Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எம்.பி., வேட்பாளராக களமிறங்க விண்ணப்பங்கள்...:அ.தி.மு.க.,வில் தேர்தல் நிதி வசூல் ஆரம்பம்

Posted:

லோக்சபா தேர்தலில், எம்.பி., வேட்பாளராக களமிறங்க, தலா, 25 ஆயிரம் ரூபாய், கட்டணமாக செலுத்தி, 2,000 பேர் விண்ணப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஜெயலலிதா பேரவை, எம்,ஜி.ஆர்., இளைஞர் அணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை மற்றும் மாணவர் அணியைச் சேர்ந்த புதுமுகங்களும் ஆர்வமாக, விண்ணப்பித்துள்ளதால், அ.தி.மு.க.,வில், தேர்தல் நிதி வசூல் ஆரம்பமே, நான்கு நாட்களில் ஐந்து கோடி ரூபாய் எட்டியுள்ளது.அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலை சந்திப்பதற் கான, பூர்வாங்க பணிகளில், மாநில, தேசிய அரசியல் கட்சிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. ...

டில்லியில் ஆட்சி அமைப்பாரா கெஜ்ரிவால்? இன்று முடிவை அறிவிக்க திட்டம்

Posted:

புதுடில்லி:டில்லியில் ஆட்சி அமைப்பது குறித்து, இன்று அறிவிப்பதாக, 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.டில்லியில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., 32 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி, 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆளும் கட்சியான, காங்., எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, படுதோல்வி அடைந்தது.மக்களிடம் கருத்து கேட்பு:இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைப்பதற்கு, காங்., ஆதரவு அளிப்பதாக கூறியது. ஆனால், அந்த கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், ...

கட்சிக்காக இல்லாமல் நாட்டுக்காக ஓட்டளியுங்கள்: நரேந்திர மோடி வேண்டுகோள்

Posted:

மும்பை:''ஊழலில் மூழ்கி திளைக்கும் காங்., கட்சியும், அந்த கட்சியின் துணைத் தலைவரும், ஊழலை ஒழிக்கப் போவதாக அறிவுரை கூறுவது, வேடிக்கையாக உள்ளது. அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், கட்சிக்காக ஓட்டு போட வேண்டாம்; நாட்டுக்காக ஓட்டு போட வேண்டும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, மும்பையில், 'மகா கர்ஜனை' என்ற பெயரில் நடத்தப்பட்ட, பிரமாண்ட, லோக்சபா தேர்தல் பொதுக் கூட்டத்தில், நேற்று பங்கேற்றார்.வேடிக்கையாக இருக்கிறது:அவர் பேசியதாவது:காங்., கட்சியின் ...

முசாபர்நகரில் ராகுலுக்கு கறுப்பு கொடி

Posted:

லக்னோ:உ.பி.,யில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியுள்ளவர்களை, காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று, மீண்டும் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருக்கு, முகாமில் உள்ள மக்கள், கறுப்புக் கொடி காட்டினர்.மத கலவரம்:உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, முசாபர் நகர் மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதம், இருதரப்பினருக்கும் இடையே, பெரும் கலவரம் வெடித்தது. இதில், 62 பேர் பலியாயினர். ஏராளமான வீடுகள், தீ வைக்கப்பட்டன.கலவரத்தில் வீடுகளை இழந்த பலர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களை, காங்., தலைவர் ...

திருச்சியில் தி.மு.க., மாநாட்டுக்கு ஏற்பாடு: 10 லட்சம் தொண்டர்களை திரட்ட திட்டம்

Posted:

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம், திருச்சியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள, தி.மு.க., தன் செல்வாக்கையும், பலத்தையும் காட்ட, 10 லட்சம் தொண்டர்களை திரட்ட, திட்டமிட்டு உள்ளது.திருச்சி, அரசியல் கட்சிகளின் திருப்புமுனை மாநகரமாகவே அமைந்துள்ளது. திருச்சியில் மாநாடு நடத்தும் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாகவும்; ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியாகவும் மாறியுள்ளது.வரும், 2014ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும், கூட்டணி அமைப்பதில், களமிறங்கி உள்ளன. எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என, முடிவு செய்வதில், தேசிய ...

சர்ச்சைக்குரிய அதிகாரி தேவயானிக்கு 11 இடங்களில் அசையா சொத்துக்கள்

Posted:

மும்பை : அமெரிக்காவில், 'விசா' மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள, தூதரக அதிகாரி தேவயானிக்கு, மும்பையில் உள்ள, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் உட்பட, 11 இடங்களில், அசையா சொத்துக்கள் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த, தேவயானி என்ற பெண் அதிகாரி மீது, அந்த நாட்டு அரசு, விசா மோசடி செய்ததாக, வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிகாரிகள், தேவயானியை கைது செய்தது, அவரை நடத்திய விதம் ஆகியவை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில், அமெரிக்கா - இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில், விரிசல் ...

சிங்கப்பூர் கலவரம்: தமிழர்களிடம் போலீஸ் விசாரணை

Posted:

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக, அங்குள்ள தமிழர்களிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம்சிங்கப்பூரில், 8ம் தேதி, 'லிட்டில் இந்தியா' பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, குமாரவேலு, 33, என்ற கட்டுமான தொழிலாளி, பஸ் மோதி இறந்தார்.இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில், போலீசார் உட்பட, 39 பேர் காயமடைந்தனர்; 16 போலீஸ் வாகனங்கள் உட்பட, 25 வாகனங்கள், அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக, தமிழர்கள், 28 ...

கறுப்பு பணம் குவிவதை தடுக்க சைப்ரசில் வருமான வரி அலுவலகம்

Posted:

புதுடில்லி:கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சைப்ரஸ் நாட்டில், இந்திய வருமான வரித்துறை அலுவலகத்தை, மத்திய அரசு விரைவில் அமைக்க உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான், சைப்ரஸ், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகளில், வருமான வரித்துறை அலுவலகங்களை அமைக்கும் முயற்சியில், மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் இங்கு, இந்திய வருவாய் பணி அதிகாரி - ஐ.ஆர்.எஸ்., அந்தஸ்தில் அதிகாரிகளை நியமிப்பதற்கு, பிரதமரிடம் ஒப்புதலுகாக, நிதித்துறை காத்திருக்கிறது. பிரதமரிடம் இருந்து ...

பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிர்ச்சி

Posted:

கோபிசெட்டிபாளையம்: பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.தமிழகம் முழுவதும், மார்ச் மாதம், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்பில் சேர்வதற்கான கனவோடு, மாணவ, மாணவியர், இரவு, பகலாக படிக்கின்றனர். உயிரியல் பாடத்தில், அதிக மதிப்பெண் பெற்றால் தான், மருத்துவத் துறையில் சேர முடியும். பிளஸ் 2 உயிரியல் பாடப்பிரிவான விலங்கியல் புத்தகத்தில், ஆங்கில வழி பாட புத்தகத்துக்கும், தமிழ் ...

ராகுலின் பேச்சு: தொழிலதிபர்கள் பாராட்டு

Posted:

புதுடில்லி:இந்திய தொழில் துறை சந்தித்து வரும் பிரச்னைகளை உணர்ந்தும், வளர்ச்சியை எட்ட வெளிப்படையான அணுகுமுறை தேவை என, பேசிய காங்., துணை தலைவர் ராகுலுக்கு, இந்திய கம்பெனிகள் ஆதரவு தெரிவித்தன.சமீபத்தில் நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல், ராகுல் மனதில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் நடந்த, இந்திய தொழில் வர்த்தக சங்க கூட்டத்தில் பேசிய, காங்., துணை தலைவர், ராகுல், நம் நாட்டின் வளரச்சிக்கு, மிகப்பெரிய முட்டுக்கட்டையாக ஊழலும், வறுமையும் உள்ளன. வளர்ச்சியை எட்டுவதற்கு வெளிப்படையான அணுகுமுறை தேவை என, குறிப்பிட்டு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™