Tamil News | Online Tamil News |
- 'பேஸ்புக்'கில் அதிகம் பேசப்பட்டவர்களில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி முதலிடம்
- வாகனங்களில் சிவப்பு விளக்குகள் பயன்படுத்த நிபந்தனை: தவறாக பயன்படுத்துவதை தடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- காங்., ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கட்டும்: அரிவிந்த கெஜ்ரிவால் தடாலடி
- சென்னையில் இருந்து கேரள மக்களை வெளியேற்றினால் என்னவாகும்? அட்டப்பாடி பிரச்னையில் கருணாநிதி கேள்வி
- அரசியலில் இருந்து விலகினார் பண்ருட்டி ராமச்சந்திரன்: விஜயகாந்திற்கு அடுத்த அதிர்ச்சி
- பல்வேறு சலுகைகளை பெற்றாலும் ரூ.21 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு: ஆலையை மூடுவதாக நோக்கியா மிரட்டல்
- மொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து
- உலக வர்த்தக அமைப்பில் வெற்றி யாருக்கு? உரிமைகள் பறிபோன அவலம்
- இந்த ஆண்டு பொங்கல் இனாம் ரூ.500? தேர்தலுக்காக அரசு அதிரடி திட்டம்
- மன்மோகனுக்கு பிரதமர் பதவி வழங்கியது தவறு: போட்டு தாக்குகிறார் மணிசங்கர்
| 'பேஸ்புக்'கில் அதிகம் பேசப்பட்டவர்களில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி முதலிடம் Posted: நியூயார்க்: இளைஞர்கள் மற்றும் பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தும், "பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அதிகம் பேசப்படும் நபர்களின் பட்டியலில், கிரிக்கெட் பிரபலம் சச்சின், ரிசர்வ் வங்கி கவர்னர், ரகுராம் ராஜனை பின்னுக்குத் தள்ளி, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் போன்ற அனைத்து தரப்பினரும், தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, பிரபல சமூக வலைதளமான "பேஸ் புக்'கை பயன்படுத்துகின்றனர். இதில், தங்களுக்கு பிடித்தமான இடங்கள், மனம் கவர்ந்த தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் மிக முக்கிய நிகழ்வுகள் பற்றிய ... |
| Posted: புதுடில்லி: 'அரசியலமைப்பு சட்டத்தின் படி, மிக மூத்த பதவி வகிப்பவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் மட்டும், சிவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நிபந்தனை விதித்துள்ளது. மேலும், 'உள்ளூர் அரசியல்வாதிகள், தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளது.வாகனங்களில், சிவப்பு சுழல் விளக்குகளை, சிலர் தவறாக பயன்படுத்துவதை, தடுத்து நிறுத்த வலியுறுத்தி, உ.பி., மாநிலத்தை சேர்ந்த, அபய் சிங் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.முழு பட்டியல்: இந்த வழக்கு, நீதிபதி, ... |
| காங்., ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கட்டும்: அரிவிந்த கெஜ்ரிவால் தடாலடி Posted: புதுடில்லி: டில்லியில் யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்பம், மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தேவைப்பட்டால், காங்.,சும், பா.ஜ.,வும் இணைந்து ஆட்சி அமைக்கட்டும்; நாங்கள் யாரிடமும் கூட்டு சேர மாட்டோம் என, "ஆம் ஆத்மி' கட்சி கூறியுள்ளது. அதுபோல், பா.ஜ.,வும், "மீண்டும் தேர்தலை சந்திக்க தயார்' என, அறிவித்துள்ளது.டில்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான, 36 உறுப்பினர்கள் எண்ணிக்கையை, எந்த கட்சியும் பெறவில்லை. 28 இடங்களை பெற்ற ஆம் ஆத்மி கட்சியோ, காங்., மற்றும் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து, ஆட்சி அமைக்க மாட்டோம் என, கூறிவிட்டது. ஊழல் ... |
| சென்னையில் இருந்து கேரள மக்களை வெளியேற்றினால் என்னவாகும்? அட்டப்பாடி பிரச்னையில் கருணாநிதி கேள்வி Posted: சென்னை: 'கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: "கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில், வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்கு சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு, வெளியேற வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்குமானால், அது புலி வாலை பிடித்த கதை போல ஆகிவிடும். கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், உலகெங்கிலும் உள்ளனர்; அவர்கள் ... |
| அரசியலில் இருந்து விலகினார் பண்ருட்டி ராமச்சந்திரன்: விஜயகாந்திற்கு அடுத்த அதிர்ச்சி Posted: சென்னை: உடல் நிலை சரியில்லை என்பதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனவே, தே.மு.தி.க., கட்சி பொறுப்புகள், எம்.எல்.ஏ., பதவியில் இருந்து விலகுகிறேன்' என, தே.மு.தி.க., அவைத் தலைவரும், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பண்ருட்டி ராமச்சந்திரன், நேற்று திடீரென அறிவித்தார். எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா கடிதத்தை, சபாநாயகரிடம் வழங்கினார்.தே.மு.தி.க., அவைத் தலைவராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன், 77. இவர், காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் இருந்தார். இச்சூழலில், நேற்று பகல், 1:30 மணிக்கு, பண்ருட்டி ... |
| பல்வேறு சலுகைகளை பெற்றாலும் ரூ.21 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு: ஆலையை மூடுவதாக நோக்கியா மிரட்டல் Posted: தமிழகத்தில் பெரும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் என, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப்படுகிறது. 2005 முதல், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.சென்னை அருகே உள்ள, ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு பொருளாதார மண்டலத்தில், நோக்கியா, செயின்ட் கோபைன், ஹுண்டாய் உள்ளிட்ட, பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளன. மொபைல் போன் பயன்பாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய, "நோக்கியா' என்ற பின்லாந்து நாட்டு நிறுவனம், 2005ல், ... |
| மொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து Posted: 'மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) ரத்து செய்யப்படும்' என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது."கடந்த, 10 ஆண்டுகளில், அதிகளவில் சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது' என, தேசிய குற்ற ஆவண காப்பாகம் (என்.சி.ஆர்.பி.,) தெரிவித்தது. 2012ல், தமிழகத்தில் மட்டும், 68 ஆயிரம் சாலை விபத்துகளில் நடந்துள்ளன; 16,175 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், ஒரு மணி நேரத்திற்கு, எட்டு விபத்து; நாள்தோறும் சராசரியாக, 44 உயிரிழப்பு ஏற்படுகின்றன. இதையடுத்து, தமிழகத்தில் விபத்துகளை குறைக்க தேவையான ... |
| உலக வர்த்தக அமைப்பில் வெற்றி யாருக்கு? உரிமைகள் பறிபோன அவலம் Posted: உலக வர்த்தக அமைப்பின் வேளாண் ஒப்பந்தத்தால், இந்திய விவசாயிகளுக்கு விளையக்கூடிய கேடுகள் குறித்து, பக்கம் பக்கமாக கருத்துக்கள் வெளியாகியும், நம் மத்திய அரசு, மேற்கத்திய நாடுகளிடம் இந்த விஷயத்தில் சரணடைந்து விட்டது.இந்திய அரசின் சார்பில், பாலியில் நடந்த உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா, முதலில், பல வீர வசனங்களை விடுத்தார். ஆனால், அங்கு சென்று, மேற்கத்திய நாட்டு பிரதிநிதிகளை பார்த்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு, எந்த தயக்கமும் இல்லாமல், இந்திய விவசாயிகளை விலை பேசிவிட்டார். கொடுமை என்னவென்றால், அதை ஒரு பெரும் ... |
| இந்த ஆண்டு பொங்கல் இனாம் ரூ.500? தேர்தலுக்காக அரசு அதிரடி திட்டம் Posted: பொங்கல் பண்டிகையை ஒட்டி, 1.84 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 500 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பை வழங்க, தமிழக முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு, 700 800 கோடி ரூபாய் வரை செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு அரசு, இந்த பரிசை வழங்குகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவையான, பச்சரிசி, வெல்லம், தலா அரை கிலோ; பாசிபயறு, 100 கிராம்; முந்திரி, ஏலம், திராட்சை, 20 கிராம் ஆகிய பொருட்கள் அடங்கிய, பொங்கல் பை, அனைத்து, ... |
| மன்மோகனுக்கு பிரதமர் பதவி வழங்கியது தவறு: போட்டு தாக்குகிறார் மணிசங்கர் Posted: புதுடில்லி: ''மன்மோகன் சிங்கிற்கு, பிரதமர் பதவி வழங்கியிருக்கக் கூடாது; அப்பதவியில் அவர் இருப்பது தவறு,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான, மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.தொண்டர்கள் உற்சாகம்இல்லை: 'டிவி' ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: நான்கு மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதற்கு காரணம், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் உற்சாகம் இல்லாமல் இருந்தது தான். கட்சியின் அடிமட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை, மாற்றம் செய்ய வேண்டும். இது போன்றதொரு மோசமான நிலைமை, 1985ம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 11,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |