Daily Thanthi |
- கேதார்நாத், பத்ரிநாத்தில் உயிர் இழந்த தமிழர்கள் 14 பேர் குடும்பங்களுக்கு ரூ.98 லட்சம் ஜெயலலிதா வழங்கினார்
- ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு புதிய கட்டிடம் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்
- தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி கருணாநிதி பேட்டி
- பாலியல் தொந்தரவு: கவுரவ பேராசிரியாக உள்ள கங்குலியை நீக்க வேண்டும் - சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள்
- ஊழல் எங்களுக்கு பெரிய பிரச்சனை; ஜனலோக்பால் மசோதா 15 நாட்களுக்குள் கொண்டுவரப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்
- வெளியே தெரியும் இரட்டை கோபுரங்கள்
- வெளிநாட்டு சந்தைகளில் வெங்காயம் விற்பனைக்கு முயற்சி செய்வேன் விவசாயிகளிடம் சரத்பவார் உறுதி
- நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ விருது புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ப.ஜோதிமணி வழங்கினார்
- ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்; டெல்லியின் புதிய முதல்–மந்திரியாக கெஜ்ரிவால் சனிக்கிழமை பதவி ஏற்பு, 7 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவு
- சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: சாமியாரை கைது செய்தது போலீஸ்
| Posted: 25 Dec 2013 01:53 PM PST சென்னை உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் நடந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிர் இழந்த 14 தமிழ்நாட்டு யாத்திரிகர்களுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.98 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:– கேதார்நாத், பத்ரிநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித்தவிப்பது குறித்து அறிந்தவுடன் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு பிரதிநிதி தலைமையில் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை செயலாளர், மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையர், ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூனுக்கு சென்று உத்தரகாண்ட் மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழகத்தைச் சார்ந்த யாத்திரிகர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், சென்னைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை எடுத்தது. தமிழக யாத்திரிகர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு புனித யாத்திரையாக சென்று பேரிடரில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச்சேர்ந்த 657 யாத்திரிகர்கள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக தமிழக அரசின் செலவில் விமானம் மூலம் சென்னைக்கு பத்திரமாகத் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய 14 யாத்திரிகர்களின் தடயங்களை அறிய இயலவில்லை. முதல்–அமைச்சர் ஜெயலலிதா, வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியதோடு, இந்த பேரழிவில் காணாமல் போன தமிழகத்தைச்சேர்ந்த 14 யாத்திரிகர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 49 லட்சம் ரூபாய் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட ஆணையிட்டார். ரூ.98 லட்சம் வழங்கல் இந்த யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய், உத்தரகாண்ட் மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை உத்தரகாண்ட் மாநிலம் நிவாரணமாக வழங்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து புனிதயாத்திரை சென்று உயிரிழந்த 14 யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன், உத்தரகாண்ட் மாநிலம் நிவாரணத் தொகையும் சேர்த்து 7 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 98 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி ஆறுதல் கூறினார். முதல்–அமைச்சருக்கு நன்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து நிதிஉதவியை பெற்றுக்கொண்ட யாத்திரிகர்களின் குடும்பத்தினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. category: |
| Posted: 25 Dec 2013 01:53 PM PST சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழியை ஆய்வு செய்வதற்கும், வெளிநாட்டவர் தமிழ் மொழியை கற்பதற்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள கட்டடம் 40 ஆண்டு கால பழமையான கட்டடம் என்பதால், அதற்கு மாற்றாக 4 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிருவாகக் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்தப் புதிய நிருவாக அலுவலகக் கட்டடத்தில் ஆய்வரங்கம், மொழிபயிற்சிக் கூடம், ஆய்வு நூலகம், நவீன வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கே அமைக்கப்படும். உலகப் பொதுமறையாம் திருக்குறள் மனித வாழ்வின் மாட்சி, ஆளுமைப் பண்பு, மேலாண்மை நுட்பம், அறநெறிக் கருத்து, வாழ்வி யல் முறை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள் ளது. இச்சிறப்புமிக்க பொது மறையில் பொதிந்துள்ள தனிமனித ஒழுக்கம், குடும்ப அமைப்புகள், சமுதாயம், நாடு, உலகம் சார்ந்த சிந்தனைகள் போன்றவற்றை இன்றைய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கண்டு, கேட்டு, உணர்வதற்கு ஏதுவாக சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓவியக் காட்சிக் கூடம் அமைத்திட முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதன்படி, சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இக்கூடத்தில், திருக்குறளை ஓவியங்களாக விளக்கும் வகையில், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு ஓவியம் வீதம் மொத்தம் 133 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதுடன், திருக்குறள் தொடர்பான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், படக்காட்சிகள், சிலைகள், நிழற்படங்கள், திருக்குறள் சார்ந்த 1500க்கும் மேற்பட்ட உரைநடை நூல்கள் ஆகியவை சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. உலகமெலாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் தாய்த் தமிழகத்தின் பண் பாட்டு வேர்களைக் கண்டும், கேட்டும் அறியவும், இலக்கியம் சார்ந்த பண்பாட்டுப் பயணம் மேற்கொள்ளவும், தமிழ், தமிழர்கள் குறித்த தகவல்களை ஒருங்கே பெற்றிடவும், சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஏற்படுத்திட முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதன்படி, சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் இராசாராம், பொதுப் பணித் துறைச் செயலாளர் முனைவர் எம்.சாய்குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. image: category: |
| தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி கருணாநிதி பேட்டி Posted: 25 Dec 2013 01:53 PM PST சென்னை தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:– தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கேள்வி:–தி.மு.க. தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்று உங்கள் தோழமைக்கட்சிகளில் ஒன்றான விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே? பதில்:–அப்படி ஒன்றும் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லையே. கேள்வி:–ஒரு கூட்டத்தில் பேசும்போது, திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டுமென்றும், உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று பேசியிருப்பதால், அப்படி அமைய வாய்ப்பு இருக்கிறதா? பதில்:–அது அவருடைய நல்லெண்ணத்தின் அறிகுறி. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். தேர்தல் மாயையா? கேள்வி:–காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலை மனதிலே கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறதே, இது தேர்தலுக்காகச் செய்யப்படும் மாயையா? பதில்:–தெரியாது. கேள்வி:–தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் நிலவுகின்றன. இந்த நிலையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கோடநாட்டிற்கு சென்று விட்டாரே? பதில்:–கோடநாட்டிற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா செல்வது என்பது வழக்கமான ஒன்று. மத்திய அரசை நம்புகிறேன் கேள்வி:–நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு கூட்டுப்பயிற்சி நடத்துகிறது. மீனவர்களை வஞ்சிக்கின்ற காரியமாக இதைக்கருதலாமா? பதில்:–தி.மு.க. சார்பில் நான் டி.ஆர்.பாலுவை நாகப்பட்டினத்திற்கு அனுப்பினேன். அவர் அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேசியிருக்கிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கருதுகிறேன். மத்திய அரசும் இது சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். கேள்வி:–அ.தி.மு.க. பல்வேறு பொதுக்கூட்டங்களிலும், பொதுக்குழுவிலும், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடுத்துக்கொண்ட உறுதிமொழியிலும் உங்களை புறக்கணிக்க வேண்டுமென்று கடுமையாக விமர்சிக்கிறார்களே? பதில்:–அ.தி.மு.க.வினர் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் என்னை கடுமையாகத்தாக்கி பஜனை பாடியிருக்கிறார்கள். அது அவர்களுடைய நாகரீகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறு கருணாநிதி கூறினார். image: category: |
| பாலியல் தொந்தரவு: கவுரவ பேராசிரியாக உள்ள கங்குலியை நீக்க வேண்டும் - சட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் Posted: 25 Dec 2013 01:46 PM PST கொல்கத்தா, முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பயிற்சி பெண் வக்கீல் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்தார். இந்த பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. ஏ.கே.கங்குலி வகித்து வரும் மேற்கு வங்காள மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுந்துள்ளது. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அட்டார்னி ஜெனரல், முதல்கட்ட விசாரணையில் நீதிபதி கங்குலி மீது குற்றம் இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். அவர் தனது கருத்தை மத்திய உள்துறைக்கு அனுப்பினார். உள்துறை அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் ஏ.கே. கங்குலிக்கு மற்றோரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கங்குலி கொல்கத்தாவில் உள்ள நீதித்துறை அறிவியலுக்கான தேசிய பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக உள்ளார். இந்நிலையில் அவரை அதில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் 12 பேராசிரியர்கள் துணை வேந்தருக்கு மெயில் அனுப்பியுள்ளனர். அவர்கள் அவரை பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக உள்ள கங்குலியை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான கங்குலியின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். image: category:Tagging:News Group Category: |
| Posted: 25 Dec 2013 01:03 PM PST புதுடெல்லி, டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் முதல்–மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் வருகிற 28–ந் தேதி (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் எங்களுக்கு பெரிய பிரச்சனை என்று கூறியுள்ளார். மேலும், 15 நாட்களுக்குள், ஜனலோக்பால் மசோதாவை கொண்டு வருவோம். மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள சில விஷயங்களைத் தவிர, மற்ற சட்டங்களை டெல்லி சட்டசபை நிறைவேற்றலாம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. மத்திய சட்டங்களை மீறி எந்த சட்டத்தையும் மாநில அரசு கொண்டு வர முடியாது. 2002–ம் ஆண்டு, அலுவல் பரிவர்த்தனை விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, எந்த சட்டம் தாக்கல் செய்தாலும், மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறை சேர்க்கப்பட்டது. அந்த விதிமுறை தவறானது. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில்தான், இந்திய அரசு எல்லாவற்றுக்கும் லண்டனில் அனுமதி கேட்கும் பழக்கம் இருந்தது. தற்போது நாம் சுதந்திர நாட்டில் உள்ளோம். நாம் இதனை பின்பற்ற வேண்டும் என்று இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| வெளியே தெரியும் இரட்டை கோபுரங்கள் Posted: 25 Dec 2013 12:21 PM PST |
| வெளிநாட்டு சந்தைகளில் வெங்காயம் விற்பனைக்கு முயற்சி செய்வேன் விவசாயிகளிடம் சரத்பவார் உறுதி Posted: 25 Dec 2013 12:02 PM PST மும்பை, மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய விவசாய மந்திரி சரத்பவார் கலந்து கொண்டு பேசியதாவது:– இந்த ஆண்டு நாசிக் மாவட்டத்தில் அதிக அளவில் வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. இதனால் வெங்காய விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு வெங்காயத்தை வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மந்திரிகளிடம் எடுத்து சென்று தீர்வு காண்பேன். இவ்வாறு சரத்பவார் கூறினார். image: category:News Group Category: |
| நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ விருது புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ப.ஜோதிமணி வழங்கினார் Posted: 25 Dec 2013 11:51 AM PST சென்னை நடிகர் விவேக்குக்கு 'பசுமை காவலர்' விருதை புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜோதிமணி வழங்கினார். புத்தக வெளியீட்டுவிழா பதிவுத்துறையின் ஓய்வு பெற்ற கூடுதல் தலைவர் ஆ.ஆறுமுக நயினார் 'ரியல் எஸ்டேட் குற்றங்கள்' என்ற நூலை எழுதி உள்ளார். இது 'தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு நூல் ஆகும். இந்த நூல் வெளியிட்டு விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் நேற்று இரவு நடைபெற்றது. தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி ப.ஜோதிமணி தலைமை தாங்கி, டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் உருவப் படத்தை திறந்து வைத்தார். பின்னர் 'ரியல் எஸ்டேட் குற்றங்கள்' என்ற நூலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை வரலாற்று ஆராய்ச்சியாளர் நெல்லை நெடுமாறன் பெற்றுக்கொண்டார். 'பசுமை காவலர்' விருது பின்னர் நடிகர் விவேக்குக்கு 'பசுமை காவலர்' என்ற விருதை நீதிபதி ப.ஜோதிமணி வழங்கினார். ஆ.ஆறுமுக நயினார் எழுதிய மற்றொரு புத்தகமான 'ஸ்டாம்ப் லாஸ் தமிழ்நாடு' என்ற புத்தகத்தின் 3–வது பதிப்பை நீதிபதி ப.ஜோதிமணி வெளியிட்டார். அதை நடிகர் விவேக் பெற்றுக்கொண்டார். நீதிபதி ப.ஜோதிமணி விழாவில் நீதிபதி ப.ஜோதி மணி பேசுகையில் கூறியதாவது:– பிளாஸ்டிக் பாட்டிலில் நாம் தண்ணீர் குடிக்கக்கூடாது. பிளாஸ்டிக் விழிப்புணர்வை நாம் மக்களிடம் ஏற்படுத்தவேண்டும். தின்பண்டங்களை பிளாஸ்டிக் தாளில் வைத்து சாப்பிட்டு விட்டு அவற்றை பொது இடங்களில் எறிந்துவிடுகிறோம். அந்த தாள்களை நிறைய மாடுகள் சாப்பிடுகின்றன. அந்த பிளாஸ்டிக் தாள்கள் குடலில் தங்கி அந்தமாடுகள் இறக்க நேரிடுகின்றன. இயற்கைக்கு எதிராக நாம் எதையும் செய்யக்கூடாது. அப்படி வடநாட்டில் மலைப்பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டதால் தான் வெள்ளத்தில் அடித்துத்செல்லப்பட்டு ஏராளமானவர்கள் இறந்தனர். பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக்கூடாது பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர். இது இயற்கைக்கு எதிரானதாகும். எனவே பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில் இருந்து அனைவரும் விடுபடவேண்டும். மரங்கள் அழிவதால்தான் மழை பெய்ய மறுக்கிறது. மரம் மண்ணரிப்பை தடுக்கும். மலைச்சரிவையும் தடுக்கும். எனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்னபடி நடிகர் விவேக் மரங்களை நட்டுவருகிறார். இது பெரிய சமூகப்பணியாகும். நடிகர் விவேக் 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார் அதற்காக அவரை பாராட்டுகிறேன். இந்த புத்தகத்தை எழுதியவர் நன்றாக புரியும்படி எழுதி உள்ளார். சட்டத்தை தமிழில் படித்தால் நல்லதுதான். வட நாட்டில் இந்தி மொழியில்தான் வக்கீல்கள் வாதாடுகிறார்கள். தமிழை பாமரர்களும் அறியும் வண்ணம் நெஞ்சினில் ஏற்றி வைத்தவர் பாரதியார். அதற்கு அடுத்தபடியாக பாமரனுக்கும் தமிழ் புரியும்படி பத்திரிகை நடத்தியவர் சி.பா.ஆதித்தனார். அவர் செய்த தொண்டை 100 மடங்காக செய்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். இவ்வாறு நீதிபதி ப.ஜோதி மணி கூறினார். நடிகர் விவேக் நடிகர் விவேக் பேசுகையில் கூறியதாவது:– முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அன்பு வேண்டுகோளின்படி தமிழ்நாட்டில் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். இதுவரை 21 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளேன். 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அப்துல்கலாம் கூறியிருக்கிறார். நான் மரக்கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்தி இந்த விழாவில் எனக்கு 'பசுமை காவலர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதை தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் நீதிபதி ப.ஜோதிமணி வழங்கி உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தீர்ப்பாயத்தில் இருக்கும் நீதிபதி தந்தது மகிழ்ச்சியாக, பெருமையாக உள்ளது. இந்த விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது. இவ்வாறு நடிகர் விவேக் கூறினார். சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால் கனகராஜ், திண்டுக்கல் என்.எம்.பி.காஜா முகைதீன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மயிலை பெரியசாமி, மெர்க்கண்டைல் வங்கி இயக்குனர் ராஜகுமார், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் அழகு சுந்தரம், வக்கீல்கள் எஸ்.பாக்கியராஜ், எஸ்.ரமேஷ், கணேசன் நாடார், சென்னை வாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் தங்கமுத்து, மு.ஜெகதீசன், முருகையன், மருதையன் உள்பட பலர் கலந்துகொண்டனர். image: category: |
| Posted: 25 Dec 2013 11:47 AM PST டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் நாளை மறுநாள்(சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இரண்டாம் இடத்தைப் பிடித்த 'ஆம் ஆத்மி' கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தர முன் வந்தது. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது பற்றி ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களின் கருத்தை கேட்டார். பொதுமக்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவே, கடந்த திங்கட்கிழமை கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதி அனுமதி அரவிந்த் கெஜ்ரிவால் உரிமை கோரி இருப்பது பற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கவர்னர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார். அதற்கு ஜனாதிபதி நேற்று அனுமதி அளித்தார். முதல்–மந்திரியாக பதவி ஏற்க இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தி, பதவி ஏற்பு விழா தேதியை முடிவு செய்யும் பொறுப்பை அவர் கவர்னரிடமே விட்டு விட்டார். மேலும், பதவி ஏற்றதில் இருந்து 7 நாட்களுக்குள் (ஜனவரி 3–ந் தேதிக்குள்) சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி அனுமதி அளித்த கோப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கோப்பில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, நேற்று கவர்னருக்கு அனுப்பி வைத்தது. பதவி ஏற்பு இதையடுத்து, டெல்லி மாநில அரசு தலைமை செயலாளர் சபோலியா, ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், வருகிற 28–ந் தேதி (சனிக்கிழமை) பதவி ஏற்பு விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. டெல்லியில், அன்னா ஹசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற ராம்லீலா மைதானத்தில் அன்று பகல் 12.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. முதல்–மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார். அவருடன், கேபினட் மந்திரிகளாக மனீஷ் சிசோடியா, ராக்கி பிர்லா, சோம்நாத் பார்த்தி, சவுரவ் பரத்வாஜ், கிரிஷ் சோனி, சதேந்திர ஜெயின் ஆகியோர் பதவி ஏற்கிறார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது, மின்கட்டணத்தை பாதியாக குறைப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, மின்கட்டண குறைப்பு பற்றியும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்வது பற்றியும் அவர் பதவி ஏற்றவுடன் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்னா ஹசாரே பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு சமூக ஆர்வலரும், அரவிந்த் கெஜ்ரிவாலின் குருநாதருமான அன்னா ஹசாரேவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஊழல் எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புடைய கிரண் பெடி, சந்தோஷ் ஹெக்டே உள்ளிட்டோரும் அழைக்கப்படுவார்கள் என்று அவை தெரிவித்தன. 45 வயதான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியின் 7–வது முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். இதுவரை டெல்லி முதல்–மந்திரியாக இருந்தவர்களில் இவர் தான் வயது மிகவும் குறைந்தவர் ஆவார். அவர் அரியானா மாநிலத்தில் பிறந்தவர். டெல்லிக்கு அருகில் உள்ள காசியாபாத் மாவட்டம் (உத்தரபிரதேசம்) கவுசாம்பியில் வசித்து வருகிறார். அவர் காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். மகசாசே விருது பெற்றவர். நடந்து முடிந்த தேர்தலில், 3 முறை முதல்–மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித்தை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். 24 மணி நேரத்தில் இலவச குடிநீர் இதற்கிடையே, பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் இலவச குடிநீர் வழங்குவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அவர் கூறியதாவது:– நாங்கள் வாக்குறுதி அளித்தபடி, பதவி ஏற்ற 24 மணி நேரத்துக்குள், ஒவ்வொரு வீட்டுக்கும் 700 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கும் பணியை தொடங்குவோம். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.340 கோடி செலவாகும். மின்கட்டணத்தை குறைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். காங்கிரசுடன் நாங்கள் கூட்டணியோ, உடன்பாடோ வைக்கவில்லை. நாங்கள் முன்வைத்த 18 நிபந்தனைகளின் அடிப்படையில்தான், காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. மந்திரி பதவி தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியில் பிளவு இல்லை. மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் பின்னி, என்னை சந்தித்தார். தனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்றும், தனக்கு அதிருப்தி இல்லை என்றும் கூறிவிட்டார். நான் தற்போது மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஜனலோக்பால் 15 நாட்களுக்குள், ஜனலோக்பால் மசோதாவை கொண்டு வருவோம். மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள சில விஷயங்களைத் தவிர, மற்ற சட்டங்களை டெல்லி சட்டசபை நிறைவேற்றலாம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. மத்திய சட்டங்களை மீறி எந்த சட்டத்தையும் மாநில அரசு கொண்டு வர முடியாது. 2002–ம் ஆண்டு, அலுவல் பரிவர்த்தனை விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, எந்த சட்டம் தாக்கல் செய்தாலும், மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறை சேர்க்கப்பட்டது. அந்த விதிமுறை தவறானது. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில்தான், இந்திய அரசு எல்லாவற்றுக்கும் லண்டனில் அனுமதி கேட்கும் பழக்கம் இருந்தது. முறியடிப்போம் ஆனால், நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்துகிறோம். எனவே, இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற ஒவ்வொரு தடையையும் முறியடிப்போம். அமைதியாக இருக்க மாட்டோம். இந்த பிரச்சினை, அரசியல் சட்ட பிரச்சினை அல்ல, எதிர்க்கட்சிகள் உருவாக்கிய பிரச்சினை. நாங்கள் தேர்தலில் போட்டியிட்டதையே எதிர்த்தார்கள். எனவே, ஆட்சி நடத்துவதிலும் இடையூறு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த சவால்களை முறியடித்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: சாமியாரை கைது செய்தது போலீஸ் Posted: 25 Dec 2013 11:31 AM PST கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் ஷகாபூரில் மடம் நடத்தி வந்த சாமியர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 4 பேர்களில் 3 சிறுவர்கள். அவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 'இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377–ன் கீழ் ஓரினச் சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம், இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம்' என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. போலீசார், சாமியார் மீது பிரிவு 377ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சாமியாரை போலீசார் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் சாமியாரின் மேற்பார்வையில் ஆசிரமத்தில் படித்து வந்துள்ளனர். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
