Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஆன்மீக சிந்தனை (05-12-2013)

Posted: 04 Dec 2013 10:58 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Anmikasinthanai: 

கன்னித்தீவு (05-12-2013)

Posted: 04 Dec 2013 10:57 AM PST

Daily Thanthi Image Special: 

Daily Thanthi Special Term:

ஆண்டியார் (05-12-2013)

Posted: 04 Dec 2013 10:57 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Andiyar: 

சாணக்கியன் சொல் (05-12-2013)

Posted: 04 Dec 2013 10:55 AM PST

Daily Thanthi Image Special chanakkiyan: 

வாக்காளர்கள் உற்சாகம்: டெல்லியில் இரவு 9.30 மணி வரை நீடித்த ஓட்டுப்பதிவு

Posted: 04 Dec 2013 10:34 AM PST

புதுடெல்லி,

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் உற்சாகத்துடன் வந்து ஓட்டுப் போட்டனர். பல தொகுதிகளில் மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரத்திலும் திரளான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். டெல்லி முழுவதும் ஏறத்தாழ 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் இதேபோல் காத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. இதனால் ஓட்டுப்பதிவு நேரத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். ஒக்லா தொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்ததால் அங்கு இரவு 9.30 மணி வரை ஓட்டுப்பதிவு நீட்டித்தது.

category:

News Group Category:

வெளிநாட்டு கடன், முதலீடு அதிகரித்துள்ளதால் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் நிபுணர்கள் கருத்து

Posted: 04 Dec 2013 10:11 AM PST

மும்பை

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் கடன் திரட்டி உள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது ஒரு சவாலாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிக கடன்

அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகும். இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் வணிக கடன் திரட்டி உள்ளன. இதற்காக இந்நிறுவனங்கள் வட்டியை செலுத்த வேண்டும்.

மேலும், பன்னாட்டு கம்பெனிகள் இந்திய நிறுவனங்களில் மேற்கொண்ட முதலீட்டிற்கு டிவிடெண்டு வழங்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி அதிக அளவில் வெளியேறத் தொடங்கியுள்ளது. அதேசமயம், இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு கிடைக்கும் ஆதாயம் வாயிலாக அன்னியச் செலாவணி கிடைக்கிறது.

வெளியேறும் டாலர்

இருப்பினும் இந்த வழிமுறை வாயிலான அன்னியச் செலாவணி வரவைக் காட்டிலும் வெளியேற்றம் அதிகமாக உள்ளது. இது, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 630 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் 560 கோடி டாலராகவும், இவ்வாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 480 கோடி டாலராகவும் இருந்தது.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் கடனிற்கான வட்டி விகிதம் குறைவாக உள்ளது. இதனால் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு குறைந்த அளவில்தான் ஆதாயம் கிடைக்கிறது. எனவே, முதலீட்டு வருவாய் வாயிலாக கிடைக்கும் அன்னியச் செலாவணியைக் காட்டிலும் வெளியேறும் தொகை அதிகரித்து வருகிறது. இது கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் 2,230 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

எனவே, நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் குறைய வாய்ப்பில்லை என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் கடந்த மூன்று மாதங்களாக சரக்குகள் ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சரக்குகள் ஏற்றுமதி முந்தைய காலாண்டைக் காட்டிலும் 11.9 சதவீதம் அதிகரித்து 8,120 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி வரியை நடப்பு ஆண்டில் இதுவரை மத்திய அரசு மூன்று முறை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இரண்டாவது காலாண்டில் தங்கம் இறக்குமதி முந்தைய காலாண்டைக் காட்டிலும் 78 சதவீதம் குறைந்து 1,640 கோடி டாலரிலிருந்து 360 கோடி டாலராக குறைந்துள்ளது.

எனவே, சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை இரண்டாவது காலாண்டில் சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 30 சதவீதம் குறைந்து 4,780 கோடி டாலரிலிருந்து 3,380 கோடி டாலராக குறைந்துள்ளது.

இரண்டாவது காலாண்டில்...

இதன் காரணமாக இரண்டாவது காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 75 சதவீதம் குறைந்து 520 கோடி டாலராக குறைந்துள்ளது. இந்த நிதி ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டுகளிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் குறையும் என இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

4.8 சதவீதம்

சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 8,820 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாகும். நடப்பு நிதி ஆண்டில் இந்த பற்றாக்குறை 5,600 கோடி டாலராக குறையும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்து உள்ளார்.

category:

இந்துஸ்தான் சிங்க், பால்கோவில் எஞ்சியுள்ள பங்குகள் விற்பனை? அரசுக்கு ரூ.20,000 கோடி கிடைக்க வாய்ப்பு

Posted: 04 Dec 2013 10:07 AM PST

புதுடெல்லி,

தனியாருக்கு விற்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களான இந்துஸ்தான் சிங்க் மற்றும் பால்கோவில் எஞ்சியிருக்கும் பங்கு மூலதனத்தை ஏலமுறையில் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வேதாந்தா குழுமம்

இந்துஸ்தான் சிங்க் மற்றும் பால்கோ ஆகிய நிறுவனங்களில் பெரும்பான்மை பங்கு மூலதனத்தை கொண்டுள்ள வேதாந்தா குழுமத்திற்கு எஞ்சியுள்ள அரசுப் பங்குகளை விற்பனை செய்வதற்கு பதில் ஏலமுறையில் பங்குகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாளில் மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த இந்துஸ்தான் சிங்க் மற்றும் பால்கோ ஆகிய நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டன. இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்தில் தற்போது மத்திய அரசுக்கு 29.54 சதவீத பங்கு மூலதனம் உள்ளது. தற்போதைய சந்தை விலை அடிப்படையில் இதன் மதிப்பு ரூ.16 ஆயிரம் கோடியாகும்.

இந்துஸ்தான் சிங்க் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். பால்கோவில் மத்திய அரசுக்கு 49 சதவீத பங்கு மூலதனம் உள்ளது. ஆனால் இதன் பங்குகள் சந்தைகளில் இன்னும் பட்டியலிடப்படவில்லை. மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிலும் மீதமுள்ள பங்குகளை ஏலமுறையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழிமுறை வெளிப்படையானது என்பதால் இதனை அரசு தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிறுவனங்களில் பெரும்பான்மை பங்கு மூலதனத்தை கொண்டுள்ள வேதாந்தா குழுமத்திற்கும் இதில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும்.

நிதி பற்றாக்குறை

நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக வைத்திருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு வசதியாக பொதுத் துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.40 ஆயிரம் கோடியும், மேலும் சில நிறுவனங்களில் எஞ்சியுள்ள அரசுப் பங்கு மூலதனத்தை விற்பதன் மூலம் ரூ.14 ஆயிரம் கோடியும் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

category:

சென்னையில் ஜனவரி 7–ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு; போலீசார் அதிரடி நடவடிக்கை

Posted: 04 Dec 2013 10:04 AM PST

சென்னை,

சென்னையில் பள்ளிக்குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜனவரி 7–ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

சென்னை நகரில் பள்ளிக்குழந்தைகளை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேற்றப்படுகிறதது. இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

சென்னை நகரிலுள்ள 200 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களை இக்கூட்டத்திற்கு போலீசார் அழைத்து இருந்தனர். போலீசாரின் அழைப்பை ஏற்று சுமார் 150–க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து தலைமை ஆசிரியர்கள், துணை தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர்கள் சுமார் 500 பேர் இக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

அறிவுரை

கூட்டத்திற்கு வந்திருந்த தலைமை ஆசிரியர்கள் மத்தியில் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஒரு ஆசிரியரை போல அறிவுரை வழங்கி பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:–

சென்னை மற்றும் தமிழகம், பிற மாநிலங்களில் பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை, பட்டினப்பாக்கத்தில் பள்ளி அறையிலிருந்தே மாணவனை வேன் டிரைவர் ஒருவர் அந்த மாணவனை அழைத்துச் செல்ல வந்தவரை போல வேடமிட்டு கடத்திச் சென்றுவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு அந்த பள்ளி மாணவனை மீட்டோம். அந்த சம்பவம் நடந்தபோதே சென்னையிலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினோம். அப்போது சில அறிவுரைகளை வழங்கினோம். அந்த அறிவுரைகளை எந்த பள்ளி நிர்வாகமும் இதுவரை ஏற்று நடந்ததாக தெரியவில்லை.

கண்காணிப்பு கேமரா

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை வருகிற ஜனவரி 7–ந் தேதிக்குள் கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பள்ளிகளின் வகுப்பறைகள், பள்ளிகளின் வளாகம், பள்ளிகளின் முன்பக்க வாசல்கள் போன்ற இடங்களில் கேமராக்களை பொருத்த வேண்டும். பள்ளிக்குழந்தைகளை அழைத்து செல்லும் வேன் டிரைவர்கள், மாற்று வேன் டிரைவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பற்றிய விவரங்களை பள்ளி நிர்வாகத்தினர் சேகரித்து வைக்க வேண்டும். அவரது புகைப்படங்களையும் வாங்கி வைக்க வேண்டும். அவர்களது நன்னடத்தை பற்றி அருகிலுள்ள போலீஸ் நிலையங்களிடம் சொல்லி அதுபற்றிய தகவல்களையும் கேட்டறிய வேண்டும். ஜனவரி 7–ந் தேதி மீண்டும் இதுபோன்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அப்பொழுது நான் சொன்ன அறிவுரைகளை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் பேசினார்.

கைதூக்கினார்கள்

பின்னர் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்த்து யார், யார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளீர்கள் என்று கேட்டார். கேமரா பொருத்தியிருப்பவர்கள் கைகளை தூக்குங்கள் என்று கேட்டார். அப்போது 2 பேர் மட்டுமே கைகளை தூக்கினார்கள். இதைப் பார்த்து கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. கூட்டம் முடிந்து வெளியில் வந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிருபர்களிடம் பேசும்போது:–

போலீசார் கேட்டுக்கொண்டபடி கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். வேன் டிரைவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களின் விவரங்களையும், புகைப்படத்துடன் சேகரிப்போம் என்று தெரிவித்தனர்.

category:

News Group Category:

கிராமங்களில், அக்டோபர் மாதத்தில் புதிதாக வழங்கப்பட்ட ஜி.எஸ்.எம். செல்போன் இணைப்புகள் 16.60 லட்சம்

Posted: 04 Dec 2013 10:01 AM PST

புதுடெல்லி,

கிராமங்களில், அக்டோபர் மாதத்தில், 16.60 லட்சம் ஜி.எஸ்.எம். செல்போன் இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.61 சதவீதம் அதிகமாகும். இதனையடுத்து கிராமப்புறங்களில் உள்ள மொத்த ஜி.எஸ்.எம். செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 27.43 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.  

வோடாபோன்

வோடாபோன்  நிறுவனம்  அதிகபட்சமாக 7.70 லட்சம் புதிய இணைப்புகளை ஊரக பகுதிகளில் வழங்கியுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 8.39 கோடியாக உயர்ந்துள்ளது. பார்தி ஏர்டெல் கிராமங்களில் 6 லட்சம் புதிய இணைப்புகளை அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஊரக இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 8.74 கோடியாகும்.

ஐடியா செல்லுலார் வழங்கிய இணைப்புகள் 3.70 லட்சம் உயர்ந்து 6.95 கோடியாகவும், ஏர்செல் வழங்கிய இணைப்புகள் 60 ஆயிரம் அதிகரித்து 2.33 கோடியாகவும் உயர்ந்துள்ளது. அதே சமயம் யூனிநார் நிறுவனம் கிராமங்களில் 1.40 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் ஊரக இணைப்புகளின் எண்ணிக்கை 1.01 கோடியாக குறைந்துள்ளது.  

செப்டம்பர் நிலவரப்படி கிராமப்புறங்களில் தொலைபேசியை பயன்படுத்துபவர்களின் மொத்த எண்ணிக்கை 35.66 கோடியாக உள்ளது. இதில் செல்போன் இணைப்புகள் 35.03 கோடியாகவும், லேண்டுலைன் இணைப்புகள் 63.10 லட்சமாகவும் உள்ளன. அதே மாதத்தில் நம் நாட்டில் ஊரகப் பகுதிகளின் தொலைத் தொடர்பு அடர்த்தி 41.70 சதவீதமாக உள்ளது. தொலைத் தொடர்பு அடர்த்தி என்பது 100 பேருக்கு எத்தனை பேர் தொலைபேசி இணைப்புகளை வைத்துள்ளனர் என்பதை காட்டும் விகிதமாகும்.

வாழ்க்கைத் தரம்

நகர்ப்புறங்களில் தற்போது செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை ஏறக்குறைய தன்னிறைவு கண்டுவிட்ட நிலையில் செல்போன் சேவை நிறுவனங்கள் கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. கிராம மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருவதால் உயர்தர செல்போன் சாதனங்களுக்கு கிராமங்களில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஓர் அங்கமாக ஊரக இந்தியாவில் இப்போது இணையதள பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™