Daily Thanthi |
- ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் திடீர் ‘கெடு’
- இங்கிலாந்து கால்பந்து போட்டியில் 2 இளம் வீரர்கள் பலி
- பீகார் பேரணியில் பங்கேற்ற முதல்–மந்திரி நிதிஷ்குமார் மீது செருப்பு வீச்சு
- கோயம்பேடு பஸ் நிலையம் அருகே சொகுசு காரில் அழகிகள் உல்லாசம்
- கடவுள் தான் எனக்கு பெரிய பாதுகாப்பு;இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்க மறுத்த கெஜ்ரிவால்
- சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிறுவன தின விழா
- ஜெகதளாவில் ஹெத்தையம்மன் ஊர்வலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
- நாளை முதல் பள்ளிகளுக்கு அரையாண்டுதேர்வு விடுமுறை;ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறப்பு
- கிறிஸ்துமஸ் பண்டிகை
- காஞ்சீபுரத்தில் மணல் தட்டுப்பாடு கண்டித்து ஆர்ப்பாட்டம்
| ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் திடீர் ‘கெடு’ Posted: 23 Dec 2013 07:49 AM PST புதுடெல்லி இது குறித்து மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:– ஒரு கட்சி தேர்தல் வாக்குறுதிகளை கூறினால், அவற்றை எப்போது நிறைவேற்றுவோம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கெஜ்ரிவால், 50 சதவீத மின்சார கட்டண குறைப்பு உள்பட பல வாக்குறுதிகளை அளித்து இருக்கிறார். அவற்றை 60 நாட்கள் அல்லது 6 மாதத்தில் நிறைவேற்றுவதாக அவர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார். முன்னதாக டெல்லி முன்னாள் காங்கிரஸ் முதல்–மந்திரி ஷீலா தீட்சித் கூறும்போது, ''இந்த முடிவை நான் வரவேற்கிறேன். கொள்கை அடிப்படையில் வெளியில் இருந்து நாங்கள் ஆதரிக்கிறோம். இது நிபந்தனையற்ற ஆதரவு இல்லை. ஆனால் செயல்பாடுகளை பொறுத்தது. தேர்தலுக்கு முன் அவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.
image: category:News Group Category: |
| இங்கிலாந்து கால்பந்து போட்டியில் 2 இளம் வீரர்கள் பலி Posted: 23 Dec 2013 07:47 AM PST இங்கிலாந்தில் உள்ள சாங்டன் ஆஸ்ட்ரோ நகரில் நேற்று 14 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஜமி ஸ்கின்னர் என்ற 13 வயது சிறுவன் உட்பட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில் மைதானத்தில் சுருண்டு விழுந்து ஜமி உயிரிழந்தார். இதுபோல் 20 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்ட 18 வயதுடைய டேவிட் பவுல் மரணமடைந்தார். இந்த இரண்டு மரணங்கள் குறித்த காரணங்கள் எதுவும் தெரியவில்லை .இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் image: category:Tagging:News Group Category: |
| பீகார் பேரணியில் பங்கேற்ற முதல்–மந்திரி நிதிஷ்குமார் மீது செருப்பு வீச்சு Posted: 23 Dec 2013 07:29 AM PST பாட்னா பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் பெகுசாரி மாவட்டத்தில் உள்ள கர்புரா கிராமத்தில் நேற்று ரூ.344.58 கோடி செலவிலான வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கட்சி சார்பில் நடந்த சங்கல்ப் பேரணியில் கலந்துகொண்டார். அந்த பேரணியில் பங்கேற்பதற்காக தொண்டர்கள் திரண்டு இருந்தனர். இந்த பேரணியில் முதல்–மந்திரி நிதிஷ்குமார் பேசும் போது திடீரென்று கூட்டத்தில் இருந்து அவர் மீது செருப்பு வீசப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த செருப்பு அவர் மீது விழவில்லை. இதனால் அந்த இடத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பை பயன்படுத்தி நிதிஷ்குமார் மீது செருப்பு வீசியவன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து பேரணியில் ஜனதா தள மந்திரி பேசுகையில்' அரசியல் பகை காரணமாக நிதிஷ்குமார் மீது செருப்பு வீசப்பட்டதாக' தெரிவித்தார்.
image: category:News Group Category: |
| கோயம்பேடு பஸ் நிலையம் அருகே சொகுசு காரில் அழகிகள் உல்லாசம் Posted: 23 Dec 2013 07:16 AM PST சென்னை சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, சொகுசு காரில் உல்லாசத்தில் ஈடுபட்ட அழகிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். காரில் உல்லாசம் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, பிளாட்பார பாஸ்ட்புட் கடை நடத்துவதுபோல, ரோட்டு ஓரம் சொகுசு காரில் கண்ணாடியை மூடி வைத்துக்கொண்டு, விபசார அழகிகள் உல்லாசத்தில் ஈடுபட்டனர். ரூ.1,000 கொடுத்தால், உடனடியாக இன்பம் அனுபவிக்கலாம் என்றும், சங்கேத பாஷையில் ரோட்டில், வருவோர், போவோரை எல்லாம் புரோக்கர்கள் பிளாட்பாரத்தில் நின்று அழைத்துக்கொண்டிருந்தனர். நேற்று இரவு இதுபற்றி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக உதவி கமிஷனர் செந்தில்குமரன், இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து சென்றனர். சுற்றி வளைப்பு அழகிகளின் உல்லாச சொகுசு காரை போலீசார் சுற்றி வளைத்தனர். காருக்குள், உல்லாசத்தில் ஈடுபட்ட 5 வெளிமாநில அழகிகள் பிடிபட்டனர். சில அழகிகள் தப்பி ஓடிவிட்டனர். புரோக்கர் ஒருவரும் பிடிபட்டார். கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்ட போலீசார் ஏற்கனவே தடை விதித்துள்ளனர். ஆனால், அந்த தடையை காற்றில் பறக்கவிட்டு, விட்டு, இந்த விபசார கும்பல், கறுப்பு பிலிம் கண்ணாடியை மூடிக்கொண்டு, சொகுசு காரில் உல்லாச தொழில் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். image: category:Tagging:News Group Category: |
| கடவுள் தான் எனக்கு பெரிய பாதுகாப்பு;இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்க மறுத்த கெஜ்ரிவால் Posted: 23 Dec 2013 06:45 AM PST புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் கூடுதல் கமிஷனர் (பாதுகாப்பு) வி.ரெங்கநாதன் இன்று ஒரு கடிதம் எழுதினார். அதில், முதல்-மந்திரிக்கு டெல்லி போலீசாரின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகிறோம். எனவே முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்க உள்ள உங்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு அந்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருந்தார். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் போலீசாருக்கு எழுதியுள்ள பதிலில், எனக்கு பாதுகாப்பு வழங்க முன் வந்ததற்கு நன்றி, ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி எனக்கு எந்த பாதுகாப்பும் தேவை இல்லை. எந்த பாதுகாப்பு வாகனமுமோ (எஸ்கார்டு), தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியோ (பி.எஸ்.ஓ) தேவை இல்லை. கடவுள் தான் எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு. ஆனாலும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், விழா இடங்களிலும் பாதுகாப்பு வழங்க உங்களால் உதவி செய்ய முடிந்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கூறியுள்ளார். image: category:News Group Category: |
| சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிறுவன தின விழா Posted: 23 Dec 2013 06:28 AM PST |
| ஜெகதளாவில் ஹெத்தையம்மன் ஊர்வலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு Posted: 23 Dec 2013 06:26 AM PST குன்னூர், ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு ஜெகதளாவில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். ஹெத்தையம்மன் பண்டிகை நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இனமக்கள் ஹெத்தையம்மன் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குன்னூர்அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட ஆரூர் என்று அழைக்கப்படும் ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஹெத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான ஹெத்தையம்மன் பண்டிகையின் ஆரம்ப பூஜை கடந்த 11–ந் தேதி தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹெத்தைக்காரர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பாதயாத்திரையாக சென்றனர். அம்மன் ஊர்வலம் ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு கடந்த 20–ந் தேதி பூக்குண்ட திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை ஹெத்தைக்காரர்கள் மற்றும் பொது மக்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊர்வலமாக கொண்டு வந்தனர். அப்போது படுகர் இன மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனமாடி தங்க குடைகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் படுகர் இன மக்கள் கைத்தடிகளுக்கு மாலை அணிவித்து அதனை கைகளில் உயர்த்தி பிடித்த படி வந்தனர். இறுதியில் ஜெகதளா குத்துக்கல்லுக்கு அம்மன் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஏராளமான பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தினர். இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். மஞ்சூர் குந்தா சீமை படுகர் இன மக்கள் சார்பில் மஞ்சூரில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில், மஞ்சூர் ஹட்டி, மணிக்கல், தாம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் மஞ்சூர் பஜார் அருகே உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் பாரம்பரிய உடை அணிந்து ஒரு ரூபாய் நாணயத்தை காணிக்கையாக செலுத்தினர். இதைப்போல் எடக்காடு, முள்ளிகூர், பிக்கட்டி, ஒசஹட்டி, தூனேரி மட்டக்கண்டி உள்பட பல்வேறு கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் கலந்துகொண்டனர். கோத்தகிரி கோத்தகிரி அருகே உள்ள பெத்தெள£ கல்லட்டி கிராமத்தில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில் குன்னூர், வண்டிச்சோலை, எடப்பள்ளி, இளித்தொரை, கட்டப்பெட்டு உள்பட 50–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஹெத்தை அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் உயிலட்டி கிராமத்தில் ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். image: category: |
| நாளை முதல் பள்ளிகளுக்கு அரையாண்டுதேர்வு விடுமுறை;ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறப்பு Posted: 23 Dec 2013 06:21 AM PST சென்னை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் அரையாண்டு தேர்வு பொதுத்தேர்வு போல நடத்தப்பட்டது. தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. - நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி மாதம் 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கின்றன. அன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ&மாணவிகளுக்கு 3-வது பருவ இலவச பாடப்புத்தகம் 1 முதல் 9-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். image: category:News Group Category: |
| Posted: 23 Dec 2013 06:14 AM PST |
| காஞ்சீபுரத்தில் மணல் தட்டுப்பாடு கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 23 Dec 2013 06:11 AM PST காஞ்சீபுரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள்–தொழிலாளர்கள் கட்சி, கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து மணல் தட்டுப்பாடு, கட்டுமான பணி முடக்கம், தொழிலாளர்கள் வேலை இழப்பு உள்ளிட்டவைகளை கண்டித்து காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்டிட தொழிலாளர்கள் சங்க தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். கிளை தலைவர் செல்வம், தெற்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், காஞ்சீபுரம் நகர தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

