Tamil News | Online Tamil News |
- நீச்சல் குளம் அமைக்க தாமதம் : ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட்: உ.பி., முதல்வர் அதிரடி
- பீகாரில் மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
- நீர் நிலை ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக ஆளும்கட்சி: காற்றோடு போனதா முதல்வர் அறிவிப்பு?
- கலெக்டர்களுக்கு கை கொடுக்குமா காய்கறி உற்பத்தி? மலிவு விலை கடைகள் திறப்பதில் சிக்கல்
- வெளி மாநில தனியார் மின்சாரம் பிப்ரவரியில் கிடைக்குமா? தத்தளிக்கும் தமிழகத்துக்கு அடுத்த சிக்கல்
- தே.மு.தி.க., கூட்டணி: கருணாநிதி விருப்பம்
- ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணி விதிகளை மாற்ற கோரி பிரதமருக்கு சோனியா கடிதம்
- 28ல் பொறுப்பேற்கிறார் கெஜ்ரிவால்
- பீகார் முதல்வர் நிதிஷ்குமார் - காங்., உறவில் பிளவா?
- தி.மு.க., பா.ஜ., அணியில் சேர தே.மு.தி.க., பேரம் : கடும் நிபந்தனைகளால் இரு கட்சிகளும் மிரட்சி
| நீச்சல் குளம் அமைக்க தாமதம் : ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட்: உ.பி., முதல்வர் அதிரடி Posted: லக்னோ: உ.பி., மாநிலத்தில் தன்னுடைய சொந்த கிராமத்தில் நீச்சல் குளம் அமைக்க கால தாமதம் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் உ.பி. முதல்வர் அகிலேஷ்யாதவ்.நீச்சல் குளம்: உ.பி., மாநில முதல்வர் அகிலேஷ்யாதவ்வின் சொந்த ஊரான சேபாய் கிராமத்தில் ரூ.200 கோடி வரையில் விளையாட்டுத்துறை மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது. இதில் அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற வகையிலான நீச்சல் குளத்தை அமைக்க சுமார் 60 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கப்பட்டது. மாநில விளையாட்டுத்துறை இயக்குனராக இருந்து வருபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ... |
| பீகாரில் மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை Posted: பாட்னா: பீகாரில், கிராம பஞ்சாயத்து ஒன்றில், திருமணமாகாத பெண்கள், மொபைல் போன் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது, சோம்கார். இந்த கிராமத்தில், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், ஜாகீர் அன்சாரி. நேற்று முன்தினம், கிராம பஞ்சாயத்து கூடியது.அதில், 'திருமணமாகாத இளம்பெண்கள், சிறுமியர், மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது' என, தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நேற்று, பஞ்., தலைவர், அன்சாரி அறிவித்தார்.அதில், ''தடையை மீறி, யாரேனும், மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை அறிந்தால், அவர்கள், ஊரை விட்டு விலக்கி ... |
| நீர் நிலை ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக ஆளும்கட்சி: காற்றோடு போனதா முதல்வர் அறிவிப்பு? Posted: நீர் நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும், விவசாய சங்கத் தலைவர், வீட்டுக்குச் சென்று, அ.தி.மு.க., பிரமுகர் மிரட்டிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்த நாகமங்கலம் அருகே அழுந்தூரில், 75 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் ஏரி உள்ளது. இதன் மூலம், 100 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியில், 28 ஏக்கர் நிலத்தை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்கின்றனர்."ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்' என, அந்த ஏரி மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் சார்பில், விவசாயி ஆரோக்கியராஜ், மதுரை உயர் நீதிமன்றத்தில், 2005ல் வழக்கு ... |
| கலெக்டர்களுக்கு கை கொடுக்குமா காய்கறி உற்பத்தி? மலிவு விலை கடைகள் திறப்பதில் சிக்கல் Posted: தமிழகத்தில், காய்கறி விளைச்சல் போதுமான அளவில் இல்லை. எனவே, முதல்வர் உத்தரவுபடி, அனைத்து மாவட்டங்களிலும், மலிவு விலை காய்கறி கடை திறக்க முடியாமல், கலெக்டர்கள் திணறி வருகின்றனர்.'பண்ணை பசுமை அங்காடி':வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த, 'பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடி' திட்டம் அரசால் துவக்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம், சென்னையில், 40 இடங்களில், இந்த மலிவு விலை காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் காய்கறிகளை உற்பத்தி செய்ய, 10 ஆயிரத்து 493 ... |
| வெளி மாநில தனியார் மின்சாரம் பிப்ரவரியில் கிடைக்குமா? தத்தளிக்கும் தமிழகத்துக்கு அடுத்த சிக்கல் Posted: வெளி மாநிலங்களில் இருந்து, 1,208 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு மின்சார வாரியம், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதேசமயம், "சதர்ன் கிரிட்' அமைக்கும் பணி, ஜனவரியில் நிறைவு பெற்றாலும், மே மாதம் முதல்தான் முழுமையாக செயல்படும் என, தெரிய வந்துள்ளது. எனவே, தனியார் மின்சாரம், பிப்ரவரியில் கிடைக்குமா என்பதில், சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளது. இதனால் நிலவும் பற்றாக்குறை, வெளி மாநில மின் கொள்முதல், கட்டுப்பாடு, மின் தடை மூலம் ஈடு செய்யப்படுகிறது. எதிர்கால மின் தேவையை ... |
| தே.மு.தி.க., கூட்டணி: கருணாநிதி விருப்பம் Posted: சென்னை:"தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றால், மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்,'' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி கூறினார். சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று இரவு, கருணாநிதி அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றால், மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். தமிழக மீனவர்களை, இலங்கை அரசு சிறை பிடித்து வைத்துள்ள விவகாரத்தில், மத்திய அரசு தலையிட்டு, நல்ல முடிவு எடுக்கும்.இவ்வாறு, அவர் ... |
| ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணி விதிகளை மாற்ற கோரி பிரதமருக்கு சோனியா கடிதம் Posted: புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், இவர்களுக்கான பணி விதிகளில் மாற்றம் கொண்டு வரக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஐ.மு., கூட்டணியின் தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார். உ.பி.,யில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான துர்கா நாக்பால், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் பணியில் இருந்த போது, மணல் கடத்தல் மாபியா கும்பலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். இதனால், ஆளுங்கட்சியான, சமாஜ்வாதி கட்சிக்கும் நெருக்கடி கொடுத்தார். நொய்டாவில் அவர் துணை கலெக்டராக இருந்தபோது, கட்டப்பட்டு வரும் மசூதி ஒன்றில், அரசு ... |
| 28ல் பொறுப்பேற்கிறார் கெஜ்ரிவால் Posted: புதுடில்லி: டில்லியில் சட்டசபை தேர்தலுக்கு பின், அரங்கேறிய அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராகவும், அவரின் சகாக்கள் ஆறு பேர், அமைச்சர்களாகவும், நாளை மறுநாள், பதவியேற்கின்றனர்.பெரும்பான்மை இல்லை:டில்லி மாநிலத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த, சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., 32 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், ஆட்சி அமைக்க தேவையான அளவு, அந்த கட்சிக்கு, பெரும்பான்மை கிடைக்கவில்லை.அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, 28 ... |
| பீகார் முதல்வர் நிதிஷ்குமார் - காங்., உறவில் பிளவா? Posted: பாட்னா : பீகார் முதல்வர், நிதிஷ்குமார், காங்கிரஸ் கட்சி மற்றும் மேலிடம் மீது பாயத் துவங்கி உள்ளார். காங்கிர சுடன், லாலு மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் கட்சிகள் மீண்டும் நெருங்கியதை அடுத்து, பீகாருக்கு, சிறப்பு அந்தஸ்து கிடைக்கவிடாமல், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, முட்டுக்கட்டை போட்டு வருவதாக, நிதிஷ், புகார் கூறியுள்ளார்.17 ஆண்டு உறவு : காங்கிரசுக்கு எதிரான, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், 17 ஆண்டுகளாக அங்கம் வகித்திருந்தது, சரத் யாதவை தலைவராக கொண்ட, ஐக்கிய ஜனதா தளம் கட்சி. அக்கட்சியை சேர்ந்த, பீகார் முதல்வர், ... |
| தி.மு.க., பா.ஜ., அணியில் சேர தே.மு.தி.க., பேரம் : கடும் நிபந்தனைகளால் இரு கட்சிகளும் மிரட்சி Posted: தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க.,வை சேர்க்க, பா.ஜ., தரப்பில், ஏற்கனவே தூது அனுப்பப்பட்டு, பேச்சு வார்த்தையும் துவங்கப்பட்டுள்ளது. இப்போது, தி.மு.க., தரப்பில் இருந்தும், தே.மு.தி.க.,வுக்கு தூது போயுள்ளது. கடும் நிபந்தனைகளை விதித்து, பேரம் பேசும் தே.மு.தி.க.,வால், இரு கட்சிகளும் மிரண்டு போய் உள்ளன. பா.ஜ., சார்பில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனும், தி.மு.க., சார்பில், பேராயர் எஸ்றா சற்குணமும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திடம் பேசியுள்ளனர். கூட்டணியில் சேர, தே.மு.தி.க., முன்வைக்கும் நிபந்தனைகள் குறித்து, இரு கட்சி வட்டாரத்திலும், விவாதமும், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 26,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |