Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்

Posted: 03 Dec 2013 11:16 AM PST

என் தலைமை -கூட்டணி OK --விஜயகாந்த்  என் தலைமையை ஏற்கும், எந்த கட்சியுடனும், கூட்டணி வைப்பதற்கு, நான் தயார். சில குறைகள் கூறப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியை, தமிழர்களுக்கு நல்லது செய்ய வைப்பதற்கு, என்னால் முடியும் என, நம்புகிறேன்,'' என, விஜயகாந்த் கூறியதால், புதிய பரபரப்பு எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் கூட்டணி எப்படி அமையப்போகிறது என்பது குறித்து, பல்வேறு யூகங்கள், நிலவி வருகின்றன. குறிப்பாக, தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பது பற்றிய எதிர்பார்ப்பு, பலமாக இருந்து ...

விலாசம்

Posted: 03 Dec 2013 11:14 AM PST

படவா பார்த்தி(ப .பா ): அண்ணே ! இந்த அட்ரஸ் கு எப்படி போகணும் ? சோம்பேறி சோமு :இப்படியே போ ...... முதல் தெருவ விட்டுடு... ரெண்டாவது தெருவ விட்டுடு..... மூணாவது தெருவுல ......................... முதல் சந்து விட்டுடு....... ரெண்டாவது சந்து விட்டுடு....... மூணாவது சந்துல ........... முதல் வீட்ட விட்டுடு ..... ரெண்டாவது வீட்ட விட்டுடு ..... மூணாவது வீட்ல ......... முதல் மாடிய விட்டுடு ..... ரெண்டாவது மாடிய விட்டுடு ..... மூணாவது மாடியில ......... முதல் ரூம விட்டுடு ...

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Posted: 03 Dec 2013 11:13 AM PST

M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ...

என் உறவுகளின் வாழ்த்துக்காக பகிர்கிறேன். ஆதிரா

Posted: 03 Dec 2013 10:31 AM PST



காமராஜர் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை வழங்கியுள்ளது. இதனை என் ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறு என்ன மகிழ்வு? என் முன்னேற்றத்தில் மகிழும் உறவுகளுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்.

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!

Posted: 03 Dec 2013 10:29 AM PST

அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர். கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர். ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர். மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, ...

ஐந்து கோடி பெண்களை இணையத்தில் இணைக்க கூகுள் திட்டம்

Posted: 03 Dec 2013 09:37 AM PST

சென்ற வாரம், கூகுள் இந்தியா நிறுவனம், புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. வரும் 2014 ஆம் ஆண்டு முடிவிற்குள்ளாக, புதியதாக 5 கோடி பெண்களை, இணையத்தில் இணைக்கப்போவதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது கூகுள். தற்போது இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் 20 கோடி பேரில், மூன்றில் ஒரு பங்கு தான் பெண்கள் உள்ளனர். இந்த நிலையை மாற்ற கூகுள் இந்தியா முயற்சிகளை எடுக்கும். எளிதாக இணையத்திற்கு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வழிகள், அன்றாட வாழ்க்கைக்கு எப்படி இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து பெண்கள் ...

சோனியா காந்தி பெயர் நீக்கம்

Posted: 03 Dec 2013 09:21 AM PST

சோனியா காந்தி பெயர் நீக்கம் டெல்லி: உலக கோடீஸ்வர அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை திடீரென Huffingtonpost ஊடகம் நீக்கியிருக்கிறது. உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருந்தனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் 12வது இடத்தை இப்பட்டியலில் இடம் பிடித்திருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுவும் இந்திய ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -72)

Posted: 03 Dec 2013 09:19 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி?

Posted: 03 Dec 2013 08:20 AM PST

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான அடையாள சான்றான ஆதார் அடையாள அட்டையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெறும் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ நிதி உதவி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தத்தை "MongoDB" என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஆனால் "MongoDB" நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கணிசமான நிதி ...

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Posted: 03 Dec 2013 07:57 AM PST

பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 03 Dec 2013 07:09 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

இந்தியா----எங்கே போகிறது ?

Posted: 03 Dec 2013 07:00 AM PST

இந்தியா----எங்கே போகிறது ? வத்தலக்குண்டு: ஆசைக்கு இணங்க மறுத்த, அண்ணன் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே குளத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகவேல், 42. இவர் நிலக்கோட்டையில் சைக்கிள் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி,32, எட்டு மாத குழந்தை சிவப்பிரியன். நேற்று முன்தினம் மூத்த மகன் வசந்த், 4, அதே ஊரில் உள்ள அங்கன்வாடிக்கு சென்றிருந்தான். வீட்டிற்கு வந்த போது தாயும், தம்பியும் தண்ணீர் டிரம்மிற்குள் மூழ்கி இருப்பதை பார்த்து, ...

57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர்

Posted: 03 Dec 2013 06:48 AM PST

இந்திய நீதிமன்றங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல வழக்குகள் வருடக்கணக்காக இழுத்தடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து உள்ளது. அதிகாரபூர்வ கணக்குகளின்படி 30 மில்லியனுக்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில 1950 ஆம் ஆண்டிலிருந்தும் வழக்கு நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உமாகாந்த் மிஸ்ரா என்பவர் கடந்த 1984 ஆம் ஆண்டில் தனது 30 ஆவது வயதில் தபால்துறையில் வேலை செய்துகொண்டிருந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் ...

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(

Posted: 03 Dec 2013 05:50 AM PST

இந்தியா இந்து நாடு இல்லைதான், ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு மற்ற மதத்தவருக்கும் உரிய இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், வாழ்ந்தும் வருகிறார்கள். இந்து மதம் புராணங்களாலும், இதிகாசங்களாலும், நம்பிக்கைகளாலும் கட்டமைக்கப்பட்டவை. ஒரு மனிதன், தன் இறைவனை எந்த உருவத்தில் தரிசிக்க, வணங்க விரும்புகிறானோ ...

கவிதையில் யாப்பு

Posted: 03 Dec 2013 05:38 AM PST

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 03 Dec 2013 04:49 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

தென்னாலி ராமன் விகடகவியான கதை

Posted: 03 Dec 2013 04:40 AM PST

தென்னிந்தியாவில், தென்னாலி என்ற கிராமத்தில் ராமன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ராமன் மிகவும் நல்லவன். எல்லோருக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யும் நல்ல குணம் படைத்தவன். ஆனால், அவன் மிகவும் குறும்புக்காரன். மற்றவர்களைக் கேலி செய்வது அவனுக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் வீதியோரத்திலும், பூங்காக்களிலும் விளையாடிப் பொழுதை வீணாக்கி வந்தான். ஒருநாள், அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இமயமலைச் சாரலிலே பல வருடங்கள் கடும் தவம் புரிந்து, அரிய சித்திகள் பல பெற்றவர்; பல ...

எத்தனை ஔவையார் ?

Posted: 03 Dec 2013 03:57 AM PST

ஒளவையார் என்றாலே, தி ஒன் அண்ட் ஒன்லி …. கே.பி.சுந்தராம்பாள் முகம் தான் நம் கண்முன் வந்து நிற்கும். ஒளவையார் எழுதிய பாடல் ஒன்றைக் கேள்வியாகக் கேட்டால், 'பழம் நீயப்பா…' எனத் தேர்வில் எழுதி வைக்கும் அளவுக்கு அந்த ஒளவையார் நமக்கு பசுமரத்து ஆணி. ஆந்த ஆணியைத் தானட அசைத்துப் பார்த்திருப்பதாக சமீபத்தில் விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆறர்ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், ஒளவையார் எழுதிய பாடல் ஒன்றின் கீழ் 'சங்க காலத்து ஒளவையாரும் ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒரே நபர் அல்ல' என ஆசிரியர் குறிப்பு இருக்கிறது. ...

நமது பூர்வீகம் செவ்வாய்க் கிரகம்

Posted: 03 Dec 2013 03:32 AM PST

பூமியிலுள்ள மனிதர்கள் எல்லோருக்கும் செவ்வாய் கிரகம்தான் பூர்விகம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஃப்ளோரன்ஸில் நடைபெறும் 23-வது கோல்டுஷ்மித் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், உயிர்களின் தொடக்கத்துக்கு மூலகாரணமான "மாலிப்டினம்' என்ற ஆக்ஸிஜன் நிரம்பிய கனிமம், செவ்வாய் கிரகத்தில் மட்டுமே இருப்பதாகவும், புவிப்பரப்பில் அவை கிடையாது என்பதால் உயிர்கள் தோன்றியது செவ்வாய் கிரகத்தில்தான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற அமெரிக்க விஞ்ஞானி ...

ஆன்ம தத்துவம்

Posted: 03 Dec 2013 03:29 AM PST

ஆன்மஞானம் ஆன்மாவும் அதன் ஆற்றலும் எண்ணிலா கோடி அண்டங்கள் பேரண்டங்கள் இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்குவது, அடிப்படையாக இருப்பது, ஒரு அணுசக்தி. அதையே சித்தர்கள் ஞானிகள் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட, பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதையே பரமாத்தமா என்றனர். அதே மூல அணுவின் ஆற்றலோ ஒவ்வொரு ஜீவராசிகளின் இயக்கங்களுக்கும் காரணமாக விளங்குவதால் ஜீவாத்மா என்றனர். ஆகவே ஆன்மா ...

இந்திய இணையப் பயன்பாட்டில் மும்பைக்கு முதல் இடம்

Posted: 03 Dec 2013 03:29 AM PST

இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், மும்பை பெருநகரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கோடியே 20 லட்சம் பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருவதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதனை அடுத்து, இரண்டாம் இடத்தை, டில்லி, 81 லட்சம் பேருடன் கொண்டுள்ளது. ஹைதராபாத் நகரம், அடுத்ததாக 47 லட்சம் பேரையும், சென்னை 45 லட்சம் பேரையும், கொல்கத்தா 44 லட்சம் பேரையும் கொண்டுள்ளன. 2012ல் சென்னையில் 34 லட்சம் பேர் இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சென்ற ஓராண்டில் வியக்கத்தக்க வகையில், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ...

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Posted: 02 Dec 2013 08:53 PM PST

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும். முதல் கேள்வியை நானே கேட்கிறேன்: வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )

Posted: 02 Dec 2013 08:47 PM PST

December2013-PhotoShop Creative Magazine PDF ( 50 Practical Photoshop Tips And Skills) http://www58.zippyshare.com/v/43279368/file.html September/October2013-Mobile Choice (UK) Magazine PDF Free Download Link.. http://www64.zippyshare.com/v/47294973/file.html 14-11-2013-Web User(UK) Tech Magazine PDF Free Download Link.. http://www51.zippyshare.com/v/65016778/file.html November2013-Computer Active India Magazine PDF Free Download Link.. http://www50.zippyshare.com/v/33622752/file.html November2013-Apps ...

ஸ்ரீமத் பகவத் கீதை -சுவாமி ஆசுதோஷானந்தர் நூல் .

Posted: 02 Dec 2013 08:43 PM PST

ஸ்ரீமத் பகவத் கீதை -சுவாமி ஆசுதோஷானந்தர் நூல் . http://www.mediafire.com/download/3i9s743ard5o4mn/Bhagavath+Geethai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www58.zippyshare.com/v/79640883/file.html

மவுனம் சம்மத்திற்கு அடையாளம்'

Posted: 02 Dec 2013 08:29 PM PST

சென்னை: "ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு கேட்டும், ஒரு சில கட்சிகள் பதில் எழுதவில்லை. மவுனம் சம்மத்திற்கு அடையாளம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி புது விளக்கம் அளித்துள்ளார். அவரது அறிக்கை:நாளை, ஏற்காடு தொகுதிக்கு இடைத்தேர்தல். தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது. நானும், அன்பழகனும் உடல் நிலை காரணமாக தேர்தல் பிரசாரத்திற்கு போக இயலவில்லை. வாக்காளர் துணைப் பட்டியலில் புதிதாக, 18 வயது நிரம்பியவர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்ற நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத, 40 வயது நிரம்பியவர்களை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™