Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காங்., - பா.ஜ., அல்லாத கட்சிகள் வருகைக்காக தி.மு.க., காத்திருப்பு : யாரும் வராவிட்டால் தனித்து போட்டி என்கிறார் கருணாநிதி

Posted:

கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, காங்கிரசுடன் இருந்த, ஒன்பது ஆண்டு கால உறவை முறித்துக் கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி, வரும் லோக்சபா தேர்தலில், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளின் துணையுடன், தேர்தலை சந்திக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளபோதிலும், தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வலை விரிக்கவும், அக்கட்சிகளின் வருகைக்காக காத்திருக்கவும் முடிவு செய்துள்ளதாக, அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க., கடந்த, இரண்டு லோக்சபா ...

ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேறியதற்கு ஹசாரே நன்றி

Posted:

ராலேகான் சித்தி: ராஜ்யசபாவில், லோக்பால் மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டதற்கு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நன்றி தெரிவித்தார்.இந்த மசோதா, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, தன் சொந்த ஊரான, ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே, நேற்று ராஜ்யசபாவில், லோக்பால் மசோதா குறித்து நடைபெற்ற விவாதங்களை, "டிவி' மூலம் கவனித்துக் கொண்டிருந்தார். பின், லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஹசாரே தேசிய கொடியை அசைத்து, மகிழ்ச்சியை ...

அமெரிக்காவுக்கு மத்திய அரசு வைத்தது 'செக்!': தேவயானி கைது விவகாரத்தில் அதிரடி

Posted:

புதுடில்லி : அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய துணை தூதர், தேவயானி கோப்ரகாடே நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, மோசமான முறையில் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு, மத்திய அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், பல அதிரடி நடவடிக்கைகளும் துவக்கப்பட்டுள்ளன.தேவயானி கோப்ரகாடே, 39, என்ற, பெண், ஐ.எப்.எஸ்., அதிகாரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, இந்திய தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றி வருகிறார். இவரின் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக, இவர் வேலைக்கு அமர்த்திய ...

டில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கருத்து கேட்க 'ஆம் ஆத்மி' முடிவு

Posted:

புதுடில்லி : 'காங்கிரஸ் அல்லது பா.ஜ., ஆதரவுடன், டில்லியில், மைனாரிட்டி அரசு அமைக்கலாமா' என, டில்லி மக்களிடம் கருத்து கேட்க, 'ஆம் ஆத்மி' கட்சி, முடிவு செய்துள்ளது.டில்லி மாநிலத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., 32 தொகுதிகளிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆளும் கட்சியான காங்கிரஸ், எட்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று, படுதோல்வி அடைந்தது.ஆட்சி அமைக்க, 36 எம்.எல்.ஏ.,க்கள் வேண்டும் என்பதால், எந்த கட்சியும், ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. ஆம் ஆத்மி கட்சி ஆட்சி ...

"கூட்டணி முறிந்து ரொம்ப நாளாச்சே' : தி.மு.க.,வை கிண்டலடிக்கிறது காங்.,

Posted:

புதுடில்லி : காங்கிரசுடன், லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைக்க மாட்டோம் என, தி.மு.க., கூறியுள்ளது, புதிய விஷயமல்ல; ஏற்கனவே, இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிந்துவிட்டது. அறிவிப்பை, தாமதமாக வெளியிட்டு உள்ளனர்,'' என, காங்., செய்தி தொடர்பாளர், சாக்கோ கூறினார்.காங்., செய்தி தொடர்பாளர், பி.சி.சாக்கோ கூறியுள்ளதாவது:"அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்' என, தி.மு.க., அறிவி"துள்ளது. இது, ரொம்ப தாமதமான அறிவிப்பு. இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிந்து, ரொம்ப நாட்களாகி விட்டன. எனவே, தி.மு.க.,வின் அறிவிப்பில், புதிதாக ஒன்றும் ...

அதிரடி மாற்றத்தை விரும்பும் அ.தி.மு.க., வட்டாரம்: தி.மு.க., முடிவால் 'குஷி'

Posted:

பொதுக்குழுவை கூட்டி, 'தனித்துப் போட்டி' என, தி.மு.க., அறிவித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னையில் நாளை, அடுத்தடுத்து நடக்கிறது. அதில், அக்கட்சியின் தேர்தல் வியூகம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.மூன்றாவது அணி முடிவு:'தனித்துப் போட்டி; நாற்பது தொகுதிகளிலும் வெற்றி; ஜெயலலிதாவுக்கு பிரதமர் நாற்காலி' என்ற இலக்குடன், தேர்தல் களம் இறங்க வேண்டும் என்பது தான், அ.தி.மு.க.,வின் திட்டம்.கூட்டணி பலத்தை நம்பாமல், ...

ஜெ.,- மோடி நட்பு: விஜயகாந்த் குழப்பம்: பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணிக்கு சிக்கல்

Posted:

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கடைசி நேரத்தில், அ.தி.மு.க., ஆதரவு நிலையை எடுத்தால், என்ன செய்வது என, விஜயகாந்த் யோசிப்பதால், பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி அமைப்பதில், சிக்கல் உருவாகி உள்ளது.தயக்கம்:'காங்., - பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்த பிறகு, தமிழகத்தில், புதிய கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, காங்., கூட்டணியை விரும்பிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தற்போது தயக்கம் காட்டுகிறார்; பா.ஜ., கூட்டணியில் சேர ஆர்வத்துடன் உள்ளார்.ஆசை இருந்தாலும், பா.ஜ., ...

கட்சிகளுக்கு தேர்தல் நிதி: நிறுவனங்கள் தயார்

Posted:

புதுடில்லி : பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் நிதி கேட்டு அரசியல் கட்சிகள் படையெடுப்பதை சமாளிக்கும் வகையில், ஐந்து, உள்நாட்டு பெரிய நிறுவனங்கள், தேர்தல் நிதி வழங்குவதற்காக, தனி நிதியத்தை ஏற்படுத்தி உள்ளன.வாடிக்கை:பொது தேர்தல் நடைபெறும் போது, அரசியல் கட்சிகளுக்கு, பெரிய தொழில் நிறுவனங்கள், தேர்தல் நிதியை நன்கொடையாக அளிப்பது வாடிக்கை. இதற்காக, ஒவ்வொரு நிறுவனங்களும், தனியாக, நிதியத்தை ஏற்படுத்துவது உண்டு.இந்நிலையில், இந்தாண்டு, மத்திய அரசு, வெளியிட்ட அறிவிப்பில், நிறுவனங்கள் தேர்தல் நிதியம் குறித்து சில சலுகைகளை ...

வனத்துறை யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த கடும் எதிர்ப்பு

Posted:

கோவை:வனத்துறை முகாம் யானைகளுக்கு, வேறு இடத்தில் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கும், வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல்வேறு கோவில்களில் 48 யானைகள் பராமரிக்கப்படுகின்றன; ஆண்டு முழுவதும் சங்கிலியில் கட்டப்பட்டு, கற்களால் ஆன தரை தளங்களில் நிறுத்தப்பட்டு, பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வரும் இந்த கோவில் யானைகளுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை இயற்கையான சூழலில் ஓய்வு அளித்து, புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் முகாம்களை நடத்த வேண்டுமென்று, மறைந்த பிரபல யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக ...

கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்'

Posted:

கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தர வரிசையில், லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு முறையே, முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. மத்திய அரசின் கீழ் டில்லியில் இயங்கும், திட்டமிடுதல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் சார்பில் மாவட்டவாரியாக இ.டி.ஐ., (எஜூகேஷன் டெவலப்மென்ட் இண்டக்ஸ்) விபரம் சேகரிக்கப்பட்டது. கல்வியின் வளர்ச்சி பற்றிய இக்கணக்கீட்டின்படி, பல மாநிலங்கள் முன்னேற்றம் இன்றி, முந்தைய ஆண்டுகளின் நிலையையே தொடர்ந்துள்ளன. குறிப்பாக இந்தி மொழி பேசும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™