Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கேந்திரிய வித்யாலயா பள்ளி பொன்விழா: மினி மாரத்தான் ஓட்டம்

Posted: 07 Dec 2013 01:08 PM PST

திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 07 Dec 2013 01:08 PM PST

மதுரையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருமங்கலத்தில் ஊர்க் காவல் படை கொடி நாள்

Posted: 07 Dec 2013 01:07 PM PST

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தமிழக ஊர்க் காவல் படை கொடி நாளை முன்னிட்டு, முன்னாள் படைவீரர்களுக்கு சனிக்கிழமை நலநிதி திரட்டப்பட்டது.

சிகிச்சையிலிருந்தவரை கைது செய்ததால் பரபரப்பு

Posted: 07 Dec 2013 01:07 PM PST

மதுரை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சிகிச்சை பெற்றுவந்தவரை சென்னை போலீஸார் கைது செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.   விருதுநகர் மாவட்டம், வீரசோழனைச் சேர்ந்த சுடலை மகன் செல்வராஜ் (27). இவர்மீது கடந்த ஜ

உடல் நலம் பாதிப்படைந்த தண்டனைக் கைதி சாவு

Posted: 07 Dec 2013 01:07 PM PST

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பர்மராஜ் (55). இவர் கம்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்

சோழவந்தான்  வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

Posted: 07 Dec 2013 01:07 PM PST

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில், ஐயப்ப சுவாமிக்கு வைகை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது.

மருத்துவமனை பாதுகாப்பு குறித்து கூட்டு ஆலோசனைக் கூட்டம்

Posted: 07 Dec 2013 01:06 PM PST

மதுரையில் தனியார் மருத்துவமனை பாதுகாப்புக்கான கூட்டு ஆலோசனைக் கூட்டம், அண்ணா நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் சனிக்கிழமை நடைபெற்றது.

கண் பரிசோதனை முகாம்

Posted: 07 Dec 2013 01:06 PM PST

விரகனூர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காந்தியப் பொருளாதாரத்தை மறந்ததால் நாம் வளர்ச்சியில் பின்தங்கிவிட்டோம்

Posted: 07 Dec 2013 01:06 PM PST

காந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை மறந்ததால்தான் வேளாண் பொருளாதார வளர்ச்சியில் நாம் பின்தங்கிய நிலைக்கு வந்துவிட்டோம் என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. ராமசாமி தெரிவித்துள்ளார்.

காட்டன் ஃபேப்- 2013: கைத்தறி ஆடைகள் கண்காட்சி

Posted: 07 Dec 2013 01:06 PM PST

காந்தி அருங்காட்சிய வளாகத்தில், காட்டன் ஃபேப்-2013 கைத்தறி ஆடைகள் கண்காட்சியில் வடமாநில ஆடை ரகங்கள் இடம் பெற்றுள்ளன.

மெய்யாலுமா..?

Posted: 07 Dec 2013 01:05 PM PST

சார்வதேச அளவில் செஸ் போட்டி நடத்தி வெற்றிவாகை சூடிய கார்ல்சனுக்குப் பரிசுத் தொகையும் வழங்கியாகிவிட்டது. சர்வதேச செஸ் போட்டியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் நடைபெற்றன.

மதுரை பல்கலை.யில் கணினி வன்பொருள் சர்வீசிங்,நெட்வொர்க்கிங் பயிற்சி

Posted: 07 Dec 2013 01:05 PM PST

மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கப் பணி துறையில், கணினி வன்பொருள் சர்வீசிங் மற்றும் நெட்வொர்க்கிங் பயிற்சி டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.

டிசம்பர் 9 மின் தடை

Posted: 07 Dec 2013 01:05 PM PST

வண்டியூர் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திங்கள்கிழமை (டிச.9) மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   எனவே, அன்று காலை 9 மணி முதல்

சிப்போ சார்பில் தொழில்முனைவோருக்கு இலவசப் பயிற்சி

Posted: 07 Dec 2013 01:05 PM PST

சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) சார்பில், தொழில்முனைவோருக்கு உணவுப் பதப்படுத்துதல் தொடர்பாக இலவச தொழில் பயிற்சி திங்கள்கிழமை (டிச.9) துவங்குகிறது.

சோழவந்தான் திரெளபதி அம்மன் கோயிலில் கொடிமரம் நடும் விழா

Posted: 07 Dec 2013 01:04 PM PST

  மதுரை மாவட்டம், சோழவந்தான் திரெளாபதி அம்மன் கோயிலில் கொடிமரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாடிப்பட்டியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி பாண்டியராஜபுரம் அணி அரையிறுதிக்கு தேர்வு

Posted: 07 Dec 2013 01:04 PM PST

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப் பள்ளியில், டாபே சுழற்கோப்பைக்கான மாநில அளவில் ஹாக்கி போட்டிகள் 3 நாள்கள் நடைபெறுகின்றன

வேளாண் விளைபொருள்களை மத்திய அரசே கொள்முதல் செய்யும்

Posted: 07 Dec 2013 01:04 PM PST

வேளாண் விளைபொருள்களுக்கு வியாபாரிகள் விருப்பம்போல் விலை நிர்ணயித்து ஏமாற்றுவது இனி நடக்காது. மத்திய அரசே நேரடியாக உரிய விலை கொடுத்து விவசாயிகளிடம் பொருள்களை கொள்முதல் செய்யத் தயாராக உள்ளது என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கொள்கைகளே பொதுத் துறையைப் பாதுகாக்கும்

Posted: 07 Dec 2013 01:04 PM PST

மாற்றுக் கொள்கைகளால் மட்டுமே பொதுத் துறையைப் பாதுகாப்பது சாத்தியமாகும் என்று மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

அண்ணா அறிவியல் மையத்தில் குளிர்கால அறிவியல் முகாம்

Posted: 07 Dec 2013 01:03 PM PST

திருச்சி அண்ணா அறிவியல் மையம்-கோளரங்கத்தில் டிசம்பர் 26 முதல் 3 நாள்களுக்கு குளிர்கால அறிவியல் முகாம் நடைபெற உள்ளது.

 மாற்றுத் திறனாளிகள் தினவிழா

Posted: 07 Dec 2013 01:02 PM PST

திருச்சி பல்நோக்கு சமூகப்பணி மையத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா சனிக்கிழமைநடைபெற்றது.

உச்ச நீதிமன்ற ஆணையைப் புறக்கணிக்கலாமாஆதார் நடைமுறை குறித்து சேவைக் கூட்டமைப்பு புகார்

Posted: 07 Dec 2013 01:02 PM PST

 ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அரசுத் துறைகள் தொடர்ந்து ஆதார் பதிவுக்கு வலியுறுத்தி வருவது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு, நுகர்வோர் மற்றும் சேவைச் சங்கங்களின் கூட்டமைப்பு புகார் மனு அளித்துள்ளது.

ராஜாஜி பிறந்த நாள் போட்டிகள்:கேம்பியன் பள்ளி முதலிடம்

Posted: 07 Dec 2013 01:02 PM PST

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மூதறிஞர் ராஜாஜி பிறந்த நாள் விழா போட்டிகளில் கேம்பியன் பள்ளி முதலிடத்தைக் கைப்பற்றியது.

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சகோதரர்கள் கைது

Posted: 07 Dec 2013 01:01 PM PST

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை

Posted: 07 Dec 2013 01:01 PM PST

திருப்பூர்

Posted: 07 Dec 2013 01:00 PM PST

வேலூர்

Posted: 07 Dec 2013 01:00 PM PST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதநல்லிணக்கப் பிரசாரம்

Posted: 07 Dec 2013 01:00 PM PST

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதநல்லிணக்கம், மதவேற்றுமை எதிர்ப்புப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

செந்தூரான் கல்லூரியில் 71 பேர் ரத்த தானம்

Posted: 07 Dec 2013 01:00 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திராவிடர் கழகத்தினர் தெருமுனை பிரசாரம்

Posted: 07 Dec 2013 01:00 PM PST

புதுக்கோட்டையில் திராவிடர் கழகம் சார்பில், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணடிமை, சாதி ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் தெருமுனைப் பிரசார இயக்கம் பேராங்குளம் பகுதியில் சனிக்கிழமை தொடங்கியது.

பள்ளி மாணவர்களின் எழுத்தறிவு சேவை முகாம்

Posted: 07 Dec 2013 01:00 PM PST

  சர்வதேச எழுத்தறிவு வாரத்தையொட்டி, பள்ளி மாணவர்கள் சார்பில் திருமயம் பகுதியில் எழுத்தறிவு சேவை முகாம் அண்மையில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Dec 2013 01:00 PM PST

பொன்னமராவதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடகாடு ஊராட்சியில் மக்கள் குறைகேட்பு முகாம்: 235 மனுக்களுக்குத் தீர்வு

Posted: 07 Dec 2013 01:00 PM PST

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சியில் மக்கள் குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடகாடு சந்தைப்பேட்டையிலுள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற முகாமில் 158 குடும்ப

நிலப் பிரச்னையில் மோதல்: 2 பேர் காயம்

Posted: 07 Dec 2013 01:00 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஜிகேஎம் நகரைச் சேர்ந்த அண்ணாதுரைக்கும் (43), வெளிப்பிரிங்கியம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கும் (45) இடையே நிலப் பிரச்னை இருந்தது.

பருவ மழை குறைவால் கருகும் நிலையில் சம்பா நெல் பயிர்கள்

Posted: 07 Dec 2013 01:00 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில்  பருவமழை குறைவால் சம்பா நெல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.

பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி: ஜெயலலிதா

Posted: 07 Dec 2013 12:59 PM PST

பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தாராளமயக் கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு: டி.கே.ரங்கராஜன் எம்.பி.பேச்சு

Posted: 07 Dec 2013 12:58 PM PST

மத்திய அரசு பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர் என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

மருதமலை வனப்பகுதியில் யானை ஊடுருவலைத் தடுக்க தூண்கள்

Posted: 07 Dec 2013 12:55 PM PST

மருதமலை அடிவார வனப்பகுதியில் அகழிகளில் குறுக்கிடும் பாறைப் பகுதிகளில் பெரிய தூண்களைக் கட்டி யானைகள் வருவதைத் தடுப்பது குறித்து வனத்துறை பரிசீலித்து வருகிறது.

இந்த வார கலாரசிகன்

Posted: 07 Dec 2013 12:53 PM PST

சிலம்பொலியார் எண்பது நிறைந்து 86-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்கிற செய்தியே வியப்பு மேலிட வைக்கிறது.

தளரடி தாங்கிய நெஞ்சு!

Posted: 07 Dec 2013 12:53 PM PST

இன்றைய திரைப்படங்களில் கதாநாயகன், கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு தன் கரங்களால் தாங்குவதைப் போன்ற காட்சிகளைக் காண்கிறோம். இதே காட்சியைக் கபிலர் சற்று மாறுபட்ட நிலையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இரும்புலியும் குறுநரியும் முனைவர் யாழ் சு.சந்திரா

Posted: 07 Dec 2013 12:53 PM PST

உடல் நிறைய பொன் அணிகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் தன்னந்தனியே ஓர் இளம்பெண் நடந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட வேண்டும்' என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால், இன்றோ காதலனுடன் தனிமை நாடிச்செல்லும் பெண்கள், காதலன் கண்முன்னே, காமுகர்களால் கொடூரமாகச் சிதைக்கப்படுகின்ற அவலம்!

விஏஓ பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்

Posted: 07 Dec 2013 12:31 PM PST

காலியாகவுள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஏஓ பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் நலச் சங்கத்தின் முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.

கும்பகோணம் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

Posted: 07 Dec 2013 12:31 PM PST

கும்பகோணம் புதிய வட்டாட்சியராக ரா. கிருஷ்ணன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். கும்பகோணம் வட்டாட்சியராக இருந்த ஸ்ரீமாதவன் பணி உயர்வு பெற்று மாறுதலாகிச் சென்றார்.

லயன்ஸ் சங்கம் சார்பில் பள்ளிக்கு மின்விசிறி

Posted: 07 Dec 2013 12:31 PM PST

திருவையாறு பாலகணபதி தொடக்கப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற லயன்ஸ் சங்கக் கூட்டத்தில் அந்தப் பள்ளிக்கு சங்கத்தின் சார்பில் மின் விசிறி வழங்கப்பட்டது. 

தஞ்சையில் மணல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

Posted: 07 Dec 2013 12:31 PM PST

டோக்கன் முறையை மீண்டும் அமல்படுத்தக் கோரி, தஞ்சையில் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருவேறு அக்கினிக் குஞ்சுகள்!

Posted: 07 Dec 2013 12:30 PM PST

சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்து: தொழிலாளர்கள் 14 பேர் காயம்

Posted: 07 Dec 2013 12:30 PM PST

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே சனிக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளர்கள் 14 பேர் காயமடைந்தனர்.

தஞ்சையில் அனைத்துக் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம், பேரணி

Posted: 07 Dec 2013 12:30 PM PST

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவையொட்டி, தஞ்சாவூரில் அனைத்துக் கட்சி சார்பில் சனிக்கிழமை இரங்கல் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

தஞ்சையில்வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

Posted: 07 Dec 2013 12:30 PM PST

தஞ்சையில் வெள்ளிக்கிழமை இரவு வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழ்ச் செல்வங்கள்: தமிழ் - 5

Posted: 07 Dec 2013 12:29 PM PST

உலகில் உள்ளவற்றை எல்லாம் மூன்றே சொற்களில் அடக்க வேண்டும்! முடியுமா? "முடியும்' என்றார் ஒருவர்; அவர் பெயர் மெய்கண்டார்! தமிழுக்கு வரம்பு கண்ட தகவாளர்; முந்தையர் அறிவுச் சுரப்பை முழுதறிந்த பேராளர்! அதனைப் பின்னே முழுவதாகக் கண்டு விரித்து விரித்து உரைத்த சீராளர் பாவாணர்.

அடியக்கமங்கலத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 07 Dec 2013 12:29 PM PST

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூரில் மின் தடை நேரம் அறிவிப்பு

Posted: 07 Dec 2013 12:29 PM PST

திருவாரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படும் பகுதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூர் மின் வாரிய அலுவலக செயற்பொறியாளர் எஸ். சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

Posted: 07 Dec 2013 12:28 PM PST

காரைக்காலில் சனிக்கிழமை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குடவாசலில் விரைவு பட்டா மாறுதல் முகாம்

Posted: 07 Dec 2013 12:28 PM PST

குடவாசலில் வியாழக்கிழமை நடைபெற்ற விரைவு பட்டா மாற்ற முகாமில் 2,762 மனுக்கள் பெறப்பட்டன. குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்டாட்சியர் பெ. பரமசிவம் தலைமையில்

பள்ளி சமையல் கூடங்களில் மத்தியக் குழு ஆய்வு

Posted: 07 Dec 2013 12:28 PM PST

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மத்திய சமையல் கூடங்கள், பள்ளிகளில் உள்ள சமையல் அறைகளில் மத்தியக் குழுவினர் சனிக்கிழமை சோதனை செய்தனர்.

நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் நிறைவு

Posted: 07 Dec 2013 12:28 PM PST

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவ நிகழ்ச்சி, மூலவருக்கு கும்ப பிரோக்ஷ்ணத்துடன் சனிக்கிழமை நிறைவடைந்தது. 

சங்கப்பலகை 5 - காலநிலையியல் நோக்கில் முல்லைப்பாட்டு!

Posted: 07 Dec 2013 12:28 PM PST

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

Posted: 07 Dec 2013 12:27 PM PST

வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்படும் பகல்நேரப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

கரூர் அருகே கார் மோதி விவசாயி சாவு

Posted: 07 Dec 2013 12:27 PM PST

கரூர் அருகே வெள்ளிக்கிழமை கார் மோதி விவசாயி உயிரிழந்தார். கரூர் அருகே உள்ள உள்வீரராக்கியம் சின்னம்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரப்பன் (52) விவசாயி. இவர் வெள்ளிக்கிழமை இரவு

டிச. 10-ல் கரூர் பகுதியில் மின்தடை

Posted: 07 Dec 2013 12:27 PM PST

கரூர் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 10) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்குப் பாராட்டு

Posted: 07 Dec 2013 12:26 PM PST

மாநில அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா கரூர் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மணவாடி அரசுப் பள்ளி ஆண்டு விழா

Posted: 07 Dec 2013 12:26 PM PST

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள மணவாடி அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

தனியார் பேருந்து மோதி லாரி கிளீனர் சாவு

Posted: 07 Dec 2013 12:26 PM PST

குளித்தலை அருகே தனியார் பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி கிளீனர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

Posted: 07 Dec 2013 12:26 PM PST

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கரூர் பள்ளி சிறப்பிடம்

Posted: 07 Dec 2013 12:25 PM PST

கரூர் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் கொங்கு வெள்ளாளர் பள்ளி சிறப்பிடம் பெற்றது. கரூரில் அண்மையில் பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான சதுரங்கம், இறகுப்பந்து,

மின்சாரம் தடைபட்டதால் மோதல்: 24 பேர் கைது

Posted: 07 Dec 2013 12:25 PM PST

கரூர் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்தடை ஏற்பட்ட பிரச்னையில் இந்து முன்னணியினருக்கும், கிராமமக்களுக்கும் இடையே வெள்ளிக்கிழûமை ஏற்பட்ட மோதலில் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதிநெறி விளக்கம்

Posted: 07 Dec 2013 12:25 PM PST

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர் சீரெல்லாம் தூற்றிச் சிறமை புறங்காத்து யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல். (பாடல்-19)

கல்லூரிப் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 07 Dec 2013 12:25 PM PST

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

ஆலம்பாடியில் புகைப்படக் கண்காட்சி

Posted: 07 Dec 2013 12:24 PM PST

பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம்பாடி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்

Posted: 07 Dec 2013 12:24 PM PST

பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையம் எதிரே, பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி, முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக இளைஞரணி பொறுப்பாளர்கள் கூட்டம்

Posted: 07 Dec 2013 12:24 PM PST

பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட இளைஞரணி பொதுச் செயலர் பி.எல். அடைக்கலராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிலப் பிரச்னையில் மோதல்: 2 பேர் காயம்

Posted: 07 Dec 2013 12:23 PM PST

அரியலூரில் நிலப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர்.

விலையில்லா ஆடுகள் வழங்க டிச.10-ல் கிராம சபைக் கூட்டம்

Posted: 07 Dec 2013 12:23 PM PST

அரியலூர் மாவட்டத்தில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்பாக 14 கிராமங்களில் டிச.10-ல் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

டிச. 8-18 வரை மாணிக்கவாசகர் மார்கழி திருவாதிரை பெருவிழா

Posted: 07 Dec 2013 12:23 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் சிவயோக நாயகி உடனாய அருள்மிகு ஆத்மநாத சுவாமி கோவிலில் அருள்திரு மாணிக்கவாசகர் மார்கழி திருவாதிரை பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) தொடங்கி, வருகிற 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கொடி நாள் வசூல் இலக்கு ரூ. 31 லட்சம்: ஆட்சியர்

Posted: 07 Dec 2013 12:22 PM PST

கொடிநாளுக்காக ரூ. 31.42 லட்சம் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் செ. மனோகரன்.

பேருந்தில் பயணித்தபோது ரூ. 1.41 லட்சத்தை காணவில்லை என பெண் புகார்

Posted: 07 Dec 2013 12:22 PM PST

ஆலங்குடி அருகே பேருந்தில் சென்றபோது தான் வைத்திருந்த ரூ. 1.41 லட்சம் ரொக்கத்தை காணவில்லை என பெண் வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பருவ மழை குறைவால் கருகும் நிலையில் சம்பா நெல் பயிர்கள்

Posted: 07 Dec 2013 12:22 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில்  பருவமழை குறைவால் சம்பா நெல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.

ஆலங்குடி அருகே மகன் இறந்த அன்றே தாயும் மரணம்

Posted: 07 Dec 2013 12:22 PM PST

ஆலங்குடியை அடுத்த கொத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை மகன் இறந்த அன்றே துக்கம் தாளாமல் அவருடைய தாயும் இறந்தார்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தர்னா

Posted: 07 Dec 2013 12:22 PM PST

நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சனிக்கிழமை தர்னாவில்

வரதட்சிணை கொடுமை: கணவர் கைது

Posted: 07 Dec 2013 12:21 PM PST

புதுக்கோட்டை அருகே மனைவியிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.

அரசுப் பள்ளியில் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 07 Dec 2013 12:21 PM PST

கும்பகோணம் அரசு மகளிர்  மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள்

Posted: 07 Dec 2013 12:20 PM PST

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கப்பட்ட மூன்று சக்கர  மோட்டார் வாகனங்களை 4 மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியும், எம்.எ

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 07 Dec 2013 12:20 PM PST

ஒரத்தநாடு பாரதிதாசன்  பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி  முதுகலை இரண்டாம் ஆண்டு சமூக பணித்துறை மற்றும் ஆத்மா மனநலம் இணைந்து, பெண்களும் - மனநலமும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவிலுர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

"கொடிநாள் வசூல் இலக்கு ரூ. 37 லட்சம்'

Posted: 07 Dec 2013 12:20 PM PST

: தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டிற்கான  கொடிநாள் நிதி வசூலிக்க ரூ. 37 லட்சத்து 3 ஆயிரத்து 420 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

தஞ்சையில் வாகனச் சோதனை: 114 பேர் மீது வழக்கு

Posted: 07 Dec 2013 12:20 PM PST

தஞ்சை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை  மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையில், ஒரே நாளில் 114 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய 16 பேர் பிடிபட்டனர்.

தனியார் கல்லூரியில் திருடிய 3 பேர் கைது

Posted: 07 Dec 2013 12:19 PM PST

கும்பகோணம் அருகேயுள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டடப் பணிகளுக்காக இரும்பு ராடு மற்றும் கட்டடப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

சீர்காழி அருகே பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 07 Dec 2013 12:19 PM PST

சீர்காழி அருகே பேருந்து மோதி காயமடைந்த இளைஞர், மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு: அமைச்சர் ஆய்வு

Posted: 07 Dec 2013 12:19 PM PST

நாகையில் மழையால் சேதமடைந்து போக்குவரத்து இடையூறாக இருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டன. இந்தப் பணியை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் ஆய்வு செய்தார்.

பள்ளியில் வாழ்வியல் திறன் பயிற்சி

Posted: 07 Dec 2013 12:18 PM PST

மன்னார்குடியை அடுத்துள்ள சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப் பணித் திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பரவாக்கோட்டையில் கோமாரியால் இறந்த கால்நடைகளுடன் மக்கள் மறியல்

Posted: 07 Dec 2013 12:18 PM PST

கோமாரியால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு கேட்டு, பரவாக்கோட்டையில் பொதுமக்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்குபுத்தாடை வழங்கியது ரோட்டரி சங்கம்

Posted: 07 Dec 2013 12:18 PM PST

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில், டி.எஸ்.எம். பள்ளியில் செயல்படும் பகல்நேர பாதுகாப்பு மையத்தில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், அன்பாலயத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அண்மையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு

மணல் டிராக்டர்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Posted: 07 Dec 2013 12:18 PM PST

சீர்காழி அருகே பழுதடைந்துள்ள சீர்காழி-பணங்காட்டாங்குடி-வடரெங்கம் சாலையை சீரமைக்கக் கோரி, வடரெங்கத்தில் மணல் டிராக்டர்களை சிறைபிடித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் அறிவியல் கண்காட்சி நாளை தொடக்கம்

Posted: 07 Dec 2013 12:17 PM PST

திருவாரூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை (டிச.9) தொடங்குகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பிலான இக்கண்காட்சி, திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் டிச. 9,10 ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது.

2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Posted: 07 Dec 2013 12:17 PM PST

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிக்கும் முன்னறிவிப்பாக சனிக்கிழமை 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

விண்ணுலகம் சென்றார் மண்டேலா...

Posted: 07 Dec 2013 12:16 PM PST

விண்ணுலகம் சென்றார் மண்டேலா...

தஞ்சை

Posted: 07 Dec 2013 12:16 PM PST

மண்டேலா இறுதிச் சடங்கு: பிரணாப் முகர்ஜி பங்கேற்க திட்டம்

Posted: 07 Dec 2013 12:12 PM PST

தென் ஆப்பிரிக்காவின் மறைந்த முதல் கருப்பின அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸூக்கு புதிய நிர்வாகிகள்

Posted: 07 Dec 2013 12:12 PM PST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தார்மிகப் பொறுப்பேற்று கங்குலி ராஜிநாமா செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஆதிர் சௌத்ரி

Posted: 07 Dec 2013 12:08 PM PST

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி, தற்போது வகித்து வரும் மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஆதிர் சௌத்ரி வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதி கங்குலி மீதான பாலியல் புகார் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எழுப்ப பாஜக திட்டம்

Posted: 07 Dec 2013 12:04 PM PST

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி மீது பெண் பயிற்சி வழக்குரைஞர் தெரிவித்த பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

கொடி நாள்: முதல்வர் ஜெயலலிதா நன்கொடை

Posted: 07 Dec 2013 12:04 PM PST

கொடி நாள் நிதியாக, ரூ.25 ஆயிரத்தை நன்கொடையாக முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை வழங்கினார். இதே போன்று ஆளுநர் கே.ரோசய்யாவும் நிதி அளித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™