ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
- 30 வகை சூப் !
- நவீன லேப்ரோஸ்கோபி சிகிச்சை
- முடி உதிர்தல்!
- என் பெயர் கௌதம்
- சொந்த வலைத்தளம் அமைப்பது எப்படி உதவுங்கள்.
- மனித உரிமை மீறல்: இலங்கை கடும் விளைவை சந்திக்க நேரிடும்- அமெரிக்கா எச்சரிக்கை
- ஆட்டோ சங்கரின் கடைசி நிமிடங்கள்...
- பருமனைக் குறைக்க
- முகநூலில் ரசித்தவை!
- கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!
- கொழுப்பைக் குறைக்க...!
- தினந்தோறும் ஆரோக்கியம்
- அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்!
- லிப்போசக்ஷன் - Liposuction
- ஐந்து மாநில தேர்தல்: 4 ல் பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பு!
- தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?
- உரம் போட்டு, ஊசி போட்டு...மீன்கள் ஜாக்கிரதை!
- பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
- பேஸ்புக்கில் புதிதாக “Unfollow” பட்டன்!
- பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம்
- அறிமுகப் படுத்துகிறேன்
- பெரிய படங்கள் என்றில்லை நடிகர் திலகத்தின் சாதாரண படமான நான் வாழ வைப்பேன் சென்னையில் சென்ற மாத வெற்றி உலா !
- வேலன்:-மூவி கிரியேட்டர்
- வசந்த மாளிகை - காலத்தால் அழியாத காதல் காவியம் - 1972 முதல் ......
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -73)
- நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ?
- 'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')
- நேர்முகத்தேர்வு 1 --உங்கள் பதில் என்ன ?
- நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்
- விடியல்
- நான் யார்
- ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்
- உலகச் செய்திகள்!
- எல்லா செல்வமும் கிடைக்கும் விரதம்
- அப்பா..! எனக்கு கல்யாணம்..!
- திருவாசகம் – பெயர்க்காரணம்
- சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?
- மகாபாரதம் - இதிகாசத் தொடர் - விஜய் டிவி!
- இந்தோனேஷியா அதிசய கோவில்
- இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்
- நெல்சன் மண்டேலா உடல்நிலை : குடும்பத்தினர் தகவல்
- நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!
- ஈகரை மாதிரித்தேர்வு
- படுகொலையைத் திருவிழாவாக மாற்றும் ஊடகங்கள்
- ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?
| Posted: 04 Dec 2013 03:24 PM PST போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ? அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் ... |
| Posted: 04 Dec 2013 03:17 PM PST மழைக் காலம்... குளிர் காலம்... என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்... டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ... சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன. ''பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டையும் மிச்சம் வைக்காமல் ... |
| Posted: 04 Dec 2013 03:03 PM PST அறுவை சிகிச்சை என்றாலே, ஏகப்பட்ட தழும்புகளைச் சுமந்தது அந்தக் காலம். இப்போது தழும்பே இல்லாத அறுவை சிகிச்சை வந்தாச்சு. ஆம், ஒரு துளை லேப்ரோஸ்கோபி அறிமுகத்துக்குப் பின் அறுவைச் சிகிச்சைகளில் தழும்புகளே தெரிவது இல்லை. இந்த ஒரு துளை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சையை தமிழகத்தில் அறிமுகம் செய்த சென்னை குளோபல் மருத்துவமனையின் பேரியாட்டிக் மற்றும் ஜிஐ லேப்ராஸ்கோபி மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான் தனக்குமாரிடம் பேசினோம். ''ஒரு துளை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் குடல்வால், பித்தப்பை, சிறுநீரகம், ... |
| Posted: 04 Dec 2013 03:01 PM PST பெண்களின் 'தலை'யாய பிரச்னை... முடி உதிர்தல்! ''சீப்பை தலையில் வெச்சாலே போதும்... கொத்து கொத்தா முடி கழட்டிட்டு வருது. இதை நிறுத்த யாராவது வழி சொல்லுங்களேன்..?'' என்று கேட்காத பெண்கள் இங்கு குறைவு. அந்தத் தைலம் தேய்க்கலாமா, இந்த எண்ணெய் தடவலாமா என்று அலை பாய்வதற்குப் பதில், முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்து கொண்டால், அந்தப் பிரச்னையில் இருந்து மீளலாம். முடி கொட்டுவதற்கான பிரதான காரணங்கள் இங்கே..! ஊட்டச்சத்து இன்மை புரதச்சத்து, இரும்புச் சத்து மற்றும் ... |
| Posted: 04 Dec 2013 11:29 AM PST புதுமையான படைப்பாளிகளை இனம்கண்டு சிறந்த படைப்புகளை வெளியிட்டு கொண்டிருக்கும் யாழ் பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு ,இளம் எழுத்தாளர் கார்த்திக் ன் இரண்டாவது நாவல் "என் பெயர் கௌதம்" இவரது முதல் படைப்பான "நிலவில் ஒரு நாள்" அனைத்து வாசகர்களையும் வெகுவாக கவர்ந்தது அதன் காரணமாகவே "என் பெயர் கௌதம் ".புத்தக முன்பதிவே இரண்டாயிரத்தை தாண்டியது.மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியானது .ஆர்வ மிகுதியால் காலையே சுதர்சன் புக் மாலில் சென்று வாங்கி வந்தேன் .ஒரே மூச்சில் படித்து முடித்தாகிவிட்டது கதைப்படி சிறுவயதில் ... |
| சொந்த வலைத்தளம் அமைப்பது எப்படி உதவுங்கள். Posted: 04 Dec 2013 11:22 AM PST நன்பர்களே எனது சொந்த தேவைகளுக்காக இலவசமாக ஒரு வலைத்தளம் அமைப்பது எப்படி. தெரிந்தவர்கள் உதவுங்களேன். |
| மனித உரிமை மீறல்: இலங்கை கடும் விளைவை சந்திக்க நேரிடும்- அமெரிக்கா எச்சரிக்கை Posted: 04 Dec 2013 11:18 AM PST வாஷிங்டன்: மனித உரிமை மீறல் பற்றி இலங்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோள்களை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நிராகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா தேசாய், "உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற கொடுமைகள் ... |
| ஆட்டோ சங்கரின் கடைசி நிமிடங்கள்... Posted: 04 Dec 2013 11:06 AM PST சரியாக, 19 வருடங்களுக்குப் பிறகு... ஒரு கொலைக் குற்றவாளி தூக்கிலிடப்படும் சம்பவத்தை சந்தித்தது சேலம் மத்திய சிறைச் சாலை. ஏப்ரல் 27-ம் தேதி ஆட்டோ சங்கருக்குத் தூக்கு! விடியற்காலை 3 மணி இருக்கும். அந்த செல்லின் மூலையில் உட்கார்ந்தபடியே அசந்துகிடந்த ஆட்டோ சங்கரை எழுப்பினர். உடனேயே எழுந்துவிட்ட சங்கர். ''போன் வரலியா இன்னும்?'' என்று கேட்டான். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் தூக்கு மேடையில் நிற்கப்போகிற மரண தண்டனைக் கைதியான சங்கர், எப்படியும்தான் காப்பாற்றப்படுவோம் என்று அந்த நிமிடத்திலும் ... |
| Posted: 04 Dec 2013 11:01 AM PST உடல் பருமனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அது இன்று, நோயின் அடையாளமாக மாறி போயிருக்கிறது. 'கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக பெருகிவருகிறது. இது ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு அறிகுறி' என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சித்த மருத்துவர் என். சந்திரகுமார் இங்கே விரிவாக விளக்குகிறார். 'இந்திய மக்கள் தொகையில், 15 சதவிகிதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். ... |
| Posted: 04 Dec 2013 10:58 AM PST ![]() |
| கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்! Posted: 04 Dec 2013 10:48 AM PST கொழும்பு: அதிபர் ராஜபக்சேவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபக்சே டெல்லிக்கு ரகசியமாக வந்து இந்திய கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார். பின்னர், போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்று எச்சரித்தார். அதன் பயனாக ... |
| Posted: 04 Dec 2013 10:46 AM PST 'என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?' என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம். 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்' என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. ... |
| Posted: 04 Dec 2013 10:45 AM PST தினமும் எழுந்து, அன்றாட வேலைகளைச் செய்து, அரக்கபரக்க அலுவலகத்துக்கு ஓடுகிறோம். மாலை வீட்டுக்கு வந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு, இரவு தூங்குகிறோம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்வது பற்றிய விழிப்பு உணர்வு என்பது நம்மில் பலரிடம் இல்லை என்பதுதான் உண்மை. நாம் செய்யும் அன்றாட வேலைக்கு நடுவில் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடுகிறோம். அல்லது, செய்யும் வேலையே உடலுக்குப் பயிற்சிதானே என்று அசட்டையாக இருந்துவிடுகிறோம். காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கச் செல்லும் வரை ஒருவர் ... |
| அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Posted: 04 Dec 2013 10:31 AM PST சமீபத்தில் 'ஆர்கைவ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசன்ஸ்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 'நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களின் ஆயுள் குறையும், சில மணித்துளிகள் உட்காருபவர்களுக்கு ஆயுள் கெட்டி!' என்பதுதான் அந்த ஆராய்ச்சியின் முடிவு. அதிக நேரம் உட்கார்ந்தே பணிபுரிவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், ''நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும், வாழ்நாளில் பாதி நாட்கள் சேரில் உட்கார்ந்து, உங்கள் ஆயுளைக் ... |
| Posted: 04 Dec 2013 10:28 AM PST 'லிப்போசக்ஷன் என்றால், உடல் எடைக் குறைப்பு சிகிச்சை இல்லை. 120 கிலோ எடை உள்ளவர்கள், லிப்போசக்ஷன் மூலம் 80 கிலோவுக்கு எடை குறைந்துவிடலாம் என்று நினைத்தால், அது தவறு. உடல் எடைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சரியான உணவுமுறை, உடற்பயிற்சிச் செய்வதன் மூலமே உடல் எடையைக் குறைக்க முடியும். அப்படி உடற்பயிற்சி செய்யும்போது வயிறு, தொடை, புஜம் என உடலின் ஒருசில பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியான எடையைக் குறைப்பது சிரமமாக இருக்கும். இருப்பினும், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் உடலின் சில பகுதிகளில் ... |
| ஐந்து மாநில தேர்தல்: 4 ல் பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பு! Posted: 04 Dec 2013 10:26 AM PST புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மிசோராமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் வாக்குப்பதிவுக்கு பின்னர் நடைபெற்ற நடைபெற்ற கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. டெல்லி, மிசோராம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. கடைசிக் கட்டமாக டெல்லி சட்டசபைக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தோரிடம் இந்தியா ... |
| தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது? Posted: 04 Dec 2013 10:23 AM PST 'புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் தயிரில் உண்டு. 100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது. ஒல்லியாக இருப்பவர்கள், நுரையீரலில் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் தயிர் சாப்பிட வேண்டும். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், இவை உணவு செரிக்கத் தேவையான பாக்ட்டீரியாக்களை உருவாக்குகின்றன. ... |
| உரம் போட்டு, ஊசி போட்டு...மீன்கள் ஜாக்கிரதை! Posted: 04 Dec 2013 10:13 AM PST மீன் குழம்பு' என்று வாசித்தாலே நாக்கில் எச்சில் ஊறும் நம்மவர்களுக்கு! ஆட்டுக்கறி, கோழிக்கறியைக் காட்டிலும் அசைவ உணவு வகைகளில் மீனுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அசைவ உணவு வகைகளில் சத்து மிகுந்ததும் மீன்தான். எல்லாவற்றையும் நச்சுப்படுத்தி லாபம் பார்க்கும் நவீனகால வியாபார உலகம், மீன்களை மட்டும் விட்டுவைக்குமா? இன்று நாம் உண்ணும் மீன்கள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை? அவை எத்தகைய சூழலில், எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன? ஞாயிற்றுக்கிழமை மதியங்களை சுவைமிக்கதாக மாற்றும் மீன் வாசனையின் இன்னொரு ... |
| பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்! Posted: 04 Dec 2013 10:02 AM PST யால்வாக், துருக்கி: தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி குழந்தைக்குத் தாயாக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாள் துருக்கியைச் சேர்ந்த ஒரு இளம் பெண். பின்னர் அந்த நபரின் தலையை வெட்டி ஊருக்கு நடுவே கொண்டு வந்து போட்டார் அவர். அந்தப் பெண்ணின் பெயர் நெவின் இல்திரிம். வயது 26. துருக்கியின் யால்வாக் என்ற ஊரைச் சேர்ந்தவர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து 5 மாத கர்ப்பமாக்கிய நபரைத்தான் தற்போது கொன்றுள்ளார். கொல்லப்பட்ட நபரின் பெயர் நுரெட்டின் ... |
| பேஸ்புக்கில் புதிதாக “Unfollow” பட்டன்! Posted: 04 Dec 2013 09:59 AM PST குறிப்பிட்ட நண்பர்களிடமிருந்து வரும் இடுகைகளையும், தகவல்களையும் தடை செய்வதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த "Hide All" என்ற பொத்தானுக்குப் பதிலாக இன்னும் வசதியாக "Unfollow" என்ற பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் வலைத்தளம். இந்த "Unfollow" பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது இடுகைகள் மற்றும் தகவல்களை தடை செய்யலாம். இதன் மூலம், எப்போதும் போல் அவர்களுடன் நட்பு வட்டத்தில் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்களின் இடுகைகள் உங்களது "News Feed" பக்கத்தில் ... |
| பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Posted: 04 Dec 2013 09:56 AM PST யாழ்ப்பாணம்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் உட்பட எந்த சொத்துக்களையும் அரசுடமையாக்க இடமளிக்க போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை அரசுடமையாக்க போவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் உட்பட எந்த சொத்துக்களையும் ... |
| Posted: 04 Dec 2013 09:55 AM PST பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களே! மக்கள் கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் அல்லவா தாங்கள்! இதோ! ஈகரை அன்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்துகிறேன் ஈகரை அன்பர்களே! புதிதாக நம்முடன் இணைந்திருக்கும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற சுப்பு 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர பக்தர். மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்களின் குடும்பத்திற்கு மிக்க நெருக்கமானவர். திரு.ஜெய்சங்கர் அவர்களின் பேரன்பைப் பெற்றவர். அதோடு என்னுடைய உயிர் நண்பரும் கூட. அவரை மனதார நாம் வரவேற்போம். |
| Posted: 04 Dec 2013 08:41 AM PST ஒரு சிலர் சென்னையில் நடிகர் திலகம் அவர்களுடைய திரைப்படம் சாதரணமாக திரயிடபடுவதில்லை, காரணம் கூடம் வராது, விநியோகஸ்தருக்கு லாபம் இருக்காது என்று வாய்க்கு வந்தபடி வசவு செய்தபோது, மிக சாதாரணமாக திரையிடப்பட்ட படம்தான் நான் வாழ வைப்பேன். 1979இல் வெளியான இத்திரைப்படம் சென்னை சித்ரா திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சிறந்த ஒரு சாதனை செய்தது. திரு ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் திரையுலகில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒரு சில பிரச்சனையில் இருந்தபோது அவரை வைத்து திரைப்படம் தயாரிக்க கூடாது என்று கடுமையாக ... |
| Posted: 04 Dec 2013 08:33 AM PST நம்மிடம் உள்ள புகைப்படங்கள் வீடியோபடங்களை நாம் விருப்பபடி ஆடி யோ மற்றும் டிரான்ஸ்செக்ஷன் சேர்த்து மூவி கிரியேட் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Photo/Video Library.Audio library,Transtions என மூன்றுவிதமான டேப்புகள் கொடுத்திருப்பார்கள்.இதில் முதலில் உள்ள Photo/Video Library என்பதனை கிளிக் செய்து நமது கணிணியில் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும். ... |
| வசந்த மாளிகை - காலத்தால் அழியாத காதல் காவியம் - 1972 முதல் ...... Posted: 04 Dec 2013 08:22 AM PST தமிழ் திரையுலகம் எவ்வளவோ அருமையான காதல் காவியங்களை கண்டாலும்...காலத்தால் அழியாத காதல் காவியமாக இன்றளவும் அனைவராலும் விரும்பப்படும் காதல் திரைப்படமாகும் நமது வசந்த மாளிகை. 1972இல் வந்த திரைப்படம் புதிய முறையில் CUBE - CINEMASCOPE - DTS முயற்சி கையாளப்பட்டு சுமார் 72 திரை அரங்கில் ஒரே நேரத்தில் கர்ணனுக்கு பிறகு 2013 வெளியிடப்பட்டு பல புதிய படங்கள் ரிலீஸ் செய்த வேளையிலும் சுமார் 7 வாரம் ஓடிய மாபெரும் வெற்றிப்படம். தமிழ் திரைஉலகின் காதல் மன்னனாம் திரு. ஜெமினி அவர்களையும் பிரமிக்க வைத்த கதாபாத்திரம் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -73) Posted: 04 Dec 2013 08:10 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ? Posted: 04 Dec 2013 07:58 AM PST நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ? ஒரு நாள் இரவு ,செம மழை.காற்று வேறு பலமாக வீசுகிறது உங்களுடைய 2 இருக்கை(two seater ) காரில் நீங்கள் வீடு திரும்பிக்கொண்டு இருக்கிறீர். வழியில் உள்ள பஸ் ஸ்டாப்பில், வயதான பெண்மணி மழையில் நடுங்கி கொண்டு இருக்கிறார் .அவர் அருகே உங்களுடைய நெடு நாளைய நண்பர் ,உங்களுக்கு ஒரு ஆபத்தில் உங்களை காப்பாற்றிய புண்ணியாத்மா , மற்றொருவர் , உங்களுடைய கனவு கன்னி ,நீங்கள் எது மாதிரி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து இது நாள் வரை கல்யாணத்தை தள்ளிப் ... |
| 'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்') Posted: 04 Dec 2013 07:56 AM PST 'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர்-5 திரும்பிப் பார் நடிகர் திலகத்தின் 5 ஆவது அற்புதப் படைப்பு. வெளியான நாள் - 10.07.1953 தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ் கதை வசனம் - மு.கருணாநிதி சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிரபாத், சரஸ்வதி, நூர்ஜஹான் இசை - 'இசைமேதை' ஜி.ராமநாதன் படத்தொகுப்பு - எல்.பாலு ஒளிப்பதிவு - W.R.சுப்பாராவ் இயக்கம் - டி.ஆர். சுந்தரம் நடிக நடிகையர்: நடிகர் திலகம், பி.வி.நரசிம்ம பாரதி, பண்டரிபாய், கிரிஜா, ... |
| நேர்முகத்தேர்வு 1 --உங்கள் பதில் என்ன ? Posted: 04 Dec 2013 07:52 AM PST நேர்முகத்தேர்வு 1 --உங்கள் பதில் என்ன ? கேள்வி , "கடவுள் ராமபிரான், தன்னுடைய தலை தீபாவளியை எந்த ஊரில் கொண்டாடி இருப்பார் " இதற்கு பதிலை ஈகரை அன்பர்கள் கூறலாமே ! ரமணியன் |
| நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம் Posted: 04 Dec 2013 06:28 AM PST நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம் சில நேர்முகத்தேர்வுகளில், தேர்வுக்கு வந்திருப்பவர்களை , கமிட்டி மெம்பர்கள் ஏடாகூடமாக சில கேள்விகளை கேட்பார்கள் . அவர்கள் கூறும் பதிலை பொறுத்து சிலரை தேர்ந்து எடுப்பர் . பொறுமை, சமயோசிதம் ,பேச்சுத்திறன் அறிய இவை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் . இப்படி பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து , வெற்றி பெற்ற சிலரது அனுபவம் ,கீழே பட்டியல் இட்டு உள்ளேன் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். மூன்று உதாரணம் காட்டியுள்ளேன். உங்கள் பின்னூட்டங்களை இடலாம். அதன் பிறகு 2 உதாரணங்களை ... |
| Posted: 04 Dec 2013 05:35 AM PST விடியல் வரும்வரை உறங்கி இரு என்றது நேற்றைய அனுபவம் விழிக்காதவரை விடியலே இல்லை என்பதுதான் இன்றைய நிதர்சனம் - மாயன் சத்யா |
| Posted: 04 Dec 2013 05:33 AM PST நானாக யாரும் இல்லாதபோது யாராக நான் இருக்கவேண்டும் ? நானாக யாரும் இருக்கும்பட்சம் அவராக நான் இருக்கலாமா ? நானாக அவர் இருப்பதறிந்து அவர் வேறாக மாறினால் நான் யாராக இருக்கக்கூடும் ? நான் நானாக இல்லாமல் வேறாக இருந்து போனால் நீ நீயாகத்தான் இருப்பாயா ? |
| ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம் Posted: 04 Dec 2013 05:14 AM PST பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல், திருநீறு தரித்தல், ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும். ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன், மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான். ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில், நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி ; பெண்களாயினும் சரி; அவர்கள் 'ஓம்' என்னும் பிரணவ ... |
| Posted: 04 Dec 2013 04:45 AM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| எல்லா செல்வமும் கிடைக்கும் விரதம் Posted: 04 Dec 2013 04:21 AM PST ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தினம் முதல் சஷ்டிதிதி வரை சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. எல்லா முருகன் கோவில்களிலும் மிகவும் விசேஷமாக இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக திருச்செந்தூர் முருகன் திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாலசுப்பிரமணியரின் புகழைப்பாடி சண்முக கவசம் முழங்க வலம் வருவார்கள். கந்தசஷ்டி விரதத்தை சிலர் பஞ்சாமிர்தம் மட்டுமே சாப்பிட்டு இருப்பவர்களும் உண்டு. என்றாலும் அவரவர் உடல் நலத்துக்கு ஏற்ப விரதம் இருக்கலாம். முருகனைப் ... |
| Posted: 04 Dec 2013 03:59 AM PST பகட்டான வாழ்க்கை..தேடி பணம் எனும் காகிதம் சேகரிக்க.. பாசத்தை அடகு வைத்து... பாரினில் வந்து சேர்ந்தேன்.. மழலை மனம் மாறா மகனை விட்டு.. வந்து சேர வாங்கிய பணத்தின் வட்டி கட்ட வருடம் ஒன்றானது.. முழுக்கடன் முழுதாய் தீர்க்க.. முழுவதும் எனை அடகு வைத்தேன். வேலையைப் புதுப்பிக்கின்ற சாக்கில். அன்பு மனைவியோடு.. அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து தொலைந்து போனது..இளமை... ... |
| Posted: 04 Dec 2013 03:52 AM PST திரு - அழகு, வாசகம் – வார்த்தை; சொல் திருவாசகம் – அழகிய சொல் என்பது அதனையுடையதாகிய நூலை உணர்த்திற்று. திரு என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என உரைகாண்பர் பேராசிரியர். இதனைக் கண்டார் வேறு எதனையும் விரும்பார் ஆகலின் புண்ணியங்கூட்டக்கண்ட பக்குவான்மாக்களால் விரும்பப் பெறுந்தன்மையுடைய வாசகம் என்றும் பொருள் கொள்ளலாம். சங்கரநமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரையில் "அடையடுத்த வாசகம் முதற்கருவியின் பெயர் அதன் காரியமாகிய யாப்பிற்கு ஆயிற்று" என்பர். சிவஞான சுவாமிகள் இலக்கணவிளக்கச் ... |
| சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Posted: 04 Dec 2013 03:50 AM PST சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்குத் தொடர்பாக அரசு சார்பில் வழக்கறிஞரை நியமிக்க வலியுறுத்திச் சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் சில தினங்களாக நடராஜர் கோயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமையும் போராட்டம் நடந்தது. விவகாரம் பெரிதான நிலையில், கோயிலுக்குள் தேவாரம் பாடக் கூடாதா எனப் பொது தீட்சிதர்களில் ஒருவரான சாம்பமூர்த்தியிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில், "யார் வேண்டுமானாலும் கோயிலுனுள் வந்து தேவாரம் பாடலாம். நாங்கள் அதற்கு ... |
| மகாபாரதம் - இதிகாசத் தொடர் - விஜய் டிவி! Posted: 04 Dec 2013 03:21 AM PST மகாபாரதம் 7 அக்டோபர் 2013 |
| Posted: 04 Dec 2013 03:11 AM PST |
| இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள் Posted: 04 Dec 2013 02:55 AM PST எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்பவர்கள் கெடுமதி படைத்தவர்கள் தான். அவர்களது கிரிமினல் மூளைதான் அந்தத் தொழில் நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை முழுவதுமாக ஆராய்ந்து முதலில் புரிந்துகொள்ளும். இணையமும் சமூக வலைத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இணையத்தை வணிகத்துக்காக முதலில் பயன்படுத்திக்கொண்டவர்கள் போர்னோ படங்களை விற்றவர்கள்தான். எண்ணற்ற ஆபாச வலைத்தளங்கள் உருவாகின. ஒரு கட்டத்தில், அதிக ஹிட்கள் பெறும் முதல் இருபது தளங்கள் அனைத்துமே போர்னோ தளங்களாக ... |
| நெல்சன் மண்டேலா உடல்நிலை : குடும்பத்தினர் தகவல் Posted: 04 Dec 2013 02:37 AM PST தென்னாப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கவலைக்கிடமாக இருந்தாலும், அவர் உற்சாகமாகவே இருக்கிறார் என்று அவரது மகள் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மகாசிவ் மண்டேலா, "எனது தந்தை எங்களுடன்தான் இருக்கிறார். மிகவும் உறுதியாகவும், அதே உற்சாகத்தோடும் இருக்கிறார். அவருக்கு நாங்கள் ஆறுதலாகவும், உற்சாகம் அளிக்கும் வகையிலும் இருக்கிறோம். அவர் மரணப் படுக்கையில் இருந்தாலும், எங்களுக்கு இன்னமும் வாழ்க்கைப் பாடத்தை கற்பித்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த பாடம், காதல், அன்பு, சகிப்புத் தன்மை" என்று ... |
| நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்! Posted: 04 Dec 2013 02:36 AM PST கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, "அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் ... |
| Posted: 04 Dec 2013 02:24 AM PST ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5 நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5 1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா? 2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா? 3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்? 4. ... |
| படுகொலையைத் திருவிழாவாக மாற்றும் ஊடகங்கள் Posted: 04 Dec 2013 02:21 AM PST ஒரு தொலைக்காட்சி நிருபராக ஊடக வாழ்க்கையைத் துவக்கிய எனக்கு, வளர்ந்துவிட்ட இன்றைய ஊடக சர்க்கஸ், ஒரு படுகளமாகவே காட்சியளிக்கிறது. முக்கியமாக 24 மணி நேரமும் தீர்ப்புகளை வாரி இறைக்கும் தொலைக்காட்சி நீதிபதிகள், நீதிமன்றங்களில் கோலோச்சும் நிஜ நீதிபதிகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்துடன் தீர்ப்பு வழங்குகிறார்கள். தீர்ப்பும் எதிர் தீர்ப்பும் இன்றைய ஊடக விசாரணையில் சில எழுதப்படாத விதிமுறைகள் அமலில் உள்ளன. அவற்றில் முதலாவது, தீர்ப்பை யார் முதலில் சொல்வது என்பதுதான். கொலை நடந்த சில மணி நேரங்களுக்குள் ... |
| ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி? Posted: 04 Dec 2013 02:08 AM PST தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம். மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்" என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
