Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


4 மாநில தோல்விக்கு பின் ராகுல் திடீர் நடவடிக்கை: ஜெயந்தி நடராஜனிடம் இருந்து மந்திரி பதவி பறிப்பு

Posted:

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர், ஜெயந்தி நடராஜன், தன் பதவியை, திடீரென ராஜினாமா செய்துள்ளார். நான்கு மாநில தேர்தல் தோல்விக்கு பின், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் எடுத்த அதிரடி நடவடிக்கையால், ஜெயந்தி நடராஜன் பதவியை இழந்துள்ளார் என, தெரிய வந்துள்ளது.சமீபத்தில் நடந்த, டில்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., மாநில சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்ததில் இருந்தே, கட்சியிலும், ஆட்சியிலும், மாற்றங்கள் நிகழலாம் என, பேச்சு கிளம்பியது. இரு தினங்களுக்கு முன், டில்லி, சத்தீஸ்கர், கோவா மாநிலங்களுக்கு, புதிய மாநிலத் தலைவர்கள், நியமிக்கப்பட்டனர். ...

கட்சிகள், அதன் வழக்கமான அறிவிப்புகள் மாறுமா? லோக்சபா தேர்தலுக்காக மக்கள் காத்திருப்பு

Posted:

வளர்ச்சியான சமுதாயம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவை, இன்று மக்கள் பார்வையில், அதிக முன்னுரிமை பெற்றுள்ளன. அதையே நடந்து முடிந்த, சட்டசபை தேர்தல்கள் மட்டுமல்ல, இனி, அடுத்து வரும் லோக்சபா தேர்தலுக்கும், கட்சிகள் அறிந்து கொண்டு முன்னிறுத்த வேண்டிய பாடம். இந்த மாற்றம் ஜனநாயகத்தில் ஏற்பட்ட அதிரடி திருப்பமாக கருதப்படுகிறது.இந்த மாற்றத்திற்கே, பா.ஜ., தன், லோக்சபா தேர்தல் அறிக்கையை தயார் செய்ய முனைப்பாக உள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலும் அக்கோணத்தில் இப்போது செயல்படத் துவங்கி விட்டார்.டில்லி சட்டசபை தேர்தலில், வியத்தகு வெற்றியை ...

'ஆம் ஆத்மி' கட்சிக்கு எதிராக பா.ஜ., - காங்., கட்சிகள் வியூகம்

Posted:

காங்கிரஸ் மற்றும் பா.ஜ., என இரண்டு கட்சிகளும் வகுத்துள்ள புதிய வியூகத்திற்குள், 'ஆம் ஆத்மி' கட்சி, சிக்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. 'டில்லியில், அக்கட்சியை ஆட்சி அமைக்க வைத்து, அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்' என, இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.டில்லி மாநில சட்டசபைத் தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில், இன்னும் சிக்கல் நீடிக்கிறது. அதிக இடங்களில் வென்று இருந்தாலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக, கவர்னரின் அழைப்பை ஏற்காமல், பா.ஜ., ஒதுங்கி விட்டது.கடிதங்கள்:இதையடுத்து, ஆம் ஆத்மி ...

'இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதிசயம் ஏற்படும்' : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Posted:

சென்னை:"இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அதிசயம் ஏற்படும். இறைவனிடம் அசைக்க முடியாத, நம்பிக்கை இருந்தால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.அ.தி.மு.க., சார்பில், சென்னை வர்த்தக மையத்தில், நேற்று, கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:ஒரு லட்சியத்தையோ, குறிக்கோளையோ அடைய வேண்டுமானால், உழைப்பு, எதையும் தாங்கும் இதயம், லட்சியக் கனவு ஆகியவை தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு தேவைப்படுவது, அசைக்க முடியாத நம்பிக்கை.இறை நம்பிக்கை என்பது மேலானது; நன்மைகள் அளிக்கக் கூடியது. துன்பங்களை ...

தி.மு.க., யாருடன் கூட்டணி: கனிமொழி சூசகம்

Posted:

திருநெல்வேலி : ""தி.மு.க., வின் வாழ்விலும், தாழ்விலும் உடன் இருக்கும் கட்சிகளுடன், கூட்டணி அமைப்போம்,'' என, கனிமொழி பேசினார்.தி.மு.க., எம்.பி., கனிமொழி, நேற்று நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். களக்காடு பேரூராட்சியில், எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, 25 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட, வாகன காப்பகத்தை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நகர் செயலாளர் அப்துல் வகாப் என, அனைத்து கோஷ்டியினரும் பங்கேற்றனர். கனிமொழி பேசியதாவது:தி.மு.க., வினர் ஒற்றுமையாக ...

டில்லி முடிவு?: விஜயகாந்த் கலக்கம்

Posted:

டில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, 'ஆம் ஆத்மி' கட்சி என்ன முடிவை எடுக்கப்போகிறது என்ற பீதியில், தே.மு.தி.க., தலைமை ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.500 ஓட்டுகள்:டில்லியில் தே.மு.தி.க., போட்டியிடுவதற்கு, அக்கட்சி தலைமை நிர்வாகிகள் பலரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இருப்பினும், டில்லியில், 15 லட்சம் தமிழர்கள் வசிப்பதால், அவர்களின் ஓட்டுகள் தே.மு.தி.க.,விற்கு கிடைக்கும் என கருதி, அக்கட்சி தலைமை தேர்தலில் களமிறங்கியது. தொடர்ந்து தன் மனைவி பிரேமலதாவுடன், விஜயகாந்தும், தேர்தல் பிரசாரத்திற்கு அங்கு சென்றார். ஒரு வாரம் அங்கு முகாமிட்டு தீவிர தேர்தல் ...

சர்வதேச கடத்தல்காரர்களின் வழித்தடமாக மாறுகிறது கோவை

Posted:

பணியாளர் பற்றாக்குறை, அதிநவீன பாதுகாப்பு மற்றும் பரிசோதனை உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக, கோவை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலுள்ள விமான நிலையங்கள், சர்வதேச கடத்தல்காரர்களின் வழித்தடமாக மாறி வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவை பீளமேட்டிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவை உள்ளது. சர்வதேச விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளின் போது சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்வர். சோதனைக்குப்பின் அனுமதி வழங்கினால் மட்டுமே, விமானங்கள் ...

தேவயானி மீதான குற்றச்சாட்டு நீடிக்கும்: அமெரிக்கா பிடிவாதம்

Posted:

வாஷிங்டன் : 'தேவயானிக்கு, தூதருக்குரிய சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டாலும், அவர் மீதான குற்றச்சாட்டு நீக்கப்பட மாட்டாது' என, அமெரிக்கா தெரிவித்து உள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, இந்திய தூதரகத்தில், துணை தூதராக, தேவயானி கோப்ரகாடே, 39, என்ற பெண் ஐ.எப்.எஸ்., அதிகாரி பணியாற்றினார். இவரது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு, "விசா' பெறுவதற்காக, மோசடியான, சில சான்றிதழ்களை வழங்கினார் என, தேவயானி மீது, அமெரிக்கா குற்றம் சாட்டியது.கடந்த வாரம், தன் குழந்தையை பள்ளியில் விடுவதற்காக, தேவயானி காரில் சென்ற போது, நடுரோட்டில், அமெரிக்க போலீசாரால் கைது ...

"போலி உர விவகாரத்தில் தனியார் மீது பழி போடுங்கள்': மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு அதிரடி அறிவுரை

Posted:

டெல்டா மாவட்டங்களில், போலி உர விவகாரம், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எனவே, "தனியார் விற்பனையாளர்கள் மீது பழி போட்டு தப்பி விடுங்கள்' என, மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு, உயர் அதிகாரிகள் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. "டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு, 12 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடி நடக்கும்' என, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனினும், யூரியா, டி.ஏ.பி., பொட்டாசியம், எம்.ஓ.பி., உள்ளிட்ட உரங்களின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சாகுபடி செலவு, இருமடங்காக அதிகரித்துள்ளது. இத்துடன், சீன போலி உரம் பிரச்னை, விவசாயிகளை ...

ரப்ரி தேவியை தேர்தலில் களமிறக்க லாலு முடிவு: ஊழலில் சிக்கியதால் கட்சியை காப்பாற்ற வியூகம்

Posted:

பாட்னா: ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அடுத்த, 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தனக்கு பதிலாக, தன் மனைவி, ரப்ரி தேவியை, சாப்ரா லோக்சபா தொகுதியில் களமிறக்க, அவர் முடிவு செய்துள்ளார்.போட்டியிட முடியாது: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், சமீபத்தில், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் ...

எம்.ஜி.ஆர்., திட்டத்தை திமுக முடக்கவில்லை: கருணாநிதி

Posted:

சென்னை: ""எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை எங்கள் ஆட்சியில் மேலும் விரிவு படுத்தினோம். ஆனால், திமு.க., கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா முடக்குகிறார்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த விளக்க கூட்டம், சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. அதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: அ.தி.மு.க., பொதுக்குழு திர்மானத்தில், என்னை தீய சக்தி என, முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்ச்சித்தார். மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு நான் தீய சக்தியாக இருப்பேன். தி.மு.க., தமிழக மக்களின் நலனுக்காக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™