Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய வசூல் வேட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் அவலம்

Posted:

புதுக்கோட்டை அருகே, கடந்த தி.மு.க., ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட சமத்துவபுர வீடுகள், மூன்று ஆண்டுகளைக் கடந்தும், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதற்கிடையே, வீடுகள் ஒதுக்கப்படுவதாக கூறி, வசூல் வேட்டை ஜரூராக நடக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட பாக்குடி மற்றும் அன்னவாசல் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளில், தி.மு.க., ஆட்சியின்போது, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன.குடிநீர், சாலை, ரேஷன் கடை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன், 100 வீடுகள் அடங்கிய சமத்துவபுரம், 1 கோடியே, 86 ...

'108' மூலம் காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை அதிகம்

Posted:

மதுரை:மதுரை உட்பட நான்கு மாவட்டங்களில், அரசின் '108'ஆம்புலன்ஸ் சேவையால், இந்த ஆண்டு காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை, 2.79 லட்சம். அதிகபட்சமாக பிரசவத்திற்காக மட்டும் 82 ஆயிரம் பேர், ஆம்புலன்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.மதுரையில் இச்சேவை, 2008 நவ., 4 (19 ஆம்புலன்ஸ்); திண்டுக்கல்லில், 2009 மார்ச் 3 (16); தேனியில், 2009 மார்ச் 1 (10); விருதுநகரில், 2008 டிச., 29(14) ல் ஆரம்பிக்கப்பட்டது. மதுரையில்தான் ஆம்புலன்ஸ் சேவையை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். அடுத்ததாக, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் பயன்பெற்றுள்ளன.பிரசவம், விஷம் குடித்தவர்கள், மாரடைப்பு, தீக்காயம் அடைந்தோர் அதிகம் ...

ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு: பரபரப்பு ஏற்படுத்தும் தகவல்

Posted:

ஈரோடு : தமிழகத்தின், 'டாப் 16' அரசுத்துறை லஞ்ச அதிகாரிகள் பட்டியலை லஞ்சம் கொடதோர் அமைப்பினர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் .ஈரோட்டில், கடந்த வாரம், பத்திரிகையாளர்களை சந்தித்த, தமிழ் மீட்சி இயக்கத்தினர், தமிழக அரசுத்துறையில், 'டாப் 16' லஞ்ச அதிகாரிகளின் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்தனர். இந்த அமைப்பு தன்னார்வ தொண்டு அமைப்பாகும். இதனால், அரசுத்துறை அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.நேற்று காலை, ஈரோட்டில் தமிழ் மீட்சி இயக்கத்தின் கலந்துரையாடல் கருத்தரங்க கூட்டம், மாநில செயலரும் சமூக ஆர்வலருமான நந்தகோபால் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தின், ...

அறவழி போராட்டத்தில் வெற்றி காணும் அன்னா!

Posted:

வெள்ளையனின் பிடியில் சிக்கித் தவித்த இந்தியா, 1947ம் ஆண்டு, விடுதலை பெற்றபோது, தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல், சுதந்திர தின கொண்டாட்டங்களில் கூட கலந்து கொள்ளாது, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இனக்கலவரத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில், அங்கு சென்று உண்ணாவிரதம் இருந்தவர், அண்ணல் காந்தியடிகள்.இவரின் சாயலாய், அமைதியின் தூதராய், அறவழியில் காரியங்களை சாதிக்கும் வலிமை உடையவராய், 'அன்னா ஹசாரே,' 76.கிசன் பபட் பாபுராவ் ஹசாரே என்ற இயற்பெயருடைய இவர், மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் அருகில் உள்ள ராலேகான் சித்தியில் பிறந்தவர். இளம் வயதில், ...

ஏழா? முடியாது; 19 தொகுதி வேண்டும் : தி.மு.க.,விடம் கேட்கிறது தே.மு.தி.க.,

Posted:

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு இரண்டாவது பெரிய கட்சி அந்தஸ்து வழங்கி, ஏழு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பேச்சுவார்த்தையை, திரைமறைவில் தி.மு.க., மேலிடம் துவக்கியதற்கு, தே.மு.தி.க., தரப்பு இன்னும் பிடி கொடுக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால், தங்களுக்கு, 19 லோக்சபா தொகுதிகளை தர வேண்டும் என, தே.மு.தி.க., பேரம் பேசுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.கடந்த, 2011ல் நடந்த, சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், 41 தொகுதிகளை பெற்று, விஜயகாந்த் தலைமையிலான, தே.மு.தி.க., தேர்தல் களத்தை சந்தித்தது. அந்த கணக்கின் அடிப்படையில், தே.மு.தி.க., ...

மேயர் துரைசாமி தரம் தாழந்து பேசுவதா: கருணாநிதி ஆதங்கம்

Posted:

சென்னை : அறிவாலயம் நிலம் விவகாரத்தில், மேயர் துரைசாமி, தரம் தாழ்ந்து பேசுவார் என்று, எதிர்பார்க்கவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அறிவாலயத்திற்குள் இருக்கும் திறந்த வெளிநிலம், இதுவரை தானப்பத்திரம் மூலம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. சூடு, சொரணை இருக்குமானால், நிலத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உங்கள் மேலிடத்தில் சொல்லுங்கள் என, சென்னை மாநகராட்சி மேயர் துரைசாமி, மன்றக் கூடத்தில் சாடியுள்ளார். மேயரை, நான் நீண்ட நாட்களாக அறிவேன். அவர், இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து பேசுவார் என, எதிர்பார்க்கவில்லை. துரைசாமி ...

குறிப்பிட்ட காலத்தில் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை : டில்லி முதல்வர் கெஜ்ரிவால்

Posted:

காஜியாபாத்:''இப்போது தான், முதல்வராக பதவியேற்றுள்ளேன். அரசுத் துறைகளில் உள்ள நடைமுறைகளை மாற்ற, 10 நாட்களாவது, அவகாசம் வேண்டும்; அதுவரை, பொறுமையாக இருக்க வேண்டும்,'' என, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை சந்தித்த பொதுமக்களிடம் தெரிவித்தார்.டில்லி முதல்வராக, 'ஆம் ஆத்மி' கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று முன்தினம் பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன், 'குடிநீர் பிரச்னை, மின்சார பிரச்னை ஆகியவற்றை, பதவியேற்ற, 24 மணி நேரத்தில் தீர்ப்பேன்; ஊழலை ஒழிப்பேன்' என, முழங்கி வந்தார்.மக்கள் அதிக எதிர்பார்ப்பு:இதனால், அவரிடம், டில்லி மக்களுக்கு ...

படேல் சிலைக்கு இரும்பு சேகரிக்க 1,000 லாரிகள்

Posted:

ஆமதாபாத்:குஜராத்தில், பிரமாண்ட, சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு தேவையான, மண், இரும்பை சேகரிக்க, 1,000 லாரிகள், நேற்று முன்தினம், ஆமதாபாத்திலிருந்து, நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன.பா.ஜ., பிரதமர் வேட்பாளர்:அந்த லாரிகளை, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, கொடியசைத்து அனுப்பி வைத்தார். நாட்டின், முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திரத்திற்கு முன், சிதறிக் கிடந்த சமஸ்தானங்களை ஒன்றுபடுத்தியவருமான, சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத்தில் சிலை அமைக்க, நரேந்திர மோடி முடிவு செய்தார்.நர்மதா நதிக்கரையில், சர்தார் சரோவர் அணை ...

"அசரீரி' வாக்கு போல ராகுலின் தீர்வுகள் வினோதம்: காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்கிறார் மோடி

Posted:

ராஞ்சி: நாட்டில் என்ன நடக்கிறது என புரிந்து கொள்ளாமல், காங்., துணை தலைவர் ராகுல், அசரீரி வாக்கு போல், ஏதாவது கருத்துக்களை கூறி வருவது வினோதமாக உள்ளது. அவர் கூறுவதற்கேற்ப, காங்., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் செயல்படுகின்றனர்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, ராகுலை கிண்டலடித்துள்ளார். பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த, பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் நேற்று, பங்கேற்றார். அந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது:பழங்காலத்தில், அசரீரியாக கூறப்படும் வாக்கு, பெரும் நம்பிக்கையை ...

முலாயம் ஊரில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் : எதிர்க்கட்சிகள் கொதிப்பு

Posted:

லக்னோ: உத்தர பிரதேசத்தில், மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இன்னமும் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர், முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரில், சைபாய் திருவிழா, நேற்று துவங்கியுள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம், உ.பி.,யின் முசாபர்நகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்த, இந்து - முஸ்லிம் மதக்கலவரத்தில், 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இன்னமும், நிவாரண முகாம்களில் உள்ளனர். அவர்களின், 34 குழந்தைகள், குளிர், நோய் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™