ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உதவி தேவை ஆரக்கிள் 9ஐ மென்பொருள்
- முப்பரிமாண நிழற்படங்கள் 3d IMAGES MY CREATION
- மீண்டும் தமிழில் 3D விளையாட்டுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை !
- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்.
- தேடித்தான் பார்க்கிறேன்
- புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு
- EEGARAI FLASH NEWS
- நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள்
- டிசம்பர் 31 & ஜனவரி 1 - திருத்தணியில் படித்திருவிழா!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -81)
- திருவெம்பாவை
- ஈசனின் இன்ப அன்பு!
- பனிசறுக்கில் விபத்து: கார் பந்தய வீரர் சூமாச்சர் படுகாயம்
- சுசீந்திரம் கோயிலில் ஜனவரி 1-இல் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா !
- தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது
- ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்!
- நியூ இயர் கொண்டாட்டமா? கவனமா இருங்க...
- நம்பிக்கை : ஒரு பக்க கதை
- அனுமன் போட்ட பிள்ளையார் சுழி!
- இது நிஜமா? :)
- உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்
- ஒரே இரவில் மதுவிற்கு மட்டும் ரூ.62,00,000
- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்
- பல நோய்களுக்கு மருந்தாகும் ஆப்ரிகாட் பழங்கள்
- சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
- இளைஞர் எழுக
- காய்ச்சல் நாட்டைத் திருத்த வந்த ஆம் ஆத்மித் தலைவரே
- காரைக்காலில் இரு கும்பலால் இளம்பெண் பாலியல் வல்லுறவு: இதுவரை 14 பேர் கைது
- தேசியக் கட்சி ஆக முடியுமா ஆம் ஆத்மி? - ஞாநி
- மதயானைக் கூட்டம் - விமர்சனம்
- சந்தையில் புதிது: விண்டோஸ் 8.1 உடன் கூடிய Acer Iconia W4!
- டெல்லி: புதிய அமைச்சர்களின் பின்னணி
- தங்கம் ஒரு சிறந்த முதலீடா?
- வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!
- ரஷ்ய நகரில் மீண்டும் குண்டுத் தாக்குதல்,குறைந்தது 12 பேர் பலி
- நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
| உதவி தேவை ஆரக்கிள் 9ஐ மென்பொருள் Posted: 30 Dec 2013 02:31 PM PST ஆரக்கிள் 9ஐ மென்பொருள் தேவைபடுகிறது. தந்து உதவுங்கள் நண்பர்களே. ![]() |
| முப்பரிமாண நிழற்படங்கள் 3d IMAGES MY CREATION Posted: 30 Dec 2013 12:21 PM PST முப்பரிமாண நிழற்படங்கள் காண்பதற்கு அலாதியான அனுபவத்தைத் தரக் கூடியவை. குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் விரும்பக் கூடியவை. இவற்றை இதற்கென உள்ள கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும். அவ்வாறான முப்பரிமாண நிழற்படங்களை உருவாக்கி தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன். இவையாவும் அடியேனின் படைப்புகள் என்பதைப் பணிவுடன் கூற விழைகிறேன். தங்கள் வரவேற்பைத் தொடர்ந்து இவை இங்கு தொடர்ந்து இடம் பெறும். தொடக்கமாக நடிகர் திலகத்தின் நிழற்படத்துடன் கூடிய நாட்காட்டி. இதில் நடிகர் திலகத்தின் ... |
| மீண்டும் தமிழில் 3D விளையாட்டுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Posted: 30 Dec 2013 11:54 AM PST மீண்டும் புதிய உற்சாகத்தோடு உங்களை சந்திக்க வருகிறேன். திடீர் வீடுமாற்றம் சகல தொடர்புகளையும் பாதித்து விட்டது. இன்ரநெற் இல்லை. காத்திருக்க வேண்டி வந்துவிட்டது இந்த இடைவெளியில் இரு முப்பரிமாண விளையாட்டு செய்தேன் புத்தாண்டுக்கு பரிசாக ஈகரை சார்பில் அனைத்து உறவுகளும் வழங்குகிறேன் game உலகம் உங்கள் கைகளில் File Name dang2life 1.2 (11 mb) தரவிறக்க முகவரி https://www.mediafire.com/?na8220lv8v6m6x3 screenshot: |
| செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை ! Posted: 30 Dec 2013 10:55 AM PST நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ... |
| இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார். Posted: 30 Dec 2013 10:21 AM PST பட்டுக்கோட்டை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் ... |
| Posted: 30 Dec 2013 09:50 AM PST பிரிந்து போனவன் புரிந்து வருவாயோ தேடித்தான் பார்க்கிறேன் பொறுத்திருக்க மனமில்லை தோழன் என்றுனக்கு தோள் தந்திருப்பாரோ தேடித்தான் பார்க்கிறேன் தெரிந்தவர் வீடெங்கும் பூமி பாரமென்று அந்தரத்தில் இருப்பாயோ தேடித்தான் பார்க்கிறேன் ஆலமர விழுதெங்கும் கையிற் காசின்றி பிச்சைதான் எடுப்பாயோ தேடித்தான் பார்க்கிறேன் கோயில் தெருவெங்கும் அயல்தேசம் போறாயோ அடிபட்டு கிடப்பாயோ தேடித்தான் பார்க்கிறேன் தேசிய நெடுஞ்சாலையெங்கும் கண்ணீர்க் குளங்களும் வரண்ட பாடில்லை தேடித்தான் பார்க்கிறேன் தேகத்தில் ... |
| புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Posted: 30 Dec 2013 09:18 AM PST சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சி தொடங்கவுள்ளார். அக்கட்சி மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் நகர் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சமூக சேவகர் சென்னை டிராபிக் ராமசாமிக்கு பாராட்டு விழா சனிக்கிழமை மாலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த டிராபிக் ராமசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: "தமிழ்நாட்டில் பெருகிவரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு கழகம்' (ம.பா.க) என்கிற ... |
| Posted: 30 Dec 2013 08:49 AM PST சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| நிமிர்ந்து நில் - ஒரு ஹீரோ - 147 வில்லன்கள் Posted: 30 Dec 2013 08:48 AM PST இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், வாசன் விஷூவல் வென்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் படம் நிமிர்ந்து நில். மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகும் இந்த ஆக்சன் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க, இவருக்கு ஜோடியாக அமலாபாலும், ராகினியும் நடிக்கிறார்கள். நரசிம்மா ரெட்டி என்கிற ஒரு கதாபாத்திரத்திற்காக சுமார் 12 கிலோ வரைக்கும் உடம்பை குறைத்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது பல இடங்களில் என்னாகுமோ என்று பயந்து கொண்டுதான் நடித்தேன். ... |
| டிசம்பர் 31 & ஜனவரி 1 - திருத்தணியில் படித்திருவிழா! Posted: 30 Dec 2013 08:28 AM PST திருமுருகனின் திருத்தலங்களில் ஆறு தலங்களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடுகின்றார். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருஆவினன்குடி, திருஏரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி) மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகியவையே அந்தத் தலங்கள். இவற்றில் திருத்தணி முருகனைத் தம் குலதெய்வமாக பல லட்சக்கணக்கான மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் 31-ஆம் தேதியும் ஜனவரி ஒன்றாம் தேதியும் நூற்றுக்கணக்கான திருப்புகழ்ச் சபையினர் கூடி திருப்புகழ் பாடியவண்ணம் படிமீது ஏறிச் சென்று தணிகேசனை வணங்கி ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -81) Posted: 30 Dec 2013 08:20 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| Posted: 30 Dec 2013 07:53 AM PST புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர். ÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் ... |
| Posted: 30 Dec 2013 07:50 AM PST திருவெம்பாவையின் முதல் எட்டுப்பாடல்கள் உரையாடற் போக்கில் அமைந்தன. அவற்றுள் சில பாடல்களில் எது உள்ளே இருப்பவள் பேச்சு, எது வெளியே இருப்பவர்கள் பேச்சு என்பதில் அறிஞர்கள் மாறுபடுகிறார்கள். அத்தகைய பாடல்களுள் "பாசம் பரஞ்சோதியும்' ஒன்று. "பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம் பேசும்போது எப்போது இப்போதுஆர் அமளிக்கே நேசம் வைத்தனையோ நேரிழையாய்'' என்பது வெளியே இருப்பவர்கள் பேச்சு. இதனை அடுத்து வரும் பகுதி உள்ளே இருப்பவள், வெளியே இருப்பவர்கள் ஆகிய இருவர் பேச்சா? அன்றி உள்ளே இருக்கும் ஒருத்தி ... |
| பனிசறுக்கில் விபத்து: கார் பந்தய வீரர் சூமாச்சர் படுகாயம் Posted: 30 Dec 2013 07:37 AM PST உலகின் நெ.1 கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாச்சர் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள மெரிபெல் நகரில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது, அங்குள்ள பாறை மீது அவரது தலை மோதி பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பார்முலா ஒன் பந்தயங்களில் ஏழு முறை பட்டம் வென்றவரான மைக்கேல் சூமாச்சர் அவ்வப்போது பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் நேற்றும் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பாறை ஒன்றின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி ... |
| சுசீந்திரம் கோயிலில் ஜனவரி 1-இல் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா ! Posted: 30 Dec 2013 07:36 AM PST சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜயந்தி விழா புதன்கிழமை (ஜன. 1) நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளார். ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மூல நட்சத்திரத்தை ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜயந்தி விழாவாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜயந்தி விழா ஜனவரி ... |
| தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Posted: 30 Dec 2013 07:33 AM PST தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியை எட்டியுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 25 சதவீதம், அதாவது, 40 லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துத் துறை பதிவேடு களின்படி, இந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வரை, தமிழகத்தில் 1 கோடியே 81 லட்சத்து 91 ஆயிரத்து 474 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி வரை தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியே 63 லட்சத்து 69 ஆயிரத்து 248 ஆக இருந்தது. ஒரே ஆண்டில், சுமார் 18 லட்சம் வாகனங்கள் கூடுதலாக ... |
| ஆம் ஆத்மியும், கூடங்குளம் உதயகுமாரனும்! Posted: 30 Dec 2013 07:26 AM PST கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனை இடிந்தகரையில் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷண், ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பூஷண், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடங்கியதில் இருந்தே போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போட்டியிட திட்டமிட்டு உள்ளது.அதற்காக நேர்மையான ... |
| நியூ இயர் கொண்டாட்டமா? கவனமா இருங்க... Posted: 30 Dec 2013 07:20 AM PST உலகம் முழுதும் சாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரே ஸ்பெஷல் தினம் நியூ இயர். எந்த ஒரு பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு புத்தாண்டுக்கு உண்டு. ஏதோ... புதிய வாழ்க்கை தொடங்குவது போல ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு இனம்புரியாத குதூகலம் பிறக்கும். வருடத்தின் முதல் நாள் சந்தோஷமாக இருந்தால் வருடம் முழுதும் சந்தோஷமாக இருப்போம் என்ற சென்டிமெண்ட் தான் இதற்கு காரணம். அந்த மகிழ்ச்சிக்கு இதோ... இன்னும் மூன்றே நாள் தான் 2013 முடிந்து 2014 புத்தாண்டு பிறப்பதற்கு. இந்த புத்தாண்டில் இன்னுமொரு சிறப்பு 67 ஆண்டுகள் ... |
| Posted: 30 Dec 2013 07:12 AM PST சாமி, மினரல் வாட்டர் ஏஜென்சி எடுத்திருக்கேன். பெருமாளுக்கு அர்ச்சனை செஞ்சு இந்த அக்ரிமெண்டை அவர் பாதத்துல வச்சித்தாங்க.. சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் தந்தை விட்டுச் சென்ற விவசாய நிலங்களை பிளாட்போட்டு விற்றதில் நால்ல லாபம் பார்த்தார் ராஜசேகர். அதன் பின் இவர் சினிமா தயாரிபபிலிருந்து சிலிகான் தொழிற்சாலை வரை, பெட்ரோல் பாங்கிலிரந்து பெயிண்ட் விற்பனை வரை பல்வேறு வணிக முயற்சிகளை மேற்கொண்டார். ஒவ்வொரு பிசினஸ் ஆரம்பிக்கும்போதும் பெருமாளுக்கு பெரிய அளவில் அர்ச்சø, அபிஷேகம் செய்துதான் ாரம்பிப்பார். ... |
| Posted: 30 Dec 2013 07:04 AM PST "அம்மா... வடை பண்றியா? வாசனை கமகமன்னு வருது...!'"ஸ்கூல்ல இருந்து வர்றப்பவே மூக்கு நமநமன்னுடுமே உனக்கு! கொஞ்சம் பொறு ஆஞ்சநேயருக்கு நைவேத்தியம் செய்துட்டு தரேன்...'"அனுமான்னு சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருதும்மா. இன்னிக்கு எங்க ஸ்கூல்ல டீச்சர் ராமாயண சம்பவம் ஒன்னை சொன்னாங்க.. அதை சொல்றதுக்கு முன்னால உங்கிட்டே ஒரு கேள்வி! ராமர் வனவாசம் செய்தப்ப தன்னோட மனைவி சீதையைப் பறிகொடுத்துட்டு ரொம்ப வருத்தப்பட்டார் இல்லையா?' "ஏய்... ராமாயணம் எல்லாம் எனக்குத் தெரியும்.. நீ சீக்கிரம் கேள்வியைச் ... |
| Posted: 30 Dec 2013 06:48 AM PST இது நிஜமானால் நல்லா இருக்கும் இல்லையா ? முதல்வர் கெஜ்வரிவாலாகிய நான்...: இனி அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் அனைவரும் இனி தங்களது பிள்ளைகளை அரசாங்க பள்ளியிலேயே படிக்கவைக்க வேண்டும் மீறினால் அரசாங்க வேலையை இழக்கவேண்டி நேரிடும் என்று டில்லி முதல்வராகிய நான் ஆணையிடுகிறேன்... |
| உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ் Posted: 30 Dec 2013 06:36 AM PST தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து வருகிறது. தனுஷ்தான் ஹீரோ. பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தின் இயக்குனர். படப்பிடிப்பு தளத்தில் வேல்ராஜை ஓரமாக உட்கார வைத்து தனுஷ்தான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் உதவி இயக்குனர்களாக இருப்பது அதிகமும் விஸ்காம் படித்த மாணவர்கள். இவர்களை தனுஷ் வேலை வாங்கும்விதம் பட யூனிட்டை முகம் சுழிக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதும், சமயத்தில் ... |
| ஒரே இரவில் மதுவிற்கு மட்டும் ரூ.62,00,000 Posted: 30 Dec 2013 06:32 AM PST அட்லாண்டாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் மது விருந்தை ஏற்பாடு செய்த பிரபல பாப் இசை தம்பதி அதற்காக ஒரே இரவில் சுமார் 62,00,000 ரூபாயை செலவிட்டுள்ளனர். அமெரிக்காவின் பிரபல பாப் இசை தம்பதியான பியன்ஸ் மற்றும் ஜே சஸ். இவர்கள் ஜார்ஜியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து கொடுத்தனர். அதில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விருந்தின்போது துசே மற்றும் ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் உயர்ரக மது வகைகள் பரிமாறப்பட்டன. எனவே அந்த விருந்தில் மட்டும் மது வகைக்கு ரூ.62 லட்சம் ... |
| ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம் Posted: 30 Dec 2013 06:12 AM PST ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவரை 9 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் கோமா நிலையில் உள்ளார். மெல்போர்னில் படித்துவந்த 20 வயதான மன்ராஜ்விந்தர் சிங், அவரது நண்பர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்புகையில், ஒரு பெண் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மாணவரின் முகத்தில் குத்தி கீழே தள்ளி அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை சரிமாரியாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ... |
| பல நோய்களுக்கு மருந்தாகும் ஆப்ரிகாட் பழங்கள் Posted: 30 Dec 2013 05:43 AM PST அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot Fruits - தமிழில் சர்க்கரை பாதாமி என்று அறியப்படுகிறது), பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறபழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது. தோல் ... |
| சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ... Posted: 30 Dec 2013 05:10 AM PST நெய்வேலி: சமையல் செய்யாமல் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து விட்டார். நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி பெயர் சீதா. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 21 வயதான சீதா, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாராம். சமைக்கவும் இல்லையாம். வீட்டுக்கு வந்த அருள் முருகன், மனைவி டிவி பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்து திட்டியுள்ளாராம். இதனால் கோபமமும், ... |
| Posted: 30 Dec 2013 04:50 AM PST உங்கள் குருதியைத் தாருங்கள் நாங்கள் விடுதலையைத் தருகிறோம் சுபாஷ் சொன்ன சபாஷ் வார்த்தைகள் இவை இன்றும் மெய்யாகிறது வியர்வைக்குப் பரிசாய் காத்திருக்கிறது வெற்றி நாடாயினும் வீடாயினும் உழைப்பு உயர்வு தரும் தொலைக்காட்சியில் தொலைந்து போகாமல் விடுமுறையில் பட்டை தீட்டூவீர் பள்ளியோ கல்லூரியோ மீண்டும் வாசலில் கால் வைக்கும்போது எல்லோருக்கும் தெரியவேண்டும் எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேனென்று |
| காய்ச்சல் நாட்டைத் திருத்த வந்த ஆம் ஆத்மித் தலைவரே Posted: 30 Dec 2013 04:37 AM PST நாட்டைத் திருத்த வந்த ஆம் ஆத்மித் தலைவரே நீங்கள் நடவடிக்கை எடுத்தால் எல்லோருக்கும் காய்ச்சல் வரும் என நினைத்தோம் ஊழல் செய்தோர்க்கு செயற்கை காய்ச்சல் வரும் முன் இயற்கை காய்ச்சல் உங்களுக்கு ஏன் வந்தது காய்ச்சல் கூட உங்களுக்கு நூற்றுக்கு 102 தான் போட்டிருக்கிறது நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற என ஒவ்வொரு இந்தியரும் சொல்கிறார் நாளை நலம் பெறுவீர் நாடு நலம் பெற |
| காரைக்காலில் இரு கும்பலால் இளம்பெண் பாலியல் வல்லுறவு: இதுவரை 14 பேர் கைது Posted: 30 Dec 2013 04:08 AM PST காரைக்காலில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இளம்பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இரண்டு கும்பல்களால் வல்லுறவு பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு தோழியுடன் வந்த திருவாரூரைச் சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவம் டிசம்பர் 25-ல் நடந்துள்ளது. தனது நண்பரைப் பார்ப்பதற்காக புதுச்சேரி வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இந்தப் பெண். தன்னுடன் ... |
| தேசியக் கட்சி ஆக முடியுமா ஆம் ஆத்மி? - ஞாநி Posted: 30 Dec 2013 03:59 AM PST டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருப்பதை அடுத்து, இன்று இந்தியா முழுவதும் மாற்று அரசியலை விரும்புவோர் மனதில் இருக்கும் கேள்வி - நம் ஊரிலும் ஆம் ஆத்மி சாத்தியப்படாதா? இந்த விருப்பம் நிறைவேறும் சாத்தியங்கள் என்ன என்று பார்ப்பதற்கு முதலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கு வெளியே வளரக் கூடிய அனைத்திந்தியக் கட்சியாகப் பரிமாணம் எடுக்கக் கூடிய கட்சியா என்று பார்ப்போம். ஆம் ஆத்மியின் தேசியச் செயற்குழுவில் இருக்கும் மனிஷ் சிசோடியா, கோபால் ராய், சஞ்சய் சிங், ... |
| Posted: 30 Dec 2013 03:32 AM PST ஒரு படம் பார்ப்பது போல் அல்லாமல், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்கு சென்று வந்தது போல இருக்கிறது இந்த 'மதயானைக்கூட்டம்'. செல்வாக்கு உடையவராக வாழ்ந்து வந்த ஜெயக்கொடி தேவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு அவர் செய்த துரோகத்தால் பிரிந்து தன் அண்ணன் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். மூத்த மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். முதல் மனைவியும், அவரது அண்ணனும் இரண்டாவது மனைவியின் குடும்பத்தினை ஒதுக்கி வைக்கிறார்கள். ஜெயக்கொடி தேவர் மாரடைப்பால் ... |
| சந்தையில் புதிது: விண்டோஸ் 8.1 உடன் கூடிய Acer Iconia W4! Posted: 30 Dec 2013 03:25 AM PST விண்டோஸ் 8.1 மென்பொருள் கொண்ட ஏசெர் ஐகோனியா ( Acer Iconia W4) என்ற புதிய வகை கையடக்கக் கணினி சந்தையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கையடக்கக் கணினி இதற்கு முந்தைய ஏசெர் வெளியீட்டைக் காட்டிலும் துல்லியமாகவும், பிரகாசமாகவும் படங்களைக் காட்டக்கூடிய 'Zero Air Gap' தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் தொடுதிரைக்கும் (touchscreen), எல்சிடி மாடலுக்கு (LCD module) இடையேயான காற்றைக் குறைத்து, பிரதிபலிப்பதைக் கட்டுப்படுத்தி வெளிப்புறத் தோற்றத்தை மேம்படுத்துகின்றது. மேலும், ... |
| டெல்லி: புதிய அமைச்சர்களின் பின்னணி Posted: 30 Dec 2013 03:22 AM PST டெல்லி: புதிய அமைச்சர்களின் பின்னணி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகிப்பவர்களின் பின்னணி வருமாறு: மணீஷ் சிசோடியா (41) ஆம் ஆத்மி கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரான மணீஷ் சிசோடியா, பத்திரிகையாளராக இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்தவர். பத்பர்கஞ்ச் தொகுதியில் பாஜகவின் நகுல் பரத்வாஜை 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மணீஷ் சிசோடியா தோற்கடித்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பத்திரிகைத்துறையிலிருந்து விலகி, ... |
| Posted: 30 Dec 2013 03:03 AM PST இந்தியாவில் தங்கத்தை விரும்பாதவர்கள் ஒருவரும் இல்லை. பல ஆண்டுகளாக அதன் விலை உயர்ந்து கொண்டே வந்ததும், குறிப்பாக கடந்த 5 முதல் 7 ஆண்டுகளின் வளர்ச்சி, எல்லோருக்கும் அது ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் என்ற நம்பிக்கை வந்ததற்கான காரணமாகும். நாம் தங்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஆபரண தங்கம், அன்றாடம் அணிந்துகொள்வது, அணியாதபோது அதை லாக்கரில் வைப்பது. பெரும்பாலும் இந்த வகையான தங்கம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொடுப்பது என்பது தொன்று தொட்டு வரும் ஒரு பண்பு அல்லது வழக்கம் என்றும் கூறலாம். மற்றொன்று ... |
| வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! Posted: 30 Dec 2013 02:31 AM PST வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!! கருங்கல்: குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர். இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில் பிராஜக்ட் எக்ஸ்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார். இந்த கம்பெனி இருக்கும் பகுதியை சேர்ந்த யு ஜின் ஷாவின் மகள் லிங் ஷீயு சாஓவை சந்தித்தார். ... |
| ரஷ்ய நகரில் மீண்டும் குண்டுத் தாக்குதல்,குறைந்தது 12 பேர் பலி Posted: 30 Dec 2013 02:08 AM PST ரஷ்ய நகரான வொல்கோக்ராடில் மின்சார பஸ் ஒன்றின் மீது நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ட்ராலிபஸ் என்றழைக்கப்படும் இந்த மின்சார பஸ் ஒரு ஜனசந்தடிமிக்க பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில், இந்த பஸ் ஏறக்குறைய முழுதுமாக அழிந்தது. நேற்றுதான் இந்த நகரின் மத்திய ரயில் நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த ட்ராலிபஸ் ... |
| நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 30 Dec 2013 01:42 AM PST 20-11-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/4dfebh648orpl98/Junior+Vikatan+20-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 17-11-2013-கல்கி இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/euayyy26ou8ige1/Kalki+17-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 16-11-2013-டைம் பாஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/x06a6vie3haqsxa/TimePass+Vikatan+16-11-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 10-11-2013-ஜூனியர் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
