Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'திருடன் -- போலீஸ்' கண்ணாமூச்சி:மறைமுக 'கூட்டணி' அம்பலம்; எப்படிங்க... குறையும் குற்றம்

Posted:

மதுரை:தமிழகத்தில் கொள்ளையர்களுக்கு, போலீசார் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவுவதால், குற்றங்கள் அதிகரிக்கின்றன. பொருட்களை மீட்பதில் ஆர்வம் காட்டும் போலீசார், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் 'கோட்டை' விடுகின்றனர்.சமீபகாலமாக, அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு; ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி; வீடுபுகுந்து திருட்டு; நகை, அடகு கடையில் கொள்ளை என தொடர்ந்து குற்றங்கள் நடக்கின்றன. சில வழக்குகளில், குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, பொருட்களை மீட்கின்றனர். பல வழக்குகள் 'விசாரணையிலேயே' இருக்கின்றன. ஏதாவது ஒரு வழக்கில் ஒருவர் கைதாகும் போது, ...

வெளிநாட்டில் கடன் வாங்குவதில் இந்திய நிறுவனங்கள் சாதனை

Posted:

மும்பை : சென்ற 2013ம் ஆண்டில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து, இதுவரை இல்லாத வகையில், 3,640 கோடி டாலர் அளவிற்கு நிதி திரட்டியுள்ளன.இதில், டாலர் அடிப்படையிலான கடன், 2,109 கோடியும், சிறிய முதலீட்டாளர்களுக்கு கடன் பத்திரங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த, 1,540 கோடி டாலரும் அடங்கும்.முந்தைய, 2012ம் ஆண்டில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து, 2,920 கோடி டாலர் அளவிற்கு நிதி திரட்டிக் கொண்டன.சென்ற ஆண்டு, வெளிநாடுகளில் அதிக அளவில் கடன் பெற்ற நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், கடன் பத் திரங்கள் வாயிலாக, 80 கோடி டாலரும், ...

டில்லியில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Posted:

புதுடில்லி:டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, 50 சதவீதம் வரை மின் கட்டணத்தை குறைத்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் மின் வினியோக நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்யவும், டில்லி மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.குடிநீர்:டில்லி முதல்வராக பதவியேற்றுள்ள, 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர், கெஜ்ரிவால், அதிரடி நடவடிக்கைகளை துவக்கியுள்ளார். 'டில்லியில் உள்ள, ஒவ்வொரு வீட்டுக்கும், தினமும், 667 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும்' என, நேற்று முன்தினம் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, அவரின் கவனம், டில்லியில் செயல்படும், தனியார் மின் ...

மானிய காஸ் சிலிண்டர்கள் விரைவில் 12 ஆகிறது

Posted:

மானிய விலையில் வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை, 9 லிருந்து, 12 ஆக உயர்த்த, காங்கிரஸ் மேலிடம் சம்மதம் தெரிவித்துள்ளது.ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு, ஒன்பது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த வாரம், டில்லியில், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் பங்கேற்ற, காங்கிரஸ் முதல்வர்கள் பலரும், சிலிண்டர் பிரச்னையை, பெரிதும் சுட்டிக் காட்டியுள்ளனர். சட்டசபைத் தேர்தலில், காங்கிரசுக்கு இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட, முக்கிய காரணமே, சிலிண்டரின் விலை தான் என, ...

தே.மு.தி.க., வுடன் நட்பு கொள்ளாமல் போனதற்கு சூழல் தான் காரணம்: கருணாநிதி பேட்டி

Posted:

சென்னை: தே.மு.தி.க., வை, தி.மு.க., நட்பு சக்தியாக்கிக் கொள்ளாமல் போனதற்கு, ஒருவருக்கொருவர் சரியாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள முடியாத சூழல் அமைந்தது தான் காரணம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.சமூக வலைத்தளத்திற்கு கருணாநிதி அளித்த பேட்டி:காங்கிரஸ் மேலிட தலைவர்கள் என்னிடத்தில் அன்பும், பரிவும் நன்றியும் உடையவர்களாக இருந்த போதிலும், தமிழகத்தில் உள்ள அக்கட்சியின் சில தலைவர்கள், அந்த நிலையில் மாறுபாடு உடையவர்களாக இருந்ததும் ஒரு காரணம்.தே.மு.தி.க.,வை, தி.மு.க., நட்பு சக்தியாக்கிக் கொள்ளாமல் போனதற்கு, ஒருவருக்கொருவர் சரியாகவும், ...

மீனவர்களின் தொடர் கடத்தல் பேச்சுவார்த்தைக்கு உகந்ததல்ல : முதல்வர் காட்டம்

Posted:

சென்னை : தமிழக மீனவர்கள் கடத்தப்படுவது, பேச்சுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தாது' என, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கடந்த மாதம், 12ம் தேதி, மீன் பிடிக்க சென்ற, 111 அப்பாவி தமிழக மீனவர்கள்; 28ம் தேதி, புதுக்கோட்டை மீனவர்கள், 22 பேர்; 29ம் தேதி, பாம்பன் மீனவர்கள், 18 பேர், இலங்கை கடற்படையினரால், சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் செயல், தமிழக மீனவ சமுதாயத்தினரிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக் ஜலசந்தியில், தங்களுடைய பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில், மீன் பிடிக்க, தமிழக ...

ராகுலுக்கு வழி விடுகிறார் பிரதமர் மன்மோகன்? ராஜினாமா செய்ய போவதாக பரபரப்பு தகவல்

Posted:

புதுடில்லி : அடுத்த லோக்சபா தேர்தலில், ராகுலுக்கு வழிவிடும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை, ராஜினாமா செய்யப் போவதாக, டில்லியில், நேற்று, பரபரப்பாக செய்திகள் வெளியாகின. ஆனால், பிரதமர் அலுவலகம், இந்த தகவலை மறுத்துள்ளது.காங்., படுதோல்வி:அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், அவர், தீவிர பிரசாரம் செய்தார். எனினும், பா.ஜ., கட்சி, மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது. காங்., படுதோல்வி அடைந்தது.இதனால், 'காங்., ...

காங்., துணை தலைவர் ராகுலின் டில்லி வீடு முற்றுகை!

Posted:

இமாச்சல பிரதேச, காங்., முதல்வர், வீரபத்ர சிங் மற்றும் அவர் மனைவி, பிரதிபா மீது, பா.ஜ., நேற்று முன்தினம் கூறிய, ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லியில், காங்., துணைத் தலைவர், ராகுல் வீட்டை, பா.ஜ., இளைஞர் அணியினர், நேற்று முற்றுகையிட்டனர். அவர்களை, போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.பகிரங்க புகார்:இமயமலை மாநிலங்களில் ஒன்றான, இமாச்சல பிரதேசத்தில், காங்., கட்சியைச் சேர்ந்த, வீரபத்ர சிங், 79, முதல்வராக உள்ளார். பலமுறை மத்திய அமைச்சராகவும், மாநில முதல்வராகவும் இருந்துள்ள வீரபத்ர சிங் மீது, ...

தமிழக மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு : ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரையும் இலவசம்

Posted:

சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும், பொங்கல் பை மற்றும், 100 ரூபாய் ரொக்கப்பணம் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழர்களின் கலாசார விழாவான, பொங்கல் திருநாளை, பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக, கடந்த, தி.மு.க., ஆட்சியில், 2009ம் ஆண்டு, ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், 100 கிராம் பாசிப்பருப்பு, 20 கிராம் எடையுள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அடங்கிய, பொங்கல் பை வழங்கப்பட்டது.இது ஏழை மக்களிடம், மகிழ்ச்சியை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™