Tamil News | Online Tamil News |
- எடியூரப்பாவுக்கு மோடி பச்சைக்கொடி
- 'ராம ராஜ்ஜியம் அமையும்': உ.பி.,யில் மோடி நம்பிக்கை
- ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய அரசு 'அப்பீல்!': சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்
- அதிக ஓட்டுப்பதிவுக்கு பணமே காரணம்
- "ஆதர்ஷ்' ஊழலில் காங்., முதல்வர்களுக்கு பங்கு: அறிக்கையில் திடுக் தகவல்கள்
- ஏ.சி., அறைகளில் சாப்பிடாதவர்களிடம் சேவை வரி வசூல்! மத்திய அரசு உத்தரவை மீறும் ஓட்டல் நிர்வாகங்கள்
- பிரதமர் பதவிக்கு ஜெ., போட்டி: கருணாநிதி கருத்து என்ன?
- தேவயானிக்கு மன்னிப்பு வழங்க முடியாது:அமெரிக்கா திட்டவட்டம்
- மோடி குறித்த கருணாநிதி பேட்டியால் தி.மு.க., அணியில் சலசலப்பு? பா.ஜ., காங்கிரசுடன் கூட்டணி இல்லை என உடனடியாக மறுப்பு
- பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்
- மும்பையில் மோடி பேரணி : 22 ரயில்களுக்கு பா.ஜ., ஏற்பாடு
| எடியூரப்பாவுக்கு மோடி பச்சைக்கொடி Posted: பெங்களூரு: பா.ஜ.,விலிருந்து, கடந்த ஆண்டு வெளியேறிய, கர்நாடக முன்னாள் முதல்வர், எடியூரப்பா, இன்னும் ஒரு சில நாட்களில், மீண்டும் கட்சியில் இணைய உள்ளதாக, மாநில, பா.ஜ., தலைவர், பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.தென் மாநிலங்களில், கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சியை, முதலில் ஏற்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக கருதப்பட்ட, எடியூரப்பா, 2011ல், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு, கட்சி மேலிடம் அவரை கேட்டுக் கொண்டதால், பதவி விலகிய அவர், கடந்த ஆண்டு, பா.ஜ.,வுக்கு முழுக்கு போட்டு, கே.ஜே.பி., என்ற பெயரில், ... |
| 'ராம ராஜ்ஜியம் அமையும்': உ.பி.,யில் மோடி நம்பிக்கை Posted: வாரணாசி : ''வரும் லோக்சபா தேர்தலில், உ.பி., மக்கள், ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவர், என்ற நம்பிக்கை எனக்குள்ளது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, உ.பி., மாநிலத்தின், கோவில் நகரமான, வாரணாசியில், நேற்று நடந்த, பிரமாண்ட கூட்டத்தில், பேசியதாவது:உ.பி., மக்களின் முன்னோர் தான், இங்கு, ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினர். இப்போது, மீண்டும் ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்தும் நேரம் வந்து விட்டது. பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பதன் மூலம், மீண்டும் ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்த முடியும். எனவே, உ.பி., மக்கள், இதில், ... |
| ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய அரசு 'அப்பீல்!': சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் Posted: புதுடில்லி : ஓரினச்சேர்க்கைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த, 2009ல், டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில்,'வயதுக்கு வந்தோர், சம்மதத்துடன், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தவறல்ல. இதை, கிரிமினல் குற்றமாக கருதும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு, சட்ட விரோதமானது; அது செல்லாது' என, பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக உத்தரவு:இதை எதிர்த்து, சில மத அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ... |
| அதிக ஓட்டுப்பதிவுக்கு பணமே காரணம் Posted: சென்னை:"அதிக ஓட்டுப்பதிவிற்கு, பணம் வழங்கப்படுவதே காரணம்' என, தேர்தல் கமிஷன் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவீதம் பேர், கருத்து தெரிவித்துள்ளனர்.தேர்தல் கமிஷன் அனுமதியோடு, தமிழக மதிப்பீடு மற்றும் செயல்முறை, ஆராய்ச்சித் துறை சார்பில், தமிழக வாக்காளர்களின் விழிப்புணர்வு, அணுகு முறை, நடத்தை, நம்பகத் தன்மை மற்றும் செயல்பாடு குறித்து, அனைத்து மாவட்டங்களிலும், ஆய்வு நடத்தப்பட்டது.அவற்றின் விவரம்: ஆய்வின் போது, தொகுதிக்கு, தலா, 125 பேர் வீதம், 39 லோக்சபா தொகுதிகளில், 46 கேள்விகள் கேட்கப்பட்டு, பதில் பெறப்பட்டது.இவர்களில், 2,617 பேர் ஆண்கள்; 2,258 பேர் பெண்கள். 70 ... |
| "ஆதர்ஷ்' ஊழலில் காங்., முதல்வர்களுக்கு பங்கு: அறிக்கையில் திடுக் தகவல்கள் Posted: மும்பை:மும்பையில், ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட, "ஆதர்ஷ்' அடுக்குமாடி குடியிருப்புகள், முறைகேடான வகையில் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்திய, இரு நபர் குழு, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதை, மகாராஷ்டிரா மாநில காங்., அரசு நிராகரித்துள்ளது. மாநில அரசின் இந்த செயல்பாட்டிற்கு எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக, வீடுகள் கட்ட, மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக, மத்திய ... |
| ஏ.சி., அறைகளில் சாப்பிடாதவர்களிடம் சேவை வரி வசூல்! மத்திய அரசு உத்தரவை மீறும் ஓட்டல் நிர்வாகங்கள் Posted: கோவை:மத்திய அரசின் உத்தரவை மீறி, கோவை ஓட்டல்களில் ஏ.சி., வசதி இல்லாத அறைகளில் சாப்பிடுவோருக்கும், சேவை வரி வசூலிப்பதாக, நுகர்வோர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில், கோவையிலுள்ள ஓட்டல்களில் விலை அதிகம் என்பது,பெரும்பாலானவர்களின் கருத்தாகவுள்ளது. குறிப்பாக, அசைவ ஓட்டல்கள் வரைமுறையின்றி விலை வைக்கின்றன. அரசால் துவக்கப்பட்ட மலிவு விலை உணவகங்களால், எந்த ஓட்டல்களிலும் விலை கட்டுப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதற்கு, கோவை நகரில் வாடகை, விலைவாசி, ... |
| பிரதமர் பதவிக்கு ஜெ., போட்டி: கருணாநிதி கருத்து என்ன? Posted: சென்னை:"தமிழகத்தில், மூன்றாவது அணி பற்றி, ஜோசியம் சொல்ல முடியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது பேட்டி:பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடியை பற்றி, தனிப்பட்ட முறையில், நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன். பொதுக்குழுவில், எங்கள் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுடனும், பா.ஜ.,வுடனும் எங்களுக்குள்ள உடன்பாடுகள், முரண்பாடுகள் பற்றியெல்லாம் தெளிவாக பேசி, பொதுக்குழுவில் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடியை, நான் ஆதரிப்பது போல செய்தி வந்துள்ளது. அதற்காகத் தான் தற்போது, என் விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ... |
| தேவயானிக்கு மன்னிப்பு வழங்க முடியாது:அமெரிக்கா திட்டவட்டம் Posted: நியூயார்க்:'இந்திய துணை தூதர், தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.தேவயானி கோப்ரகாடே, 39, என்ற பெண், ஐ.எப்.எஸ்., அதிகாரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, இந்திய தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றுகிறார். இவரது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு, "விசா' பெறுவதற்காக, மோசடியான, சில சான்றிதழ்களை வழங்கினார் என, தேவயானி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.கடந்த வாரம், தன் குழந்தையை பள்ளியில் விடுவதற்காக, தேவயானி காரில் சென்ற போது, நடுரோட்டில், அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைவிலங்கிடப்பட்ட தேவயானி, சிறையில் ... |
| Posted: பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி குறித்த, கருணாநிதியின் புகழுரை, தி.மு.க., அணியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் காரணமாகவும், ஸ்டாலின் கோபம் காரணமாகவும், "பா.ஜ., காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என, கருணாநிதி உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில், காங்கிரஸ் பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் சேர்ந்து, தி.மு.க., தலைமையில், தனி அணி அமைக்க வேண்டும் என்பது ஸ்டாலின் திட்டம். அதன்படி, பொதுக்குழுவில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், அவர் காய் நகர்த்தினார். தேசிய அளவில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது கனிமொழி போன்றோரின் ... |
| பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் Posted: சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல் விலைகளை, அடிக்கடி உயர்த்தி, நாட்டை அழிவுப் பாதையில், அழைத்துச் செல்லும் பணியில், மத்தியில் ஆட்சியில் உள்ள, காங்., கூட்டணி அரசு ஈடுபட்டிருப்பது, மக்கள் விரோதச் செயல். சமீபத்தில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, 3.46 ரூபாய் உயர்த்தி, அதன் சுமையிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், நேற்று இரவு, பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் மூலம், மத்திய அரசு உயர்த்தியுள்ளது, நியாயமற்ற செயல். ஒவ்வொரு இந்தியனும், பணவீக்க ... |
| மும்பையில் மோடி பேரணி : 22 ரயில்களுக்கு பா.ஜ., ஏற்பாடு Posted: மும்பை: மகராஷ்டிரா மாநிலத்தில் வரும் 22-ம்தேதி குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ., 22 சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. பா.ஜ.,பேரணி : வரும் 2014-ம் ஆண்டில் நடைபெற உள்ள பொது தேர்தலில் பா.ஜ.சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி வரும் 22-ம் தேதி மும்பையில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து திரளமான மக்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 21,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |