Tamil News | Online Tamil News |
- விஜயகாந்த் அறிவிப்பால் காங்கிரஸ் - பா.ஜ., அப்செட்: வளைக்க முயன்ற தி.மு.க.,வும் கையை பிசைகிறது
- மின் வினியோகத்தில் திடீர் திருப்பம் : தடையில்லா மின் வினியோகம்
- இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதா: கருணாநிதி எதிர்ப்பு
- ஏற்காடு ஓட்டுப்பதிவு முடிந்தபின் மின்தடை வரும் என மக்கள் கவலை
- நடத்தை விதிகளை மீறவில்லை: தேர்தல் கமிஷனுக்கு முதல்வர் விளக்கம்
- "கிராமங்களிலும் மோடியின் தாக்கம்' : ஜெ., க்கு அ.தி.மு.க., தொண்டர் கடிதம்
- தமிழகத்தில் 8.5 லட்சம் விவசாயிகளை "காணோம்'
- அமேதியில் புதிய நெருக்கடியால் கர்நாடகாவில் போட்டியிடுகிறார் ராகுல்
- சொத்து மதிப்பை குறைத்து காண்பித்த கட்சி தலைவர்கள்
- எழுத்தறிவில்லாத சிறுமியருக்கு கம்ப்யூட்டர் வழங்க பீகார் திட்டம்
| விஜயகாந்த் அறிவிப்பால் காங்கிரஸ் - பா.ஜ., அப்செட்: வளைக்க முயன்ற தி.மு.க.,வும் கையை பிசைகிறது Posted: "என் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், திடீர் நிபந்தனை விதித்துள்ளதை அடுத்து, அக்கட்சியின் வரவை எதிர்பார்த்து, வலை விரித்திருந்த, தி.மு.க., கடும் அதிருப்தி அடைந்துள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் பா.ஜ., ஆகிய கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.டில்லி மாநில தேர்தலில், 11 தொகுதிகளில் போட்டியிடும், தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ஐந்து நாட்கள், பிரசாரம் செய்தார் விஜயகாந்த். கடைசி நாளில், டில்லியில் நிருபர்களை சந்தித்து, பரபரப்பு பேட்டி அளித்தார்."லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டு சேருவீர்களா?' என்ற ... |
| மின் வினியோகத்தில் திடீர் திருப்பம் : தடையில்லா மின் வினியோகம் Posted: சென்னை:தமிழகத்தில் நேற்று, மின் நுகர்வு குறைந்து இருந்தது. இதனால், தடையில்லாமல், மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது; பெரும்பாலான இடங்களில், மின்தடை ஏற்படவில்லை. காற்றாலை, அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி குறைந்ததால், தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், சென்னையில், 2 மணி நேரமும், மற்ற பகுதிகளில், 8 மணி நேரம் வரையும் மின் தடை செய்யப்படுகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு, போர்க்கால நடவடிக்கை எடுத்தது. அதை தொடர்ந்து அனல் மற்றும் நீர் மின் நிலையங்களில், மின் உற்பத்தி அதிகரித்தாலும், பருவ மழையால் மின்தேவை குறைந்ததாலும், ... |
| இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதா: கருணாநிதி எதிர்ப்பு Posted: சென்னை : "இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது' என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிக்க, இந்தியா மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபரிடம், இந்த தகவலை, இந்திய கடற்படை தளபதி ஜோஷி நேரில் தெரிவித்துள்ளார்.சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க இலங்கை சென்ற ஜோஷி, இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, நான்கு ஆண்டு கால இளநிலை தொழில் நுட்ப கல்வி குறித்த பயிற்சி அளிக்க, இந்திய கடற்படை தயாராக இருப்பதாக, இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் ... |
| ஏற்காடு ஓட்டுப்பதிவு முடிந்தபின் மின்தடை வரும் என மக்கள் கவலை Posted: ஏற்காடு இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பின், சேலம் மாவட்டம் முழுவதும், நான்கு முதல், ஆறு மணி நேரம் வரை மின்தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, மக்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.தமிழகத்தில் மின் உற்பத்தி திடீரென சரிவடைந்தது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகபட்சம், எட்டு மணி நேரம் வரை மின்தடை இருக்கிறது. கடந்த, 1ம் தேதி முதல், சென்னையில், இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடப்பதால், அங்கு மின் தடை இல்லாமல் இருந்தது. சமீபத்தில், சென்னையில் நடந்த, மின்வாரிய தலைமை ... |
| நடத்தை விதிகளை மீறவில்லை: தேர்தல் கமிஷனுக்கு முதல்வர் விளக்கம் Posted: சென்னை:'ஏற்காடு தொகுதியில், தேர்தல் பிரசாரத்தின் போது, புதிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய பதிலில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.ஏற்காடு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம், 28ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது, அவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டதாக, தேர்தல் கமிஷனில், புகார் செய்யப்பட்டது. புகாருக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன், முதல்வருக்கு, நேற்று முன்தினம், "நோட்டீஸ்' அனுப்பியது. நேற்று மாலை, 5:00 மணிக்குள், விளக்கம் அளிக்க வேண்டும் ... |
| "கிராமங்களிலும் மோடியின் தாக்கம்' : ஜெ., க்கு அ.தி.மு.க., தொண்டர் கடிதம் Posted: சிவகங்கை: ""நரேந்திர மோடி, கிராமங்களிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதை அ.தி.மு.க., பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பா.ஜ., வுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது,'' என, முதல்வர் ஜெ., க்கு, அக்கட்சி தொண்டர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த, முதல்வரின் தனிப்பிரிவு மனுக்களுடன், இக்கடிதமும் இருந்தது. சிவகங்கை, திருப்புத்தூர் ஒன்றியம், விராமதி ஊராட்சி அ.தி.மு.க., செயலாளர் ராஜூ, 51. இவர், 1972 ல் இருந்து, கட்சியின் விசுவாசி. செப்.,30 ல், முதல்வர் ஜெ., வின் இல்லத்திற்கு, மனு ஒன்று அனுப்பினார். அதில் எழுதப்பட்ட விபரம்:தற்போது, "சூப்பர் ... |
| தமிழகத்தில் 8.5 லட்சம் விவசாயிகளை "காணோம்' Posted: திண்டுக்கல்:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 8.5 லட்சம் விவசாயிகள், உழவுத்தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு மாறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், மானியங்களை நேரடியாக வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பயிர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் மண் மாதிரி விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில், விவசாய அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்து விவசாயிகள் பெயர், குடும்ப பின்னணி, நிலம், பட்டா எண் விபரங்களை சேகரித்து வருகின்றனர். ஆய்வில், ... |
| அமேதியில் புதிய நெருக்கடியால் கர்நாடகாவில் போட்டியிடுகிறார் ராகுல் Posted: பாட்டி மற்றும் தாயைப் போல், வரும் லோக்சபா தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட, ராகுல் முடிவு செய்துள்ளார். அமேதியுடன், தென்மாநிலமான கர்நாடகாவின், ஏதாவது ஒரு தொகுதியில் ராகுலை போட்டியிட வைக்கும் ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.பா.ஜ., வியூகம்: இதுகுறித்து, டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, அமேதியில் போட்டியிட்டு, ராகுல் எம்.பி.,யானார். அமேதி தொகுதியில், ராகுல், இம்முறை நின்றால், அவரை தோற்கடிக்க, பா.ஜ., புதிய வியூகம் வகுத்துள்ளது.அதன்படி, உள்ளூர் ராஜாவான, சஞ்சய் சிங் என்பவரை, ராகுலுக்கு ... |
| சொத்து மதிப்பை குறைத்து காண்பித்த கட்சி தலைவர்கள் Posted: புதுடில்லி:'நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின், முன்னணித் தலைவர்கள் பலர், கடந்த தேர்தலின் போது, தாக்கல் செய்த, தங்களின் சொத்து பட்டியலில், தங்கள் வசம் உள்ள சொத்துகளின் மதிப்பை குறைத்து காண்பித்துள்ளனர்' என, செய்திகள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து, டில்லியில் நேற்று வெளியான பத்திரிகை ஒன்றில், விரிவான செய்தி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.அதில், காங்கிரஸ் தலைவர், சோனியா, தன் விவசாய நிலங்களின் மதிப்பு, 2 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளார். ஆனால், அதன் மதிப்பு, 18 கோடி ரூபாய் என, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதைபோல், பா.ஜ., தலைவர், ராஜ்நாத் ... |
| எழுத்தறிவில்லாத சிறுமியருக்கு கம்ப்யூட்டர் வழங்க பீகார் திட்டம் Posted: பாட்னா: எழுத்தறிவில்லாத சிறுமியர், பெண்கள் கல்வி அறிவு பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிய கம்ப்யூட்டர்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.பீகார் மாநில, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ஷாகித் அலி கான் நிருபர்களிடம் கூறியதாவது: வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களில், எழுத்தறிவில்லாத, பெண்கள், சிறுமியருக்கு, கல்வி அறிவை புகட்டும் நோக்கில், அங்கன்வாடி மையம் மற்றும் வசுதா கேந்திரா போன்ற அமைப்புகள் மூலம், இரண்டு மாதம் பயற்சி அளிக்கப்படும். அதன் பின், அவர்களுக்கு, எளிதான தேர்வு நடத்தி, பயனாளிகள் தேர்ந்து எடுக்கப்படுவர். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 04,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |