Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லோக்சபா தேர்தலில் காங்., - பாஜ.,வுடன் கூட்டணி கிடையாது: தி.மு.க., பொதுக்குழுவில் கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு

Posted:

மிகவும் பரபரப்பாக, சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை, மாலை என, அடுத்தடுத்து, ஐந்து மணி நேரம் நடந்த தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்திற்கு பின், ''லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம்,'' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்தார்.லோக்சபா தேர்தலில், யாருடன் தி.மு.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க, அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று கூடியது. கூட்டத்திற்கு, கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய பெரும்பான்மையான நிர்வாகிகள், காங்கிரஸ் மற்றும் ...

ரயில் கட்டணத்தை மேலும் உயர்த்த திட்டம்

Posted:

புதுடில்லி:'ரயில்களில், பயணிகளுக்குத் தேவையான, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, அதிக நிதி தேவைப்படுகிறது' என, தெரிவித்து, பயணிகள் தலையில் கை வைக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டிக்கெட்டுடன் சேர்த்து, பாதுகாப்புக்கென, கூடுதல் கட்டணம் வசூலிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:டீசல் உள்ளிட்ட எரிபொருள் செலவு அதிகரிப்பு போன்ற பல காரணங்களால், ரயில்வே துறை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்றாட ரயில் போக்குவரத்தை இயக்குவதற்கே, தற்போதுள்ள நிதி, போதுமானதாக இல்லை.இந்நிலையில், நாடு முழுவதும் ...

பா.ஜ.,வுக்கு வாய்ப்பு தாருங்கள்: நரேந்திர மோடி வேண்டுகோள்

Posted:

டேராடூன் : ''காங்கிரசுக்கு ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கிய நீங்கள், நிறைய அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு, இந்த முறை வாய்ப்பு தாருங்கள்; உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறோம்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, உத்தரகண்ட் மக்களை கேட்டுக் கொண்டார்.லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ., பிரசார கூட்டம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், விஜய் பகுகுணா தலைமையிலான, உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகே நேற்று நடந்தது.அதில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பேசியதாவது:இந்த மாநிலத்தில், செழிப்பான ஆறுகள் ஓடுகின்றன. ...

பெண்களுக்கு எதிரான குற்றம் குறையவில்லை : தலைநகர் டில்லியில் தொடரும் அவலம்

Posted:

புதுடில்லி:டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு பின்னும், அங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை என்றும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதும், தெரியவந்துள்ளது.மருத்துவ மாணவி:டில்லியில், கடந்தாண்டு, மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், சிகிச்சை பலனின்றி, அந்த மாணவி இறந்தார்.இதையடுத்து, டில்லி முழுவதும், கொந்தளிப்பு ஏற்பட்டது. மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர், வீதிகளில் திரண்டு, போராட்டங்களில் ஈடுபட்டனர். டில்லியில், பெண்களுக்கு ...

ஒன்றுக்கும் உதவாத லோக்பால் மசோதா: கெஜ்ரிவால்:

Posted:

புதுடில்லி : ''மத்திய அரசு, ராஜ்யசபாவில் தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா, ஒன்றுக்கும் உதவாது. இந்த மசோதா, ஊழல் செய்பவர்களை தண்டிப்பதற்கு பதிலாக, பாதுகாப்பதற்கு தான், வழி வகுக்கும்,'' என, 'ஆம் ஆத்மி' தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், கிண்டலடித்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:ராஜ்யசபாவில் மசோதா:காங்., தலைமையிலான மத்திய அரசு, அரை குறை மனதுடன், ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா என்ற ஒன்றை, தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில், ஊழல் செய்பவர்களை தண்டிப்பதற்கான, எந்த அம்சமும் இல்லை. அதற்கு பதிலாக, ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அம்சங்கள் ...

பள்ளிகளில் கம்ப்யூட்டர் இருக்குது! மின்சாரம் இல்லே!

Posted:

புதுடில்லி : நாட்டின் பெரும்பான்மையான துவக்கப் பள்ளிகளில், கம்ப்யூட் டர்கள் உள்ளன; ஆனால், கம்ப்யூட்டர் வழங்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகளில், கம்ப்யூட்டரை இயக்க, மின்சாரம் இல்லை.ஆய்வில் கண்டுபிடிப்பு:துவக்கப் பள்ளிகளுக்கு எளிதில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. ஆனால், அந்த கம்ப்யூட்டர்களை இயக்க, அந்தப் பள்ளிகளுக்கு, மின்சாரம் கிடைப்பது, குதிரைக்கொம்பாக உள்ளதாக, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான, பீகார் ...

பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து

Posted:

ஐதராபாத் : உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ள, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், கிரண்குமார் ரெட்டி தலைமையிலான, ஆந்திர மாநில அரசு, 'குடும்பத் தலைவர்' அந்தஸ்தை பெண்களுக்கு வழங்கி, அனைத்து குடும்பத்தினருக்கும், புதிய ரேஷன் கார்டு வழங்க உள்ளது.உணவு பாதுகாப்பு திட்டம்:மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், நட்சத்திர திட்டங்களில் ஒன்றாக, உணவு பாதுகாப்பு திட்டம் கருதப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, குடும்பத் தலைவர் அந்தஸ்து, அந்த குடும்பத்தின் மூத்த ஆண் ...

கங்குலியை வளைக்க காங்., - கம்யூ., தீவிரம்: சமாஜ்வாதியில் தோனியின் சகோதரர்

Posted:

கோல்கட்டா:கிரிக்கெட் பின்னணி உடையவர்களை, அரசியலில் இழுக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், தோனியின் சகோதரர், சமாஜ்வாதி கட்சியில், நேற்று, இணைந்தார். கங்குலியை, வளைப்பதில், பா.ஜ., - காங்., - கம்யூ., கட்சிகளுக்கு இடையே, கடும் போட்டி நிலவுகிறது.ராஜ்யசபா எம்.பி.,: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின், சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., ஆக உள்ள அவருக்கு, மத்திய அரசு, பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.இதன் மூலம், லோக்சபா தேர்தலில், சச்சினை தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...

தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது ஜனவரி 2வது வாரத்தில் தீர்ப்பு: தலைமை நீதிபதி தகவல்

Posted:

சென்னை : ''நாட்டிலேயே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் அதிக வழக்குகளுக்கு, 'லோக் அதாலத்' (மக்கள்நீதிமன்றம்) மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது,'' என, உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி, சதாசிவம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.அகடமி 'லோகோ' வெளியீடு:வக்கீல்களின் பணி குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழா, சென்னையில் உள்ள, தமிழ்நாடு ஜுடிசியல் அகடமியில் நடந்தது. அகடமியின், 'லோகோ'வை வெளியிட்டு, பயிற்சியை துவங்கி வைத்துஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சதாசிவம் பேசியதாவது:கற்பழிப்பு குற்றங்களை பொறுத்தவரை, சட்டப்படியான தண்டனையை நீதிபதிகள் விதிக்க வேண்டும்; ...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு:சிங்கப்பூர் பிரதமர்

Posted:

சிங்கப்பூர்: வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்,'' என, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரில், 8ம் தேதி, "லிட்டில் இந்தியா' பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரம் கிராமத்தை சேர்ந்த, குமாரவேலு, 33, என்ற கட்டுமான தொழிலாளி, பஸ் மோதி இறந்தார். இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில், போலீசார் உட்பட, 39 பேர் காயமடைந்தனர்; 16 போலீஸ் வாகனங்கள் உட்பட, 25 வாகனங்கள், அடித்து நொறுக்கப்பட்டன. இந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™