்பி கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகலை! அதுக்குள் நாம டூர் போறதா?' "அட ஆமாங்க! எல்லாம் எடுத்து வச்சிட்டேன். நாளை மறுநாள் ரெண்டு பேரும் புறப்படறோம். சரியா?' தேவராஜ் ஒன்றும் புரியாமல் மையமாகத் தலையாட்டினான். ரயிலுக்காக தேவராஜும் புஷ்பாவும் காத்திருந்தார்கள். மனதில் இருந்த சந்தேகத்தை தேவராஜ் மனைவியிடம் ...

புல் தின்ற மண் குதிரை!

Posted: 05 Dec 2013 02:02 PM PST

காவல் தெய்வமான அய்யனாரை குலதெய்வமாகவும் இஷ்டதெய்வமாகவும் வழிபடுவோர் தமிழ்நாட்டில் அனேகம். பொதுவாக ஊரை விட்டு தள்ளி வெட்ட வெளியிலோ வயல் வெளியிலோ நீர் நிலைக்கு அருகிலோ அவருக்கு ஆலயம் அமைந்திருக்கும் அப்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூருக்கு அருகில் தென் பொதிகை மலையடிவாரத்தில் ஆற்றோரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்தது தான் பெரியசாமி அய்யனார் ஆலயம். சுமார் 1150 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனால் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அய்யனாரே இங்கு ...

தேவகோட்டை நகராட்சியில் தொடரும் "ஈகோ' முதல்வர் ஜெ., முற்றுப்புள்ளி வைப்பாரா

Posted: 05 Dec 2013 01:55 PM PST

தேவகோட்டை நகராட்சியில், அதிகாரிகள், ஊழியர்கள், தலைவரிடையே ஏற்பட்டுள்ள, "ஈகோ' பிரச்னையால்,மக்கள் பணிகளில்,தொய்வு ஏற்பட்டுள்ளது.தேவகோட்டை நகராட்சி தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சுமித்ரா,துணை தலைவராக சுந்தரலிங்கம் உள்ளனர்.இவர் வசம் உள்ள அ.தி.மு.க., கவுன்சிலர்கள்,தங்கள் வார்டில், எந்த பணியும் நடக்கவில்லை,என தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.ஆனால், கவுன்சிலர்கள், பிரச்னை குறித்து என்னை வந்து சந்திப்பதில்லை. துணைத்தலைவர் மூலமே, கோரிக்கை வருகிறது,என்ற குற்றச்சாட்டை சுமித்ரா முன் வைக்கிறார். சுமித்ராவின் ...

இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார்

Posted: 05 Dec 2013 01:55 PM PST

காங்கிரஸ் கட்சியின் காலைச்சுற்றிய பாம்பாக ஈழத்தமிழர் விவகாரம் மாற ஆரம்பித்துவிட்டது. அதை அந்தக் கட்சியினரும் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளம்தான் சென்னையில் ப.சிதம்பரத்தின் சிறப்புப் பேச்சு! 'இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்' என்ற தலைப்பில் சென்னையில் கடந்த வாரம் ஒரு மணி நேரம் முழங்கினார் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம். சென்னையில் தனியார் ஹோட்டலில் நடந்த இந்த விழாவுக்கு வழக்கம்போல ப.சிதம்பரம் கோஷ்டியைத் தவிர மற்றவர்கள் ஆப்சென்ட். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் ...

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!

Posted: 05 Dec 2013 01:49 PM PST

வலிப்பு நோய்க்கு மாந்திரீகமோ, காத்து கருப்போ காரணம் அல்ல; சர்க்கரை நோய்; ரத்த அழுத்தம் போன்று, அதுவும் ஒரு நோய் தான். வலிப்பு நோய் வந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்பதெல்லாம் முட்டாள்தனம். 1. வலிப்பு நோய் என்றால் என்ன? வலிப்பு நோயை, காக்காய் வலிப்பு என்று, மக்கள் அழைக்கின்றனர். இது, மூளை சம்பந்தப்பட்ட நோய். மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும், மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக, ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால், வலிப்பு வருகிறது. 2. இதற்கான அறிகுறிகள் ...

குழந்தை பேற்றைத் தள்ளிப் போடாதீர்!

Posted: 05 Dec 2013 01:19 PM PST

நவநாகரிக உலகில், பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர்; பொருளாதார ரீதியில், அவர்கள் நல்ல நிலைக்கும் வந்து விடு கின்றனர். ஆனால், பெண்களுக்கே உரித்தான, அரிய பொக் கிஷமாக, போற்றி அனுபவிக்க வேண்டிய, இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர். "பருவத்தே பயிர் செய்' என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் இது பொருந்தும். இளவயது பெண்கள், பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக, தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகின்றனர். அப்படியே, 24 - 26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும், நல்ல நிலைக்கு வந்தபின், ...

காமராஜுடன் ஒருநாள்...

Posted: 05 Dec 2013 01:14 PM PST

  இரண்டு மாதங்களுக்கு முன் காமராஜ் அவர்களைச் சந்திக்க நான் டெல்லிக்குப் போயிருந்தபோது, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். சில தினங்கள் கழித்து மீண்டும் அவரை டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவர் முதலமைச்சராக அங்கு வரவில்லை. பதவியிலிருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராக வந்திருந்தார். அன்று மாலை காமராஜரைக் காண மெட்ராஸ் ஹவுஸுக்கு வந்திருந்தார் லால்பகதூர் சாஸ்திரி. வாசலில் நின்றுகொண்டிருந்த ரிசப்ஷன் ஆபீஸர் தீனதயாளைக் கண்டதும் அவர், ''காமராஜைப் பழையபடியே கவனித்துக்கொள்கிறீர்கள் அல்லவா? ...

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்

Posted: 05 Dec 2013 01:09 PM PST

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு 'ஷாக்' தோல்வி கொடுத்தது, அப்போது தமிழகத்தை இருள் சூழவைத்த தாறுமாறு மின்வெட்டு! 'நான் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன்' என்று அப்போது வாக்குறுதி கொடுத்து, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், இப்போதோ முன்னைக்காட்டிலும் மோசமாக, மழைக்காலத்திலும் ஊழித் தாண்டவமாடுகிறது மின்வெட்டு. இடையில் ஒரு சில மாதங்கள், சற்றே தணிந்ததைப்போல தோற்றம் காட்டிய மின்வெட்டு, இப்போது முழுவேகத்துடன் தன் இருள் கரங்களை தமிழகம் ...

கிச்சா என்றொரு ஹீரோ! - பட்டுக்கோட்டை பிரபாகர்

Posted: 05 Dec 2013 01:07 PM PST

நேற்று இரவு 10.30 மணிக்கு கடலைப் பார்த்தபடி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த கிச்சா என்கிற கிருஷ்ணசாமி, தற்கொலை செய்துகொள்ளலாமா என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை, தூரத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலின் வெளிச்சப் புள்ளிகளின் மேல் நங்கூரமிட்டிருந்தது. கதையின் 14-வது வார்த்தைக்கான காரணம் மூன்று. 1. அவமானம், 2. அவமானம், 3. அவமானம். முதல் அவமானம், ஒரு வாரம் முன்பு நிகழ்ந்தது. கிச்சா, தன் பழைய ஸ்கூட்டரின் அரதப்பழைய டியூபை நடைப்பாதைக் கடையில் பஞ்சர் ஒட்டிக்கொண்டு ...

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!

Posted: 05 Dec 2013 01:01 PM PST

   மதுரை வீதியில் தா.கிருட்டிணன், தன்னைத்தானே வெட்டி, தற்கொலை(!) செய்துகொண்டதைப் போலவே... காஞ்சி கோயிலில் சங்கர்ராமனும் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு சாவைத் தழுவியதாகச் சரித்திரம் எழுதப்பட்டால், வருங்காலம் நம்மைக் காறி உமிழும். இரண்டு வழக்குகளிலுமே உண்மையான குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப் படாதது, கலிகாலக் கொடுமை! ஆச்சாரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அது... சாதாரண காஞ்சிபுரம் அல்ல, நகரேஷ§ காஞ்சி. வைணவர்களுக்குத் தெரியும்... சங்கர்ராமன் கொலை நிகழ்ந்த வரதராஜப் பெருமாள் கோயில், சாமான்ய ...

நடுவே நதி! கவிதை

Posted: 05 Dec 2013 12:53 PM PST

காகிதப் பூவில் வாசனை... காதல் கடிதங்கள்! மழைக்குத்தான் ஒதுங்கினேன்... ஆனாலும் மழையைத் தான் ரசித்தேன்! பூக்கள் சிரிக்கின்றன... மலர்வளையத்திலும்! கூரையில் கரைகிறது காகம்... அடுபபில் உறங்குகிறது பூனை! அக்கரையில் நான் இக்கரையில் நீ நடுவே நதி காதலாய்... கரையில் கால்களை கழுவச் சொன்னது யார்? அலைகளே... நிலாவையே குழந்தைக்கு சோறாய் ஊட்டினாள்.... வாழ்க்கை அமாவாசை? ஒருவேளை சம்மதித்திருப்பாயோ? சொல்லியிருந்தால்... எனக்கு விசிறியதில் உனக்கு வியர்க்கும் அம்மா... - ...

ஒருபக்கக் கதை - தண்ணீர்

Posted: 05 Dec 2013 12:49 PM PST

ரஞ்சித் தனது மனைவியோடு பஸ் நிலையத்தில் நின்றிருந்தான். பக்கத்தில் நின்றிருந்த ஒருவன், அவன் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து, அவன் அருகில் வந்தான். "குடிக்க கொஞ்சம் தண்ணி தர்றீங்களா?' ரஞ்சித் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பாட்டிலை தந்தான். அவன் மிச்சமிருந்த தண்ணீரில் பாதியைக் குடித்துவிட்டு "தேங்ஸ்' சொல்லி திருப்பித் தந்தான். "தண்ணி குடிக்க விருப்பினீங்கன்னா கடையில் தண்ணி பாட்டில் விக்கறாங்க, வாங்கிக் குடியுங்க. இல்லேன்னா வீட்டுலயிருந்து வரும்போது கொண்டு வாங்க. இப்படி மத்தவங்க தேவைக்கு வாங்கி ...

டிசம்பரில் வெளியாகும் 14 படங்கள்!

Posted: 05 Dec 2013 12:47 PM PST

2013ம் ஆண்டில் ரிலீஸுக்குத் தயாராக கிட்டத்தட்ட 40 படங்கள் இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களையும் ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில்லை. ஆனாலும், கடைசி மாதம் என்பதால் பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று தீயாய் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, இந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 14 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. டிசம்பர் 6ல் 'ஈகோ', 'கல்யாண சமையல் சாதம்', 'தகராறு', 'வெள்ளை தேசத்தின் இதயம்' ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன. 'கல்யாண ...

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

Posted: 05 Dec 2013 12:39 PM PST

  ஒரு மலைக் கிராமத்து மக்களின் பாசத்தை சம்பாதித்துவைத்திருக்கும்  அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது 'கொலையாளி' முத்திரை விழுகிறது. 'யார் உண்மையான கொலையாளி?' என்ற பதில் தேடும், 'ஜன்னல் ஓர'ப் பயணம்! பழநி டு பண்ணைக்காடு செல்லும் பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன், நடத்துநர் விமல். ஊரின் மரியாதைக்குரிய பிரமுகர் ராஜேஷின் மகனை, விமல் ஒரு விபத்தில் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறை செல்கிறார். அந்த மர்மத்தின் முடிச்சை ஓட்டுநர்-நடத்துநர் கூட்டணி எப்படி அவிழ்க்கிறது என்பதே மீதிக் கதை! மலையாளத்தில் ...

ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!

Posted: 05 Dec 2013 12:22 PM PST

முதல்வர் பிரசாரம்... நெரிசலில் இறந்த இருவர் ''ஆஸ்பத்திரிக்குப் போக வழிவிட்டிருந்தால் இறந்திருக்க மாட்டாங்க!'' ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தது சேலத்தை திகுதிகுக்க வைத்திருக்கிறது. அதோடு, தேர்தல் பிரசாரத்தின்போது, விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. கடந்த 28-ம் தேதி ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். ஏற்காடு மலைப் பகுதியைத் தவிர்த்து... ...

பிளஸ் டூ, 10 ஆம் வகுப்பு தேர்வு தேதி-அட்டவணை வெளியீடு!

Posted: 05 Dec 2013 12:15 PM PST

சென்னை: பிளஸ் டூ எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு ஆகியவற்றுக்கான பொதுத் தேர்வு தேதிகளும், அட்டவணைகளும் வெளிபிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு மார்ச் 3 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் எனவும், 10ஆம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 05 Dec 2013 10:28 AM PST



NO more time for love throwing myself
into my careers right now
plz regret the rumours guys..........
-
---------------------------------
>Nayanthara Kurian



முகநூலில் ரசித்தவை!

Posted: 05 Dec 2013 10:04 AM PST

ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்

Posted: 05 Dec 2013 10:03 AM PST

ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; 2 பேர் கைது காரைக்குடி அருகே கல் லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கார் டிரைவர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கல்லூரி மாணவி காரைக்குடி அருகே உள்ள ராயர்புரத்தை சேர்ந்தவர் ரகசியா (வயது 18). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கானாடுகாத்தா னில் உள்ள உறவினர் வீட் டில் இருந்து தினமும் பஸ்சில் கல் லூரிக்கு சென்றுவருவது ...

சென்னை பள்ளிகளில் கேமரா பொருத்த உத்தரவு...

Posted: 05 Dec 2013 09:23 AM PST

சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 7ஆம் தேதிக்குள் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் பெயர்ப் பட்டியல்,
பள்ளி வாகன ஓட்டுனர்களின் விவரம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு பற்றிய சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம்

Posted: 05 Dec 2013 08:22 AM PST

தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம் கிடைத்துள்ளது. ஊழல் நாடுகள் ஜெர்மனியைச் சேர்ந்த 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு, உலக அளவில் ஊழல் நிறைந்த, மற்றும் தூய்மையான நாடுகளின் தர பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதுபோல், இந்த ஆண்டும், 177 நாடுகளில், தூய்மையான நாடுகளை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. பூஜ்யம் முதல் 100 புள்ளிகள்வரை மதிப்பெண் குறிப்பிட்டு, பூஜ்யம் என்றால் ஊழல் அதிகம் என்றும், 100 புள்ளிகள் என்றால் ஊழல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. அந்தவகையில், ...

போரில் பாகிஸ்தான் வெல்ல சாத்தியமே இல்லை: பிரதமர்

Posted: 05 Dec 2013 08:09 AM PST

தன் வாழ்நாளில் இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வெல்வதற்கான சாத்தியமே இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மீண்டும் எந்த நேரத்திலும் போர் மூளும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "அத்தகைய போரில், என் வாழ்நாளில் பாகிஸ்தான் வெல்வதற்கான சாத்தியமே இல்லை" என்றார். முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 05 Dec 2013 08:06 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

எங்கள் சிவாஜி

Posted: 05 Dec 2013 07:36 AM PST

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ...

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!

Posted: 05 Dec 2013 05:18 AM PST

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன. இத்தேர்தல் பாஜக, காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளைவிட விஜயகாந்தின் தேமுதிகவுக்குத்தான் மிக முக்கிய'மான' ஒன்றாகும். வேறு எந்த தமிழக கட்சிகளும் டெல்லி தேர்தலில் போட்டியிடாத நிலையில் களம் இறங்கியுள்ள தேமுதிக டெபாசிட்டையாவது தக்க வைத்துக் கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 70 தொகுதிகளைக் கொண்டது டெல்லி மாநில சட்டசபை. இதற்கான தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி ...

அறிமுகம்

Posted: 05 Dec 2013 04:51 AM PST

பெயர்: R. ரவி சங்கர்
சொந்த ஊர்: நாமக்கல்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளில் தமிழ் வெப்சைட் தேடியபோது
பொழுதுபோக்கு: இசை கேட்பது
தொழில்: கட்டிட அமைப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: நல்லதே செய், உனக்கு தீங்கு செய்தாலும்.

ஐந்தில் நான்கு போன்களில் ஆண்ட்ராய்ட்

Posted: 05 Dec 2013 04:37 AM PST

வெகுவேகமாக அதிகரித்து வரும் ஸ்மார்ட் போன்களில், ஐந்தில் நான்கு போன்களில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில், ஐ.டி.சி. எடுத்த ஆய்வு முடிவு இதனைத் தெரியப்படுத்துகிறது. சென்ற ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 74.9 சதவீதம் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இது 81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தினைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இது பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது. News24 தெரிவித்துள்ளபடி, ...

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 05 Dec 2013 04:16 AM PST

29-11-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/his5wer4nc437j3/Nakeeran+29.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 25-11-2013-புதிய தலைமுறை கல்வி http://www.mediafire.com/download/w3a8iqfalbmrwc0/PTK+25.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 3-11-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/u64rz5uaf7qajbe/JV+3.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 29-11-2013-தினகரன் வெள்ளிமலர் http://www.mediafire.com/download/6nhwkwxcqczn0fj/Velli+Malar29.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 29-11-2013-பால ...

பாலில் கலப்படம்; ஆயுள் தண்டனை

Posted: 05 Dec 2013 03:37 AM PST

புதுடில்லி: பால் பொருட்களில் கலப்படம் செய்து விற்போருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் யோசனை தெரிவித்துள்ளது. நுகரும் மனிதனை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குற்றம் மிக கொடூரமானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். கடந்த 2011 ம் ஆண்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு சேகரித்த பால் மாதிரிகளில், பெரும்பாலனவை கலப்படம் நிறைந்ததாக இருந்தது என்று அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை கே.எஸ். ...

மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்

Posted: 05 Dec 2013 03:30 AM PST

மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில் தலைப்பு :மரியாதை ராமன் கதைகள் ஆசிரியர் :தெய்வ சிகாமணி வெளியீடு :கண்ணன் பதிப்பகம் http://www.mediafire.com/download/1miz5t1mbl09zd6/Mariathai+Raman+Kathaikal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www48.zippyshare.com/v/87804808/file.html

விக்ரமாதித்யாவிற்கு தபால் தலை வெளியீடு

Posted: 05 Dec 2013 03:19 AM PST

புதுடில்லி: கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கப்பல் படையில் புதிதாக இணைக்கப்பட்ட விக்ரமாதித்யா போர்க்கப்பலின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக தபால் தலை யை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையி்ல் நடைபெற்ற விழாவில் இதற்கான விழா நடைபெபற்றது. விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி , காங்., தலைவர் சோனியா, கப்பல் படை தளபதி அட்மிரல் ஜோஷி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™