Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நிலவு + அவள்

Posted: 20 Dec 2013 09:28 AM PST

ஆங்கேநிலா மெதுவாகவே அகத்தைமறைத் திடவே தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும் நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும் வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய் பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில் விதைப்பாள்சில விருப்பங்களை இதயம்மகிழ்ந் திடவே கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள் வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக் கேளாமல் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (184)

Posted: 20 Dec 2013 09:11 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

16000 பதிவுகளைக் கடந்துள்ள அண்ணன் பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Posted: 20 Dec 2013 09:06 AM PST

16000 பதிவுகளைக் கடந்துள்ள அண்ணன் பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துகள்! மேலும் தங்களின் ஆயிரக்கணக்கான பதிவுகளால் ஈகரை ஒளிரட்டும் தல!




இவன் அண்ணனின் அன்பு விழுதுகள்,
மலேசியா மற்றும் கத்தார் கிளை!

டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 20 Dec 2013 09:04 AM PST

17-12-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/eygycscqxr3krx3/Nakeeran+17.12.13+%28OrathanaduKarthik.blogspot.Com%29.pdf 20-12-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/blvbp5d8lw9o0jp/Balajothidam+20.12.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 4-12-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/i1tr1h59yoo10hr/Kumudam+04-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 12-12-2013-பெண்மை தமிழ் ...

தெரிஞ்சுக்கோங்க! - மிகப்பெரிய தாத்தா!

Posted: 20 Dec 2013 08:42 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

பலாத்கார வழக்கில் பாதிரியார் தலைமறைவு!

Posted: 20 Dec 2013 08:41 AM PST

திருநெல்வேலி பேட்டையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் தலைமறைவாக உள்ளார். பாதிக்கப் பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. திருநெல்வேலியை அடுத்த, பேட்டை புனித அந்தோணியார் ஆலய பாதிரியாராக, தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வன் (34), 2010-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்த ஆலயத்தையொட்டி இருக்கும் பள்ளியின் பொறுப்பாளராகவும் அவர் இருந்தார். பாதிரியார் தங்குவதற்கு ஆலயம் அருகே வீடு இருக்கிறது. அதே பகுதியைச் ...

முட்டையில்லா கேக்!

Posted: 20 Dec 2013 08:39 AM PST

கேக் என்பது அனைவரையும் ஈர்க்கும். அதுவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு தினத்தில் மகிழ்ச்சியின் மறு அடையாளமாய் நம் வாய்கொள்ளாமல் நுழைக்கப்படுவதும் கேக்தான். சிலர் முட்டையை கூட உணவில் சேர்க்காத சுத்த சைவமாக இருப்பர். அவர்களுக்கான கேக் இது. தேவையானவை: மில்க் மெய்டு- 1டின், மைதா மாவு - 200 கிராம், வெண்ணை-50 கிராம், ஆப்ப சோடா-1 தேக்கரண்டி, தண்ணீர் -3 மேசைக்கரண்டி, உலர்ந்த திராட்சை -10 கிராம், வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி. செய்முறை: மில்க் மெய்டை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ...

யார் இவர்?

Posted: 20 Dec 2013 08:37 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

இருபது பைசா கடனாளியான டாடா!

Posted: 20 Dec 2013 08:34 AM PST

மறைந்த தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா, 'டிவி' செய்தி யாளர் ஒருவருக்கு, 20 பைசா கடன்காரராக இருந்திருக்கிறார். தூர்தர்ஷன் துவங்கிய போது, டாடாவை பேட்டிக்கு அழைத்தனர். பேட்டி அளிப்பவருக்கு, தூர்தர்ஷன் சார்பில், சன்மானம் அளிப்பது வழக்கம். பேட்டி முடிந்த போது, டாடாவுக்கு 200 ரூபாய் சன்மானம் அளிக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டதாக, ரசீதில் கையெழுத்து போட வேண்டும். அப்போது, தூர்தர்ஷனில் ரசீது கட்டணமாக, 20 பைசா வசூலிப்பர். ஆனால், அச்சமயம் டாடாவிடம் சில்லரை இல்லாததால், பேட்டி எடுத்த சசிகுமார், 20 பைசா கொடுத்து ...

காவல் பொம்மை

Posted: 20 Dec 2013 08:29 AM PST

கருகும் பயிர் கண்டு
கண்ணீர் வடிக்கிறது
காவல் பொம்மை.

உழுதவனுக்கொன்றுமில்லை
குறியீடாய் கைவிரிக்கும்
காவல் பொம்மை.

கண்டு சிரிக்கிறது
திணை புனத்துக் காதலர்களை
காவல் பொம்மை.

அச்சம் மறந்தனர்
திணை புனத்துக் காதலர்கள்
காவல் பொம்மை.

யாரை வரவேற்க
கைவிரித்து நிற்கிறது
காவல் பொம்மை.

வரமா சாபமா?

Posted: 20 Dec 2013 08:28 AM PST

தனசேகரனுக்கு பாண்டிபஜார் பாயின்ட்டில் டூட்டி. அவன், டிராபிக் கான்ஸ்டபிளானதிலிருந்து, நான்கைந்து முறை, அந்த பாண்டிபஜார் பாயின்ட்டில், டூட்டி செய்திருக்கிறான். இவனைப் போலவே, பல டிராபிக் போலீசாரும் அந்த பாயின்ட்டில் டூட்டிக்கு வர ஆசைப்படுவர். காரணம், டிராபிக் போலீசாருக்கு, நல்ல வருமானத்தைக் கொடுக்கும் பாயின்ட்டுகளில் இதுவும் ஒன்று. வியாபார நிறுவனங்களும், வர்த்தக வளாகங்களும், கடை, கண்ணி என்று எப்போதும் நெரிசலோடு காணப்படும் தி.நகரில், போக்குவரத்து விதி மீறல் சகஜமாகிவிட்ட ஒன்று. அதை, தங்களுக்கு ...

படித்ததில் பிடித்தது :) -பெற்றோர் மனம் குளிர்ந்தால்...

Posted: 20 Dec 2013 08:21 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..

Posted: 20 Dec 2013 08:21 AM PST

December2013-CosomoPolitan India Magazine Mediafire Download Link... http://www.mediafire.com/download/0h3j316itjv5f88/Cosmopolitan_India_2013_12.zip December2013-Maxim India Hot Magazine PDF Mediafire Download Link.. http://www.mediafire.com/download/gk74gltzg00yhu0/Maxim_India_-_December_2013%28OrathanaduKarthik.blogspot.com%29.zip January2014-WWE Magazine PDF Mediafire download Link.. http://www.mediafire.com/download/2jw41s71g5x1die/WWE_Magazine_2014-01%28OrathanaduKarthik.blogspot.com%29.zip August2013-Reader's ...

சவுந்திரா மாமி!

Posted: 20 Dec 2013 08:15 AM PST

வாசலில், ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு, வெளியே வந்த கோமதி, சவுந்திரா மாமியை பார்த்தவுடன், ஒரு கணம் அதிர்ந்து, பின், சமாளித்துக் கொண்டாள்.''வாங்க... வாங்க மாமி,'' வலிந்து, புன்னகையை வரவழைத்தபடி வரவேற்றாள். சவுந்திரா மாமி, அவளைப் பார்த்த பார்வையில், குற்றம் சாட்டும் பாவனை இருந்தது.''எங்க, உன் புருஷன்?'' மாமி கேட்கும் போதே, பேச்சு குரல் கேட்டு, உள்ளறையில் இருந்து வந்த சதாசிவம், மாமியை பார்த்து, குசலம் விசாரித்தார். ''நான் நல்லா இருக்கேன். வந்தனாவுக்கு கல்யாணம் வச்சு இருக்கேன்னு, முன்னாடியே சொல்லி ...

திருப்பாவை

Posted: 20 Dec 2013 08:09 AM PST

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் ...

என் சென்ரியூ புத்தகத்தின் முகப்பு அட்டை - ஓராயிரம் சென்ரியூ

Posted: 20 Dec 2013 08:00 AM PST

என் சென்ரியூ புத்தகத்தின் முகப்பு அட்டை - ஓராயிரம் சென்ரியூ
அச்சில்... இம்மாத வெளியீடு

என் ஹைக்கூ புத்தகத்தின் முகப்பு அட்டை - பனிதுளியில் பனைமரம்

Posted: 20 Dec 2013 07:59 AM PST

என் ஹைக்கூ புத்தகத்தின் முகப்பு அட்டை - பனிதுளியில் பனைமரம்
அச்சில்... இம்மாத வெளியீடு

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Posted: 20 Dec 2013 07:31 AM PST

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 20 Dec 2013 07:23 AM PST

ஃபேஸ்புக் பேஜுக்கு 10 லட்சம் லைக்ஸ் வாங்கிக் கொடு, பெண்ணை கட்டிக்கோ: இப்படியும் ஒரு தந்தை......

Posted: 20 Dec 2013 06:56 AM PST

ஏமன்: ஏமனில் ஒருவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சனையாக கேட்டுள்ளார். ஏமனில் உள்ள தாய்ஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஆயஷ். கவிஞர். அவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சனையாக அளித்தால் தான் தனது மகளை திருமணம் செய்து வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஏமனில் வரதட்சனையாக யாராலும் பணம் கொடுக்க முடியவில்லையாம். அதனால் தனது மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 லட்சம் லைக்ஸ் பெற வைக்க வேண்டும் என்பதையே வரதட்சனையாக கேட்டுள்ளார் ...

"ஸ்டிக் ரோல்ஸ்

Posted: 20 Dec 2013 06:52 AM PST

தேவையான பொருட்கள்: சமோசா தாள் (சிறியது) - ஒரு பாக்கெட் வேக வைத்த கோழி - 50 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று துருவிய கேரட் - 2 துருவிய கோஸ் - சிறிது பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி மல்லித் தழை - சிறிது எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை : ஃப்ரீசரிலிருந்து சமோசா தாளை வெளியே எடுத்து ...

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Posted: 20 Dec 2013 06:47 AM PST

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... உன்னை குளிப்பாட்டுவார்கள்... நீ உடை அணியமாட்டாய் உனக்கு அணுவிக்கபடும். நீ பள்ளிவாசலுக்கு போகமாட்டாய் உன்னை பள்ளிக்குகொண்டு செல்வார்கள்... நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும் ! நீ படைத்தவனிடம்ஒன்றும் கேட்கமாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள் ! அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் -நீ தயாராக இரு... -மௌத்(மரணம்) ~அலெக்ஸ் மகா தேவ் facebook

வேண்டா விருந்தாளி..!

Posted: 20 Dec 2013 06:07 AM PST

பயமின்றி துள்ளித்தான் பாய்ந்தகாலம் போனது.. ..பாரினிலே கண்டகாட்சி பாழ்மனதில் பூண்டது சுயங்கொண்டே சோர்விலாமல் சூதுஎதும் கொண்டிரா ...சுறுசுறுப்பு மிகக்கொண்ட இளமையதும் போனதே வயல்வரப்பில் விளைந்தநாற்று அசைந்தாடிக் காற்றிலே ..வானம்பார்த்து நின்றதுபோல் வாழ்ந்தகாலம் போனது கயல்விழிகள் மனதினுள்ளே கலந்தாடி நீந்திய ..காலமெல்லாம் போச்சுபோச்சு முதுமைவந்து சேர்ந்ததே அன்புடன் சின்னக் கண்ணன்

குண ஒற்றுமை...

Posted: 20 Dec 2013 06:06 AM PST

சுப்புலட்சுமிக்கு எப்போதும் சிறுவயது முதல் குதிரைக் கனவுகள் வரும்.. எப்பொழுதும் வரும் குதிரைகள் இவள் கண்ணசைவில் மெல்ல நிற்கும் நகரும் பறக்கும் திரும்பிய பின் ஒவ்வொன்றாய் அருகில் வந்து உரசும்.. இவளும் பிடரியைச் செல்லமாய் தடவ விழித்துக் கொள்வாள்.. வயது வந்தபின் கனவில் சிலசமயம் சின்னதாய்த் தலைப்பாகையுடன் முகமறியா ஆடவன் இவளை அள்ளித் தூக்குவான் பின் சுழன்று பறந்து மறைவான்.. அம்மாவிடம் சொல்ல சிரிப்பாள்.. ஆமாண்டி நீயும் ராஜகுமாரி மாதிரிதான் இருக்கே ஒரு ராசாமகன் தான் வருவான்.. ஆனா ...

அம்பிகை பள்ளியெழுச்சி..

Posted: 20 Dec 2013 06:03 AM PST

பள்ளி யெழுச்சியினைப் பாங்காகத் தானிங்கு அள்ளிக் கவிபுனைவேன் அம்பிகையே - விற்புருவம் மெல்லவே மேல்போக மைவிழியின் பார்வையினைத் துள்ளியே தந்தால் சுகம் கண்மலர் மூடிக் கனிவுடன் தூங்கும் ..பொன்மலர் முகமும் பொலிவுடன் துலங்கும் விண்ணவர் போற்றும் வித்தக விழிகள் ..வெண்ணில வொளியில் விசிறிடும் காற்றில் எண்ணிடும் ஈசன் உளந்தனி லாட ..ஏங்கிடும் போதில் எழிலுடன் சற்றே பின்னிடும் பின்னல் அசைத்திடும் தாயே.. ..பேதையென் பாட்டில் பள்ளியெழு வாயே நடராச ருடன்கூட நாட்பொழுதும் நீயும் ..நடனங்கள் பலபுரிய ...

கண்ணன் வந்தான்..அங்கே... )

Posted: 20 Dec 2013 05:53 AM PST

1. முன்பு எழுதிப் பார்த்த  அந்தாதி முயற்சி...! எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும் சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும் கண்ணன் கழல்களே காப்பு காப்பதற் கென்றே குடையாகத் தான்பிடிக்க ஆக்களுடன் சேர்ந்தங்கு மாக்களும் நின்றுவிட பேய்மழையைப் பார்த்தே பயந்திருந்த கோகுலத்தைக் காத்துத்தான் நின்றவன் காண்.. காண்பதோ சின்னக் குழந்தையின் தோற்றமெனில் தீண்டிய பூதகியைத் தாக்கியே - மண்ணில் விழச்செய்து வித்தைகள் வேடிக்கையாய்ச் செய்த குழவிக் கிணையேது ...

குதிரை..

Posted: 20 Dec 2013 05:52 AM PST

பிடரிகளைச் சிலிர்த்திருக்கும் கால்கள்மாற்றி ...பரப்ப்பாய் நின்றிருக்கும் வேகம் கொண்டே மிடறுகளாய் முழுங்கியுள்ள உணவும் நன்றாய் ...மிச்சமெதும் இல்லாமல் செரிக்க எண்ணி திடமான சிந்தனைகள் கொண்டு இங்கே ...திண்ணமாக நின்றிருக்கும் மிருக மன்றோ இடங்கொடுத்தால் இப்புவியின் திசைக ளெல்லாம் ...இச்சையுடன் சுற்றிவரும் குதிரை யன்றோ.. உளமுழுதும் போகின்ற் பாதை நோக்கி ..உணர்வுகளை ஒருங்கிணைத்து நிற்கும்போது குளம்புகளை நன்றாகத் தரையில் தேய்த்து ..கண்க்ளிலே கொண்டுவிடும் ஊக்கம் தன்னை புல்ம்சென்று ஏறியதும் ...

உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்

Posted: 20 Dec 2013 04:33 AM PST

ஒரு நாட்ல பலூன் திருவிழா நடந்தது . சிறுவர்கள் கலர் பலூன்களை பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தனர் ..... அனால் ஒரு சிறுவன் மட்டும் தன் கைகளில் கருப்பு பலூன் வைத்து கொண்டு சோகமாக நின்று இருந்தான் .... அந்த வழியாக சென்ற பெரியவர் " தம்பி ! எல்லாம் மகிழ்ந்து விளையாடும் பொழுது நீ மட்டும் ஏன் சோகமா இருக்க ? " கேட்டார் அதற்கு அந்த சிறுவன் " எல்லாம் கலர் கலரா பலூன் வச்சிருக்காங்க .அது எல்லாம் உயர பறக்கிறது ...நான் வச்சிருக்கறது கருப்பு பலூன் ...இது மேல பறக்காது இல்லே........." சொல்லி வெறித்தான் ...

ஐயோ இது உண்மையா?

Posted: 20 Dec 2013 03:30 AM PST

ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி  கிடையாது  அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி  தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்    அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் ...

பைனாப்பிள் சீஸ் கேக்

Posted: 20 Dec 2013 02:57 AM PST

தேவையான பொருட்கள் : பைனாப்பிள் - பாதி (அ) நறுக்கிய துண்டுகள் - 1 1/2 கப் பிஸ்கட்ஸ் - 8 (britannia marie) க்ரீம் சீஸ் - அரை கப் பட்டர் - கால் கப் நீர் இல்லாத கெட்டி தயிர் - அரை கப் சர்க்கரை - கால் கப் + தேவைக்கு அகர் அகர் - ஒரு மேசைக்கரண்டி அளவு க்ரீம் - ஒரு மேசைக்கரண்டி செய்முறை : பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். தயிரை இரவு முழுக்க துணியில் கட்டி நீரை வடித்து அரை கப் அளவு எடுத்து வைக்கவும். அரை கப் பைனாப்பிளை ஸ்மூத்தாக அடித்து வைக்கவும். விரும்பினால் வடிகட்டி வைக்கவும். பாத்திரத்தில் ...

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசல்...!

Posted: 20 Dec 2013 02:43 AM PST

மூன்றாண்டு கால கடும் உழைப்பில் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசல் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் கருவியையும் வடிவமைத்து, பேடன்ட் காப்புரிமைக்கு மனு செய்து காத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரா தியாகராஜன். அவரது முயற்சி வெற்றி பெறவும் வணிக அடைப்படையில் இம்முறையில் டீசல் தயாரித்து நமது தேசம் சுயச்சார்பை எட்டவும் இறையருள் நாடி வாழ்த்துவோம்.. பகிருங்கள் நம் பெருமையை!!

குழந்தை வரம்

Posted: 20 Dec 2013 12:31 AM PST

மாலதி மௌனமாக அமர்திருந்தாள்..... அசோக் வாழ்கையே வெறுத்து சுருண்டு கிடந்தான் ..... அசோகின் அம்மா " ஐயோ ! என் வம்சமே அழிந்து விட்டதே !" கதறினார் மாலதி எழுந்தாள் , அசோகின் மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்து வீசினாள்.அசோகின் அருகில் சென்று " விடுங்க .நமக்கு குழந்த வேண்டாங்க ....உங்களுக்கு நான் குழந்தை எனக்கு நீங்கன்னு ..................."அழுதாள். "என்னால ஏத்துக்கவே முடியல மாலதி , எனக்கு போய் இப்படி ஒரு குறையா...செத்துடலாம் போல இருக்கு" அசோக் குமுறினான் . மாலதி அவனை அணைத்து ஆறுதல் ...

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..15...!!!..சங்கத் தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமா....

Posted: 20 Dec 2013 12:09 AM PST

நண்பர்களே , தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல , உலகில் தோன்றி , மறைந்த சமூகங்களிலும் இன்னும் நிலைபெற்று வாழ்கின்ற மற்றைய சமூகங்களிலும் மனித உறவுகள் தந்தை வழியும் , தாய் வழியும் அறியப்பட்டு வந்துள்ளன .சமூகத் தடத்தில் சில போழ்து தாயே குடும்ப உறவுகளை மட்டுமல்லாது , நிதி நிலைகளைக்கூட ஆண்டு வந்திருக்கிறாள். மிகச் சமீப காலம் வரை நமது அண்டை மாநிலமான கேரளாவில் தாய் வழி மாமன்களுக்கே பரம்பரை சொத்துரிமை மாற்றப்பட்டு வந்திருக்கிறது. இதனால் விளையும் தீங்குகளை உணர்வுடன் விரித்துரைப்பதே கவிமணி அவர்களின் ' [b]மருமக்கள் ...

சர்வதேசவிண்வெளி ஆய்வு மையகுளிரூட்டும் சாதனம்பழுது

Posted: 19 Dec 2013 11:50 PM PST

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், குளிரூட்டும் சாதனம் பழுதடைந்துள்ளதால், அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்கள், மூன்று நாட்கள், நடந்து சென்று, கோளாறை சரி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்புடன், விண்வெளியில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நிறுவப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு மையத்தில் தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்காக, அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் அத்தியாவசிய பொருட்களை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடுத்துசென்று வினியோகித்து வருகின்றன. தற்போது, ...

சப்பாத்தி வகைகள்

Posted: 19 Dec 2013 11:34 PM PST

வெந்தயக் கீரை சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயக் கீரை - 2 கட்டு, மாங்காய் தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு. செய்முறை: வெந்தயக் கீரையை இலைகளாக நறுக்கிக்கொண்டு, தண்ணீரில் அலசி, சுத்தம் செய்துகொள்ளுங்கள். கீரையுடன், ஒரு டீஸ்பூன் நெய், கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள்தூள், மாங்காய் தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்து ...

எங்கள் சிவாஜி

Posted: 19 Dec 2013 10:54 PM PST

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™