Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பா.ஜ., கூட்டணி திட்டம் முடிவாகிறது: மாநில தலைவர்களுடன் மோடி இன்று ஆலோசனை

Posted:

புதுடில்லி: லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்க, அனைத்து மாநில பா.ஜ., தலைவர்கள் கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, அகில இந்திய தலைவர், ராஜ்நாத் சிங் ஆகியோர், மாநில தலைவர்களுடன், கூட்டணி திட்டம் குறித்து விவாதிக்கின்றனர்.தமிழகத்தின் சார்பில், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலர் மோகன்ராஜுலு, மாநில செயலர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அவர்களுடன், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், முரளீதர் ராவ், தென் ...

அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள் இந்திய வீரர்களுடன் வாக்குவாதம்

Posted:

லடாக்:இந்திய எல்லையில், சில நாட்களாக அடங்கியிருந்த, சீனாவின் வாலாட்டம், மீண்டும் துவங்கியுள்ளது. கடந்த வாரம், இந்திய எல்லைக்குள், சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்து, இந்திய வீரர்களுடன், கோபத்துடன் வாக்குவாதம் செய்து சென்றனர்.கடந்த ஏப்ரல் மாதம், 50க்கும் மேற்பட்ட சீன வீரர்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். எல்லை கட்டுப்பாட்டை கடந்து, 19 கி.மீ., தூரம் வரை முன்னேறிய அவர்கள், தேப்சாங் பகுதியில், தற்காலிக முகாம் அமைத்தனர். இது பற்றி பிரச்னை எழுந்ததும், இரு நாடுகளுக்கும் இடையே, கடும் மோதல் எழுந்தது. 21 நாட்களுக்கு பின், இறுக்கமான சூழ்நிலை முடிவுக்கு ...

மும்பை பெண்ணை தாக்கிய பக்ரைன் தூதர்: 15 நாளாகியும் வழக்கும் கிடையாது, விசாரணையும் இல்லை!

Posted:

மும்பை :அமெரிக்காவில், நம் நாட்டைச் சேர்ந்த பெண் துணைத் தூதர், தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டார் என, கூறி, நடுரோட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில், நம் நாட்டுப் பெண்ணை, பஹ்ரைன் நாட்டு தூதர், தாக்கியதுடன், பெண்ணின் அலுவலகத்தை சூறையாடிய பிறகும், 'தூதரக அதிகாரி' என்ற சிறப்பு அந்தஸ்தால், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.'பிற நாடுகளின், தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை, கைது செய்யக் கூடாது' என, ஐக்கிய நாடுகள் சபையின், வியன்னா நகர, மாநாட்டு விதிமுறைகள் தெளிவாக கூறுகின்றன. இருந்த போதிலும், தவறான சான்றிதழை அளித்தார் என்பதற்காக, ...

தேவயானிக்கு ஐ.நா., அங்கீகாரம் : அமெரிக்க கோர்ட்டிலும் சலுகை

Posted:

புதுடில்லி : சர்ச்சையில் சிக்கிய இந்தியா தூதரக அதிகாரி, தேவயானிக்கு, விசா மோசடி வழக்கின் விசாரணைக்கு, கோர்ட்டில் நேரில் ஆஜரவாதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.,வும், அவருக்கு அங்கீகாரம் அளித்து உள்ளது. அமெரிக்காவில் பணியாற்றிய, இந்திய தூதரக அதிகாரி தேவயானி, விசா மோசடியில் ஈடுபட்டதாக, புகார் எழுந்தது. அமெரிக்க அதிகாரிகள், அவரை கைது செய்ததுடன், சோதனை என்ற பெயரில், அவமதிக்கவும் செய்தனர். இது, இந்தியாவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிகாரிகளின் நடவடிக்கைக்கு, மத்திய அரசு, கடும் கண்டனம் தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் ...

அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்தாரா? பிறப்பு சான்றிதழ் தந்து மாநகராட்சி கூத்து!

Posted:

மதுரை:முதல் முயற்சியிலேயே, டில்லி சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றிய, "ஆம் ஆத்மி' கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், மதுரையில் பிறந்ததாக, மாநகராட்சி சார்பில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மதுரை கலெக்டரிடம், வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர். சில மாதங்களுக்கு முன், தமிழக அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., அண்ணாதுரை இறந்து விட்டதாகக் கூறி, மதுரை மாநகராட்சி சார்பில், இறப்புச் சான்று வழங்கி, அதிர்வலையை ஏற்படுத்தினர்; சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது, மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது; சிலர் கைது செய்யப்பட்டனர்.அந்த ...

தி.மு.க.,வுல தாங்க நான் இருக்கேன்: அழகிரி "சந்தேகமின்றி' பேட்டி

Posted:

சென்னை:"நான் தி.மு.க.,வில் தான் உள்ளேன், தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபடுவேன்,'' என, தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலர், அழகிரி தெரிவித்து உள்ளார்.மதுரையில் இருந்து நேற்று காலை, விமானம் மூலம் சென்னை வந்த அழகிரி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி:கேள்வி: தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை?பதில்: அது, என் விருப்பத்தைப் பொறுத்தது.கேள்வி: தி.மு.க., பொதுக்குழுவில், "காங்., பா.ஜ.,விற்கு ஆதரவில்லை' என, முடிவெடுத்தது பற்றி?பதில்: அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. எனினும், பொதுக்குழு முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.கேள்வி: தி.மு.க., ...

தே.மு.தி.க.,வுக்கு தி.மு.க., அனுப்பிய "தூதர்': விஜயகாந்த் தரப்பு நிலை என்ன?

Posted:

கிறிஸ்துமஸ் விழாவை காரணமாக வைத்து, தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க., தலைமை போட்ட திட்டம், நேற்று செயல்படுத்தப்பட்டது. இதற்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ""யோசிக்கிறேன்,'' எனக் கூறியது, தி.மு.க., தலைமையை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.கடந்த ஆண்டு, தே.மு.தி.க., சார்பில், கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் பங்கேற்ற, பேராயர் எஸ்ரா சற்குணம், "தமிழகத்தில் நிலவும் இருளை அகற்ற, நல்லவர்கள் ஒன்று சேரவேண்டும்' என்றார்.அதற்கு விஜயகாந்த், "நல்லவர்கள் யார் என்பதை தேடிக் கொண்டிருக்கிறேன். தெய்வம் அதை எனக்கு காட்டும் என, நம்புகிறேன்' என்றார்.ஆனால் அதன்பின், தி.மு.க., ...

26ல் முதல்வராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

Posted:

புதுடில்லி: காங்கிரசின் குழப்பமான ஆதரவு, பா.ஜ.,வின் கடுமையான விமர்சனம் ஆகியவற்றுக்கு மத்தியில், டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், 'ஆம் ஆத்மி' கட்சி, ஆட்சி அமைவது நேற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம், இரண்டு வாரங்களாக, டில்லியில் காணப்பட்ட, அரசியல் முட்டுக்கட்டை, முடிவுக்கு வந்துள்ளது.பா.ஜ., 28 இடங்களில் வெற்றி:மொத்தம், 70 இடங்களைக் கொண்ட, டில்லி சட்டசபைத் தேர்தலில், எந்த கட்சிக்கும், ஆட்சி அமைக்கத் தேவையான, 36 இடங்கள் கிடைக்காததால், அதிக இடங்களில், அதாவது, 32 இடங்களில் வென்ற, பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாது என, ஒதுங்கிக் கொண்டது.எட்டு இடங்களில் ...

'பழி வாங்குவதற்காக பொய் புகார்': ஓய்வு பெற்ற நீதிபதி கங்குலி

Posted:

கோல்கட்டா:'சட்டப் பயிற்சி மாணவி எவரிடமும், நான், தவறாக நடக்கவில்லை. என் மீது, பொய் பழி சுமத்தப்பட்டுள்ளது. நான் அளித்த சில தீர்ப்புகளுக்கு பழி வாங்குவதற்காக, என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்' என, ஓய்வு பெற்ற நீதிபதி கங்குலி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சதாசிவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.முக்கிய பல தீர்ப்பு வழங்கியவர்:சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், கங்குலி. முறைகேடாக, '2ஜி' ஒதுக்கீடு பெற்ற, 122 மொபைல் போன் நெட்வொர்க்குகளுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தது உட்பட, பல முக்கியமான வழக்குகளில், ...

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3உயர்வு : விற்பனை விலையில் மாற்றமில்லை என அரசு அறிவிப்பு

Posted:

சென்னை:பசு மற்றும் எருமை பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், கூட்டுறவு அமைப்பின் கீழ் உள்ள, 22.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். அதே நேரத்தில், ஆவினில் விற்கப்படும் பால் விலையில் மாற்றமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது. "தமிழக அரசின், ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும், பால் கொள்முதல் விலையை, உயர்த்தி தர வேண்டும்' என, பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர், கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலிக்க, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று, தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.அமைச்சர்கள், ஆவின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™