Tamil News | Online Tamil News |
- டில்லியில் தமிழக பா.ஜ., காங்கிரஸ் தலைவர்கள் முகாம்: லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு
- தி.மு.க., வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்க கூடாது: ஜெ., வேண்டுகோள்
- "என் தலைமையை ஏற்றால் தான் கூட்டணி': டில்லியில் விஜயகாந்த் போட்ட திடீர் "குண்டு'!
- "மவுனம் சம்மதம்':கருணாநிதி புதுவிளக்கம்
- ஸ்டாலின் பிரசாரத்தில் பணம் வாங்கியதாக வாக்காளர்கள் ஒப்புதல்
- போதை மயக்கத்தில் பாதை மாறும் "குடி'மகன்கள்: கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம்
- சோனியாவின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி : சொல்கிறது அமெரிக்க இணையதளம்
- விமர்சனங்களுக்கு நரேந்திர மோடி பதிலடி: அறிவுப்பூர்வமான விவாதம் தேவை என்கிறார்
- கொலை குற்றவாளிகளை பொதுமக்கள் முன் அடித்து அலற வைத்த போலீசார்
- தெலுங்கானா விவகாரத்தில் திடீர் திருப்பம்
- ஒழுக்கத்தை போதிக்கும் திட்டம் : குஜராத் பள்ளிகளில் அறிமுகம்
| டில்லியில் தமிழக பா.ஜ., காங்கிரஸ் தலைவர்கள் முகாம்: லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு Posted: ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக, லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனையை, காங்கிரஸ் பா.ஜ., கட்சிகள் துவங்கியுள்ளன. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும், கட்சி மேலிடத்தின் அழைப்பை அடுத்து, டில்லியில் முகாமிட்டுள்ளனர். தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விஷயம் குறித்து, விவாதிப்பதற்காக, இரு கட்சி மேலிடமும் இவர்களை அழைத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.டில்லி மாநில தேர்தல் பிரசாரத்திற்காக, ஞானதேசிகன், கடந்த வாரம் டில்லி சென்றிருந்தார். அங்குள்ள தமிழர் பகுதிகளில், ... |
| தி.மு.க., வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்க கூடாது: ஜெ., வேண்டுகோள் Posted: சென்னை : "ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்க கூடாது' என, ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபை தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க.,விற்கு, மகத்தான வெற்றியை அளித்தீர்கள். உங்களின் ஆதரவுடன், மூன்றாவது முறையாக, தமிழக முதல்வராக பொறுப்பேற்று, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.ஏற்காடு தொகுதிக்கு, 4ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.அ.தி.மு.க., சார்பில், மறைந்த பெருமாள் மனைவி சரோஜா போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில், ... |
| "என் தலைமையை ஏற்றால் தான் கூட்டணி': டில்லியில் விஜயகாந்த் போட்ட திடீர் "குண்டு'! Posted: என் தலைமையை ஏற்கும், எந்த கட்சியுடனும், கூட்டணி வைப்பதற்கு, நான் தயார். சில குறைகள் கூறப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியை, தமிழர்களுக்கு நல்லது செய்ய வைப்பதற்கு, என்னால் முடியும் என, நம்புகிறேன்,'' என, விஜயகாந்த் கூறியதால், புதிய பரபரப்பு எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் கூட்டணி எப்படி அமையப்போகிறது என்பது குறித்து, பல்வேறு யூகங்கள், நிலவி வருகின்றன. குறிப்பாக, தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பது பற்றிய எதிர்பார்ப்பு, பலமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், டில்லி சட்டசபைத் தேர்தலுக்காக, ஒருவாரமாக, தங்கியிருந்து ... |
| "மவுனம் சம்மதம்':கருணாநிதி புதுவிளக்கம் Posted: சென்னை: "ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு கேட்டும், ஒரு சில கட்சிகள் பதில் எழுதவில்லை. மவுனம் சம்மத்திற்கு அடையாளம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி புது விளக்கம் அளித்துள்ளார்.அவரது அறிக்கை:நாளை, ஏற்காடு தொகுதிக்கு இடைத்தேர்தல். தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது. நானும், அன்பழகனும் உடல் நிலை காரணமாக தேர்தல் பிரசாரத்திற்கு போக இயலவில்லை. வாக்காளர் துணைப் பட்டியலில் புதிதாக, 18 வயது நிரம்பியவர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்ற நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத, 40 வயது நிரம்பியவர்களை அ.தி.மு.க.,வினரின் வீட்டு முகவரியில் வசிப்பதாககக் கூறி, ... |
| ஸ்டாலின் பிரசாரத்தில் பணம் வாங்கியதாக வாக்காளர்கள் ஒப்புதல் Posted: ஏற்காடு:ஏற்காடு தொகுதியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நான்கு நாட்களில், 78 இடங்களில் பிரசாரம் செய்தார். அவர் சென்ற கிராமங்களில், பொதுமக்களிடையே அ.தி.மு.க.,வினர் எவ்வளவு பணம் கொடுத்தனர் என கேட்டபோது, "2,000 ரூபாய்' என, மக்கள் கோரஷாக, பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.தேர்தல் அதிகாரிகள் தலைமையில், ஸ்டாலினை பின் தொடர்ந்த வீடியோ குழுவும், பொதுமக்கள் பணம் வாங்கியதாக கூறியதை பதிவு செய்தனர்.தேர்தல் நேர்மையான முறையில் நடத்த, 100 சதவீதம் முயற்சி எடுத்துள்ளோம்' என, சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் கூறினாலும், பணம் வினியோகம் நடந்துள்ளதை, தொகுதிக்குட்பட்ட அனைத்து ... |
| போதை மயக்கத்தில் பாதை மாறும் "குடி'மகன்கள்: கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் Posted: கோவை:"பொதுஇடங்களில் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் மது அருந்திவிட்டு அத்துமீறுவது, நடுரோட்டில் காரை நிறுத்தி மது அருந்துவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.கோவை மாநகரில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவையில் வந்து தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, "டாஸ்மாக்' பார்களும், குடிமகன்களின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகளவு ... |
| சோனியாவின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி : சொல்கிறது அமெரிக்க இணையதளம் Posted: புதுடில்லி: 'நீங்கள் நினைப்பதை விட, உலகத் தலைவர்கள் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்' என்ற தலைப்பில், உலகின் முன்னணி இணையதளங்களில் ஒன்றான, அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஹபிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தி:'இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், ஓமன் நாட்டின் சுல்தான், சிரியா அதிபர், அல் - அசாத் ஆகியோரை விட, சோனியா, அதிக சொத்துகளை குவித்துள்ளார்; அவரிடம், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன' என கூறப்பட்டுள்ளது.இதை, காங்., செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி மறுத்துள்ளார்.மொத்த உள்நாட்டு உற்பத்தி:உலக நாடுகளின் தலைவர்கள், 20 பேரின், தனித்தனி சொத்து ... |
| விமர்சனங்களுக்கு நரேந்திர மோடி பதிலடி: அறிவுப்பூர்வமான விவாதம் தேவை என்கிறார் Posted: ஆமதாபாத் : 'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் குறித்து மட்டுமல்லாமல், அங்கு பாதிக்கப்பட்ட, காஷ்மீர் பண்டிட்டுகள் நிலை குறித்தும், அறிவுப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர்,நரேந்திர மோடி, விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, நேற்று முன்தினம், காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் நடந்த, பா.ஜ., .லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர், 'ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவில் உள்ள அம்சங்கள் ... |
| கொலை குற்றவாளிகளை பொதுமக்கள் முன் அடித்து அலற வைத்த போலீசார் Posted: அனந்தபூர் :ஆந்திராவில், கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, நான்கு இளைஞர்களை, பொதுமக்கள் முன்னிலையில், போலீசார் சரமாரியாக, அடித்து, துவைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காதல் திருமணம்:ஆந்திராவின், அனந்தபூர் மாவட்டம், குண்டகல் நகரைச் சேர்ந்தவர், சேகர். இவர், மல்லையா என்பவரின் மகளை, சில ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்தார்.கடந்த வாரம், சேகருக்கும், அவரின் மனைவிக்கும், தகராறு ஏற்பட்டது. அப்போது, தன் மகளுக்கு ஆதரவாக, மல்லையா பேசியுள்ளார். ஆத்திரமடைந்த சேகர், தன் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, மல்லையாவை தாக்கினார்; ... |
| தெலுங்கானா விவகாரத்தில் திடீர் திருப்பம் Posted: ஐதராபாத் : புதிதாக அமைக்கப்படவுள்ள, தெலுங்கானா மாநிலத்தில், ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தப்பூர், கர்னூல் மாவட்டங்களை இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கிளம்பியுள்ள தகவலால், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் எல்லைகளை உருவாக்குவது தொடர்பாக, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஐதராபாத் உட்பட, தெலுங்கானாவில் உள்ள, 10 மாவட்டங்கள் மற்றும் ராயலசீமாவை சேர்ந்த அனந்தப்பூர், கர்னூல் மாவட்டங்களை இணைத்து, "ராயல தெலுங்கானா' என்ற பெயரில் மாநிலம் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்., தலைவர் ... |
| ஒழுக்கத்தை போதிக்கும் திட்டம் : குஜராத் பள்ளிகளில் அறிமுகம் Posted: ஆமதாபாத்: மாணவர்களிடையே, நற்பண்புகளை உருவாக்கவும், சிறந்த குடிமக்களாக மாற்றவும், குஜராத் மாநில பள்ளிகளில், என்.சி.சி., போன்ற புதிய திட்டம், துவக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புதிய திட்டம் குறித்து, அம்மாநில, டி.ஜி.பி., பிரமோத் குமார் கூறியதாவது:மாணவர்களை, நாளைய சிறந்த குடிமக்களாக உருவாக்கும் நோக்கத்துடன், சுரக் ஷா செடு என்ற, புதிய திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேரும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 03,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |