Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விமான நிலையத்தின் கண்ணாடி சுவரில் விரிசல்

Posted: 04 Dec 2013 01:19 PM PST

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனைய கண்ணாடி சுவரில் 11-வது முறையாக விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குரூப் 2 தேர்வு: விடைகள் வெளியீடு

Posted: 04 Dec 2013 01:18 PM PST

குரூப் 2 முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டுள்ளது.

12, 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்!

Posted: 04 Dec 2013 01:18 PM PST

தமிழகம் முழுவதும் 10, 12- ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன் கூடிய விடைத்தாள் முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது.

அரசு செலவில் இங்கிலாந்தில் பட்ட மேற்படிப்பு: மேலும் 8 மாணவர்கள் தகுதி

Posted: 04 Dec 2013 01:17 PM PST

அரசு செலவில் இங்கிலாந்தில் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ளும் திட்டத்துக்கு மேலும் 8 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அரசு பஸ்ஸில் பயணிகளுக்கு இடையூறு: மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Posted: 04 Dec 2013 01:15 PM PST

அரசு பஸ்ஸில் பயணிகளுக்கு இடையூறு செய்ததாக மாணவர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

டிசம்பர் 12 இல் நாடாளுமன்றம் முன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2013 01:15 PM PST

சர்க்கரை இறக்குமதியை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நாடாளுமன்றத்துக்கு எதிரே கரும்பு விவசாயிகள் டிசம்பர் 12-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

மதுக்கடைகளை மூட வேண்டும்

Posted: 04 Dec 2013 01:14 PM PST

மக்களின் உணர்வுகளை மதித்து, அனைத்து மதுக்கடைகளையும் தமிழக அரசு மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெளி மாநிலங்களிலிருந்து மின் கொள்முதல்: 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

Posted: 04 Dec 2013 01:14 PM PST

வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை இறுதிசெய்யும் பணியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஈடுபட்டுள்ளது. இதுவரை 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிகிறது.

தேஜ்பால் விவகாரம்: ஷோமா சௌத்ரிக்கு கோவா போலீஸ் சம்மன்

Posted: 04 Dec 2013 01:10 PM PST

தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி, அந்த பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி உள்ளிட்ட 4 பேருக்கு, கோவா போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சிரியாவில் ராக்கெட் வீச்சு: 18 பேர் பலி

Posted: 04 Dec 2013 12:04 PM PST

சிரியாவில் அரசுப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் அப்பாவி மக்கள் 18 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசப் பிரதமருடன் சுஜாதா சிங் சந்திப்பு

Posted: 04 Dec 2013 12:03 PM PST

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பல்வேறு தலைவர்களை இந்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் டாக்காவில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எல்லைக்கு அப்பால் உள்ள சக்திகளே காரணம்

Posted: 04 Dec 2013 12:02 PM PST

நம் நாட்டில் நடத்தப்படும் பெரும்பாலான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எல்லைக்கு அப்பாலிருந்து செயல்படும் சக்திகள்தான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

சேவை வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை

Posted: 04 Dec 2013 12:01 PM PST

சேவை வரி செலுத்தாதோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்தார்.

370ஆவது பிரிவை மோடியால் நீக்க முடியாது

Posted: 04 Dec 2013 11:59 AM PST

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை பாஜக தலைவர் நரேந்திர மோடியாலோ வேறு யாராலோ நீக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா: மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை

Posted: 04 Dec 2013 11:56 AM PST

தெலங்கானா வரைவு மசோதாவை மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை இரவு இறுதி செய்தது. இதன் மீது மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறது.

குளித்தலையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

Posted: 04 Dec 2013 11:55 AM PST

குளித்தலையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூரில் கார் மோதி தொழிலாளி சாவு

Posted: 04 Dec 2013 11:55 AM PST

கரூரில் கார் மோதி மளிகைக் கடை தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (51). இவர் கரூர் பேருந்து நிலையம்

குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை

Posted: 04 Dec 2013 11:55 AM PST

கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஷிநிர்மல் குமார்.

அரசுப் பள்ளி, கல்லூரி கட்டடப் பணிகளுக்கு பூமிபூஜை

Posted: 04 Dec 2013 11:54 AM PST

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ரயிலில் வந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

Posted: 04 Dec 2013 11:54 AM PST

மணப்பாறை அருகே புதன்கிழமை அதிகாலை ரயிலில் பயணம் செய்த மதுரை பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்பயிற்சி முடித்த5 பேருக்கு தையல் இயந்திரம்

Posted: 04 Dec 2013 11:54 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ், இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

குரூப் 2: டிச. 10-ல் எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி

Posted: 04 Dec 2013 11:53 AM PST

குரூப் 2 இரண்டாம் கட்ட எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் டிச. 10-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2013 11:53 AM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

11 குறு வட்டங்களில் நாளை "அம்மா' திட்ட முகாம்கள்

Posted: 04 Dec 2013 11:53 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் 11 குறு வட்டங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் வெள்ளிக்கிழமை (டிச. 6) நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளது:

ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு

Posted: 04 Dec 2013 11:52 AM PST

கரூரில் ரயிலில் அடிபட்டு முதியவர் புதன்கிழமை இறந்தார்.

உதகை மலை ரயில் சேவை இன்றுமுதல் இயக்கம்

Posted: 04 Dec 2013 11:52 AM PST

கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட உதகை மலை ரயில் சேவை, வியாழக்கிழமை (நவம்பர் 5) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

Posted: 04 Dec 2013 11:52 AM PST

திருச்சானூரில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான புதன்கிழமை காலை பத்மாவதி தாயார், பல வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸர்வ பூபால வாகனத்தில் அலங்காரமாக வலம் வந்தார்.

சிறுதானிய சாகுபடி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 04 Dec 2013 11:52 AM PST

புதுக்கோட்டையை அடுத்த முத்துக்காடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள சிறுதானியப் பயிரை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன்

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: சங்கச் செயலர் தாற்காலிக பணிநீக்கம்

Posted: 04 Dec 2013 11:51 AM PST

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம், நகைக்கடன் முறைகேடு தொடர்பாக சங்கச் செயலர் மற்றும் அலுவலக உதவியாளர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

"மதுரை மண்டலத்தில் கள்ளச்சந்தை வழக்கில் 196 பேர் கைது'

Posted: 04 Dec 2013 11:51 AM PST

மதுரை மண்டலத்தில் கள்ளச்சந்தை வழக்கில் கடந்த ஆண்டில் 196 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப்பிரிவு மதுரை மண்டல காவல்

சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டம்

Posted: 04 Dec 2013 11:51 AM PST

கந்தர்வகோட்டை ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் அச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடங்களை திறக்க வலியுறுத்தல்

Posted: 04 Dec 2013 11:51 AM PST

ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி கட்டடங்களை உடனே திறக்க  வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி பெண் சாவு

Posted: 04 Dec 2013 11:50 AM PST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதன்கிழமை மின்சாரம் தாக்கி பெண் இறந்தார்.

இசை விழாவில்திவ்ய நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி

Posted: 04 Dec 2013 11:50 AM PST

கும்பகோணத்தில் உடையாளூர் கல்யாணராம பாகவதக் குழுவினரின் திவ்ய நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

குடிநீரில் சாக்கடை கலப்பு : நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

Posted: 04 Dec 2013 11:49 AM PST

குடந்தை 1-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கால்நடைகள் இறப்புக்கு உரிய நிவாரணம் தேவை

Posted: 04 Dec 2013 11:49 AM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோமாரி நோயால் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போட்டிகளில் ஸ்டார் லயன் பள்ளி சிறப்பிடம்

Posted: 04 Dec 2013 11:49 AM PST

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை ஸ்டார் லயன் பள்ளி மாணவர்கள் அண்மையில் தஞ்சாவூரில் நடைபெற்ற இளந்தளிர் 2013, போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசுகளை வென்றனர்.

தொடர் மழை : சம்பா பயிர்கள் சாய்ந்தன

Posted: 04 Dec 2013 11:48 AM PST

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் நீர்த்தேங்கியுள்ளதால், வளர்ந்த பயிர்கள் நீரில் சாய்ந்து கிடக்கின்றன.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் ஊழியர் சாவு

Posted: 04 Dec 2013 11:48 AM PST

திருத்துறைப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் உயிரிழந்தார்.

காரைக்கால் சிறையில் எஸ்.எஸ்.பி. திடீர் ஆய்வு

Posted: 04 Dec 2013 11:47 AM PST

காரைக்கால் கிளை சிறையில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உத்தரவு மட்டும் போதாது

Posted: 04 Dec 2013 11:47 AM PST

மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த 37 சதவீத (சுமார் 60 ஆயிரம் சதுர கி.மீட்டர்) பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தடைவிதித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு, மிக அவசியமான ஒன்று என்கிற அதேவேளையில், அந்த உத்தரவு எந்த அளவுக்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் என்கிற கேள்வியும் எழுகிறது.

பாஜக கொடிக் கம்பம் வெட்டிச் சாய்ப்பு

Posted: 04 Dec 2013 11:47 AM PST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த பா.ஜ.க கொடிக் கம்பத்தில் இருந்த கொடியையும், கொடி மரத்தையும் மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு

"மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்'

Posted: 04 Dec 2013 11:46 AM PST

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான மணிசங்கர் அய்யர்.

"மாணவர்களிடம் சேவை மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும்'

Posted: 04 Dec 2013 11:46 AM PST

கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவிகளிடையே சேவை மனப்பான்மையை ஊக்குவிப்பது எதிர்கால சமுதாயத்தை வளமடையச் செய்யும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

அரவக்குறிச்சியில் புனித சவேரியார் ஆலய தேர்பவனி

Posted: 04 Dec 2013 11:46 AM PST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேர்பவனி நடைபெற்றது.

கரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

Posted: 04 Dec 2013 11:46 AM PST

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, கரூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 04 Dec 2013 11:45 AM PST

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, மாநில அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

அனுசுயாபென்: முதல் தொழிற்சங்கத் தலைவி

Posted: 04 Dec 2013 11:45 AM PST

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் பாரத நாட்டில் வேரூன்றி ஆட்சி செய்தபோது குஜராத்திலுள்ள ஆமதாபாதில் பிரபல தொழிலதிபராக பிரகாசித்த விக்ரம் சாராபாயின் மகளாகப் பிறந்தவர் அனுசுயாபென்.

விலைவாசி உயர்வைகட்டுப்படுத்தக் கோரி டிச. 12-ல் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2013 11:45 AM PST

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, டிச. 12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தா.பழூர் அருகேமாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: ஒருவர் கைது

Posted: 04 Dec 2013 11:45 AM PST

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ததாக செவ்வாய்க்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

68 ரேஷன் கடைகளில் முறைகேடு கண்டுபிடிப்பு

Posted: 04 Dec 2013 11:44 AM PST

அரியலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 68 ரேஷன் கடைகளில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து அரியலூர் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விவாதத்திற்கு இதுவா தருணம்?

Posted: 04 Dec 2013 11:44 AM PST

ஜம்மு காஷ்மீர் தொடர்பான 370-ஆவது சட்டப் பிரிவு மறு விவாதத்திற்கு உள்படுத்தப்பட வேண்டும் என்கிற குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் அறிவிப்பு, பாஜக தலைமைக்கே அதிர்ச்சி அளித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.

"மதுரை மண்டலத்தில் ரூ. 25 லட்சம் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்'

Posted: 04 Dec 2013 11:44 AM PST

மதுரை மண்டல குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மூலம் நிகழாண்டில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ.

அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 04 Dec 2013 11:44 AM PST

தொகுப்பு ஓய்வூதியத்தை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை கேட்டு மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்

Posted: 04 Dec 2013 11:43 AM PST

மக்கள் நலப் பணியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வேறு வேலை கேட்டு குடும்பத்துடன் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

கோரிக்கை அட்டை அணிந்து கல்வித் துறையினர் போராட்டம்

Posted: 04 Dec 2013 11:43 AM PST

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியில் ஈடுபட்டனர்.

கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.யிடம் புகார்

Posted: 04 Dec 2013 11:43 AM PST

பெரம்பலூர் அருகே கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ராவிடம் புதன்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.

தூக்கிட்டு பெண் தற்கொலை

Posted: 04 Dec 2013 11:42 AM PST

பெரம்பலூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக பெண் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சித்தன்னவாசல் படகு குளத்தில் மீன் வளர்க்கும் திட்டம் தொடக்கம்

Posted: 04 Dec 2013 11:42 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலைத் தொகுதிக்கு உள்பட்ட சுற்றுலாத்தலமாகத் திகழும் சித்தன்னவாசல் படகு குளத்தில் மீன் வளர்க்கும் திட்டத்தை ஆட்சியர் செ. மனோகரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

ஜன. 31 வரை சுழற்சி முறையில் மின்தடை ஏற்படும் நேரம்

Posted: 04 Dec 2013 11:42 AM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை சுழற்சி முறையில் பின்வரும் கால அட்டவணைப்படி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2013 11:41 AM PST

வீட்டுமனைக்கு இடம் அளவை செய்து தர நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்யும் திருமயம் வட்டாட்சியரைக்கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கையை வலியுறுத்திதுண்டுச் சீட்டு அணிந்து பணியாற்றிய அலுவலர்கள்

Posted: 04 Dec 2013 11:41 AM PST

புதுக்கோட்டையில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் துண்டுச்சீட்டை ஆடையில் அணிந்து புதன்கிழமை தங்களது பணிகளைத் தொடங்கினர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றும் பணியை விரைந்து முடிக்க உத்தரவு

Posted: 04 Dec 2013 11:41 AM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை குறித்த காலத்துக்குள் தவறின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2013 11:41 AM PST

கந்தர்வகோட்டை ஒன்றியக் கிராமங்களுக்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து கவிழ்ந்து விபத்து:24 பேர் காயம்

Posted: 04 Dec 2013 11:40 AM PST

ஆலங்குடியை அடுத்த கல்லாலங்குடியில் புதன்கிழமை சாலை ஓரத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 24 பேர் காயமடைந்தனர்.

விராலிமலை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 04 Dec 2013 11:40 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சியர் செ. மனோகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

Posted: 04 Dec 2013 11:39 AM PST

கோயில், மடத்துக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

ஈட்டியெறிதலில் ஒரத்தநாடு பள்ளி மாணவி சிறப்பிடம்

Posted: 04 Dec 2013 11:39 AM PST

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி  புவனேஸ்வரி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார்.

அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 04 Dec 2013 11:39 AM PST

13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போலி கால்நடை மருத்துவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்

Posted: 04 Dec 2013 11:38 AM PST

கோமாரி நோய்க்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறும் போலி கால்நடை மருத்துவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர்

Posted: 04 Dec 2013 11:38 AM PST

பேராவூரணி காந்திஜி கல்வி அறக்கட்டளை சார்பில் வாகனங்களின் முகப்பில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் 47 மி.மீ. மழை

Posted: 04 Dec 2013 11:38 AM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 47 மி.மீ மழை பெய்துள்ளது.

மொபெட் திருட்டு, நகைப் பறிப்பு வழக்கில் இளைஞர் கைது

Posted: 04 Dec 2013 11:38 AM PST

பட்டுக்கோட்டையில் 4 இருசக்கர வாகனங்கள் திருடியது, பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது ஆகிய வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

தே.மு.தி.க.வின் மூன்றாவது அணி கனவு!

Posted: 04 Dec 2013 11:37 AM PST

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் முழுமூச்சாகத் தொடங்காத நிலையில், தேர்தல் கூட்டணி பற்றிய முதல் அறிவிப்பு தே.மு.தி.க. தரப்பிலிருந்து வந்திருக்கிறது.

ஒரத்தநாட்டில்தாய் - சேய் நல ஆலோசனைக் கூட்டம்

Posted: 04 Dec 2013 11:37 AM PST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாய் -சேய் நல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாஜக ஆலோசனைக் கூட்டம்

Posted: 04 Dec 2013 11:37 AM PST

பேராவூரணி ஒன்றிய பாஜக யாத்திரை பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற ஆசிரியரிடம்ரூ. 9 ஆயிரம் திருட்டு

Posted: 04 Dec 2013 11:37 AM PST

கும்பகோணம், திருநாராயணபுரத்தைச்  சேர்ந்தவர் துரைராஜ் (68). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை குத்தாலத்தில் உள்ள வங்கி ஒன்றில் தனது மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரத்தை

பாமக எம்.எல்.ஏ. குரு மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 04 Dec 2013 11:36 AM PST

பாமக எம்.எல்.ஏ. குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சுனாமி குடியிருப்பை மழைநீர் சூழ்ந்தது

Posted: 04 Dec 2013 11:36 AM PST

சீர்காழியை அடுத்த பழையார் சுனாமி குடியிருப்பை புதன்கிழமை மழைநீர் சூழ்ந்தது.

வெளி மாவட்ட மீனவர்கள் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

Posted: 04 Dec 2013 11:36 AM PST

கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழில் செய்யும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கடலோரக் பாதுகாப்பு குழுமம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கும்'

Posted: 04 Dec 2013 11:36 AM PST

ஆந்திரத்தைப் பிரிப்பது தொடர்பாக நடைபெறும் பொதுவாக்கெடுப்புதான் மக்களவைத் தேர்தல் என்றும், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கும் என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சவால் விடுத்தார்.

நகை வழிப்பறி வழக்கில்:திருநங்கைக்கு 6 மாதம் சிறை

Posted: 04 Dec 2013 11:35 AM PST

காரைக்காலில் மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் தங்க  நகையை வழிப்பறி செய்த சென்ற திருநங்கைக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர் மழை: சம்பா பயிர்கள் சாய்ந்தன

Posted: 04 Dec 2013 11:35 AM PST

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் நீர்த்தேங்கியுள்ளதால், வளர்ந்த பயிர்கள் நீரில் சாய்ந்து கிடக்கின்றன.

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 04 Dec 2013 11:35 AM PST

சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சிச் செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம்,

திருவெறும்பூரில் தேசிய நூலக வார விழா

Posted: 04 Dec 2013 11:34 AM PST

திருவெறும்பூர் கிளை நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து தேசிய  நூலக வார விழா பகவதிபுரத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தெலங்கானா விவகாரம்: முதல்வருடன் ஜெகன் சந்திப்பு

Posted: 04 Dec 2013 11:34 AM PST

தெலங்கானா விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் சுமார் 20 நிமிஷங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.4 லட்சம் மோசடி வங்கி உதவி மேலாளர் கைது

Posted: 04 Dec 2013 11:34 AM PST

திருச்சி உறையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ரூ. 4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கி உதவி மேலாளர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். தலைமறைவான பெண் உதவி மேலாளாரை போலீஸார் தேடிவருகின்றனர்.

பள்ளி ஆசிரியர்களுக்கான கணினிப் பயிற்சி முகாம்

Posted: 04 Dec 2013 11:33 AM PST

திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான கணினிப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

கோமாரி நோயால் இறந்த மாடுகளுக்கு ரூ. 25,000 நிவாரணம்

Posted: 04 Dec 2013 11:27 AM PST

கோமாரி நோயால் இறந்த கறவை மாடுகளுக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள புதுகை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

Posted: 04 Dec 2013 11:26 AM PST

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுகை மீனவர்கள் 20 பேரின் காவலை டிச. 17 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை மல்லாகம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கலப்பட விதை நெல்லால் விளைச்சல் பாதிப்பு: தா. பாண்டியன் குற்றச்சாட்டு

Posted: 04 Dec 2013 11:25 AM PST

கலப்பட விதை நெல்லால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

Posted: 04 Dec 2013 11:20 AM PST

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.6) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துளஅளது.

கைவினைப் பொருள் சிறப்புக் கண்காட்சி தொடக்கம்

Posted: 04 Dec 2013 11:20 AM PST

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் கைவினை, கைத்தறி மற்றும் நகைகளின் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை திருச்சி சாலைரோட்டிலுள்ள இந்திய மருத்துவ மன்றத்தில் புதன்கிழமை தொடங்கியது.

பெண்ணிடம் நகையை பறித்த இருவர் கைது

Posted: 04 Dec 2013 11:19 AM PST

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்ற இருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

Posted: 04 Dec 2013 11:19 AM PST

பாபர் மசூதி இடிப்பு தினம்: அமைதியை கடைபிடிக்க வலியுறுத்தல்

Posted: 04 Dec 2013 11:19 AM PST

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6}ஆம் தேதி அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் பாபர் மசூதி நடவடிக்கை குழுத் தலைவர் சபர்யாப் ஜிலானி வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர்

Posted: 04 Dec 2013 11:18 AM PST

"இந்தியாவை உளவு பார்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது'

Posted: 04 Dec 2013 11:18 AM PST

இந்தியாவை அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் உளவு பார்ப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அந்நாட்டிடம் மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் ராயலசீமா இணைப்பு? ஆந்திர அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு

Posted: 04 Dec 2013 11:17 AM PST

தெலங்கானாவில் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அனந்தப்பூர், கர்னூல் ஆகிய 2 மாவட்டங்களைச் சேர்க்க ஆந்திர அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காஷ்மீருக்காக போர்: பத்திரிகை செய்தியால் பரபரப்பு

Posted: 04 Dec 2013 11:17 AM PST

"காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாவிட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் மூளும்' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் "டான்' பத்திரிகையில் புதன்கிழமை வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™