Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரதமர் வேட்பாளர் யார் என சொல்லுங்க: காங்கிரஸ் மேலிடத்திற்கு சிதம்பரம் கோரிக்கை

Posted:

புதுடில்லி: ''லோக்சபா தேர்தலுக்கு முன், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில், ஒருவருமான, ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.கடந்த, 10 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சியில் உள்ள, காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக, பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டன. அதனால், சமீபத்தில் நடந்த, டில்லி உட்பட, ஐந்து மாநில, சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் நான்கு மாநிலங்களில் தோல்வி அடைந்தது. மிசோரம் மாநிலத்தில் மட்டுமே, வெற்றி பெற்றது.நான்கு மாநில தேர்தல்: ...

திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு? விஜயகாந்திற்கு கருணாநிதி வலை

Posted:

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, திருச்சியில், வரும் பிப்ரவரி, 15, 16ம் தேதிகளில் நடக்கிறது. மாநாட்டிற்காக, திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள பிராட்டியூரில், 250 ஏக்கர் நிலத்தில், ஆறு லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தலும், 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 8 அடி உயரத்தில், பிரமாண்டமான மேடையும் அமைக்கும் பணி நடக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கும் வகையில், மேடைக்கு பின்னால், 10 அறைகள் கட்டப்பட உள்ளன. மேடை, பந்தல் அமைக்கும் பணியில் இரவு, பகலாக, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர், தி.மு.க.,வினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ...

நாளை முதல் வீட்டுக்கு 700 லிட்டர் தண்ணீர் இலவசம் துவக்கம்

Posted:

புதுடில்லி: டில்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அதிரடி நடவடிக்கைகளை துவக்கியுள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 'ஒவ்வொரு வீட்டுக்கும், தினமும், 667 லிட்டர் குடிநீர் இலவசமாக வினியோகிக்கப்படும்' என, டில்லி மாநில அரசு அறிவித்துள்ளது.டில்லியின் புதிய முதல்வராக, 'ஆம் ஆத்மி' கட்சியின், அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுள்ளார். நேற்று, பல முக்கிய அறிவிப்புகளை, அவர் வெளியிடுவதாக இருந்தது. குறிப்பாக, 'டில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், தினமும், 700 லிட்டர் தண்ணீர், இலவசமாக வழங்கப்படும்' என, 'ஆம் ஆத்மி' கட்சி, தேர்தல் வாக்குறுதியில் ...

அண்ணா அறிவாலயத்திற்கு சொத்துவரி குறைத்து மதிப்பீடு? மறு மதிப்பீட்டில் 10 மடங்கு கூடுதலாக செலுத்த நேரிடும்

Posted:

சென்னை: தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சொத்து வரி குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநகராட்சி நடத்தியுள்ள மறுமதிப்பீட்டில் தற்போது செலுத்தப்படும் சொத்து வரியை காட்டிலும், 10 மடங்கு கூடுதலாக செலுத்த நேரிடும் என, தெரிகிறது.தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள் உள்ள, திறந்தவெளி நிலத்தை தானப்பத்திரம் மூலம் மாநகராட்சி வசம் ஒப்படைக்கும் விவகாரத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், அறிவாலயத்திற்கு சொத்து வரி, குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக புது சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ...

சோதனை சாவடிகளில் வசதிகள் இல்லாததால் ஊழியர்கள் திணறல்

Posted:

சென்னை: வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சோதனை சாவடிகளில், வாகனங்களை சோதனையிட, தேவையான வசதிகள் இல்லாததால், ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எல்லையோர சோதனையில், கடத்தல், குற்றவாளிகள் தப்பித்தல் போன்றவை அதிகரித்துள்ளதால், மாநிலப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் வந்து செல்லும் வாகனங்களை, சோதனை செய்யும் பணிக்காக, 19 இடங்களில், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெத்திக்குப்பம், திருச்சிற்றம்பலம் சாவடிகளுக்கு மட்டுமே, சொந்த கட்டடங்கள் உள்ளன. மற்ற, 17 சாவடிகள், வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன. மேலும், ...

'போலி ரேஷன் கார்டுகளை கண்டுக்காதீங்க!': வினோத உத்தரவால் அதிகாரிகள் அதிர்ச்சி

Posted:

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், போலி ரேஷன் கார்டுகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என்று, துறை மேலிட உத்தரவால், அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, அரிசி கார்டு, 1.84 கோடி, சர்க்கரை கார்டு, 10.49 லட்சம், போலீஸ் கார்டு, 62,354, எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு, 31,453 என, மொத்தம், 1.96 கோடி ரேஷன் கார்டுகள், புழக்கத்தில் உள்ளன. பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ரேஷன் கார்டு ...

முகாம்களில் தங்கியுள்ளவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்: உ.பி., அரசு அடாவடி

Posted:

லக்னோ: உ.பி.,யில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை, அம்மாநில அரசு, கட்டாயப்படுத்தி வெளியேற்றி வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், போலீசார் வெளியேற்றுவதால், அவர்கள், கவலையடைந்துள்ளனர்.உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, முசாபர் நகர் மாவட்டத்தில், சில மாதங்களுக்கு முன், இரு தரப்பினருக்கு இடையே, கலவரம் ஏற்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; ஏராளமான வீடுகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தால் பாதிக்கப்பட்டோர், பல்வேறு இடங்களில், நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர். கலவரம் ஓய்ந்து, ...

நேர்மையான பணியால் 'ஹாட்ரிக்' விருது: திருச்சி கலெக்டருக்கு குவியும் பாராட்டு

Posted:

திருச்சி: நேர்மையான பணியாலும், பாரபட்சமில்லா நடவடிக்கையாலும், நிர்வாகத் திறமையாலும், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீக்கு, தொடர்ந்து மூன்று முறை, தமிழக அரசின் சிறந்த கலெக்டர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, பல சமூக நல அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், பாராட்டு தெரிவித்துள்ளன.தமிழகத்தில், 2011ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. ஜூன் மாதம், திருச்சி மாவட்ட கலெக்டராக, ஜெயஸ்ரீ பொறுப்பேற்றார். பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை, மாவட்ட நிர்வாகத்தில், பல வளர்ச்சி பணிகளைச் செய்துள்ளார்; மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். தமிழக ...

பா.ம.க., பா.ஜ., ம.தி.மு.க., தே.மு.தி.க., பொதுக்குழுவில் நடக்கப்போவது என்ன

Posted:

சென்னை: புத்தாண்டின் முதல் வாரத்தில், பா.ம.க., பா.ஜ., ம.தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய நான்கு கட்சிகளும், அடுத்தடுத்து பொதுக்குழுக் கூட்டங்களை நடத்துகின்றன. அக்கட்சிகள், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து என்ன முடிவு அறிவிக்க போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்து உள்ளது.பா.ஜ., கூட்டணியில், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெறுவதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இந்த நான்கு கட்சிகளிடமும் கூட்டணிக்கான இறுதி வடிவம் இன்னும் முழுமை பெறாமல் இழுபறியில் உள்ளது.பா.ம.க.,: ...

இமாச்சல் காங்., முதல்வர் மீது ஊழல் புகார் : பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி: இமாச்சல பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, வீரபத்ர சிங், தனியார் மின் நிறுவனத்திடமிருந்து, கோடி கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார், என, பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, குற்றம் சாட்டியுள்ளார்.பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது: இமாச்சல பிரதேச மாநில முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, வீரபத்ர சிங், தனியார் மின் நிறுவனத்திடமிருந்து, 1.5 கோடி ரூபாய், லஞ்சம் பெற்றுள்ளார்.மேலும், வீரபத்ர சிங் மற்றும் அவரின் குடும்பத்தினர் பெயர்களில், 2.4 கோடி ரூபாய்க்கு, காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனம், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™