ஈகரை தமிழ் களஞ்சியம் |
- புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014
- புத்தாண்டு உறுதிமொழி: 'பாஸ்வேர்டை மாற்றுவோம்!'
- 2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்
- 1-1-2014 அன்று பிறந்த காணும் கவிஞர் கே இனியவனை அவர்களை வாழ்த்தலாம் வாங்க !
- இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட்
- தமிழ் சினிமா 2013
- தமிழ் சினிமா 2014 : கோடிகளைக் குவிக்க காத்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ்
- சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
- 1-1-2014 அன்று பிறந்த காணும் உமா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்!
- புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014
- மார்கழி கோலங்கள் :)
- தங்கத்தை அடைய எளிய வழி!
- சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்!
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- பொய் முகங்கள்
- தமிழ் சினிமா 2013 : கவனம் ஈர்த்த படைப்புகள்
- உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்
- 2013 டாப் 25 பரபரா
- பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி?
- 2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் !
- 2013 டாப் 10 பிரச்னைகள்
- மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
- ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்..
- வசந்த காலம்
- மௌனமாய்
- முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளரை அரிவாளால் வெட்டி ரூ.10 லட்சம் கொள்ளை
- பூமித் தாய்க்கு புத்தாண்டு வணக்கம்
- தீர்வு
- விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
- கருப்பட்டி மருத்துவம்!
- பயணம்
- வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ...
- "ரெடிமேடு'மயத்தால் மங்கும் மார்கழி: கோலமிடும் முறைக்கு முற்றுப்புள்ளி
| புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 Posted: 31 Dec 2013 11:30 AM PST புத்தாண்டு வாழ்த்துக்கள்--2014 புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆண்டாண்டு வாழ்த்திடவே அருள் வேண்டிடுவோம் ஆண்டவனிடம் நலமாக இருந்திடவே நல்லதே நினைத்திடுவோம் நல்லதே பேசிடுவோம் நல்லதே செய்திடுவோம் எண்ணங்கள் வண்ணமயமாக வண்ணங்கள் எழுத்தாக எழுத்துகள் கவிதையாக கவிதைகள் வாழ்த்தாகட்டும். ரமணியன் |
| புத்தாண்டு உறுதிமொழி: 'பாஸ்வேர்டை மாற்றுவோம்!' Posted: 31 Dec 2013 11:19 AM PST புத்தாண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில், இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது. புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. என்றாலும், வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது 'பாஸ்வேர்டை மாற்றுவோம்' என்பதுதான். இதைக் காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013-ம் ஆண்டு தொழில்நுட்ப ... |
| 2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் Posted: 31 Dec 2013 11:07 AM PST மின்வெட்டு தொடர்பான கண்துடைப்பு நாடகங்கள் இந்த வருடமும் தொடர்ந்தன. தேங்காய் சட்னி அரைக்கக்கூட மின்சாரம் விநியோகிக்க முடியாமல் திணறியது மின்சார வாரியம். அனல், புனல் மின் நிலையங்கள் பல நேரங்களில் படுத்துவிட்டன. கூடுதல் மின்சாரம் கேட்ட தமிழக அரசுக்கு, 'பெப்பே' காட்டியது மத்திய அரசு. சராசரி எட்டு மணி நேர மின்வெட்டு, மாநிலத்தில் வளர்ச்சி விகிதத்தை 4.6 சதவிகிதம் வரை குறைத்துவிட்டது. மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ, 'இது தற்காலிகத் தட்டுப்பாடு. கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின்தேவை காரணமாக ... |
| 1-1-2014 அன்று பிறந்த காணும் கவிஞர் கே இனியவனை அவர்களை வாழ்த்தலாம் வாங்க ! Posted: 31 Dec 2013 10:31 AM PST இனிய பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துகள் கே. இனியவன் |
| இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட் Posted: 31 Dec 2013 10:30 AM PST 2013ல் இந்தி திரையுலகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. நடிகர்கள், நடிகைகள், படங்கள் என தனித்தனியாக சாதித்து இருப்பது தான் சிறப்பு. * ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படம் 216 கோடி வசூல் செய்து மலைக்க வைத்தது. ஆனால் வருட இறுதியில் அமீர்கானின் 'தூம் 3' 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. 400 கோடியைத் தொடும் என்று பாலிவுட் விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள். * முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் 'The Great Gattsby' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்தார். ... |
| Posted: 31 Dec 2013 10:27 AM PST தமிழ் திரையுலகில் 2013ல் முன்னணி நடிகர்களின் படங்களை விட, புதிய நடிகர்களின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. ரஜினி, விக்ரம்,சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. கமலின் 'விஸ்வரூபம்', அஜித்தின் 'ஆரம்பம்', சூர்யாவின் 'சிங்கம் 2' ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்தது. படத்தின் வசூல் அளவில் முதல் இடத்தில் 'விஸ்வரூபம்', 'ஆரம்பம்', 'சிங்கம் 2' ஆகிய மூன்று இடங்களை பிடித்திருக்கிறது. 'ஆரம்பம்' 100 கோடிக்கு ... |
| தமிழ் சினிமா 2014 : கோடிகளைக் குவிக்க காத்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ் Posted: 31 Dec 2013 08:59 AM PST தமிழ்த் திரையுலகின் முக்கிய வியாபாரக் கேந்திரங்கள் திரையரங்குகள். பாக்ஸ் ஆபீஸ் என்று வர்ணிக்கப்படும் திரையரங்குகளின் வசூல் நிலவரம்தான் இன்றைய வணிகத் தமிழ்சினிமாவின் 'பிராண்ட் ஈக்குவிட்டியாக' வலம் வரும் மாஸ் ஹீரோக்களின் செல்வாக்கை நிலைநிறுத்தும் சக்தி. ஒரு ஹீரோவின் வசூல் உயர உயரத்தான், அவரது ஊதியமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி வசூல் புலிகளாக இருக்கும் மாஸ் ஹீரோக்களின் பாய்ச்சல் வரும் ஜனவரி முதல் பொங்கல் ஜல்லிக்கட்டாகத் தொடங்க இருக்கிறது! நடப்பு 2013 ஆம் ஆண்டைவிட எதிர்வரும், 2014 ... |
| Posted: 31 Dec 2013 08:56 AM PST சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் 2013–ம் ஆண்டு இன்றோடு (செவ்வாய்க்கிழமை) விடைபெறுகிறது. 2014 புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னையில் இன்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது சென்னை நகர வீதிகளில் இளைஞர்களின் ... |
| 1-1-2014 அன்று பிறந்த காணும் உமா அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 31 Dec 2013 08:54 AM PST 1-1-2014 அன்று பிறந்த காணும் உமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். |
| சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! Posted: 31 Dec 2013 08:29 AM PST விஷ்காம் படித்து விட்டு படம் டைரக்ட் செய்ய வந்திருக்கிறார் ஆஷிக் என்ற இளைஞர். தன்னுடன் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் இணைந்து உ என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அவரது நண்பர் அபிஜித் ராமசாமி மியூசிக் போட்டிருக்கிறார். ஜெயபிரகாஷ் கேமராமேன். வருண், நேகா, மதன் கோபால் நடித்திருக்கிறார்கள். எல்லோருமே ஆஷிக்கின் நண்பர்கள். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இணைந்து இந்தப் படத்தை தயாரிச்சிருக்காங்க. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது படத்தின் பாடல் காட்சி போட்டுக் காட்டப்பட்டது. ... |
| Posted: 31 Dec 2013 08:17 AM PST புதிதாய் பிறக்கும் புத்தாண்டே வளம் பல தருக! நலமோடு எம் மக்கள் வாழ்த்திட அருள்க! மொழியாலும், சமயத்தாலும் பிரிந்து கிடக்கும் எம் தேசத்து சகோதரர் தம்மை ஒற்றுமையாய் இருந்து சாதனைகள் பல செய்ய, மனங்களை ஒன்றாக்கி குணங்களை நன்றாக்கி வைத்திட வருக!! ஈகரையாம் எம் குடும்பம் அதில் ஈடு இணையற்ற சொந்தங்கள் பல உண்டு! புகைப்படத்தில் முகம் காணும் எம் சொந்தங்கள் யாவருக்கும் இந்த புத்தாண்டு இனிய புத்தாண்டாய் அமைந்திட வேண்டும்!! சோதனைகள் பல தாண்டி போனது பழைய வருடம்! அதன் பாதிப்புகள் ... |
| Posted: 31 Dec 2013 07:51 AM PST என்ன ஒரு அநியாயம், நானும் தேடி தேடி பார்த்துட்டேன் . ஒரு கோலம் இல்ல எ இந்த தளத்தில். நாளை மார்கழி பிறக்கிறது, so I started putting my 'kolangal' here. All these kolangal are drawn by me, my mother and my sister when I was young. I am sharing some of them here with you. Let us start the thread with "welcome kolam" மார்கழி கோலங்கள் |
| Posted: 31 Dec 2013 07:49 AM PST சிவவாக்கியர் சித்தர்களுள் தலை சிறந்தவர். பிறக்கும்போதே "சிவ சிவ" என்று சொல்லிக்கொண்டே பிறந்ததால் 'சிவவாக்கியர்' என்று பெயர் பெற்றார். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரை தரிசித்தார். சிவவாக்கியரை அந்த சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரை சோதிக்க எண்ணிய சித்தர் "சிவவாக்கியா செருப்பு தொழில் செய்த காசு என்னிடம் ... |
| சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Posted: 31 Dec 2013 07:19 AM PST 01/01/2014 - சாக்கிய நாயன்மாரின் குருபூசை சிலை (மார்கழி) மாதம் உடைகுளம் (பூராடம்) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது. திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயன்மார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 31 Dec 2013 07:08 AM PST ![]() |
| Posted: 31 Dec 2013 06:53 AM PST மகிழ்ந்து சிரிக்க ஒன்று பொய்யாய் சிரித்து மழுப்ப மற்றொன்று குமுறி அழுதிட ஒன்று போலியாய் நீலி கண்ணீர் வடிக்க மற்றொன்று பரிவு காட்டிட ஒன்று பாசாங்கு செய்திட மற்றொன்று பணிவு செய்ய ஒன்று பாய்ந்து குதற மற்றொன்று வேண்டிப் பெற்றிட ஒன்று பெற்றதை ம(றை)றக்க மற்றொன்று கூடி பேசிட ஒன்று குரூரம் வளர்த்திட மற்றொன்று கண்டு பதைத்திட ஒன்று காணாதிருந்திட மற்றொன்று கனிந்து உருகிட ஒன்று கல்லாய் இறுகிட மற்றொன்று ஆயிரமாயிரம் முகங்கள் நொடியில் மாறிட உண்மை முகம் உணரும் தருணம்....? |
| தமிழ் சினிமா 2013 : கவனம் ஈர்த்த படைப்புகள் Posted: 31 Dec 2013 05:53 AM PST தலைமுறைகள் : தலைமுறைகள் தாண்டி மூத்த கலைஞர்களுள் ஒருவரான பாலுமகேந்திரா பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கிய தலைமுறைகள் பல விதங்களிலும் ஆறுதல் அளிக்கிறது. தமிழ் வாசனையோ கிராமிய மணமோ அற்ற ஒரு தலைமுறைக்கும் அவை இரண்டையும் தன் மூச்சுக் காற்றாகக் கொண்ட ஒரு தலைமுறைக்கும் இடையே நடக்கும் சந்திப்பின் சலனங்கள் என்று இதன் கதையை வரையறுக்கலாம். கிராமக் கலாச்சாரத்தின் சத்தான அம்சங்களோடு சாதி உணர்வு என்னும் களையும் நவீனத்துவத்திற்கு முகம்கொடுக்காத ஒவ்வாமையும் இருப்பதையும் இப்படம் பதிவுசெய்கிறது. நகர வாழ்வையும் ... |
| உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் Posted: 31 Dec 2013 05:16 AM PST தமிழகத்தில் 2013-ம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் 55 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.அமலோற்பவநாதன் தெரிவித்தார். தமிழகத்தில் மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டம் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான தலைமை அலுவலகம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் சிக்கி ... |
| Posted: 31 Dec 2013 05:10 AM PST கலக நாயகனே! வருடத்தின் விஸ்வரூபக் காமெடி! உலக நாயகனை ஊறப் போட்டு ஊறப் போட்டு அடித்தது 'விஸ்வரூபம்'. ஆழ்வார்பேட்டையில் சீரியஸ் திங்கிங்கில் இருந்த கமலுக்கு சடாரென ஒரு சிந்தனை உதிக்க, 'டி.டி.ஹெச்-சில் விஸ்வரூபத்தை ரிலீஸ் பண்ணப்போறேன்...' என அறிவித்தார். 'இது வேலைக்காகாது...' என தியேட்டர்காரர்கள் கொதித்தெழ, பத்திக்கிச்சு பரபரப்பு. பிரச்னை பெரிதாக, 'முதல் நாள் தியேட்டர்ல... அடுத்தநாள் டி.டி.ஹெச்-ல' என்று துவையல் அரைத்தார். 'காரம் பத்தலையே...' என யோசிக்கும்போதே, 'முஸ்லிம்களை இழிவாகச் சித்திரிக்கிறது ... |
| பணம் சம்பாதிப்பது எப்படி? கோடீஸ்வரர் ஆவது எப்படி? Posted: 31 Dec 2013 04:49 AM PST மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான். அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அவன் ,தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான். 'அது எப்படி செயல் படுகிறது ?'என்று கேட்டான். ''சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ''என்றான். வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ... |
| 2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Posted: 31 Dec 2013 04:44 AM PST நம்பிக்கை ராஜன்! இந்திய ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக பதவி ஏற்றார் ரகுராம் கோவிந்த ராஜன். பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எஃப்) முன்னாள் தலைமைப் பொருளியல் நிபுணராகவும், மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்த இவர், சுப்பாராவுக்குப் பிறகு அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் பதவியேற்றபோதே ரூபாய் மதிப்பு உச்சத்தை நோக்கி சென்றது. ஏறக்குறைய 68-யைத் தொட்ட ரூபாய் 70-க்கும் மேலே சென்றுவிடுமோ என்று எல்லோரும் பயந்துகொண்டிருக்க, இவர் எடுத்த சில முக்கியமான நடவடிக்கைகள் காரணமாக, ... |
| Posted: 31 Dec 2013 04:42 AM PST தண்ணீர்... தண்ணீர்... 2013-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்... "2013 -ம் ஆண்டின் தொடக்கத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் விதிமுறைகளைப் பின்பற்றாத சுமார் 103 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அரசால் அதிரடியாக இழுத்து மூடப்பட்டன. உடனே சென்னைவாசிகள் குடிநீர்ப் பற்றாக்குறையில் தவித்தார்கள். குடிநீர் வணிகர்கள், அரசை மிரட்டினார்கள். பணிந்துபோவதைத் தவிர வேறு வழி இல்லாத அரசு, உடனடியாக மூடப்பட்ட ... |
| மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள் Posted: 31 Dec 2013 04:41 AM PST 1. கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது. 2. ஆண்மையற்றவனிடம் (அரவாணி) போரிடக்கூடாது 3. போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது . 4.மேலும் காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது. 5. போரிடாத வீரனை தாக்கக் கூடாது. 6. கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமே போரிட வேண்டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது . 7. போரில் சரண் (Surrender) அடைந்தவர்களை கொல்லாமல், போரில் ... |
| Posted: 31 Dec 2013 04:38 AM PST 'ஒரு பிடி மண் கூட தர முடியாது' என்று துரியோதனன் கூறியதை தொடர்ந்து மகாபாரதப் போர் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டு விட்டது. பாண்டவர்கள் ஐவரும் தங்களது திறமையை ஒவ்வொரு வகையில் வளர்த்துக் கொண்டு, தங்களின் போர்ப் படையை வலுப்படுத்திக் கொண்டிருந்தனர். சிவனை நோக்கி தவம் அதன் ஒரு பகுதியாக அர்ச்சுனன் தன் பங்குக்கு வனம் சென்று தவம் செய்யத் தொடங்கினான். சிவனை நோக்கி அவன் தவம் புரிந்தான். இதையடுத்து அவன் முன் தோன்றிய சிவபெருமான், அவனுக்கு அற்புத ஆயுதங் களை அருளினார். அந்த ஆயுதங்களோடு வனத்தின் வழியாக ... |
| Posted: 31 Dec 2013 04:05 AM PST வாழ்க்கையின் விதியை எப்படி மாற்றி அமைத்து விடுகிறது? இந்த அற்புதமான ஒரே ஒரு நொடி! வாழ்வே வீணாய்ப் போனதென வருத்தப்படுவதில் அற்தமில்லை வசந்த காலம் எந்த ஆண்டும் பிறக்காமல் இருப்பதில்லை தினம் தினம் தவறாமல் பூக்கிறது செடியில் ஒரு பூ! |
| Posted: 31 Dec 2013 03:57 AM PST பூவும் இனிப்பும் புன் சிரிப்பை உதிர்க்கும் உறவை இணைக்கும் வாதம், விவாதம் உறவை முறிக்கும்! தானாகவே ஒரு செடி வளர்ந்து மௌனமாய்ப் பூத்துச் செழிக்கிறது சமாதியின் மேலோ அதன் அருகிலோ! ! ! |
| முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளரை அரிவாளால் வெட்டி ரூ.10 லட்சம் கொள்ளை Posted: 31 Dec 2013 03:36 AM PST சென்னை முத்தையால்பேட்டையில் ஏற்றுமதி நிறுவனத்தில் புகுந்த கும்பல் அங்கிருந்த முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளரை அரிவாளால் வெட்டி ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. பொதுமக்கள் விரட்டியதால் பணத்தை ரோட்டில் வீசிச் சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அரிவாளால் வெட்டி, பணம் கொள்ளை சென்னை மண்ணடி ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் திருப்பூர் எம்.ஏ.சத்தார் (வயது 66). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ளார். அப்பகுதியில் துணிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ... |
| பூமித் தாய்க்கு புத்தாண்டு வணக்கம் Posted: 31 Dec 2013 03:24 AM PST என் தாத்தனுக்கும் எனக்கும் தாயாக இருக்கும் விசித்திரமானவள் அவள் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் ஆரம்பம் தெரியாது ஆனால் வளர்ச்சி வெகுவிரைவாய் இருக்கிறது மார்பகம் கருப்பை இரத்தம் நுரையீரல் எங்கும் வியாபித்திருக்கிறது கட்டுப்பாடற்ற செல்கள் அட்டூழியங்கள் செய்கின்றது நல்ல செல்களை சீரழிக்கின்றது இன்றைய நாளுடன் இன்னொரு வருடம் முடிகின்றது புதுவருடத்தில் மாற்றமிருக்குமா மருந்து கிடைக்குமா தெரியாது குறைந்த பட்சம் அவள் தேகத்தை அரிக்காமல் இற(ரு)ந்து போவதே என் கடமை அம்மா.. ... |
| Posted: 31 Dec 2013 02:58 AM PST உருவாகும் பிரச்சனைக்கு நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ தீர்வு உண்டெனினும் உயர்ப்புடன் மீண்டும் அது எத்தனை எத்தனையோ அரூபங்களில் அவதாரமெடுத்து நாள்தோறும் புதிது புதியதாய் முளைத்துக் கொண்டேயிருக்கிறதிங்கே முடிவில்லாமல்…! |
| விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! Posted: 31 Dec 2013 02:56 AM PST "காவி" - பிச்சைக்காரர்களின் உடை! 1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் ... |
| Posted: 31 Dec 2013 02:33 AM PST கிராமங்களில் இன்றும் 'கருப்பட்டி' காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை. இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து ... |
| Posted: 31 Dec 2013 02:28 AM PST ஃ சிறிதும் வெளிச்சமற்ற இருள் நிறைந்த இரவில் பாதையற்றப் பாதைக் கரும் பாறையின் மீது எறும்பின் பயணம் எப்படிச் சாத்தியமாகிறது? ஃ அவனுக்கு என்ன தெரியுமென ஏளனமாய் பேசிச் சிரித்தார்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற நினைப்போடு…!!! |
| வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Posted: 31 Dec 2013 02:01 AM PST நேற்றைய தினம் ( 30 /12/ 2013 ) தமிழகத்திற்கும் இந்தியத்'திரு' நாட்டிற்கும் ஒரு மாபெரும் துக்க தினம் ... தமிழ்க்குடி மக்கள் பலருக்கும் , தாத்தாவின் சொத்தான கச்சத்தீவை பேத்தி இலங்கைக்கு தாரை வார்த்தபோது சிறிது கூட எதிர்ப்பை காட்டாது நாட்டுக்கு 'உழைத்து' , இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்ற நல்லோர்களைத் தரிசிக்கின்ற இப்'புண்ணிய'பூமி , தன் வாழ்நாள் முழுமையையும் ( 75 வயது ) விவசாயிகளுக்கும் , சுற்றுப்புறச் சூழலை இயற்கை தூய்மை கெடாதபடி பாதுகாக்கவும் , மேம்படுத்தவும் ஈடுபாட்டுடன் உழைத்த இவரின் இழப்பில் ... |
| "ரெடிமேடு'மயத்தால் மங்கும் மார்கழி: கோலமிடும் முறைக்கு முற்றுப்புள்ளி Posted: 31 Dec 2013 12:45 AM PST கோவை: மாற்றுக்கலாசாரத்தை நோக்கி படையெடுப்பதால், அன்றாட வேலைகளும், "ரெடிமேடு' மயமாகிவிட்டன. மண்தரைகளை சிமென்ட் பூச்சுகள் ஆக்கிரமித்துள்ளதால், மார்கழியை வரவேற்கும் கோலமிடும் பழக்கத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இறைவழிபாட்டுக்கு உகந்த தமிழ் மாதங்களில், மார்கழியும் ஒன்று. மார்கழி மாதம் என்றாலே, சிறப்பு பூஜைகள், வீதியெங்கும் வண்ண கோலம், மூடுபனி என, எக்கச்சக்க சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும். விவசாயிகள், உழுது பயிரிட்ட விளைச்சலை, வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும், அறுவடை மாதம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
