Daily Thanthi |
- இந்தியாவில் குழந்தைகள் சிறுவயதிலேயே இறப்பது வருத்தம் அளிக்கிறது அமெரிக்கா தூதர் பேட்டி
- ஏற்காடு தொகுதி
- மும்பையில் மாதத்துக்கு ஒரு பெண், கும்பல்களால் கற்பழிக்கப்படும் கொடூரம்
- புதுடெல்லியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை காலை ஓட்டுப்பதிவு
- மத வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயக விரோதம் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
- 19 வருடங்களாக பெண்ணை மிரட்டி கற்பழித்த அண்ணன், தம்பி கைது
- புதுச்சேரியில் பலத்த மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- சென்னை மெரினா கடற்கரை
- இஷ்ரத் ஜகான் கொலை: உளவுத் துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்கிறது சி.பி.ஐ.
- சோனியா காந்தி
| இந்தியாவில் குழந்தைகள் சிறுவயதிலேயே இறப்பது வருத்தம் அளிக்கிறது அமெரிக்கா தூதர் பேட்டி Posted: 02 Dec 2013 01:42 PM PST மும்பை, இந்தியாவில் குழந்தைகள் சிறுவயதிலேயே இறப்பது வருத்தம் அளிப்பதாக அமெரிக்க தூதர் நான்சி போவெல் தெரிவித்தார். அமெரிக்க தூதர் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி இந்தியா வந்துள்ள அமெரிக்க தூதர் நான்சி போவெல், நேற்று தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள இந்திராகாந்தி நினைவக ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– இந்தியாவில் குழந்தைகள் சிறுவயதிலேயே இறப்பது வருத்தம் அளிக்கிறது. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் குறைந்தது 5 வயதையாவது எட்ட வேண்டும். இதை நாம் உறுதிபடுத்த வேண்டும். உலகில் பிறக்கும் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவை சேர்ந்தது. குழந்தைகள் இறப்பை தடுக்க இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதில் நாம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெருமையாக கருதுகிறேன் பொதுமக்களின் ஆயுள் காலம் நீடிக்கவும் நாம் பாடுபட வேண்டும். எய்ட்ஸ் நோயை அகற்ற மராட்டிய அரசு மகத்தான சேவை ஆற்றி வருகிறது. அதனோடு இணைந்து அமெரிக்காவும் பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகிறேன். உலக சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதில், ஐக்கிய நாடுகளும், இந்தியாவும் இணைந்து கூட்டாக பணியாற்றுவதே நமக்குள் இருக்கும் உன்னதமான உறவை பறைசாற்றுகிறது. எய்ட்ஸ் நிவாரணத்துக்காக ஜனாதிபதியின் அவசர திட்டத்தில் அமெரிக்க அரசு முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஆய்வகங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகள், மனித திறன் மேம்பாடு, தனியார் மற்றும் பொது கூட்டமைப்பு ஆகியவை வலுபெறும். இவ்வாறு நான்சி போவெல் தெரிவித்தார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 02 Dec 2013 01:22 PM PST |
| மும்பையில் மாதத்துக்கு ஒரு பெண், கும்பல்களால் கற்பழிக்கப்படும் கொடூரம் Posted: 02 Dec 2013 01:19 PM PST மும்பை, மும்பையில் மாதத்திற்கு ஒரு பெண் கும்பல்களால் கற்பழிக்கப்படும் கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். பெண் புகைப்பட நிபுணர் மும்பையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22–ந்தேதி மகாலட்சுமி ரெயில்நிலையம் அருகேயுள்ள பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் பெண் புகைப்பட நிபுணரை 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய் ஜாதவ், முகமது காசிம் ஹபீஸ் சேக் என்ற காசிம் பெங்காலி, சலீம் அன்சாரி, சிராஜ் ரெஹ்மான் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று கடந்த மாதம் 1–ந்தேதி தின்தோஷியில் 16 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒரு கும்பல் கற்பழித்தது. இந்த சம்பவம் தொடர்பாக வாசிம் சையது, யுவராஜ் என்ற சூர்யா மற்றும் சிவகுமார் என்ற கல்வா விஸ்வர்கமா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடரும் சம்பவம் கடந்த மாதம் 25–ந்தேதி போரிவிலி கண்பத் பாட்டீல் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை 4 பேர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் இழுத்துச்சென்று கொடூரமாக கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சோனு காம்பிளே, ஜெயபிரகாஷ் பால் மற்றும் அஸ்லாம் கான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டின் வர்த்தக தலைநகராக கருதப்படும் மும்பையில் பெண்கள் கற்பழிக்கப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நெஞ்சை பதை, பதைக்க வைக்கும் இந்த சம்பவங்களால் பெண்கள் தனியாக வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். 11 கற்பழிப்பு சம்பவங்கள் மேற்கண்ட கும்பல் கற்பழிப்புகளையும் சேர்த்து இந்த ஆண்டில் ஜனவரி தொடக்கம் முதல் இதுவரை 11 கும்பல் கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. மேலும் கும்பல் கற்பழிப்பு சம்பவங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் தகவலும் தெரியவந்து உள்ளது. கடந்த 2010–ம் ஆண்டு 7 கும்பல் கற்பழிப்பு சம்பவங்கள் நடந்தன. 2011–ல் 9, 2012–ல் 8, 2013–ல் 9 கும்பல் கற்பழிப்பு சம்பவங்களும் நடந்து உள்ளன. இதேபோல தனிநபர்களால் பெண்கள் கற்பழிக்கப்படும் சம்பவங்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2010–ம் ஆண்டில் 188, 2011–ம் ஆண்டில் 211, 2012–ம் ஆண்டில் 223, 2013–ம் ஆண்டில்229 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அனில் கல்கலி மனு செய்து பெற்ற தகவலின் பேரில் மேற்கண்ட அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. பெண்கள் கலக்கம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலும், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு செல்லும் பெண்களும் கலக்கத்தில் உள்ளனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீடுகளுக்கு திரும்பும் நிலை உள்ளது. கற்பழிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி விட்டதால் பாதுகாப்பு கருதி பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே முடங்க தொடங்கி உள்ளனர். கடும் தண்டனை வழங்கவேண்டும் இது குறித்து தாதர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ''மும்பையில் பாதுகாப்பை அதிகரித்தபோதிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலைதான் நிலவுகிறது. போலீசார் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று தெரிவித்த போதிலும், அது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இல்லை. கும்பல் கற்பழிப்பு மற்றும் தனிநபர் கற்பழிப்பு கொடூரர்களுக்கு அரசு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே கற்பழிப்பு சம்பவங்களை குறைக்க முடியும்'' என்றார். திணறும் போலீசார் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அனில் கல்கலி கூறுகையில், ''சாலைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்படும் போலீசாரின் எண்ணிக்கை மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பெண்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போலீசார் திணறுகின்றனர். போலீஸ் பாதுகாப்பு பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் குற்றவாளிகள் பெண்களை துணிகரமாக கடத்திச்சென்று கற்பழித்து விடுகிறார்கள்'' என்றார். image: category:Tagging:News Group Category: |
| புதுடெல்லியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை காலை ஓட்டுப்பதிவு Posted: 02 Dec 2013 01:04 PM PST புதுடெல்லி, டெல்லி மாநில சட்டசபைக்கு நாளை தேர்தல் நடக்கிறது. டெல்லியில் 15 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஷீலா தீட்சித் தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டது. விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல் மற்றும் மக்கள் விரோத கொள்கைகள் ஆகியவை பற்றி அதில் விளக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. ஷீலா தீட்சித்தும் ஆட்சியை 4வது முறையாக கைப்பற்ற கடுமையாக போராடி வருகிறார். இதற்கிடையே மூன்றாவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. ஆம் ஆத்மி கட்சி அதிக வாக்குகளை பெறலாம் என தெரிகிறது. ஆனால் பாரதீய ஜனதா ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை. டெல்லி வாக்காளர்கள் மிகவும் விவரமானவர்கள். பாரதீய ஜனதாவுக்கே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியுள்ளது. தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
image: category:Tagging:News Group Category: |
| மத வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயக விரோதம் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Posted: 02 Dec 2013 12:56 PM PST சென்னை அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல் மத வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயக விரோதம் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:– மத வன்முறை தடுப்பு மசோதா ''திருத்தப்பட்ட மத வன்முறை தடுப்பு மசோதா 2013'' என்ற பெயரில், மத்திய உள்துறை அமைச்சகத்தால், ஒரு மசோதாவின் நகல் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா, ஏற்கனவே கடந்த 2011–ம் ஆண்டில் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு மசோதாவின் மறுநகல் போன்றே தெரிகிறது. எதிர்வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்த மசோதாவை அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடக செய்திகள் மூலம் நான் அறிந்துகொண்டேன். கடந்த 2011–ம் ஆண்டு வரைவு மசோதா அனுப்பப்பட்டபோதே, அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு உட்பிரிவுகளுக்கு நான் கடும் எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்திருந்தேன். மாநில அரசின் அதிகாரம் பறிப்பு இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதை பார்க்கும்போது, மத வன்முறையை தடுக்கும் என்ற முக்கிய நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பதுதான் நான் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். மசோதாவில் கூறப்பட்ட பல்வேறு விதிகள் வெற்று வார்த்தைகளாகவும், இந்த சட்டத்தை தவறாக கையாளும் விதமாகவும் உள்ளது. இந்த மசோதா மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் விதமாகவும், மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு அதிகாரத்தை நீர்த்து போகவைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும், இந்த மசோதா அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மத்திய–மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு எதிராக உள்ளது. இது தொடர்பான, சர்காரியா கமிஷன் அறிக்கையின் விதிகளுக்கு எதிராகவும் இருக்கிறது. பல்வேறு பிரச்சினையை உருவாக்கும் விதமாக உள்ளது. சில திருத்தங்களுடன் மீண்டும்... கடந்த செப்டம்பர் மாதம் 23–ந் தேதி டெல்லியில் நடைபெற்ற 16–வது தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசப்பட்ட விவர அறிக்கையில், இந்த மசோதா தொடர்பாக ஏதும் இடம்பெறவில்லை. அதுபோன்ற சட்டமசோதாவை எந்த வகையில் கொண்டுவர முயற்சி மேற்கொண்டாலும் அதை தொடர்ந்து எதிர்ப்பேன். மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள 2013–ம் ஆண்டு மசோதாவை நான் படித்து பார்த்தபோது, இது 2011–ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரைவு மசோதாவில் சில திருத்தங்களை மட்டும் செய்து அலங்கரித்து மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு சவால் நிறைந்தது 2011–ம் ஆண்டு சட்ட மசோதாவில் நாங்கள் எதிர்த்த பல்வேறு பிரிவுகள் அனைத்தும் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. 2011–ல் கொண்டுவரப்பட்ட மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு மசோதாவின் 5 முதல் 13, 15 வரையிலான பிரிவுகள் 2013 மசோதாவில் மீண்டும் இடம் பெற்றுள்ளது. இந்த விதிகள், அரசு அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த வகையில், தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்துகிறது. அரசு அதிகாரிகள் கடமையை செய்ய தவறினால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது அதிகாரிகளின் பணி நல்லொழுக்கத்தையே கேலிக்கூத்தாக்கிவிடும். அதிகாரிகள் தங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், பணியின் பொறுப்பையே கைவிட்டுவிடுவார்கள். ஏற்க முடியாது இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள விதிகள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், குறிப்பாக கீழ்மட்ட அதிகாரிகள் ஆகியோர் தங்களது உயர் அதிகாரிகளின் உத்தரவை மதிக்காமல் கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பது போல் உள்ளது. 2013 மசோதா மாநில அரசையும், அரசின் அதிகாரிகளையும் நேரடியாக கட்டுப்படுத்தும் விதமாக உள்ளது. இது அரசியல் அமைப்பு சட்டத்தில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு அதிகாரத்தில் தலையிடுவதைப்போல உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிற அமைப்பு தலையிட முடியாது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி, பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்குக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிற அமைப்புகள் (மத்திய அரசு உள்பட) தலையிட முடியாது. இந்த நாட்டில், சட்டம்–ஒழுங்கை பராமரிப்பது என்பது மாநில அரசின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், மத்திய அரசு தவறான அறிவுரையின்படி, மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்துக்கொண்டு வருகிறது. இதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக, தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அவசியம் என்ன? எனவே, தமிழக அரசின் சார்பில் இந்த மசோதாவுக்கு என்னுடைய முழு எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் 5 மாத காலமே உள்ள நிலையில், இது போன்றதொரு அவசர கதியிலான வரைவு மசோதாவை கொண்டுவர அவசியம் என்ன?. அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்னரே, வன்முறை தடுப்பு மசோதாவை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவரை இது போன்றதொரு மசோதாவை அவசர கதியில் நிறைவேற்றக்கூடாது. இவ்வாறு கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். image: category:Tagging: |
| 19 வருடங்களாக பெண்ணை மிரட்டி கற்பழித்த அண்ணன், தம்பி கைது Posted: 02 Dec 2013 12:49 PM PST புதுடெல்லி, புதுடெல்லியில் 19 வருடங்களாக பெண் ஒருவரை மிரட்டி கற்பழித்த அண்ணன், தம்பியை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் 9 வயதமாக இந்த போது அவளது பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர். இதனை அடுத்து அந்த பெண் தனது மாமாவின் வீட்டில் அவர்களது பாதுகாப்பில் வளர்ந்தார். அப்போதில் இருந்தே அவளது மாமன் மகன்கள் சாஷி தாகூர் மற்றும் முகுல் தாகூர் அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்து வந்துள்ளனர். அழகு நிலையம் நடத்திவரும் அந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாஷி மற்றும் முகுலை கைது செய்துள்ளனர். அவர்கள் 14 நாள் சிறைக்காவலுக்கு அனுப்பட்டுள்ளனர். image: category:Tagging:News Group Category: |
| புதுச்சேரியில் பலத்த மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை Posted: 02 Dec 2013 12:27 PM PST புதுச்சேரியில் நேற்று பலத்த மழை பெய்தது. மழை காரணமாக புதுவை, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி புதுவையில் நேற்று அதிகாலை முதல் லேசாக மழை தூறியது. காலை 8.45 முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பின் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது. மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை கனமழை பெய்தது. பின்னர் நள்ளிரவு வரை தொடர்ந்து மழை தூறல் நீடித்தது. இந்த தொடர் மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். அதேபோல் பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனர். பள்ளிகளுக்கு இன்று விடுமுறை image: category:News Group Category: |
| Posted: 02 Dec 2013 12:22 PM PST |
| இஷ்ரத் ஜகான் கொலை: உளவுத் துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்கிறது சி.பி.ஐ. Posted: 02 Dec 2013 12:18 PM PST புதுடெல்லி, குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற என்கவுன்டரில் மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்பட 4 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அம்மாநில முதல்மந்திரியை கொலை செய்ய வந்ததாக கருதி இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் முதல் கட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ. இது போலி என்கவுன்டர் என தெரிவித்தது. மேலும், 7 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த என்கவுண்டர் நடைபெற்ற போது அம்மாநில உளவுப் பிரிவு போலீஸ் தலைமை அதிகாரியாக இருந்த ராஜிந்தர் குமார் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்யலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. ராஜிந்தர் குமார் கடந்த ஜூலை மாதம் தான் ஒய்வு பெற்றார். இநத வழக்கில் சி.பி.ஐ. மற்றும் புலனாய்வு பிரிவுக்கு இடையே மோதல் தீவிரவமடைந்துள்ளது. என்கவுன்டர் தொடர்பாக சி.பி.ஐ. இரண்டாவது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதில் ராஜிந்தர் குமார் பெயர் இடம் பெறலாம் என தகவல்கள் தெரிவித்துள்ளன. image: category:Tagging:News Group Category: |
| Posted: 02 Dec 2013 11:57 AM PST |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


