Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா தாக்கல்: சமாஜ்வாதி அமளியால் விவாதம் இல்லை

Posted:

புதுடில்லி: ஊழல் அதிகாரிகளை தண்டிக்க வகை செய்யும், லோக்பால் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதா தொடர்பாக, விவாதம் நடத்த முடியாமல், சமாஜ்வாதி கட்சி, எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது.ஹசாரே போராட்டம்: 'ஊழலில் ஈடுபடும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை தண்டிக்கும் வகையில், லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட்டில் நிறைவேற்ற வேண்டும்' என, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே, 2011ல், டில்லி உள்ளிட்ட நகரங்களில், தொடர் போராட்டங்களை நடத்தினார். இந்த போராட்டங்களுக்கு, மக்களிடையே, எழுச்சி ...

கிரிக்கெட் சங்கங்களுக்கு வரி விலக்கு: சி.ஏ.ஜி., பரபரப்பு குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி: கிரிக்கெட் சங்கங்களுக்கு, வருமான வரித் துறை, முறைகேடாக, வரி விலக்கு அளித்துள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., குற்றம் சாட்டியுள்ளது.சி.ஏ.ஜி., சார்பில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை: சவுராஷ்டிரா, பரோடா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய கிரிக்கெட் சங்கங்கள், கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை அளித்ததற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து, பணம் பெற்றுள்ளன. இந்த வருவாய்க்கு, அந்த கிரிக்கெட் சங்கங்கள், 8 கோடி ரூபாய், வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், வரி செலுத்துவதிலிருந்து, வருமான வரித் ...

'ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் நிறைவான தீர்ப்பு: உரிய நேரத்தில் வரும் என்கிறார் கருணாநிதி

Posted:

சென்னை: 'முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முழுமையான, நிறைவான தீர்ப்பு, உரிய நேரத்தில் வரும்" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்,அவரது அறிக்கை: "முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், தொடர்புடைய சென்னையில் உள்ள அசையும் சொத்துக்களை, வழக்கு விசாரணை நடந்து வரும் பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு, இம்மாதம், 21ம் தேதிக்குள் கொண்டு வர வேண்டும்' என, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதுவே இந்த வழக்கில், முழுமையான தீர்ப்பல்ல. "ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா தான், ...

13 வயது மகளை சூதாட்டத்தில் இழந்த தந்தை; திருமண ஏற்பாடுகளில் மும்முரம்

Posted:

மால்டா: பக்கத்துக்கு வீட்டுக்காரருடன், சூதாட்டம் ஆடிய ஒருவர், 13 வயது மகளை, பணயமாக வைத்து தோற்றுப்போனார். இதையடுத்து, எட்டாவது படிக்கும், அந்த மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம், மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்குள்ள கிராமம் ஒன்றில், சுகுமார் மண்டல் என்பவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். பல சுற்றுகள் நடந்த சூதாட்டத்தில், அந்த நபரிடம், மண்டல் தோற்றுப் போனார். 'இழந்ததை பிடிக்க வேண்டும்' என்ற வெறியில், எட்டாம் வகுப்பு படிக்கும், தன் மகளை வைத்தும், அந்த ...

லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளில் தமிழக காங்கிரஸ் குதிப்பு : புது நிர்வாகிகளுடன் வரும் 19ம் தேதி ஆலோசனை

Posted:

லோக்சபா தேர்தல் கூட்டணி வாய்ப்பு குறித்து விவாதிக்க, தமிழக காங்கிரசின், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், 19ம் தேதி நடத்தப்படுகிறது. நிர்வாகிகள் நியமனத்துக்கு பின், நடக்கும் இந்த முதல் கூட்டத்தைப் புறக்கணிக்க, சிதம்பரம், ஜெயந்தி, தங்கபாலு கோஷ்டியினர் திட்டமிட்டுள்ளனர்.லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி உத்தி குறித்து, தமிழகத்தில் எல்லா கட்சிகளும், ஆலோசனை நடத்த ஆரம்பித்து விட்டன. ஆனால், தமிழக காங்கிரசில், இதுவரை, எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.இதற்காக, கட்சியின் மூத்த தலைவர்கள் சிதம்பரம், வாசன், தங்கபாலு உள்ளிட்ட, 25 பேர் அடங்கிய, ஒருங்கிணைப்புக் குழுவை, ...

கெஜ்ரிவால் ஆதரவாளரை விரட்டியடித்த ஹசாரே: வி.கே.சிங் பேச்சுக்கு இடையூறு செய்ததால் ஆத்திரம்

Posted:

ராலேகான் சித்தி: ராணுவ முன்னாள் தளபதி, வி.கே.சிங்கின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆதரவாளரை, உண்ணாவிரத பந்தலில் இருந்து, வெளியேறும்படி, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே உத்தரவிட்டார்.குளிர்கால கூட்டத் தொடர்: 'வலுவான லோக்பால் மசோதாவை, நடப்பு, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்' என, வலியுறுத்தி, சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான, அன்னா ஹசாரே, தன் சொந்த ஊரான, மகாராஷ்டிரா மாநிலம், ராலேகான் சித்தியில், உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நான்காவது நாளாக, நேற்றும், அவரின் உண்ணாவிரத போராட்டம் ...

கூட்டுறவு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்க ஆய்வு: 312 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

Posted:

சென்னை: கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நிறைவு நாளில், முதல்வர் ஜெயலலிதா, புதிதாக, 312 அறிவிப்புகளை வெளியிட்டார்.சென்னை, தலைமைச் செயலகத்தில், மூன்று நாட்கள் நடந்த, கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு, நேற்று மாலை, நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, 312 அறிவிப்புகளை வெளியிட்டார்.அவற்றில் முக்கியமானவை:* தற்போது, கன்னக்கொள்ளை மற்றும் திருட்டில், திருடு போன பொருட்களின் மதிப்பு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அது கடும் குற்றமாக கருதப்படுகிறது. இத்தொகை மதிப்பை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த, திருத்தம் கொண்டு ...

தனியார் மூலம் கணினி மயமாகும் அரசு ஆவணங்கள்: ரகசியம் பறிபோகும் அபாயம்

Posted:

அரசு ஆவணங்களை, தனியார் மூலம், கணினி மயமாக்கும் திட்டத்தால், அரசின் முக்கியமான ரகசிய தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.தமிழக அரசின், அனைத்து துறைகளின் அன்றாட செயல்பாடு மற்றும் திட்டங்களை கணினி மயமாக்கும், மின் ஆளுமை திட்டம், தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. 'உள்ளாட்சி துறைகளின் சேவைகள் மற்றும் ஆவணங்களை, மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு, காலக்கெடுவை யும் நிர்ணயித்துள்ளது.மத்திய அரசின் ஒதுக்கீடு: இக்காலக்கெடுவுக்குள், மின் ஆளுமை செய்யவில்லை எனில், உள்ளாட்சி ...

மக்களை ஏமாற்றுகின்றனரா மணல் லாரி உரிமையாளர்கள்? ரூ.2,500க்கு வாங்கி ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை

Posted:

பொதுப்பணித் துறையின் நேரடி விற்பனையில், இரண்டு யூனிட், 2,500 ரூபாய்க்கு கொடுக்கப்படும் மணலை, லாரி உரிமையாளர்கள், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், அரசின் நேரடி விற்பனையின் பயன், மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் பிரச்னை, "யார்டு' ஒப்பந்ததாரர்கள் முறைகேடு போன்ற காரணங்களால், தமிழகம் முழுவதும், 45க்கும் மேற்பட்ட அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. தட்டுப்பாடு காரணமாக, இரண்டரை யூனிட் மணல் வாங்க, 22 ஆயிரம் ரூபாய் வரை, பொதுமக்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழையசீவரம், ...

காஷ்மீரின் உண்மை வரலாறு

Posted:

"பூலோக சொர்க்கம்' காஷ்மீர், இந்தியாவின் வட எல்லையாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ்தான் ஆக்ரமித்து கொண்டது மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தானுக்கா.. அல்லது தனி நாடாக இருக்க வேண்டுமா.. இன்றும் அணையாமல் பற்றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின் ஆரம்பம் இது தான். காஷ்மீர் பிறந்த கதை:வேத காலத்தில் அங்கு வாழ்ந்த காஷ்யப் முனிவரின் பெயரிலிருந்து தான், காஷ்மீர் என்ற பெயர் வந்தது. காஷ்யப் முனிவரின் கடும் தவத்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் "சட்டிஸர்' என்ற பெரிய ஏரியின் நீர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™