Tamil News | Online Tamil News |
- ஜெயலலிதாவை விமர்சிக்க தயங்கலாமா? காங்கிரஸ் மீது கருணாநிதி கோபம்
- திருமங்கலம் சாதனையை ஏற்காடு முறியடிப்பு : 90 சதவீதம் பேர் ஓட்டு போட்டு அசத்தல்
- "தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வேண்டும்': ஏற்காட்டு தே.மு.தி.க.,வினருக்கு ரகசிய உத்தரவு
- தொடர் புகார்களால் அமைச்சர்கள் கிலி: பதவியை எதிர்பார்த்து எம்.எல்.ஏ.,க்கள் காத்திருப்பு!
- 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததால் கட்சிகள் டென்ஷன் : லோக்சபா தேர்தலுக்கு அச்சாரமாகுமா முடிவுகள்?
- 'மது அருந்த மாட்டோம்; போனில் பேச மாட்டோம்!': ஆம்னி பஸ் ஓட்டுனர்கள் உறுதிமொழி
- சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வாரத்திற்கு 6 வேலை நாள்
- மோடியின் கூட்டத்திற்கு அனைத்து மதத்தினருக்கும் அழைப்பு
- டில்லி உட்பட நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி : தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்
- காஷ்மீர் பிரச்னையால் நான்காவது போர் ஏற்படலாம்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு
| ஜெயலலிதாவை விமர்சிக்க தயங்கலாமா? காங்கிரஸ் மீது கருணாநிதி கோபம் Posted: மத்திய அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் சுமத்தி வரும், அ.தி.மு.க., தலைமைக்கு பதிலடி கொடுக்கவோ, தமிழக அரசை விமர்சிக்கவோ, தமிழக காங்கிரசார் மறுத்து வருவது, தி.மு.க., தலைமைக்கு, கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.பதிலடி தரப்படவில்லை: 'தமிழகத்துக்கு எதிராக, தி.மு.க.,வுடன் சேர்ந்து, மத்திய அரசு சதி செய்கிறது' என, மின் வெட்டு பிரச்னையில், முதல்வர் ஜெயலலிதா சுமத்திய, பகிரங்க குற்றச்சாட்டுக்குக் கூட, காங்கிரஸ் தரப்பில், சரிவர பதிலடி தரப்படவில்லை என்பது தான், தி.மு.க., தலைமையின் கோபத்துக்கு காரணம் என, தெரிய வந்துள்ளது. சென்னையில் நடந்த ஒரு ... |
| திருமங்கலம் சாதனையை ஏற்காடு முறியடிப்பு : 90 சதவீதம் பேர் ஓட்டு போட்டு அசத்தல் Posted: இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவில் இதுவரை இருந்த சாதனை, ஏற்காட்டில் நேற்று முறியடிக்கப்பட்டது மொத்த வாக்காளர்களில் 90 சதவீதம் பேர் ஓட்டு போட்டு புது வரலாற்றைப் படைத்தனர். தி.மு.க., ஆட்சியில் நடந்த திருமங்கலம் தேர்தல் சாதனையை ஏற்காடு மிஞ்சியது.ஏற்காடு தொகுதியில், நேற்று, காலை ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மாலை வரை, விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. அனைத்து ஓட்டுச்சாவடியிலும், மக்கள் ஆர்வமுடன் சாரைசாரையாக வந்து ஓட்டளித்தனர். வாக்காளர்களை அரசியல் கட்சியினர் பலமாக கவனித்திருந்ததால், 90 சதவீதம் ஓட்டு பதிவானது. மத்திய, மாநில போலீசார் பாதுகாப்பில் ... |
| "தி.மு.க.,வுக்கு ஓட்டு போட வேண்டும்': ஏற்காட்டு தே.மு.தி.க.,வினருக்கு ரகசிய உத்தரவு Posted: சென்னை: "ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்' என, கட்சி நிர்வாகிகளுக்கு, கடைசி நேரத்தில், தே.மு.தி.க., தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அ.தி.மு.க., தி.மு.க., இடையே நேரடி போட்டியை ஏற்படுத்திய ஏற்காடு இடைத்தேர்தல், நேற்று நடந்தது. இத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சி தலைவர் கருணாநிதி, பல்வேறு கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். தே.மு.தி.க., இத்தேர்தலில் போட்டியிடவில்லை; தி.மு.க.,வுக்கு வெளிப்படையான ஆதரவையும் தெரிவிக்கவில்லை. இதை வைத்து, "மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி' என, கருணாநிதி கருத்து ... |
| தொடர் புகார்களால் அமைச்சர்கள் கிலி: பதவியை எதிர்பார்த்து எம்.எல்.ஏ.,க்கள் காத்திருப்பு! Posted: சென்னை: சில அமைச்சர்கள் மீது, நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளதால், விரைவில், அமைச்சரவையில் மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புகாருக்கு ஆளான அமைச்சர்கள், கலக்கம் அடைந்துள்ளனர். தங்களுக்கு அமைச்சர் யோகம் வரும் என, சில எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.தமிழக முதல்வராக, ஜெயலலிதா, மூன்றாவது முறையாக, பொறுப்பேற்ற பின், அவ்வப்போது, அமைச்சரவையில் மாற்றம் செய்து வருகிறார். இதுவரை, 13 முறை, அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. கடந்த, 30ம் தேதி, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக, இறக்கம் ... |
| 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததால் கட்சிகள் டென்ஷன் : லோக்சபா தேர்தலுக்கு அச்சாரமாகுமா முடிவுகள்? Posted: டில்லி மாநில சட்டசபைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, விறுவிறுப்புடன் நடைபெற்றது. இத்துடன், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்து உள்ளது. வரும், 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்படுவதால், இதன் முடிவுகளை எதிர்பார்த்து, கட்சிகள் படபடப்புடன் காத்திருக்கின்றன.கடைசியாக டில்லி : பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், காங்., ஆளும், ராஜஸ்தான், டில்லி மற்றும் மிசோரம் ஆகிய, ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. பிற, நான்கு மாநிலங்களிலும், தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கடைசியாக, நேற்று, ... |
| 'மது அருந்த மாட்டோம்; போனில் பேச மாட்டோம்!': ஆம்னி பஸ் ஓட்டுனர்கள் உறுதிமொழி Posted: பாதுகாப்பு வீடியோ காட்டுவது, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை, ஆம்னி பஸ்களில் நடைமுறைக்கு வந்துள்ளன.அதிர்ச்சி: ஆந்திர மாநிலம், மெகபூப் நகர் மற்றும் கர்நாடக மாநிலம், ஹாவேரி ஆகிய இடங்களில், அடுத்தடுத்து நடந்த, இரண்டு 'வால்வோ' ஆம்னி பஸ்கள் விபத்துகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, தமிழகத்தில் ஓடும் ஆம்னி பஸ்களில், பாதுகாப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்த, நவ., 22ம் தேதி, ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம், போக்குவரத்து துறை அதிகாரிகள் பேசினர். அப்போது, விபத்து ஏற்படும் நேரத்தில், ... |
| சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வாரத்திற்கு 6 வேலை நாள் Posted: புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய அரசின் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் பள்ளிகள், 2015ம் ஆண்டு முதல், வாரத்திற்கு ஆறு நாட்கள் இயங்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.இதுகுறித்த விவரம் வருமாறு: அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அடிப்படையில், 2015ம் ஆண்டு முதல், தினமும், 6 மணி, 10 நிமிடம் வீதம், வாரத்திற்கு ஆறு நாட்களில், 45 மணி நேரம் பள்ளிகள் இயங்கும்.பள்ளி வேலை நேரத்திற்குப் பின், ஒரு மணி, 20 நிமிடங்களுக்கு, அடுத்த நாளுக்கான திட்டமிடல், பாடங்களை தயார் செய்தல் மற்றும் வரவுள்ள நாட்களுக்கான வேலைகளுக்குத் தேவையான தகவல்களை திரட்டுதல் போன்ற பணிகளை, ... |
| மோடியின் கூட்டத்திற்கு அனைத்து மதத்தினருக்கும் அழைப்பு Posted: மும்பை: மும்பையில், 22ம் தேதி நடைபெறவுள்ள, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் உள்ளிட்ட அனைத்து மதத்தினைரையும் பங்கேற்கச் செய்து, பா.ஜ., மீதான மதச்சார்பு சாயத்தை போக்கும் முயற்சியில், மகாராஷ்டிரா, பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில், முதல்வர் பிருத்விராஜ் சவான் தலைமையிலான, காங்., கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி தலைமையில் நாடு ... |
| டில்லி உட்பட நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி : தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் Posted: புதுடில்லி : டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், மிசோரம் தவிர, மற்ற நான்கு மாநிலங்களிலும், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்' என, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், மிசோரம், டில்லி ஆகிய மாநிலங்களில், அடுத்தடுத்து, சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. இவற்றில், டில்லி, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில், காங்., ஆட்சியும், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியும் நடக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், ஓட்டுப் பதிவுக்கு பின், நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளை, ... |
| காஷ்மீர் பிரச்னையால் நான்காவது போர் ஏற்படலாம்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு Posted: இஸ்லாமாபாத் : காஷ்மீர் பிரச்னையால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, எந்த நேரத்தில் வேண்டுமானாலும், போர் நடக்க வாய்ப்புள்ளது' என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளதாக, பாகிஸ்தானிலிருந்து வெளியாகும், "டான்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள, ஆசாத் காஷ்மீர் சட்டசபையின், பட்ஜெட் கூட்டத்தில், நவாஸ் ஷெரீப் பேசியதாக, அப்பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களின் உணர்வுகளை மதித்து, காஷ்மீர் விஷயத்தில் தீர்வு காணப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தால், இந்தியா, பாகிஸ்தானுக்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 05,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |